இறைவனிடம் கையேந்தும் மாதம்
பிறைகண்டு நோன்பினை ஏற்றிடும் மாதம்
குறை நீக்கம் அவனிடம் கோரும் மாதம்
மறைதனை மிகுதமாய் ஓதிடும் மாதம் - மன
நிறைவு நியமமாய் கிட்டும் மாதம்
கறையின்றிய உள்ளம் அமையும் மாதம் - அன்பை
பறை சாற்றியே மாந்தரை அணுகிடும் மாதம்
முறையுடன் பண்புகள் மலர்ந்திடும் மாதம் - மகிமை
நிறை “ லைலதுல் கதுரு” உள்ளடங்கிய மாதம்
வரையறுத்து தானம் வழங்கிடும் மாதம்
விறைப்புகள் விலக்கிய சாந்தமிகு மாதம் - பள்ளியுள்
உறைந்து மன்னிப்பை விழைந்திடும் மாதம் - சினம்தனை
சிறையடைத்து ஒடுக்கிய மாதம் - அதுவே பல்
சிறப்புடன் இலங்கும் ரமலான் மாதம் - எனும்
அறைகூவலோடு வல்லோனை பணிவோம் - அவன்
கருணை அனைத்தும் முழுமையாய்ப் பெறுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross