என்ன, மேலே உள்ள தலைப்பில் ஏதோ எழுத்துப் பிழை இருப்பதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி இருந்தால் அது இயற்கை செய்தி. அதற்காக ஒரு கட்டுரை பிறக்காது. நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி.
அது வைதீகத்தில் ஊறிய பிராமணக் குடும்பம். அசல் தமிழர்களா அல்லது மலையாளத் தமிழர்களா, இல்லை தமிழ் பேசும் மலையாளிகளா என்று புரியவில்லை.
தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று, அன்று எம்.ஜீ.ஆர். நாயகனாக நடித்த படம் ஒன்று வந்தது. இன்று இங்கு தாய் பத்மா அய்யர் தனது 36 வயது மகனுக்கு தாலி கட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார். மனைவி வேண்டும் என்று கேட்கவில்லை. அது பெண்பாலாகிவிடும். இங்கு இவர் ஒருபால் உறவுக்காரர். ஆகவே ஆண் கழுதைக்கு கணவணாக இன்னொரு ஆண் கழுதை தான் தேவை. பெட்டைக் கழுதை உதவாது.
வாட்ட சாட்டமாக 5 அடி 11 அங்குலம் உயரம் இருக்கும் ஹரிஷ் அய்யர் நிச்சயமாக ஓர் ஆணழகன் தான். பார்பதற்கு ஒரு சினிமா நடிகர் போலவே இருக்கிறார். பாலிவுட்டிற்கோ இல்லை கோலிவுட்டிற்கோ போயிருக்கலாம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்.
இவருக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேண்டுமாம்? 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடையில் தான் இவர் தெரிவாம். 'பாலிவுட் காரன் மாதிரி அவன் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று சிரித்துக்கொண்டே இவர் சொன்னார். ஆசையைப் பாருங்கள் ஆசையை.
மாப்பிள்ளை நல்ல தொழிலில் உள்ளவராகவும், மிருகங்களை நேசிப்பவராகவும், சைவ உணவு உண்பவராகவும் இருக்க வேண்டுமாம். பால் தயிர் சாப்பிடக் கூடாது. ஜாதி முக்கியமில்லை இருந்தாலும் பிராமணர் விரும்பத்தக்கதாம். ஐயர் பிள்ளைதான் வேண்டுமென்று பாட்டி சொல்லியதால், பாட்டி சொல்லை தட்டாதே என்பதற்கு ஒப்ப அவ்வார்த்தையை சேர்த்ததாகச் சொல்லுகிறார் ஹரிஷ்.
இவரது தமிழ் பேச்சு அவ்வளவு சரளமாக இல்லை. ஆனால் பத்மாவின் நாவில் பிராமண வாடை அதிகம் இருந்தாலும் பேச்சு பரவாயில்லை எனலாம்.
விளம்பரம் ஆங்கிலப் பத்திரிகையில் மகனுக்கு Groom - மணமகன் தேவை என்றுதான் கொடுத்துள்ளார் தாய் பத்மா. அப்படியானால் முறைப்படி ஹரிஷ் மனைவியாகிறார். 25 வயது வாலிபனுக்கு 36 வயது மனைவி பொருந்துமா என்று சிந்திக்கவோ சிரிக்கவோ வேண்டாம். இவர்கள் தங்களுக்கு எல்லாம் பொருந்துவதாகவே நினைக்கிறார்கள். விளம்பரத்தில் தாயின் கணணி முகவரியும் தொலைபேசி இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருபால் உறவு இரு பெண்களை விட, ஒருபால் உறவு இரு ஆண்கள் சேர்ந்து குடும்பம் நடத்துவது கஷ்டமான காரியம். இவர்களது தாம்பத்தியம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. காலம் கலி காலம் என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.
இது பற்றி தாய் பத்மா கூறும்போது "அவனுக்கு வயது 36 ஆகிறது. திருமணம் வேண்டாம் நாட்டமில்லை என்றே காலத்தை ஓட்டினான். பின்புதான் அவன் எந்த திசையில் போகிறான் என்பதை அறிய முடிந்தது. அது அதிர்ச்சியைத் தந்தாலும் எதிர்காலத்தில் அவனைப் பார்க்க ஓர் துணை வேண்டுமே என்பதற்காக நான் இம்முயற்சியில் இறங்கினேன்" என்றார் அவர்.
தகப்பனார் மற்றும் உங்கள் உறவினர்கள் இதற்கு ஒத்துக்கொண்டார்களா என்று தாயிடம் கேட்டபோது, உறவினர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது பற்றிக் கவலை இல்லை. தகப்பனார் ஒத்துக்கொண்டார் என்றோ ஒத்துக்கொள்ளவில்லை என்றோ சொல்ல முடியாது. அவர் எங்கள் பேச்சைக் கேட்பார். வேறு வழியில்லையே, என்றார் அவர்.
வீடுவரை உறவு என்று இருக்கும் இந்த உறவுகள் பத்மா நினைப்பது போல் கடைசி வரை இருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவிலேயே முதன் முதலாக இது போன்ற தேவைக்கு வெளியான பத்திரிகை விளம்பரம் இதுதான். மூன்று பிரபல பத்திரிகைகள் இந்த விளம்பரத்தை மறுத்தனவாம் சட்டப் பிரச்சினை வரும் என்று.
மணப்பெண், (வேறு எந்த வார்த்தையால் ஹரிஷை அழைப்பது என்று புரியவில்லை) மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவர் என்பதா இல்லை அவள் என்பதா என்று தலை சுற்றுகிறது. அவரது விளம்பரத்திற்கு ஒரே நாளில் பலர் தொடர்பு கொண்டனர்.
"அம்மாவின் விளம்பரத்திற்கு நிறைய பேர் பதில் தந்துள்ளார்கள். அவர்களில் அம்மா தேர்ந்தெடுத்து தரும் 'மாப்பிள்ளைகளை' நான் சந்தித்து பேசுவேன். பின்பு அம்மாவிடம் என் தெரிவைச் சொல்லுவேன்" என்கிறார் அவர். இவரது சுயம்வரத்திற்கு எத்தனை இளவரசர்கள் வருவார்கள் என்று தெரியவில்லை.
சென்ற மாதம் அமெரிக்காவில் இரண்டு இந்திய இளைஞர்கள் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வேதம் ஓதி திருமணம் செய்தனர். அது போன்று உங்கள் திருமணம் இருக்குமா என்று மணப்பெண்ணிடம் அதாவது ஹரிஷிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இராது என்று சிரித்தபடி பதில் சொன்னார்.
என் திருமணத்தில் வீண் செலவு இருக்காது. ஓர் அநாதை நிலையத்திற்கு ஒரு தொகை கொடுப்பேன் என்கிறார் ஹரிஷ். இங்கு இன்னொரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். மணமகள் ஹரிஷ் ஐயர் குடும்பம் வெளிப்படையாக ஒருபால் உறவு மணமகனைத் தேடுவதுபோல் வேறு எந்த குடும்பமும் ஒருபால் உறவு மணமகளைத் தேடும் வாய்ப்பு இல்லை.
இது பற்றி பிபிசி கூறும்போது, 'இந்தியாவில் இருக்கும் சட்டத்தின் காரணமாகவும், சமூக கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒருபால் உறவினர்கள் தங்களின் பாலியல் தேர்வை பகிரங்கப்படுத்தாமல் ஒளிந்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.
பாலியல் தேர்வு குறித்து திறந்த மனதோடு பேசக் கூடிய சூழல் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் இல்லை. ஒருபால் சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தால் பலர் வீட்டை விட்டுத் துரத்தப்படுகின்றனர்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் ஆண் பெண் திருமணத்தில் இணையும் தம்பதியினருக்கு உள்ள உரிமைகள் ஒருபால் திருமணத்தில் ஈடுபடுவோருக்கும் சட்டரீதியாக கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் உரிமைகள் ஏதும் கிடையாது. பிரச்சனைகள் அதிகம்.
திருமணமான ஒருவர் மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணை கணவன் மணம்முடித்தால் அது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்கள்தான் புகார் அளிக்க முடியும் என்று சட்டம் இருக்கிறது என்றும் ஆனால் ஒருபால் உறவினர்களைப் பொறுத்தவரை இவர்கள் இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்க இயலும் என்கிறார் வழக்கறிஞர் கீதா ராமசேஷன்.
ஆனால் இயற்கைக்கு மாறாக உடல் உறவு என்ற சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏராளமான தம்பதியினர் குற்றம் இழைப்பவர்களே என்று சுட்டிக் காட்டுகிறார் ஹரிஷ் ஐயர். இவருடைய முயற்சிக்கு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஆதரவு அளிக்கின்றன. இருந்தும் சட்டம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இவரின் மண வாழ்க்கை அமையும்.'
இறுதியாக, இறைவன் மனிதனுக்கு எந்த உறுப்பையும் வீணாகப் படைக்கவில்லை. அதன் பயன்பாட்டு வழி முறைகளையும் வகுத்துள்ளான். உண்பதற்கு ஒரு வழியையும் கழிப்பதற்கு ஒரு வழியையும் தந்துள்ளான். மனிதன் அதனை மாற்றிச் செய்வதை புரட்சி என்று நினைத்தால் அது மடமை. மிருகம் கூட செய்யாத செயலில் ஈடுபடும் மனிதன், மிருகத்தை விடத் தாழ்ந்தவன் என்பதில் சந்தேகமே இல்லை.
36 வயது மகனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பத்மா ஐயருக்கு ஒருவேளை திருமண வயதில் ஒரு மகள் இருந்தால் அவர் இப்படி விளம்பரம் கொடுப்பாரா? |