காயல்பட்டணம் கடற்கரையில் கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணத்தில் இருந்து வந்த மீனவர்கள் கொம்புதுறையில் குடியிருப்புகளை அமைத்து கொண்டு தனி துறைமுகமும் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு ஏற்கனவே புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயமும் உள்ளது.
விளாத்திகுளம் தாலுகா வைப்பாற்றிலிருந்து வந்த மீனவர்கள் கற்புடையார் வட்டத்தில் குடியேறி சிங்கித்துறை என்ற துறைமுகத்தை அமைத்துள்ளனர்.
இங்கும் பல லட்சங்கள் செலவில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. காயல்பட்டணம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை ஒட்டி வடபுறம் நெல்லை மாவட்டம் பொpயதாழையில் இருந்து வந்த மீனவர்கள் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் 1996ஆரம்பத்தில் கிறிஸ்தவ குருசடி கட்ட தொடங்கினர். அதனை குருவித்துறைபள்ளி நிர்வாகிகள் ஆட்சேபனை செய்ததால் அன்றைய தாசில்தார் நேரில் வந்து மேற்கொண்டு கட்டுமான பணிகள் எதையும் கட்ட கூடாது என அஸ்திவார நிலையிலேயே தடை செய்தார்.
புனித நோன்பு காலத்தில் முஸ்லீம்கள் கடற்கரைக்கு செல்லாததைப் பயன்படுத்தி, ஓரிரு நாட்களில் அந்த குருசடியை கட்டி முடித்துவிட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் அதில் சிலைகளை வைக்க முயன்றபோது திருமதி நாச்சி தம்பி தலைமையிலான பேரூராட்சி மன்றம் அதை தடுத்தது. அதனை தொடர்ந்து அன்றைய கோட்டாட்சியர் பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு அனுமதியின்றி எந்த சிலைகளும் வைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவிற்கு மாற்றமாக கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திடீரென அந்த குருசடியில் அந்தோணி சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை வைக்கப்பட்ட விபரம் தெரிந்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பேரூராட்சி மன்றத்திற்கும், வருவாய்துறை, காவல்துறைக்கும் ஆட்சேபனை தெரிவித்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் தாலூகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.
வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, காவல்துறை ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகியோர் அதிகாரிகள் தரப்பிலும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் உவைஸ் ஹாஜியார், செயலாளர் பிரபு சுல்தான், துணை செயலாளர் கே.வி.முஹம்மது பாரூக், வாவு அப்துல் கப்பார், பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மது அலி, காயல் மகபூப், காயல் அமானுல்லா, எம்.எல்.சாகுல் ஹமீது (எஸ்.கே.), என்.ஷாஜஹான், பேரூராட்சி தலைவி எ.வஹிதா, கவுன்சிலர்கள் எஸ்.ஏ.காதிரி, அபுசாலிஹ், எஸ்.ஏ.ரபீக் ஆகியோர் முஸ்லிம்கள் தரப்பிலும் கலந்து கொண்டு கடற்கரை சம்பந்தப்பட்ட பிரட்சனைகளை எடுத்து கூறினர்.
முஸ்லிம் பிரதிநிதிகள் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. எதிர் தரப்பில் கடற்கரை மீனவர்களோ, மீனவ சமுதாய அமைப்பின் பிரதிநிதிகளோ கலந்து கொள்ளாததன் காரணத்தால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவர்களிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என வட்டாட்சியர் கூறினார். |