Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:29:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 29
#KOTWART0229
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 17, 2014
முத்திரை தூதே!
இந்த பக்கம் 2687 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அர்ஷின் ஒளியே!
அல்லாஹ்வின் அருளே! அன்பின் அடையாளமே - அண்ணலே!

சாட்சியாய் வந்தவரே!
சாத்தானை வென்றவரே!

தூது சுமந்து வந்த தூதரே!

வான் தனை தாளெனக் கொண்டாளும்
கடல் நீர் தனை மைஎனக் கொண்டாளும்
நின் புகழ் பாடத் தொடங்குமே அன்றி
முற்றிட யாரும் முனைந்தாரில்லை...

இச்சிறியோனின் பேராசை
உங்கள் போர்வை இல்லை
மஹ்ஷர் மைதானத்தில்
உங்கள் பார்வை மட்டுமே

"முஹம்மத்" "முஹம்மத்" "முஹம்மத்"
காதில் ஊதப்பட்ட கணம்
கனிய தொடங்குகிறது - உங்கள் மீதான
எங்களின் காதல்

பின்
உங்கள் பெயரை உச்சரித்து உச்சரித்து
நகருமெங்கள் நாட்கள் உன்னதப் படுகிறது.

உங்கள் மீது சலவாத்து சொல்லி சொல்லி
கழுவப்படும் எங்களின் இதயக் கரைகள்

உங்களோடு நாங்கள் இருந்ததில்லை - எனினும்
உங்கள் நினைவின்றி நாங்கள் இருந்ததில்லை

உங்கள் பெயரை பின் மொழியாமல் - எங்கள்
ஈமான் முழுமை அடைவதில்லை
உங்கள் வார்த்தையை பின் பற்றாமல் -எங்கள்
வாழ்க்கை முழுமை அடைவதில்லை.

சொர்க்கத்தின் எல்லா பாதைகளும்
உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கிறது
உங்களிடம் வந்தே முடிகிறது

வேதங்கள் போற்றும் வித்தகரே!
உண்மையில் யஹூதிக்கு கூட -
உங்கள் மீது கோபம் இல்லை ...
அவர்கள் இனத்தில் அவதரிக்கா ஆதங்கமே

நிலவை நிறுத்திய நிலவு
அற்புதங்கள் நிகழ்த்திய அற்புதம்...
அல்லாஹ் விரும்பிய அழகிய முன் மாதிரி

கழுத்தில் எப்போதும் கட்டப்பட்டிருக்கும்
தேதி அறிவிக்கப்படாத மரண அட்டை

உயிரணு சுமந்த தந்தை
உயிரை சுமந்த தாய்
உயிராய் ஒட்டிய உறவு
இரண்டாம் உயிரான மனைவி
இரண்டாம் உலகான நண்பன்

தன் நிலை அறியா - வெந்த்தனலில்
பரிதவித்துபதறிக் கிடக்கும் - உங்கள்
பரிந்துரைக்காய் பதறித் தெறிக்கும் ...

வணக்கம் அத்தனை வலுவில்லை
சொல்லிக் கொள்ளும் வகையில் சுவனத்திற்கான
சேமிப்பும் இல்லை.

ஆயினும் -
உங்களை நேசித்தோம் - என்ற
ஒற்றை உரிமைக் கொண்டு
சுவனத்துப் பறவையாய் சுற்றித் திரிவோம்

யா உம்மத்தி! யா உம்மத்தி! - என்ற
உங்கள் அணைப்புக்குள் அமைதி பெறுவோம்

அருளே - இது நீங்கள்
கொடுத்த அருள் வாக்கு ...

எங்கள் காதலை தவமாக்கி
இரண்டு வரங்கள் இறைவனிடம் கேட்போம்
இவ்வுலகில் ஒருமுறையேனும் - கனவில்
அவ்வுலகில் எப்போதும் உங்கள் - நிழலில்

அல்லாஹ் விரும்பியவரே -
நீங்கள் ஆமீன் சொல்லுங்கள்
அல்லாஹ் ஆமோதிப்பான்

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இரு வரங்கள்?
posted by: mackie noohuthambi (chennai) on 17 September 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37286

கவிதையின் இறுதியில் இரண்டு வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்கிறீர்கள்.

அவ்வுலகில் சரி.
இவ்வுலகில் கனவில் காண வேண்டும் என்பதற்கு பதிலாக,

மதீனா நகருக்கு போக வேண்டும்
மன்னர் முஹமமதை காண வேண்டும்

என்றிருந்தால் கவிதை இன்னும் உயிர் துடிப்புடன் இருக்கும்.

அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: P.N.N. Zainul abdeen (Dubai) on 17 September 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37287

மாஷா அல்லாஹ் அழகியதோர் கவிதை அண்ணல் நபி மீது. அனைவரும் சொல்லுவோம்

" ஸல்லலாஹு அலா முஹம்மத்
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்"

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான ஸலாவத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹீம்மா(B)பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா(B)பாரக்(த்)த அலா இ(B)ப்ராஹீம,வஅலா ஆலி இ(B)ப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: POCKU MOHIDEEN (CHENNAI) on 23 September 2014
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37456

முத்திரை தூதே!

வான் தனை தாள் எனக்கொண்டாலும்
கடல் நீர் எனக்கொண்டாலும்
நின் புகழ் பாட தொடங்குமேயன்றி
முற்றிட யாரும் முனைந்தாரில்லை...

எங்கள் உயிரினும் மேலான ஈறுலக தலைவர்
இரசூல் நபியின் மீதான காதல் கவிதை படிப்பாற் அற்று
கிடக்கிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: POCKU MOHIDEEN (CHENNAI) on 23 September 2014
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37458

அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய முத்திரை தூதே ! கவிதை பார்த்தேன் தலைப்பிற்க்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு வரிகளும் முத்திரை பதித்து இருந்தன. ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அருமையான வரிகள். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் எழுத்து பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved