பாலை ஊட்டி வளர்த்த
பாச அன்னையைப் பிரிந்து
தன் தோளில் சுமந்து மகிழ்ந்த
அன்புத் தந்தையையும்
இன்ப இல்லாள் மற்றும் மதலைகளையும்
கனிவூட்டும் செறிஞர்களையும் விட்டு விலகி
பணி தேடி பாடி வரும் அலைகடல் தாண்டி
பாலைவனத்து மணலிலே பாதம் பதித்து
துனியிலே வாடுகின்ற என் துன்றுநர்கள்
தூங்கிருள் அகன்று இதமியம் பெற்றிட
ஆதியிறையனை வேண்டுகிறேன்!
இளம் அகவையை
அங்கு இடு பொருளாக்கி
சிந்திடும் வியர்வினை நீசகமாய் பாய்ச்சி
உழைத்திடும் உன்னத மாந்தரின்
வாழ்வில் செழுமை சூழ்ந்து
உச்சிகுளிர் பெற்றே வாழ்ந்திட
என் இனிய பிரார்த்தனைகள்!
தான் படும் துயர்தனை - அங்கிருந்து
முகநூல் மூலம் ஏவப்படும்
செய்திகள் யாவுமே
முகத்தில் தெளிர்ச்சியை
குடியேற்றுவதாய் இல்லை!
நீங்கள் படும் வேதனைகளை
சருகின் சலசலப்பு போல்
உங்களின் முனுமுனுப்புகள்
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன!
புள்ளி மானைப் போல
துள்ளிக் குதித்து மகிஜம்
தன் பிள்ளைகளைக் கூட காணாது
எண்ணி வாடும் வாட்டத்தை
சொல்லி முடிக்கவா இயலும்?
கொஞ்சி மகிழ வேண்டிய
காலங்கள் அங்கேயே
கொஞ்சங்கொஞ்சமாய் கரைகின்றது!
ஆனாலும் உங்களின் ஏக்கம்
ஏற்றம் காணுகின்றதா? அல்லது
ஏமாற்றம் அளிக்கின்றதா?
என்பது கேள்விக்குறியே!
சுடும் கடும் வெயிலில் நீங்கள்
படும் கொடும் துன்பம்
வாழ்க்கையின் முன்னேற்றப் படிக்கு
விடும் நெடும் உக்கிரமான சவால்
என்பதில் சந்தேகமில்லை!
குடும்ப இருள் போக்கி
வலியைச் சுமந்து
ஒளி வீசும் செஞ்சுடராய்
வலம் வர நாடும்
உங்கள் ஆவல் நனவாகிடவும்!
முரட்டு பணிகளாலும்
இருட்டு வாழ்க்கையாலும்
புண்பட்டு வாடும் நெஞ்சங்களில்
புன்னகைப் பூ படர்ந்தோங்கிடவும்
என் பொன்னான நல்வாழ்த்துக்கள்!
எண்ணெய் இன்றி
விளக்கு சுடர் தருவது
எப்படி சாத்தியமாகும்?
உங்களைத் துனியிலாத்தும்
செய்தியறிந்து உங்கள் இல்லத்தில்
மகிழ்வு எனும் விளக்கு
எப்படி பிரகாசம் தரும்?
வதைக்கும் பிணிகள் அணுகாமல்
வாட்டும் வறுமை தொடராமல்
அல்லல் யாவும் பணி போல் நீங்கியே
வாழ்வில் உவகை ஆர்ப்பரிக்கவும்
உழைப்பால் உயர்வு பெற்றிலங்கிட
பிழைப்பைத் தேடி அங்கு சென்றோர்
களைப்பால் மனம் நொந்து போகாமல்
சிறப்பாய் சிறந்தோங்கி
வளம் கண்டு மகிழ்ந்தோங்கவும்
மறையோனிடம் முறையிடுவதோடு...
பொல்லா துயர் அகன்றே
எல்லா நலமும், கீர்த்தியும் பெற்றே
நல்லா எந்நாளும் வாழ்ந்திடவே
அல்லா அருள் புரிய வேண்டுகிறேன்!
என் அன்பு நண்பர்களே!
இந்தச் சிறு கவிநடை
ஆறுதலெனும் ஆடையாக
உங்கள் அங்கத்தை
அலங்கரிக்குமெனில்
அதில் ஆனந்தம் காணும்
என் இதயம்! வஸ்ஸலாம்!!
