செய்தி: ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன... posted byhasan (khobar)[26 August 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7305
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த வலைதளத்தின் ஊடாக அடிக்கடி அழகிய முறையில் கருத்து தெரிவிக்கும் ஆலிம், ஹாபிஸ்கள் விளக்கம் தரலாமே.
இது உங்கள் கடமை. ஏது எதற்கோ கருத்து எழுதும் நீங்கள் இதில் மௌனம் சாதிப்பது ஏன்?
--------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(அல்குர்ஆன் 33 ; 21)
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன் 33 : 6)
திருக்குர்ஆனை நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இரவில் நின்று தொழுகின்ற தொழுகையில் நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :
போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1-4)
-------------------------------------------------------------------------------
நபியவர்கள் எப்படி குர்ஆனை ஓதினார்கள் என்பதை பாருங்கள்.
''நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?'' என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், ''நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா...ஹ்' என நீட்டுவார்கள்; 'அர்ரஹ்மா...ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.(நூல் : புகாரி 5046)
--------------------------------------------------------------------------------
ஒரே இரவில் ஒரு குர்ஆனை ஓடி முடிக்கலாம?
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!'' என்று கூறினார்கள். அப்போது நான், ''(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது'' என்று கூறினேன். ''அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே'' என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி ௫௦௫௪
''ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்றார்கள். ''இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!'' என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில், ''மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்று கூறினார்கள்.நூல் : புகாரி (1978)
-----------------------------------------------------------------------------------
தொழுதுகொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பதால் ஏற்படும் தீங்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுதுகொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
அறிவிப்பவர் : அபூஜுஹைம் (ரலி) நூல் : புகாரி (510)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.அறிவிப்பார் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3274
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross