காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - தற்போது பயன்பாட்டில் இருக்கும் காயல்பட்டினம் தென் பாக கிராம வரைப்படம், முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை - நில அளவை படம் பக்கத்தில் காணலாம்.
இதற்கு முன்னர் - 1958ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த, கிராம வரைப்படத்தினை காயல்பட்டணம்.காம் தற்போது பெற்றுள்ளது. அதில் சில ருசிகரமான தகவல்கள் உள்ளன. குறிப்பாக - நகரின் ஒரு சில பகுதிகளின் பெயர்கள், 1958ம் காலகட்டத்தில் எவ்வாறு இருந்தன என்ற தகவலாகும்.
முழு படத்தினை காண இங்கு அழுத்தவும்
1958 ஆம் ஆண்டைய காயல்பட்டினம் தென் பாக கிராம வரைப்படம்
சர்வே எண் 315 பகுதி, கடையக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 332 பகுதி, வடக்குவாடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 370 பகுதி, துலுக்கக்குடி என்றும், மறக்குடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 372 பகுதி, சானர்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 108, 109 பகுதி, மேல் காயல்பட்டணம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 470 பகுதி, வண்ணாக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 64 பகுதி, வானியக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 55 பகுதி, சாயல்காரக்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 501 பகுதி, ஓடக்கரை சானர்குடி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வே எண் 171, 172 பகுதி, பேயன்விளை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. |