J S A புஹாரி காக்காவை தலைவராக நிற்க ஊர் நலன் கருதி வேண்டுகோள் வைப்போம்.. posted byநட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[13 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8015
அஸ்ஸலாமு அழைக்கும்..
எனது பார்வைக்கு பொருத்தமான காயல்பட்டினம் நகராட்சி மன்ற தலைவராக தெரிபவர் பல ஆண்டுகாலமாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திகொண்டவர் சமுதாய அமைப்புகளில் சிறப்பான சேவையாற்றியவர்... காயல்பட்டினம் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு குறிப்பாக கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஊர் மக்களின் வேலை வாயப்பு போன்றவற்றிற்காக இன்றும் களப்பணி ஆற்றிவருபவரான ஆடிட்டர் புஹாரி காக்கா என்கிற ஹாஜி J S A புஹாரி காக்கா சிறப்பான தகுதியான தேர்வாக இருப்பார்... இன்ஷாஅல்லாஹ்...
J S A புஹாரி காக்கா ஆரம்ப காலம் முதல் சமுதாய அமைப்புகளின் மூலமாக பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டவர் வெளிநாட்டில் வாழ்ந்த போதும் எந்நேரமும் தனது தாய் மண்ணை பற்றியும் நமதூர் மக்களை பற்றியும் சிந்தனை உடையவர் தற்போது அமீரக காயல் நல மன்றத்தின் தலைவராக சேவையாற்றி வரும் ஹாஜி J S A புஹாரி காக்கா நல்ல நிர்வாக திறமை மிக்கவர்.. மார்க்கபற்றாளர்... ஆக காயல்பட்டினம் நகராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவர் அவருடன் 16 ஆண்டுகள் துபாயில் வேலை செய்த எனது பார்வையில் ஹாஜி J S A புஹாரி காக்கா சிறப்பான நகரமன்ற தலைவராக சேவையாற்றுவார் என உறுதியாக சொல்ல முடிகிறது...
இன்ஷாஅல்லாஹ்... இதேபோல பல ஊர்களில் குறிப்பாக நமது இஸ்லாமிய சமூக மக்கள் நிரம்ப வாழக்கூடிய பகுதிகளில் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஹாஜி J S A புஹாரி காக்கா போன்றோரை அடையாளம் கண்டு போட்டியிட செய்ய வேண்டும் ...! அது நல்ல துவக்கமாக இருக்கும்...!
அரசியலை வென்றெடுப்போம்... அதிகாரத்தில் பங்கெடுப்போம்... நமதூர் நகராட்சிக்கு ஹாஜி J S A புஹாரி காக்காவை தலைவராக நிற்க ஊர் நலன் கருதி வேண்டுகோள் வைப்போம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross