kayalpatnam.com 16ம் ஆண்டை எட்டிப் பிடிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனாலும் காயல்பட்டினத்தில் 7-8 இணையதளங்கள் இயங்குகின்றன. அவற்றின் தூரப் போக்கான பார்வைகள் சற்று பின் தங்கியதாக அல்லது ஒரு சார்பு உள்ளதாக இருப்பதை வேதனையுடன் அவதானித்து வருகிறேன். இதற்கு கருத்தாளர்களும் ஒரு வகையில் பொறப்பு எனவும் எண்ண தோன்றுகிறது.
நான் அடிக்கடி எனது விமர்சனங்களில் சொல்லுவது உண்டு, ஒரு பூட்டை திறக்க ஒரு வலிமையான சுத்தியல் பெரும் பாடு படுகிறது. அருகில் கிடக்கும் சாவியை அது கேட்கிறது, "நான் உன்னை விட வலிமையானவன் ஆனாலும் இந்த பூட்டை திறக்க கஷ்டப்படுகிறேனே, உன்னால் எப்படி இலகுவாக அதை செய்ய முடிகிறது?". சாவி சொன்னது, "நீ என்னை விட வலிமையானவன்தான். ஆனால், நீ பூட்டின் தலையில் ஓங்கி அடிக்கிறாய், நான் அதன் இதயத்தை வருடுகிறேன், அது லேசாக திறந்து கொள்கிறது".
கருத்தாளர்களை மயிலிறகு போன்று மென்மையாக கருத்துக்களை பதிவு செய்ய சொல்லுங்கள். பல சிக்கல்களின் தீர்வு நெருங்கி வருவதில் இருக்கிறது, ஒரு சிறிய விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது, ஒரு சிறிய மன்னிப்பில் இருக்கிறது. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்பதை இதன் மூலம் kayalpatnam.com வாசகர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துரையாகவும் பணிவான வேண்டுகோளாகவும் வைக்கிறேன்.
|