மண்ணறை கல்வெட்டுகள் வரலாற்று தொடர்பான ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஒரு பகுதியின் தொன்மை, அப்பகுதியில்
வாழ்ந்தவர்கள் யார், அவர்களின் பூர்வீகம் என்ன போன்ற அரிய தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.
காயல்பட்டினத்தின் கப்ருஸ்தான்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாமை, அதுகுறித்த ஆர்வம் குறைவு
போன்ற காரணங்களினால் - தற்போது அவற்றில் ஒரு சிலவே மிஞ்சியுள்ளன. இருப்பினும், காயல்பட்டினத்தில் காணப்படும் கல்வெட்டுகளை -
வரலாற்று துறை வல்லுனர்கள் அவ்வப்போது, ஆய்வு செய்து, அவை கூறும் தகவல்களை பதிவாக்கியுள்ளார்கள்.
அவற்றை - மூல ஆவணங்களில் இருந்து - காயல்பட்டணம்.காம் அவ்வப்போது தொடராக தர உள்ளது.
துவக்கமாக - A TOPOGRAPHICAL LIST OF ARABIC, PERSIAN AND URDU INSCRIPTIONS IN SOUTH INDIA என்ற புத்தகத்தில் உள்ள தகவல்களை
பார்ப்போம். இந்த புத்தகத்தை ஜியாவுதீன் ஏ.தேசாய் தொகுத்துள்ளார். INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH கண்காணிப்பில் இப்புத்தகம் 1989
ஆம் ஆண்டு வெளிவந்தது.
அந்த புத்தகத்தில் சுமார் 1600 கல்வெட்டுகளின் விபரம் அடங்கியுள்ளது. காயல்பட்டினத்தில் உள்ள 22 கல்வெட்டுகளில் காணப்பட்ட விபரங்கள் -
அப்புத்தகத்தின் பக்கங்கள் 93, 94, 95 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இத்தகவல்கள் அனைத்தையும் - இப்புத்தகம், ANNUAL REPORTS ON
INDIAN EPIGRAPHY (ARIE) மற்றும் EPIGRAPHIA INDICA ARABIC AND PERSIAN SUPPLEMENT (EIAPS) என்ற புத்தகங்களின் பல்வேறு பதிப்புகளில்
இருந்து தொகுத்துள்ளது.
(1)
இடம்: பெரியப்பள்ளி வாயிலில் உள்ள தூண் ஒன்றில்
அரசர் குலம்: மதுரா பிரதேச சுல்தான்கள்?
அரசர்: முஹம்மத் ஜமாலுதீன்
தேதி: ஹிஜ்ரி 737; கிருஸ்துவ ஆண்டு 1336 - 37
மொழி: அரபி
மூலக்கருத்து: சுல்தான் முஹம்மத் ஜமாலுதீன் ஜும்ஆ பள்ளியை கட்டியதாகவும், அவரின் மரணத்திற்கு பிறகு
இப்பள்ளியின் கட்டுமானங்கள் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டில் - முடிந்ததாகவும் தெரிவிக்கிறது.
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 375
(2)
இடம்: சிறுப்பள்ளியில் உள்ள அறை ஒன்றில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 811, ஷவ்வால் 4, புதன்கிழமை இரவு; கிருஸ்துவ ஆண்டு 1409 பிப்ரவரி 20
மொழி: அரபி
மூலக்கருத்து: அப்துல் மாலிக் என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் சய்யித் அஹமத் என்பவரின் மகன்; சய்யித்
அஹமத் - சதுதீன் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 318; 1949-50, B, 380
(3)
இடம்: சிறுபள்ளியில் உள்ள அறை ஒன்றில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 812, ரமழான் 9; கிருஸ்துவ ஆண்டு 1410 ஜனவரி 15
மொழி: அரபி
மூலக்கருத்து: மௌலானா சித்திக் முசிலி(?) என்பவரின் மரணம் குறித்த தகவல்.இவர் நைனா(?) என்பவரின் மகன்;
நைனா(?) - முஹம்மத் அல்-இராகி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 317
(4)
இடம்: கற்புடையார் பள்ளிக்கு வடக்கே 400 மீட்டர் தூரத்தில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 847, ஜமாதுல் ஆஹிர் 14, செவ்வாய் இரவு; கிருஸ்துவ ஆண்டு 1443 அக்டோபர் 9
மொழி: அரபி
மூலக்கருத்து: சேக் அபூபக்கர் என்ற கடலோடியின் மரணம் குறித்த தகவல். இவர் அஹமத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 391
(5)
இடம்: சிறுப்பள்ளியில் இருந்த ஒரு தியாகியின் மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 866 (?), ஜமாதுல் ஆஹிர் 17, ஞாயிறு; கிருஸ்துவ ஆண்டு 1462 மார்ச் 19
மொழி: அரபி
மூலக்கருத்து: சய்யித் அஹமத் என்ற கடலோடியின் மரணம் குறித்த தகவல். இவர் சாதுல்லாஹ் என்பவரின்
மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 378
(6)
இடம்: சிறுப்பள்ளியில் இருந்த ஒரு தியாகியின் மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 883, ரபியுல் ஆஹிர் 22, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1478 ஜூன் 23
மொழி: அரபி
மூலக்கருத்து: சேக் அபூபக்கர் என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் கைரோவை சார்ந்த உதுமான் என்பவரின்
மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 379
(7)
இடம்: நைனார் முஹம்மத் தர்காவில், நடைமேடையில் இருந்த பலகை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 887, ஜமாதுல் அவ்வல், திங்கட்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1482 ஜூன் - ஜூலை
மொழி: அரபி
மூலக்கருத்து: பழுதடைந்திருந்தது. (பெயர் தெளிவில்லை) என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் மரைக்காயர்
என்பவரின் மகன்; சம்சுதீன் என்பவரின் பேரன்; சம்சுதீன், நைனா மரைக்காயர் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 312
(8)
இடம்: சிறுப்பள்ளியின் வழிநடைபாதையின் அருகே இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 901, ஜமாதுல் ஆஹிர் 28; கிருஸ்துவ ஆண்டு 1496 மார்ச் 14
மொழி: அரபி
மூலக்கருத்து: பெருந்தலைவர் (ரைஸ்) சேக் அலி என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் ஜமாலுதீன் என்பவரின்
மகன்; சய்யித் அஹமத் என்பவரின் பேரன்; ஜமாலுதீன் என்பவரின் பணியால்; இவர் சய்யித் அஹமத் என்பவரின் மகன், மலசளி அல்-மாபரி
சத்ருத்தீன் மாபரி என்பவரின் வழித்தோன்றல்
மூலப்புத்தகம்: EIAPS, 1951 & 1952, pp. 30-31, pl. XIIa; ARIE, 1971-72, D, 135; 1947-48, B, 105
(9)
இடம்: ஜாமிஇ கபீர் பள்ளிக்கு மேற்கில் உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 905, ரபியுல் ஆஹிர் 22, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1499 நவம்பர் 26
மொழி: அரபி
மூலக்கருத்து: கதீஜா என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் முஹம்மத் என்பவரின் மகள்; முஹம்மத் - சேக்
அபுபக்கர் என்பவரின் மகன்; சேக் அபூபக்கர் - சேக் உதுமான் என்பவரின் மகன்; சேக் உதுமான் - முஹம்மத் என்பவரின் மகன்; முஹம்மத் -
இப்ராஹிம் என்பவரின் மகன்; இப்ராஹிம் - கைரோவை சார்ந்த சதகத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 308
(10)
இடம்: கற்புடையார் பள்ளிக்கு அருகே உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 15 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: முழுமையாக இல்லை. ஃபாத்திமா நாக்யார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் அஹமத்
என்பவரின் மகள்; அஹமத் - கடலோடி சேக் அபூபக்கர் என்பவரின் மகன்; சேக் அபூபக்கர் - சய்யித் அஹமத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 387
(11)
இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 912, ஜமாதுல் ஆஹிர் 1, ஞாயிறு இரவு; கிருஸ்துவ ஆண்டு 1506 அக்டோபர் 19
மொழி: அரபி
மூலக்கருத்து: கற்றறிந்த, தேர்ச்சியடைந்த சேக் நூஹு என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் கற்றறிந்த,
குறைபாடற்ற சேக் சய்யித் அஹமத் என்பவரின் மகன்; சேக் சய்யித் அஹமத் - அல்லாமா நூஹு அல்-பக்கரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 314
(12)
இடம்: பெரியப்பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 918, ரஜப்; கிருஸ்துவ ஆண்டு 1512 செப்டம்பர் - அக்டோபர்
மொழி: அரபி
மூலக்கருத்து: ஒரு பெண்ணின் (பெயர் அழிந்துவிட்டது) மரணம் குறித்த தகவல்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 374
(13)
இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 928, துல்கைதா 25, புதன்கிழமை இரவு ; கிருஸ்துவ ஆண்டு 1522 அக்டோபர் 16
மொழி: அரபி
மூலக்கருத்து: ஹாமியா என பரவலாக அழைக்கப்பட்ட சேக் மய்யா என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர்
ஃபாதிலியார் சேக் நைனா என்பவரின் மகன்; ஃபாதிலியார் சேக் நைனா - சேக் மையா அல்-மாபரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 310
(14)
இடம்: ஒரு பள்ளியில் இருந்த மண்ணறை (எந்த பள்ளி என குறிப்பிடப்படவில்லை)
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 857, ஜமாதுல் ஆஹிர் 9, புதன்கிழமை மதியம் ; கிருஸ்துவ ஆண்டு 1550 ஜூன் 25
மொழி: அரபி
மூலக்கருத்து: அப்துல் கஃப்பார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; அப்துல் கஃப்பார் - அலி என்பவரின் மகன்; அலி -
ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - ஷிஹாபுதீன் சய்யீதீ அஹமத் என்பவரின் மகன்; ஷிஹாபுதீன் சய்யீதீ அஹமத் - நியாயமான அமீர்
ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - சய்யீதீ அஹமத் சதுதீன் அல்-மாபரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 376
(15)
இடம்: கொடிமரப்பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 987, ஜமாதுல் அவ்வல் 4, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1579 ஜூலை 29
மொழி: அரபி
மூலக்கருத்து:
மூலப்புத்தகம்: கற்றறிந்த, இறையச்சம் கொண்ட மகன் சேக் அப்துல்லாஹ் மரைக்காயர் என்பவரின் மரணம் குறித்த
தகவல்; இவர் - சேக் உதுமான் பரிக்கார் என்பவரின் மகன்; சேக் உதுமான் ஃபரிக்கார் - சேக் அலி ஃபரிக்கார் என்பவரின் மகன்
(16)
இடம்: பெரியப்பள்ளிக்கு வடக்கே இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 989, ரபியுல் ஆஹிர் 17, ஞாயிற்று கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1581 மே 21
மொழி: அரபி
மூலக்கருத்து: பெருந்தலைவர் (ரைஸ்) மௌலானா அப்துல் கஃப்பார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் -
சய்யீதி அஹமத் என்பவரின் மகன்; சய்யீதி அஹமத் - சேக் அப்துல்லாஹ் என்பவரின் மகன்; சேக் அப்துல்லாஹ் - சயீத் அஹமத் என்பவரின்
மகன்; சயீத் அஹமத் - ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - யூசுப் என்பவரின் மகன்; யூசுப் - ஹசனுத்தீன் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: EIAPS, 1951 & 1952, pp. 31-32, pl. XIIb; ARIE, 1947-48, B, 103
(17)
இடம்: கற்புடையார் பள்ளியின் நுழைவாயிலுக்கு வலது புறம்
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 9xx, ஷாபான், திங்கட்கிழமை;
மொழி: அரபி
மூலக்கருத்து: தகவல்கள் அழிந்துள்ளது. ஒருவரின் மரணம் குறித்த தகவல்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 313
(18)
இடம்: குட்டியார் பள்ளிக்கு கிழக்கே உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 16 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: சிலவற்றை தவிர பல தகவல்கள் அழிந்துள்ளது. தேதி அழிந்துள்ளது. சேக் முஹம்மத் என்ற (பெயர்
தெளிவில்லை) என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் ஃபாதிலன் முதலியார் என்பவரின் மகன்; ஃபாதிலன் முதலியார், நைனார் சேக் முஹம்மத்
என்பவரின் மகன்; நைனார் சேக் முஹம்மத் - மய்யா சம்சுதீன் என்பவரின் மகன்; ....; இவர் அஹமத் என்பவரின் மகன்; அஹமத் - சேக்
பரீதுத்தீன் என்பவரின் மகன்; சேக் பரீதுத்தீன் - (பெயர் தெளிவில்லை) என்பவரின் மகன்; மேலும் இறந்தவரை, கற்றறிந்தவர்,
தேர்ச்சியடைந்தவர், குறைப்பாடற்றவர், முகமரியாதவர்கள் மற்றும் ஏழைகளை நேசிப்பவர் என கூறுகிறது.
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 309
(19)
இடம்: ஜாமிஇ கபீர் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1211, ரபியுல் அவ்வல் 2, திங்கட்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1796 செப்டம்பர் 5
மொழி: அரபி
மூலக்கருத்து: சயீத் முஹ்யுதீன் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் சயீத் அப்துல் காதிர் என்பவரின் மகன்; சயீத்
அப்துல் காதிர் - மஹ்மூத் என்பவரின் மகன்; மஹ்மூத் - சயீத் அஹமத் என்பவரின் மகன்; சயீத் அஹமத் - அலி என்பவரின் மகன்; அலி -
மஹ்மூத் என்பவரின் மகன்; மஹ்மூத் - அஹ்மத் என்பவரின் மகன்; அஹமத் - அலி என்பவரின் மகன்; அலி - ஹுசைன் என்பவரின் மகன்;
ஹுசைன் - பக்ருதீன் என்பவரின் மகன்; பக்ருதீன் - நூருதீன் என்பவரின் மகன்; அல்-வலி, அஸ்-சுல்தான் (தலைவர், சுல்தான்) என இவரை
வர்ணிக்கிறது
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 307
(20)
இடம்: சிறுப்பள்ளியின் ஒரு அறையில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 18 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: முழுமையாக இல்லை. பீபி மரியம் என்பவரின் புனித உயிர்த்துறவு குறித்து குறிப்பிடுகிறது. இவர் - சயீத்
அஹமத் முதலியார் என்பவரின் மகள்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 319
(21)
இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1226, ரபியுல் ஆஹிர் 10, செவ்வாய்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1811 மே 4
மொழி: அரபி
மூலக்கருத்து: வணிகர் சுலைமான் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் பிர்ஹனைன் என்பவரின் மகன்;
பிர்ஹனைன் - அஹமத் அல்-கபீர் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 315
(22)
இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1229, துல்கைதா 16, வியாழக்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1814 அக்டோபர் 30
மொழி: அரபி
மூலக்கருத்து: பழுதடைந்துள்ளது. வணிகர் முஹம்மத் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் - வணிகர்
(தெளிவில்லை) நைனா என்பவரின் மகன்; (தெளிவில்லை) நைனா - வணிகர் (தெளிவில்லை) நைனா என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 316
[Administrator: படம் இணைக்கப்பட்டது @ 6:05 pm / 22.12.2013] |