மறந்துபோன வரலாறு posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்)[16 September 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44630
அஸ்ஸலாமு அலைக்கும்!
இது சற்றே காலதாமதமான பதிவுதான் என்றாலும், அவசியம் பகிரவேண்டிய ஒன்றாகவே கருதுகிறேன்.
சுதந்திரப் போர் என்றதும் நம் நாட்டவர் ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட வரலாற்றை மட்டுமே பலரும் எண்ணுவர். போர்ச்சுகலின் தளபதிகளோடும் கவர்னர்களோடும் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த சுதந்திரப் போர் நம்மால் பெரிதும் கவனிக்கப்படவில்லை.
சமீபத்தில், பழம்பெரும் எழுத்தாளர் மஹதி (கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனார்) அவர்களின் ”முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்” (நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை) எனும் நூலை படிக்கும் வாய்ப்பை பெற்றேன்.
வாஸ்கோடா காமா நம் நாட்டிற்கு கடல் மார்க்கத்தை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; மாறாக, நாட்டை அடிமைப்படுத்தி சுரண்டும் நோக்கத்துடனே வந்தான் எனும் (இந்நூல் உணர வைக்கும்) உண்மையை, மெகாலே கல்வி முறை நமக்கு சொல்லித்தரவில்லை.
பாரதியின் வீர வரிகளோடு துவங்கும் இச்சிறு நூலில் (160 பக்கங்கள்), காயல் குறித்த செய்தி போதுமான அளவு இல்லாத போதிலும், ஒரு முழு நீள வரலாற்று ஆவணப்படும் பார்த்த திருப்தி மிகுதியாகவே இருந்தது. தொன்மை வாய்ந்த தமிழர்-அரபியர் வணிக உறவை அழகாக எடுத்துக்கூறி அவிழும் சரித்திரத்திற்குள், காலப் பயணம் மேற்கொண்டதுபோல் உணரச் செய்யும் அழகிய தொகுப்பு இது.
குஞ்சாலி மரைக்காயர்களின் வீர சாகசங்களை இந்நூலில் படித்த பின், சகோதர் சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின் இக்கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது. சில மாதங்களுக்கு முன் வாசித்த இவ்வாக்கத்தை, மீண்டும் ஒருமுறை ரசித்து வாசித்தேன்.
”பேராசிரியர் முனைவர் கே.கே.என்.குரூப்பு தலைமையில் கோழிக்கோட்டில் கூடிய மக்தூமி குடும்ப முஸலியாரகத் அசோஷியேஷன் அமர்வில் இது தொடர்பான கருத்தரங்கம், நூல் வெளியீடு, இதழியலாளர் சந்திப்பு போன்றவற்றை நமதூரில் நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர்.”
இதனை சாத்தியப்படுத்த நமதூர் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
Re:...தெளிவான பல சான்றுகள் posted byShireen (Kayalpatnam)[21 January 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42912
கோவா வை போன்று நமது ஊர் மாறி போய் இருக்கும் என்று நினைக்கும் பொழுது மனதுக்கு பக் என்று உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாத்தான். தெளிவான படங்களுடன் சான்றுகளுடன் மிக அருமையான ஒரு மறக்கப்பட்ட வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள். தெரியாத பல புதிய வரலாறை என்னை போன்ற இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள இது ஒரு போர் அடிக்காத சுவாரஸ்யமான கட்டுரை... வாழ்த்துக்கள்...
கோவாவாகி இறை கோபத்திற்கு ஆளாகாமல் காத்த இறைவனுக்கே எல்லாப்புகழும் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[19 January 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42889
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துள்ளஹி வபரக்காத்துஹு .
இறையருள் நிறைக..
இங்கு வந்து போர்த்துக்கீசியருக்கு சொந்தமான இருபத்திரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் அரிசியும் மூன்று குட்டி யானைகளும் இருந்திருக்கின்றன. {சான்று நூல் : செ. திவான் எழுதிய “வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள் “, பக்கம் : 362}
நமதூரின் கடல் தீரத்தில் குஞ்ஞாலி மரக்கார்களும் அவர்களின் தலைமையின் கீழ் வந்த கேரளத்து கடல் முஜாஹிதுகளும் போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடினார்கள் என்றால் அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் மக்தூமி பெரியார்களும் கேரளத்தின் ஹிந்து சாமூத்திரி மன்னரும்தான்.
இந்த கூட்டணி மட்டும் இருக்கவில்லையென்றால் காயல்பட்டினத்தின் தனித்தன்மை மிக்க பண்பாடு வாழ்க்கை முறை மார்க்க நெறி முதலியவைகள் பறிக்கப்பட்டு இன்னொரு கோவாவாக போர்த்துக்கீசிய அடிமை காலனியாக நமதூர் மாற்றப்பட்டிருக்கும்.
வரலாற்றின் இந்த திருப்பத்தில்தான் மனிதர்கள் மாமனிதர்களாக பெருகும் ரசவாதம் நிகழ்கின்றது.
நமது காயல்மாநகர் போர்ச்சுகீசியர்கள்வசப்பட்டு கோவாவாகி இறை கோபத்திற்கு ஆளாகாமல் காத்த இறைவனுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
உறக்கம் கலைந்தது! posted byS.K.Salih (Kayalpatnam)[19 January 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 42888
பொதுவாக சரித்திரம் சார்ந்த ஆக்கங்களைப் படிக்கையில் என்னையுமறியாமல் உறங்கத் துவங்குவேன்... கட்டுரையின் நீளத்திற்கேற்ப என் உறக்கமும் நீளும்!
ஆனால், சாளை பஷீர் அவர்களின் இந்த வரலாற்றுக் கட்டுரை என்னிடம் இருந்த உறக்கத்தையும் களைத்துவிட்டது.
பயனுள்ள அரிய பல தகவல்களை, அது தொடர்பானவர்களை நேரில் சந்தித்து, உரையாடி, தேவையான சான்றாவணங்களைப் பெற்று, அதனடிப்படையில் வரையப்பட்டுள்ள இக்கட்டுரை சிறந்த வரலாற்றுக் கட்டுரை என்பதில் சந்தேகமில்லை.
இது ஒரு துவக்கமே! இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும்... தேவையான விபரங்கள் (அது எவ்வளவு அவதியானாலும்) திரட்டப்பட்டேயாக வேண்டும்... நாளைய சமூகம் தான் யார் என்பதைப் பிசகற அறிந்து வாழ நாம் வழிவகை செய்ய வேண்டும்... அதற்கு இதுபோன்ற ஆக்கங்கள் துணை நிற்க வேண்டும்.
பொதுவாக இதுபோன்ற வரலாறுகள் - முஸ்லிம்களில் ஒரு சாராரால் மட்டுமே கைக்கொள்ளப்படும். இக்கட்டுரையோ - அந்த எல்லையையும் தாண்டி வியாபித்துள்ளது.
கட்டுரையாளரின் / கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் எதிர்பார்ப்புகள் படி நமதூரில் இதுகுறித்த முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உறுதி செய்யப்பட்ட வரலாற்றை நினைவுகூரும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கான வாய்ப்பை நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தH கே.கே.என்.குரூப்பு அவர்களின் ஆங்கிலக் கவிதையை, தெள்ளு தமிழில் இன்னும் இனிமையாகத் தந்திருக்கலாம். (உரைநடை சொல்லுக்கு சொல் Enter Key தட்டி கவிதை போன்று ஆக்கப்பட்டுள்ளதாக என் கண்களுக்குப் படுகிறது.)
ஒரு நீண்ட பயணத்திற்கான முன் ஏற்பாடுகள் - ஆசரியர் அவர்கள் நாளைய தலைமுறைக்கு எதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று சாட்டையை எல்லா புறமும் அக ஒழுக்கம் பெறவேண்டி சுழற்றுகிறார்; நன்றி உணர்வோடு நல்ல உள்ளங்களை நினைவும் கூறுகிறார் - அருமையான உணருபூர்வமான பதிப்பு -
கிருபை உள்ள ரஹ்மான் ஆசரியர் அவர்கள் மீது அருள் மழைபொழி வானக -ஆமின்
"சமூகம் என்கிற கூட்டு முயற்சி " (சில கருப்பு ஆடுகள் அந்த கூட்டு முயற்சியை சிதைகிறார்கள் ) அடி வேரிலே திரவகத்தையும் சேர்த்தே ஊத்துகிரார்கள்-
அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் மழை பொழிவானாக -ஆமின்
அருமையான, செழுமையான பதிப்பாகவும் மனதுக்குள் மழை துளி விழுந்ததாக நாம் இதை உணருகிறோம் .
எந்த ஒரு சமூகமும் தனது துவக்கத்தை அறியாதவரை உணர்வு பெற்ற சமூகமாக மாறுவதில்லை .
நன்றி உணர்வோடு நம் முன்நூர்களை (நூர்) நினைவு கூறவேண்டும் -அதற்கு அல்லாஹ்விடமே நாம் பிராத்தனை செய்யவும் வேண்டும் . வல்ல நாயன் நம் அனைவர்களும் அந்த பொக்கிஷத்தை தந்து அவனை அறிகின்ற "விலாயத்" உடைய அருளை தருவானாக - தருவான் என்று கூறி
"வரலாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது " (பல நேரங்களில் நாம் விரும்பாததையும் வரலாறு பதிவு செய்யும் - பொதுவாக )
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[01 October 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37568
அஸ்ஸலாமு அலைக்கும்,
வரலாறு என்பது கண் போன்றது நம் மக்கள் தங்கள் வரலாறு குறிந்த தகவல்களை சரியான முறைகளில் அறிவது நமக்கு நல்ல பலனை தரும் மேலும் அவைகள் நம்முடைய மனப்பான்மையை நல்ல நிலைக்கு பயணிக்க செய்யும் . நம் மக்கள் இது போன்ற பதிவுகளை ஆதாரத்துடன் பயண புரிந்து பல சிதைந்து சிதறி கிடக்கும் இது போன்ற வரலாறுகளை கோர்வை செய்து பதிய செய்தால் அவைகள் கண்டிப்பாக பயனாக அமையும் .
ஆரிப் காகா அவர்களுக்கும் இது போன்ற பணிகளுக்கு உதவிய அனைவர்க்கும் நன்றி .....
நம் மக்கள் நிறைய பயண கட்டுரைகள் எழுதணும் அவைகள் நமக்கு பல பயனுள்ள தகவல்களையும் அது சமையம் வரலாற்றையும் நமக்கு அறிய தரும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross