Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byZainul Abdeen (Dubai)[08 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9953
AS I SEEN
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
MEGA என்ற பெயரில் நெட்டில் சில நாட்களாக செய்திகள் பார்க்கிறோம். MEGA என்றால் என்ன? இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரியாமல் இருந்தோம். “MUNICIPAL ELECTION GUIDENCE ASSOCIATION” என்பது தான் அதன் விரிவாக்கம் என்று அறிந்து கொண்டோம்.
இந்த அசோஸியேஷன் அடுத்து ASSEMBLY ELECTION GUIDENCE ASSOCIATION (AEGA) என்றும், PARLIAMENT ELECTION GUIDENCE ASSOCIATION (PEGA) என்றும், தப்பித்தவறி ஏதாவது BI ELECTION வந்தால் BI ELECTION GUIDENCE ASSOCIATION (BEGA) என்றும் தன்னை உருமாற்றிக் கொள்ளுமா என்று கேட்க விரும்புகிறோம்.
தங்களின் டைட்டிலைப் பார்க்கும் பொழுது தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தாங்களின் GUIDENCE என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் அரங்கில் தேர்தல் காலங்களில் அவ்வப்பொழுது தோன்றி மறையும் லெட்டர்பேடு கட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது.
இன்று காயல் நகர மக்கள் தெள்ளத் தெளிவாக இருக்கிறார்கள். நமதூரில் அநேகமாக எல்ல வீடுகளிலும் ஆண்களும், பெண்களும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நமதூரில் இன்று வீட்டுக்கு வீடு Engineers, Doctors மற்றும் MBA, MCA படித்த பட்டதாரிகளும், பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களும் இருக்கிறார்கள். பாமரமக்களாக வாழந்த காலம் முடிந்து இப்பொழுது அதிக விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். நமது பெண்களை எடுத்துக் கொண்டால் இன்று வீட்டுக்கு வீடு UG மற்றும் PG படித்தவர்கள் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
நமதூரில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும், அனைத்து நேரங்களிலும், சிறப்பாகவும், சீரிய முறையிலும், பல்வேறு சூழ்நிலைகளையும் அனுசரித்து, விவேகத்துடனும் செயல்பட்டு வரும் அனுபவமும், ஆற்றலும் மிக்க நமதூரின் அனைத்து ஜமாஅத்துக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 'காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை' பற்றி தங்கள் அமைப்புக்கு தெரிந்திருக்கும்.
சகோதரத்துவத்துடனும், ஐக்கியத்துடனும் இருந்து வரும் காயல் நகர மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி விடாதீர்கள். ஊரின் ஒற்றுமையை எந்த விதத்திலும் சீர்குலைக்க நினைக்காதீர்கள். ஊடகத்தை வைத்துக் கொண்டு ஊரின் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் உலை வைக்க வேண்டாம் என்று மெத்தப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கற்றோரும், சான்றோரும் நிறைந்த நமதூர் மக்களுக்கு தங்களின் GUIDENCE எந்த விதத்திலும் அவசியப்படாது என்பதே எங்கள் கருத்து. ஏதோ ஒரு அமைப்பை தொடங்கி அதில் நான்கு பேரை சேர்த்துக் கொண்டு ஊரின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் இறையாண்மையையும் சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம்.
1. M.A. அப்துல்ஹக் B.B.com (ACA)
2. T.M.R. மர்ஜுக் B.A
3. A. பாத்திமா MCA
4. H. ஆமினா B.sc (IT)
5. K. பர்ஹானா B.sc, M.sc
6. U. சல்மா M.com
7. T.V. ஹபீபா MCA
8. V. ஜூல்பா B.sc
9. S.H. சேக் தாவூது M.A
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross