எட்ட இருக்கும் நிலவில் கூட இடம் பிடித்து விடலாம், ஆனால் கிட்ட இருக்கும் மனிதர் தம் மனதில் இடம் பிடிப்பது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அன்று, ஏன்? தன் மனைவி, மக்களின் மனங்களில் கூட இடம் பிடிக்க முடியாமல் தவிக்கும் மனிதர்கள் பலர் நம்மிடையே இருக்க, மக்கள் மனங்களில் தமக்கென ஓர் உயர்வான இடத்தை, மரியாதையை, கண்ணியத்தை வசீகரித்துக் கொண்டவர்கள் அன்றும், இன்றும் யார்? என்றால் டாக்டர்... டாக்டர் என வாஞ்சையுடன் அழைக்கப்படும் மருத்துவர்களே...!
இவர்களது உயரிய மருத்துவ பணியாலும், உயிர் காக்கும் சேவையாலும், மனிதாபிமான உதவியாலும்- இவ்வுலகை விட்டு மறைந்த பின்பும் கூட, இவர்களிடம் சிகிச்சை பெற்ற ஒவ்வொரு மனிதனாலும், அவர்தம் குடும்பத்தினராலும், இல்லங்கள் தோறும் நன்றி பெருக்குடன் நினைவு கூறப்படுகிறார்கள். இது போன்ற மருத்துவர்கள் உண்மையிலேயே நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரித்தானவர்களே.
இத்தகைய மேம்பட்ட பண்புகளைக் கொண்ட, கருணை உள்ளம் படைத்த, மருத்துவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக தற்கால மருத்துவத்துறை இல்லை என்ற நிஜத்தை கடந்த 27-05-2012 அன்று விஜய் தொலைக் காட்சியில் நடிகர் ஆமிர் கானால் நடத்தப்பட்ட 'சத்யமேவ ஜெயதே' (www.youtube/satyamevajayatetamil27thmay2012) நிகழ்ச்சியை காணக் கிடைத்தவர்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமின்றி, சிறப்பு மருத்துவ வல்லுனர்கள், துறை சார் நிபுணர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என பலரும் உள்வாங்கப்பட்டு, நிஜத்தின் சாட்சிகளாக அவர்களின் அனுபவங்கள் மக்கள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினரது உள்ளக்குமுறல்கள், இழப்புகளால் அடைந்த வேதனையின் வெளிப்பாடுகள் அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. ஒருசில மருத்துவர்களினதும், அவர்தம் கண்ணைக் கவரும் ஐந்து நட்சத்திர தரத்தினாலான, நிறுவன மயமாக்கப்பட்ட மருத்துவமனைகளினதும், வரம்பு மீறிய பணம் உறிïசும் வேட்கையினால் நோய் தீர்க்கும் மருத்துவமே இன்று நோய் பீடித்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
நோயாளிகள் சிகிச்சை, தீவிர சிகிச்சை என்ற பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள்? எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள்? மருத்துவ பரிசோதனைகள் என்ற பெயரால் மறைமுகமான வழிகளில் நோயாளிகளின் பொருளாதாரம் எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை மக்கள் மன்றத்தில் விவாதிக்கபட்டதை கண்ணுற்றவர்கள் மருத்துவத்தின் மறுபக்கம் இவ்வளவு தரம் தாழ்ந்திருப்பதை எண்ணி மன வேதனை அடைந்திருப்பார்கள்.
இதுபோன்ற மருத்துவர்களும், மருத்துவமனைகளும், துறை சார்ந்த வல்லுனர்களாக மட்டுமின்றி, வியாபார நுணுக்கம் தெரிந்த மிகச்சிறந்த வர்த்தகராகவும், வியாபார நிறுவனமாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டு, வாய் வழியாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள் என்பதை இத்தகையவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையோடு சிகிச்சைக்காக இவர்களை நாடி வரும் நோயாளிகளிடம் நோய் குறித்த போலியான, மிகைபடுத்தப்பட்ட விடயங்களை கூறி பீதிக்குள்ளாக்கி பொருள் தேடும் சூட்சமம் மிகவும் அநீதியானது. இவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகமிழைப்பதாக இதனை கருத முடியாதா?
வல்ல இறைவன் தனது திருமறையில் "உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொÕû¸ளை தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம்" என முழு மனித சமுதாயத்திற்குமே எச்சரிக்கை விடுக்கின்றான்.
அத்தோடு ஒவ்வொரு மனிதனும் தன் பொறுப்புகள் பற்றியும், வழங்கப்பட்ட அறிவு ஞானத்தை பற்றியும், பொருள் தேடிய விதம் பற்றியும் மறுமையில் இறைவனின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்தே ஆக வேண்டும்.
இந்த நம்பிக்கையும், அச்சமும் யார் உள்ளத்தில் பதியம் செய்யப்பட்டுள்ளதோ அவர் எந்த ஒரு மனிதருக்கும் எந்த ஒரு வழியிலும் அநீதி இழைத்திட தலைபட மாட்டார்.
அநீதி இழைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவருக்கும், இறைவனுக்கும் இடையே எந்த விதத் திறையும் இல்லை. பாதிப்புக்குள்ளானவா¢ன் பிரார்த்தனை இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்ற நபிகள் நாயகத்தின் (ஸல்) போதனை இங்கே அச்சத்துடன் அவதானிக்கக் கூடியது.
மருத்துவர்-நோயாளி இடையிலான உறவு நிலையை நோக்கும் §À¡து முற்காலத்தில் பரஸ்பரம் மிகுந்த நம்பிக்கையுடையதாகவும், பாசப்பினைப்புள்ளதாகவும் பேணப்பட்டது. சமகால மருத்துவர்கள் ஒருசிலரின் தவறான நோக்கதினூடான அணுகுமுறையினால் நல்ல பல கண்ணியமிக்க மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும், நல்லெண்ணமும் நலிந்து விடுமோ? என அஞ்சத் தோன்றுகிறது.
மருத்துவர்களை கண்காணிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா (MCI) செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக செயல்பட்டு வந்த Dr.Kethan பெரும் ஊழலில் சிக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு பதவி நீக்கம் செய்ய பட்டார். தறபோதைய தலைவராக
Dr.K.K.Thalwar செயல்பட்டு வரும் இந்த கவுன்சில் மூலமாக கடந்த 50 வருட காலப்பகுதியில் தவÈ¢ழைத்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை பூஜ்யமே! இதே வேலை ஐக்கிய இராஜியத்தின் மருத்துவ (இங்கிலாந்த்) கவுன்சிலால்
2008ல் 42 மருத்துவர்களும்
2009ல் 68 மருத்துவர்களும்
2010ல் 73 மருத்துவர்களும்
நிரந்தர பணி நீக்கம் செய்யபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய சூளுரைகளை அறிவித்துள்ளது. அவற்றில் சில:
1. ஏழை நோயாளிகளை அன்போடு நேசிப்பேன்
2. நோயாளிக்கு தேவைற்ற மருந்துகளை கொடுக்க மாட்டேன்
3. தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய மாட்டேன்
4. என்னால் நோயை குணப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்ற நோயாளிகளுக்கு தைரியம் கொடுப்பேன்
5. உலக மனிதர்களுக்காக சேவை செய்வதைத் தினமும் நினைக்க மறக்க மாட்டேன்
6. சரியான கட்டணத்தை மட்டும் பெறுவேன்
இவை எவ்வளவு அருமையான சூளுரைகள். ஆழமான பார்வை கொண்ட அறவுரைகள். எழுத்தோடும், ஏட்டோடும் முடங்கிப் போகாமல் பணியிலே பேணப் படுவதினூடாக உயிர் ஊட்டப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நாட்டின் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை
1951ல்
அரசு கல்லூரிகள் - 20
தனியார் கல்லூரிகள் - 01
2001ல்
அரசு கல்லூரிகள் - 31
தனியார் கல்லூரிகள் - 106
எனவும் அதீத வளர்ச்சி கண்டது. வளம் கொழிக்கும் வர்த்தக துறையாக பரிணாமித்துள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் வளர்ச்சியின் வேகத்துக்கேற்ப நன்கொடையின் விகிதமும் உச்சத்தை எட்டியது. சமகாலத்தில் ஒரு மருத்துவரை உருவாக்கிட 40-60 லட்சங்களை நன்கொடை என்ற பெயரால் அள்ளிக் கொட்டிட வேண்டிய இக்கட்டில் பெற்றோர்கள் தினறுகிறார்கள்.
ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாய்பை தவறவிட்ட வறிய மாணவர்களது மருத்துவராகும் கனவுகள் கரை சேராமலேயே கருகிப் போய் விடுகின்றன. திறமை, வறுமையோடு தோழமைக் கொண்டதால் எட்டாக் கனியாகி விட்ட மருத்துவக் கல்வி இவர்களுக்கும் கிடைக்க வேண்டுமெனில் அரசு குறைந்த பட்சம் தனியாருக்கு நிகராக மருத்துவ கல்லூரிகளை துவக்கிட வேண்டும் என்பதே இயலா மக்களின் எதிர்பார்ப்பு. தற்போதய நிலையில் நாட்டில் 2000 நோயாளிக்கு 1 மருத்துவர் என்ற நிலையே பேணப்படுகிறது. புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி கேட்டு 120 விண்ணப்பங்களும், விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு 65 விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மேலதிகமாக 6000 இடங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.4% மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ள வேலை, பிராந்தியத்தின் பிற நாடுகளான
இலங்கை - 1.8%
சீனா - 2.3%
தாய்லாந்து - 3.3%
அமெரிக்கா & ஐரோப்பா - 6% - 8% வரையிலும் தத்தமது மக்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுவதை ஒப்பிடும் போது மிகக் குறைவே. இந்த நாடுகளுக்கு தம் மக்களின் ஆரோக்கியத்தில் எத்தனை கரிசனம் பாருங்கள்? ஒரு வருடத்திற்கு தனி நபர் ஒருவருக்கான மருத்துவ செலவினம் (per capita)
இந்தியருக்கு .......43 USD
இலங்கையருக்கு .......87 USD
சீனருக்கு ......155 USD
தாய்லாந்தியருக்கு ......261 US டாலரும்
செலவிடப்படுவதை காணமுடிகிறது.
"இந்திய சுதந்திரத்திற்கு பின்பு கடந்த 65 வருடங்களில் இந்திய மக்களில் 65% தங்களுடைய அடிப்படை மருந்துகளைக் கூட வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்". இது உலக சுகதார மையத்தின் (WHO) அறிக்கை.
பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களினது மருந்துகளின் கட்டுக்கடங்காத விலை உயர்வினாலேயே மக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களது மருந்துகளை பரிந்துரை செய்திட அதற்கான ஊக்கத்தொகையாக வருடத்திற்கு 30%, அதாவது, ரூபாய் 12,500 கோடியை இந்நிறுவனங்கள் செலவழிப்பதாக Dr.Gulathi கூறுகிறார்.
அற்பசொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் வறிய மக்கள் ஒரு கணிசமான தொகையை மருந்துக்காக செலவிடும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். யாருக்கு போதியளவு வருமானம் இல்லையோ, அவர்கள் பலவந்தமாக தாங்கள் உட்கொண்டு வரும் மருந்துகளை இடை நிறுத்தி விடுகிறார்கள். நோயின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் இவர்கள், பாரிய நோய் தாக்கும் பொழுது- பெரும் பொருட்செலவை ஏற்படுத்தும் அதற்கான சிகிச்சைகளை எங்கே, எங்ஙனம் பெறுவார்கள்? மரத்தில் இருந்து விழுந்த ஒருவனை மாடு முட்டிய கதையாக இருக்கும் இத்தகையவர்களின் நிலை நினைக்கவே பரிதாபமாக இருக்கிறது அல்லவா?
2006 ஆம் ஆண்டு இந்திய அரசு பன்னாட்டு நிறுவனíகளுக்கு காப்Òரிமை மருந்து உற்பத்திக்கான அனுமதி அளித்தது. இதன் மூலம் உயிர்காக்கும் மருந்துகளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவிற்கு தறி கெட்டுப் போனது. விழித்துக்கொண்ட மத்திய அரசு விலையை கட்டுக்குள் கொண்டு வர விலை மலிவான, அதே தரம் உள்ள மருந்துகளை தயாரிக்கும் உரிமையினை வலுக்கட்டாயமாக, முதன்முறையாக இந்திய Generic Drugs நிறுவனங்களுக்கு வழங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களான Bayer மற்றும் Onyx Pharmacheuticals ஆகியவற்றின் காப்புரிமை பெற்ற புற்று நோய்க்கான அதி உயர் தேவையுடைய Nexavar எனும் கூடிய விலை மருந்திற்க்கு மாற்றீடாக இந்திய மலிவுப் பதிப்பை தயாரித்து விற்கும் உரிமையினை Nectopharma, Hyderabad பெற்றுள்ளது. இவர்களின் இந்த மருந்து பன்னாட்டு நிருவனங்களின் மருந்தை விட சுமார் 30 மடங்கு மலிவு விலையில் கிடைக்கும் என்கிறார்கள்.
அரசின் இந்த புதிய சுகாதாரக் கொள்கை உலகளாவிய மருந்து நிறுவனங்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உட்படுத்தியுள்ளது. அதே வேளை மனிதனின் வாழ்வையே புரட்டிப் போட்டிடும் புற்று நோயால் தாக்குண்டு உடல், மண ரீதியாக சொல்லொன்னா துன்பத்திலும், வலியிலும், வேதனையிலும் துடிக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். இவர்களுக்கு இறைவனே போதுமானவன்.
கொள்ளை இலாபக் குறிக்கோளால் மருந்தின்றி மாண்டு போன விலை மதிப்பில்லா உயிர்கள் எத்தனை எத்தனையோ? பணம் தேடும் வேட்கையில் இன்று மனித நேயம் இரையாக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி? இது பாவமாக உணரப்படுவதில்லையே? நோயாளிகள் இன்று பணம் கக்கும் இயந்திரங்களாகவே நோக்கப்படுகிறார்கள்- நேசிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம்.
இயலா நிலை மக்களை கருத்தில் கொண்டு ஜன்அவுசதி (www.janaushadhi.gov.in) எனும் மக்கள் மருந்தகங்களை 2008ல் மத்திய அரசு துவங்கி பல மாநிலங்களில் மாநில அரசுகளின் பூரண ஒத்துழைப்போடு திறம்பட நடத்தி வருகிறது. இது 2012ம் ஆண்டு இறுதியில் 3000 மருந்தகங்களாக விரிவடையும். இங்கே விற்கப்படும் Generic Drugs, அதாவது மருந்தின் மூலப் பொருளின் பெயரை தாங்கி வரும் இவ்வகை மருந்துகள் பெரிய நிறுவனங்களின் பெயர் தாங்கி வரும் Branded மருந்துகளை விட 4-10 மடங்கு வரை மலிவு விலையில் கிடைக்கும். குறைந்த விலையில் விற்கப்படும் Generic மருந்துகள் தரத்தோடு, வீரியமிக்கதாக இருப்பதில்லை என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கபடத்தனமான பிரச்சாரங்களையும் அரசு வெற்றிகரமாக முறியடித்து மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. மருந்துகளின் விலை வித்தியாசம் எந்தளவு என்றால், உதாரணமாக நிறுவனகளின் பெயர் தாங்கி வரும் Diclofenec 10 மாத்திரைகள் ரூ.36.70 என விற்கப்படும் பொழுது- ஜன்அவுசதி மருந்தகங்களில் அதே தரத்திலான Diclofenec Generic மாத்திரைகள் ரூ.3.35 என விற்கப்படும் (மேலதிக ஒப்பீட்டு விலை விபரங்களை ஜன்அவுசதி வலைதளத்தில் பார்வையிடலாம்).
நாட்டில் Generic மருந்துகளை ஊக்கப்படுத்தும் முகமாக Universal Health Coverage (UHC) எனும் இலவச மருந்து திட்டத்தின் ஊடாக 5.4 பில்லியன் US டாலர்கள் மதிப்பிலான Generic மருந்துகளை அரசு மருத்துவர்களின் மூலம் பா¢ந்துரை செய்திட வைத்து, அதனை இலவசமாக மக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2017 ஏப்ரல் மாத அளவில் இத்திட்டத்தின் மூலம் சுமார் 52% இந்திய மக்கள் பயனடைவார்கள் என சுகாதார அமைச்சின் செயலர் Mr. L.C. Goyal கூறுகிறார்.
இது இவ்வாறு இருக்க நோயாளிகளை குறி வைத்து நாளுக்கு நாள் காளான்கள் போல் பெருகி வரும் போலி மருத்துவர்களாலும், போலி மருந்து நிறுவனங்களாலும், மனித குலத்திற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. மனித உயிர்களை துச்சமெனக் கருதி உயிரோடு விளையாடும் இந்த சமூக விரோதிகள் சுதந்திரமாய் கடை விரித்து கொலை தொழிலை நடத்தி வருகின்றனர்.
ஏய்த்து, ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இத்தகைய கௌரவ கொலைகாரர்களை அரசு கண்டறிந்து கடும் தண்டனை விதித்து தண்டித்திட வேண்டும். மேலும் இது போன்ற அற்பத்தனமானவர்கள் பெருகிவிடாமல் நசுக்கி அழித்திட வேண்டும்.
மக்கள் நலன் காத்திட நோய் தீர்க்கும் காப்பீடு திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது தமிழக அரசு. இராஜஸ்தான் உட்பட 12 மாநிலங்களில் கடந்த பல வருடங்கலாக வெற்றிகரமாக செயல் பட்டு வரும் Generic மருந்தகங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவதியுறும் வரிய மக்களின் நலன் கருதி தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை generic மருந்தகங்களை அவசரமாகவும், அவசியமாகவும், துவக்கிட தமிழக அரசு முனைந்திட வேண்டும். அத்தோடு சர்வதேச மருத்துவர்களால் Generic medicine பரிந்துரை முறையினை தமிழக மருத்துவர்களும் தத்தமது மருத்துவப் பணியில் கடைப் பிடிப்பதன் ஊடாக ஏழை, எளிய மக்களின் சுமையைக் குறைத்திடலாம்.
"யார் மக்களுக்கு கருணை காட்டுவதில்லையோ அவர்களுக்கு அல்லாஹ்வும் கருணை காட்டுவதில்லை," என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இங்கே ஒன்றை நன்றியுடன் பதிவு செய்தே ஆகவேண்டும். இன்றைய இயந்திரத்தரமான பொருள் வெறி உலகிலும் தம்மை நாடி வரும் வறிய மக்களுக்கு கருணையுடனும், பரிவுடனும் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் இயலா நிலை அறிந்து தங்களின் அடிப்படை ஆலோசனைக் கட்டணத்தை கூட வாங்க மறுக்கும் எத்தனையோ மனிதநேய மருத்துவர்கள் இன்றும் கூட நம்மிடையே சேவை புரிந்து வருகிறார்கள் இல்லையா? தனித்துவமான இத்தகையவர்கள் மிகுந்த கண்ணியத்துகுரியவர்கள் -பெரும் பேறு பெற்றவர்கள். இதுபோலவே லாப நோக்கின்றி சமூக நலனுக்காகவே சேவை நோக்கோடு செயல்பட்டு வரும் மருத்துவமனைகளையும் பாராட்டியே ஆக வேண்டும். சமுதாயம் இவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"எவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்." எனக் கூறும் இறைமறை வசனம் நம்மை எல்லாம் நல்ல வழியில் சிந்திக்கத் தூண்டுகிறது.
