காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த – சென்னை புகாரீ ஹார்டுவேர்ஸ் அதிபர் ஏ.முஹம்மத் அபூபக்கர் – இன்று 03.00 மணியளவில் சென்னை பெரம்பூரில் காலமானார். அவருக்கு வயது 58. அன்னார்,
மர்ஹூம் எஸ்.கே.அஹ்மத் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம்களான எஸ்.கே.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.கே.முஹம்மத் அபூபக்கர், சொளுக்கு எஸ்.கே.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம், எஸ்.கே.யூஸுஃப் ஸாஹிப், எஸ்.கே.புகாரீ ஆகியோரின் சகோதரர் மகனும்,
ஏ.முஹம்மத் சுலைமான் லெப்பை என்பவரது சகோதரரும்,
எம்.ஏ.ஷேக் அப்துல் காதிர், எம்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர், ஜெ.காஜா முஹ்யித்தீன், எம்.என்.செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் மச்சானும்,
எஸ்.எம்.ஜாஃபர் ஸாதிக் என்பவரின் சகலையும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, ஹாஃபிழ் எம்.ஏ.கே.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தகவல்:
சென்னையிலிருந்து...
நோனா உவைஸ்
|