சுட்டெரிக்கும் வெயில்
மக்களை மட்டுமின்றி
மண்னையும் கல்லையும் கூட
விட்டு வைக்கவில்லை
விரிந்து கிடக்கும்
வெட்ட வெளியில்
கண் எட்டும் தூரம் வரை
நிழல் எதுவும் கிட்டவில்லை
கல்லுக்கும் பாறைக்கும்
ஏன் தேவை
நிழல் ? என்று
கேட்டு விடாதீர்
ஊருக்கு வெளியே
உருண்டோடி கிடந்தாலும்
உங்களை தாக்கும்
வெயிலின் வெப்பம்
என்னையும் தப்ப விடவில்லை
வழமை போல்
இவ்வருட கோடையிலும்
கத்திரி வெயிலென
பத்திரிக்கை பலவும்
எச்சரிக்கை விட்டதே
நினைவிருக்கா?
வருடந் தோறும்
வாட்டி வதைக்கும் வெப்பத்தை
வெல்வது எவ்விதம் ?
என்பதை என்றாவது
எண்ணியதுண்டா ?
கையிலே காசு இருந்தா
வெப்பத்தை வெல்வதும் லேசு தான்
குளிரூட்டிகளை வாங்கி வந்து
ஆங்காங்கே பொருத்தி விட்டால்
உங்க வீடெல்லாம் ஊட்டிதான்
ஆனாலும் அது உமிழும்
உஷ்ணத்தால்
ஊரும் உலகும்
வெப்பமாகி கொதிக்குதாம்
கேட்டதுண்டா
புவி அது
கொளுத்தப்படும் சேதியை ?
சரி போகட்டும்.!
கேடொன்றை செய்திட்டால்
பகரமாய் நலவொன்றை செய்திடல்
மனிதர்க்கு மாபெரும் நன்மையென
நவிழுதே நல் மார்க்கம்
தோட்டம் துரவெல்லாம்
விட்டு வைக்காம
வீட்டு மனைகளாய்
பிரித்து பிளந்த பின்
மரம் ஒன்றை வளர்த்திடவே
வாகான இடம் ஒன்றும்
இங்கில்லை என்றிடாமல்
என் நிலை கொஞ்சம் நோக்குவீர்
வெப்பத்தால் வெந்து போன
நெஞ்சமது பிளந்திட
காத்திருந்து காத்திருந்து
கடந்து சென்ற காகம் ஒன்று
கக்கிய கழிவால்
மரம் ஒன்றை பெற்றேனே
மரம் ஒன்றை வளர்த்து விட்டு
மனிதன் அவன் மறைந்தாலும்
பலன் அதனை ஒரே ஒரு
ஜீவனே அடைந்ததாலும்
இம்மையில் துவங்கிடும்
சிறு பெரு நன்மைகள்
ஒன்று விடாமல்
மறுமையிலும் அவனை தொடருமே
சதகதுல் ஜாரியா வெனும்
நிலையான தர்மங்களாய்
மண்னில் வாழ்வோரும்
மறுமைக்கு சேர்ப்போரும்
மனித நலன் நாடுவோரும்
மரங்கள் பல வளர்த்திடுவர்
இறைவன் படைத்தளித்த
எழில் கொஞ்சும் இப் பூவுலகை
சுரண்டமால் சிதைக்காமல்
அடுக்கடுக்காய் வர இருக்கும்
மனித குலம் அனைத்தும்
அமைதியாய் ஆரோக்யமாய்
வாழ்ந்திடவே
அழகான வாழ்விடமாய்
அடுத்த தலைமுறையிடம்
கையளித்து விடைபெறுவர்
இப் புவி போற்றும் பெருமக்கள்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross