அரசியல் அமைப்பு சட்டத்தின் 44ஆவது பிரிவில், குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமுல் செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் இதே அரசியல் சட்டத்தின் 37ஆவது பிரிவில் "கொள்கை விளக்கம்" என்ற பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று உள்ளது.
அதனை உறுதிபடுத்தும் விதமாக திருமணம், மணவிலக்கு, வாரிசு உரிமை, வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகம் இவற்றில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் தனியார் சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.
இந்திய திருமண சட்டத்தின் பல்வேறு நிலைப்பாடுகள்:
இந்திய திருமண சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை கட்டுப்பாடு செய்யும் சட்டம் 1929இல் இயற்றப்பட்டது. அதன்படி பெண்ணின் திருமண வயது 15 ஆணின் திருமண வயது 18 என்றிருந்ததை 1978இல் பெண்ணின் திருமண வயது 18 ஆணின் திருமண வயது 21 என்று திருத்தப்பட்டுள்ளது. 1929இல் அமுலுக்கு வந்த குழந்தை திருமணங்களை கட்டுப்பாடு செய்யும் சட்டத்தின் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குழந்தை திருமணங்களை தடை செய்யும் சட்டம் 2006இல் நிறைவேற்றி 2007இல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய சட்டம் இந்து, சீக்கிய, கிறித்துவ மற்றும் சமண மதங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே. முஸ்லிம்களுக்குப் பொருந்தாது.
இஸ்லாமிய திருமண சட்டம்:
இஸ்லாமியர்களில் திருமணம் அவர்களுடைய ஷரீஅத் மற்றும் நிகாஹ் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விதிகளின்படி (PERSONAL LAW) தீர்மானிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றம், நீக்கல், சேர்த்தல் செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
இந்திய திருமண சட்டம் 18 வயதுக்கு உட்பட்டவர்களை மைனர் என்கிறது. இஸ்லாமிய திருமண சட்டம் பருவமடைந்து விட்டாலே மேஜர் என்கிறது. 15 வயதில் பருவமடைந்து விடுவதால் மார்க்க சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி உள்ளது.
ஷரீஅத்துக்கு எதிரான தீர்ப்பு:
18 வயது பூர்த்தியடையாத பெரம்பலூரைச் சார்ந்த பாத்திமா என்பவருக்கு 2012இல் திருமணம் நடைமுறை இருந்ததை சமூகநல அதிகாரி குழந்தை திருமண சட்டத்தின் கீழ் தடை செய்தார். மேலும் பெரம்பலூர் ஜீடிஸியல் மாஜிஸ் ரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தை திருமண தடை சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கு பொதுவான சட்டம் என்று தீர்ப்பு வழங்கி திருமணத்திற்கு தடை விதித்தார். இது இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிராகவும், இந்திய அரசியல் சட்டத்தின் 37வது பிரிவிற்கு மாற்றமானதும் ஆகும்.
ஆகுமான (ஹலாலான) திருமணத்தை மறுக்கும் கோர்ட்:
தடுக்கப்பட்ட (ஹராமான) உடலுறவை அனுமதிக்கிறது.
1. டெல்லியில் 15வயது பெண்ணை கடத்தி கற்பழித்த 22 வயது வாலிபரை போலீஸ் பிடித்து வழக்கு பதிவு செய்கிறது. டெல்லி கூடுதல் சென்ஸ் நீதிபதி குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் சம்மத பால் உறவு வைப்பது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு அளித்து விடுதலை செய்தார்.
இந்திய திருமண சட்டப்படி 15 வயது நிரம்பாத பெண் திருமணம் செய்ய அனுமதியில்லாத நிலையில் கற்பழிக்கப்பட்ட 15 வயது பெண்ணும் கற்பழித்தவனும் திருமணம் செய்ததாக தகவல் உள்ளது.
(ஆதாரம் - தினந்தந்தி நெல்லை 26.08.2013.)
2. ஏற்கனவே திருமணம் ஆகாத ஆண்பெண்ணுக்கு இடையே நடக்கும் பாலியல் உறவை திருமணம் என்றும் அவர்களை கணவன் மனைவியாக கருதலாம் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
(ஆதாரம் - தினத்தந்தி நெல்லை 19.06.2013.)
இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு:
இஸ்லாமிய பெண்கள் வயதிற்கு வந்து 15 நிரம்பினால் போதும் அவர்கள் விருப்பம் போல் யாரை வேண்டுமானமலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
(ஆதாரம் - குமுதம் 20.06.2012.)
ராஜஸ்தானில் இன்று வரை 18 வயதுக்கு உட்பட்ட இந்து பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது.
(ஆதாரம் – THE HINDU April - 13.2015.)
ஹராமான (தடுக்கப்பட்ட) உடலுறவை அனுமதிக்கும் கோர்ட் ஹலாலான (ஆகுமான) இஸ்லாமிய திருமணத்தை தடை செல்கிறது இதனை சட்டரீதியாக எதிர்க்காவிடில் மணவிலக்கு, வாரிசு உரிமை, வக்ஃபு சொத்து, மறுமணம் விஷயங்களின் மாற்றம் கொண்டு வருவார்கள்.
ஷாபானு வழக்கில் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் போராடிய தன் விளைவாக ஷரீஅத் சட்டப்படி ஜீவனாம்சம் கொடுக்க பார்லிமென்ட் சட்டம் இயற்றியது. நடைமுறையில் உள்ளது.
இஸ்லாமிய திருமண சட்டத்தில் இந்தியா திருமண சட்டத்தை புகுத்துவதால் அரசு வழங்கும் திருமணத்தொகை மற்றும் இதர சலுகைகள், தேவைகள் தடுக்கப்படுகின்றன.
ஒற்றுமையுடன் போராடி ஷரீஅத் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். |