நோயாளி ஒருவரை நலம் விசாரிப்பவன் நிலை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை காலையில் உடல் நலம் விசாரித்தால், மாலை வரை 70 ஆயிரம் வானவர்கள் அவருக்கு அருள் வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். மேலும் மாலையில் அவரை இவர் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை 70 ஆயிரம் வானவர்கள் அவருக்கு அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள். அவருக்காக சுவர்கத்தில் பறிக்கப்பட்ட கனி வகைகள் உண்டு." என நற்செய்தி பகன்றார்கள்.
நோயாளியை நலன் விசாரிக்கும் ஒருவருக்கே இவ்வளவு பாக்கியங்கள் என்றால், நேர்மையுடனும், கருணையுடனும் பணி செய்யும் மருத்துவர்களுக்கும், இறை திருப்தி நாடி மக்களை நோயின் பிடியிலிருந்து விடுவிக்க பல்வேறு வழிகளில் பொருளாலும், உடலாலும் உதவி உழைத்திடும் சமூக கரிசனை மிக்க நல் உள்ளங்களுக்கு வல்ல இறைவன் எத்தகைய வளங்களை வழங்கிட இருக்கிறான் என்பதை எம்மால் கணக்கிட முடியாது.
ஒரு சமூகத்தின் அங்கமாக வாழும் நாம், நம் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளைத் தீர்த்திட நம்மால் முடிந்தளவு பங்களிப்பு செய்திடல் வேண்டும்.
நோவும், நோயும் நாள் குறித்து வருவதில்லையே?! நோயினால் தாக்குண்டவருக்கு சரியான நேரத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்கான உதவிகள் சிறியதாக இருந்தாலும் தன்மை அறிந்து தக்க நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
"ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும் வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கஷ்டப்பட்டவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான்." என்கிற மா நபியின் (ஸல்) மணி மொழிக்கேற்ப கஷ்டத்திÄ¢ருப்பவர்களுக்கு உதவிடும் முகமாக இன்று வரை கொள்கையளவில் தேக்க நிலையிலிருக்கும் ஒன்றிணைந்த மருத்துவ உதவி திட்டத்தை அவசரமாகவும், அவசியமாகவும் துவக்கிட அனைத்து காயல் நல மன்றங்களும் முன்னின்று உழைத்திட வேண்டும். சமூகத்தின் தேவை அறிந்து மேலும் காலம் தாழ்த்தி தள்ளிப் போடாமல் செயல் படுத்திட வேண்டும்.
இந்த ஒன்றிணைந்த மையத்தின் ஊடாக மருத்துவ உதவிகள் மட்டுமின்றி, காலம் கனியும் பொது வறிய மக்களின் துயர் துடைத்திடுமுகமாக மலிவு விலை Generic மருந்தகங்களையும் நமதூரில் துவங்கி சேவை ஆற்றிடலாம், இன்ஷா அல்லாஹ்.
"இறைவனே ! மனிதர்களின் இரட்சகனே ! துன்பத்தை போக்குபவனே ! குணமளிப்பாயாக ! நீயே குணமளிப்பவன். குணமளிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அது (உன் குணமளித்தல்) எந்த நோயையும் விட்டு வைக்காது."
இது மாநபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த மாபெரும் பிரார்த்தனை. நோயினால் அல்லலுறும் ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிக்கும் அவ்தடம்; குணமளிக்கும் மாமருந்து.
நிறைவாக நாம் ஒவ்வொருவரும் நித்தமும் நினைவில் நிறுத்த இரண்டு வரிகள்.
மருத்துவம் செய்பவரே மருத்துவர் !
குணமளிப்பவன் இறைவன் ஒருவனே !
|