பதினைந்து ஆண்டுகளை மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் காயல்பட்டணம் டாட் காம் இணையதளத்திற்கு இப்பூவுலகில் வாழும் எல்லா காயலர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் மென்மேலும் வளர்ந்து ஊடக உலகில் அரிய சாதனைகள் படைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன். ஆமீன்.
மிகவேகமாக மாறிவரும் கணினி உலகத்தில் நமதூருக்கு தொலைபேசியில் பேசினாலோ அல்லது காயலர்களை தொடர்புகொண்டாலோ தான் நமதூர் நடப்புகளை அறியமுடியும் என்கிற நிலை மாறி விரல் நுனியில் நொடிப்பொழுதில் உலகில் உள்ள காயலர்கள் அனைவரும் நமது தாயகத்தில் நடக்கும் எல்லா விதமான செய்திகளையும் தரத்துடன் அதேவேளையில் பத்திரிகை தர்மத்துடன் எந்த வித பாகுபாடும் இன்றி தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கியது காயல்பட்டணம் டாட் காம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. "இணையத்தில் நமது தாயகம்" என்கிற ஒரு உணர்வை ஏற்ப்படுத்தி ஒட்டு மொத்த காயலர்களை இணையத்தில் ஓன்று கூட்டி கருத்து பரிமாற்றங்கள், சாடல்கள், கட்டுரைகள் மற்றும் சுவராசியமான அறிவு வளர்ச்சி செய்திகள் என்று எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்திக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
காயல்பட்டணம் டாட் காம் அதிகம் உபயோகிப்போர் வெளிநாடு வாழ் காயலர்கள் என்பதால் பல காயலர்களுக்கு இந்த இணையதளம் தான் ஒரு நல்ல நண்பன். எத்தனையோ இணையதளங்கள் வந்தாலும் காயல்பட்டணம் டாட் காம் படித்தது போல் இல்லை என்று பல காயல் நண்பர்கள் கூற நான் கேட்டதுண்டு. இதற்காக நான் யாரையும் குறை கூறுவதாக என்ன வேண்டாம். முதலில் வந்ததால் மக்கள் மனதில் முதலாவதாகவே குடியேறி விட்டது போலும்.
கடந்த சில வருடங்களாக மக்களுக்கு அரசியல் பொருளாதார மற்றும் சமூக விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி நமது சமூகத்தில் களையப்படவேண்டிய விஷயங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இன்றைய தேதியில் மக்கள் பல அரசாங்க அலுவல்களிலும், அரசு அளிக்கும் மானியங்கள், மக்கள் அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உரிமைகள் என்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்றல் அந்த பெருமை காயல்பட்டணம் டாட் காமிற்கே.
காயல்பட்டணம் டாட் காம் உடைய இமாலய சாதனை என்று நான் நினைப்பது உலகில் உள்ள எல்லா காயலர்களையும் காயல் நல மன்றங்கள் அமைக்க தூண்டியதுதான். நீங்கள் வெளியிடும் காயல் நல மன்றங்களின் செய்திகளை படித்து படித்து உலகில் வாழும் எல்ல காயலர் இதயத்திலும் நமது சமூகத்திற்காக தத்தம் நாட்டிலும் ஒரு காயல் நல மன்றம் வேண்டும் என்கிற ஒரு ஆவலை ஏற்படுத்தியது. இந்த காயல் நல மன்றங்களினால் பயன்பெறும் நமதூர் வாசிகள் எண்ணிலா. காயல் நல மன்றங்கள் நமது சமூகத்தில் கல்லாமை இல்லாமை ஆக்கவும் நோயற்ற சுகாதாரமான ஒரு காயல்பட்டணம் காணவும் மற்றும் நமது சமூக மேம்பாட்டிற்காக பல தொண்டுகள் ஆற்றி வருகின்றன.
எனக்குள்ள ஒரே ஒரு மனக்குறை, இந்த இணையதளத்தை காயலர்கள் தவிர ஏனைய தமிழ் நண்பர்களும் அவதானிக்க தொடங்கிவிட்ட நிலையில், நமதூரின் இறையாண்மையையும், பெயரையும் பாதுகாக்க வேண்டியது இந்த ஊடகங்களின் தலையாய கடமை ஆகிறது. எனவே இதை மனதில் கொண்டு சில அல்லது பல சர்ச்சைக்குரிய செய்திகள் அல்லது நடப்புகளை ஊர் நலம் கருதி பதிவு செய்யாமல் அல்லது அப்படி பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தேவையில்லாத அல்லது நாகரீகமற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு தெரியும் காயல்பட்டணம் டாட் காம் செய்திகளையும் அதன் கருத்துக்களையும் சரியான முறையில் தணிக்கை செய்துதான் பதிவுசெய்கிரீர்கள் என்று, இருந்த போதிலும் படிப்பவர்கள் எல்லோரும் ஒரு கருத்தை ஒரே மன நிலையில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனபது எனது தாழ்மையான வேண்டுகோள். |