1. Re:... posted by:nizam (raslaffan) on 22 January 2015 IP: 37.*.*.* | Comment Reference Number: 39016
பொக்கு காக்கா நீங்கள் எழுதும் கவிதை பதினைந்து வருடத்துக்கு முன்பு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஐந்து ஆறு படித்து ஒட்டக மெய்ப்பு வீடு வேலை என்று கச்ட்டபட்டார்கள். இப்போது நமது பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து வெயிலையே பார்க்காத ஏசி உத்தியோகத்தில் குடும்பத்தோடு அல்லது முன்றில் இருந்து ஆறு மாதம் ஒருமுறை விடுப்பு என்று சவுரியமாக இருக்கிறார்கள். அதென்ன வளைகுடாவை மட்டும் கொடுமை கேந்திரமாக சித்தரித்து கதை கவிதை எழுதுவது வாடிக்கை ஆகிவிட்டது.
கீழை நாடுகள் மேலை நாடுகள் வேலை சேயும் எல்லாரும் சவுரியமாக வாழ்கிறார்களா? ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கொலை வட்டி விபச்சாரம் இல்லாமல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று பிறவி கவி கண்ணதாசன் கவிதைக்கு ஏற்ப ஒரு வாழ்க்கை பெற்ற மக்கள் இதையெல்லாம் கண்டு பொறாமையால் வெதும்பி சில முஸ்லிம் விரோத சக்திகள்தான் இதுபோல வளைகுடாவை விமர்சித்து கதை கவிதை எழுதினார்கள். நாமும் அதை பின்பற்ற்வோம் என்றால் நமது தலையில் மண்ணை நாமே கொட்டுவதுபோல.
2. அரபு தேசத்து வாழ்க்கை! posted by:முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 22 January 2015 IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39024
அன்பிற்குறிய தம்பி நிஜார் என்னுடைய பலநாள் ஆதங்கத்திற்கு,நேர்த்தியான நெத்தியடியை கொடுத்திருக்கிறார்!
வளைகுடாவிற்கு வருவதற்கு எப்படியெல்லாம் முயற்சித்து,எந்த வேலையையும் செய்வேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையப்பமிட்டு,இங்கு வந்த பின்னர் ஒரு சில வெள்ளையுடை கசங்கா வேலையில் இருப்பவர்களை பார்த்துவிட்டு,நமக்கும் இந்த வேலை அமையவில்லையே என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தின் வெளிபாடுடைய ஒரு சிலரின் உச்சகட்ட ஓலத்தின் புலம்பல்தான்!
உண்மைதான் ஒரு சிலருக்கு கடினமான வேலையும், சரியாக சம்பளம் கிடைக்காத நிலையுமான செய்திகள் வரத்தான் செய்கிறது.அது 5 லிருந்து 7% சத்வீததினருக்கும் குறைவாக உள்ளவர்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும்!
உங்களுக்கு வேலையும்,கம்பெனியையும் பிடிக்கவில்லை என்றால் ஊருக்கு கிளம்பிவிட வேண்டியதுதானே, இரண்டுவருட ஒப்பந்தத்தில் வந்து விட்டு,ஊரைப்பிரிந்து விட்டேன்,உறவை இழந்துவிட்டேன் என்ற ஒப்பாரி எதற்கு?
கடந்த 8,10 வருடங்க்கலுக்கு முன் ரியாத்தில் ஒரு பட்டிமன்றம் நடந்தது.வளைகுடா வாழ்வில் பணத்தை பெறுகிறோமா? அல்லது பாசத்தை இழக்குறோமா? என்பது போன்ற தலைப்பு.அதில் ஒருஅணிததலைவர் பாசத்தையும் பந்தத்தையும் பிரிந்து தவித்து வாழும் இதுவும் ஒரு வாழ்க்கையா என்று வீர முழக்கத்துடன் பேசியது மட்டுமல்ல இந்த நாட்டில் சட்டதிட்டங்களை கூட கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்த பேச்சுப்போர். அனல் பறந்தது அந்த தலைநகர் பட்டிமன்றத்தில்.அதையும் கைதட்டி ஆரவாரத்தோடு ஆமோதித்தவர்களில் அன்றைய இந்தியதூதரும் (மர்ஹூம் பாரூக் மரைக்காயர் என நினைக்கிறேன்) மற்றும் விழா நடத்திய தமிழ் சங்கத்தின் முன்னோடிகளும் ஆவர். .
இதில் வேடிக்கை என்னவென்றால் அரபு வாழ்கையை கேலியும்,கிண்டலும்,இழிவுடனும் பேசியவர் சில மாதங்களுக்கு பிறகு சென்னை சவுதியா விமான பயணசீட்டு பெறும் தலைமை அலுவலகத்தில் பார்த்தேன்,அவருக்கு பயண தேதி உறுதியாகவில்லை,அந்த நேரத்தில் அவரின் பதட்டதைப்பார்க்க வேண்டுமே,அங்கு ஓடுகிறார் இங்கு ஓடுகிறார் இந்த தேதியில் போகாவிட்டால் என் வாழ்கையே போய்விடும் என்று ஒப்பாரிவைக்காத குறையாக ஒரே புலம்பல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross