Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:10:38 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 10
#KOTWART0110
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 6, 2012
கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா?
இந்த பக்கம் 4023 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று திரும்பும் திசையெல்லாம் `கூடங்குளம்’ இந்தியாவின் தென் கோடியில் அமைந்த கடற்கரை கிராமமான இந்த ஊர் இந்த அளவு பிரபலமடைய காரணம் இங்கு அமைக்கப்பட் டுள்ள அணுமின் நிலையம்.

`வேண்டாம்`-`வேண்டும்’ என்ற போராட்டங்களும், `ஆபத்து`-`ஆபத்தில்லை’ என்ற வாதப்- பிரதிவாதங்களும் இதில் ஈடுபட்டுள்ளவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. இது மதரீதியாகவும் மனங்களை காயப்படுத்தி வருவது வேதனைக்குரியது.

இந்த விவாதம் முடிவுக்குக் கொண்டு வர முடியாததா? அல்லது இன்னமும் ஆர்ப்பரிக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் முன் இதைப்பற்றி நாமும் கொஞ்சம் அலசுவோம்.

இந்தியாவின் தற்போதைய மின்தேவை 1 இலட்சத்து 80 ஆயிரம் மெகா வாட். ஆனால் உற்பத்தியோ 1 இலட்சத்து 34 ஆயிரம் மெகா வாட். எனவே பற்றாக்குறை 46 ஆயிரம் மெகா வாட். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இது இரட்டிப் பாகும்.

இன்னும் 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 150 கோடியைத் தாண்டும்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்க 7,50,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நமது நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவிகி தம் அனல் மின்சாரத்திலிருந்தும், 26 சதவிகிதம் புனல் மின்சாரத்திலிருந்தும், 1.5 சதவிகிதம் காற்றாலைகள் மூலமும் 2.5 சதவிகிதம் அணு மின்சார மூலமும் கிடைக்கிறது.

அனல் மின் நிலைய உற்பத்திக்கான நிலக்கரி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் 14 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால் வெளிவந்த செய்திகளின் படி கடுமையான நிலக்கரி பற்றாக்குறையால் இந்தியாவில் அனல் மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும், இந்தியா இருளில் மூழ்கும் என்ற அபாய அறிவிப்பாகும். ஏனெனில் நாட்டில் அனல் மின் நிலைய உற்பத்தி 86 ஆயிரத்து 717 மெகா வாட்டாகும். நாட்டில் உள்ள 86 பெரிய அனல் மின் நிலையங்கள் 44-ல் ஒரு வாரத்திற்கும் குறைவான நிலக்கரியே இருப்பில் உள்ளது. 29-ல் 4 நாட்களுக்கு மட்டுமே உள்ளது.

தெலுங்கானா போராட்டம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை என்பதால் இந்த தட்டுப்பாடு. இதனால் நாள் தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமல் செய்யப்படுகிறது.

நிலக்கரி நிலை இப்படி! மின்சாரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் மரபு சார்ந்த ஆதாரங்களான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு இந்தி யாவில் பெருமளவில் இல்லை. சூரிய ஒளியின் மூலம் தாயரிக்கப்படும் மின் சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்பட வேண்டும். சேமிக்க அதிக செலவாகும். காற்றாலை மின் உற்பத்தியும் பல மாதங் கள் தடைபட்டு நிற்கும். புனல் மின்சார உற்பத் தியை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இல்லை,

எனவேதான் அணு சக்தி மூலம் மின் உற்பத்தியில் இந்தியா தடம் பதித்தது. 1958 மார்ச் 14-ல் இந்தியாவில் அணு சக்தி ஆணையம் தொடங்கப் பட்டது. தாராப்பூர், ராஜஸ்தானின் ராவட்பாட்டா, சென்னை கல்பாக்கம் ஆகிய இடங் களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுக்குத் தேவையான யுரேனியம் மற்றும் அணுவியல் சாதனங்கள் அமெரிக்கா, கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பெறப் பட்டது.

1974-ம் ஆண்டு மே-18ம் நாள் பொக்ரான் அணு குண்டு சோதனைக்குப் பிறகு இந்த நாடுகள் அணுவியல் சாதனங்களை இந்தியா விற்கு தர மறுத்தன. அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தை ஏற்று கையெழுத்திட இந்தியாவை நிர்ப்பந்தித் தன. ஆனால் இந்தியா அணுசக்தி தொழில் நுட்பங்களில் தன்னிறைவு பெற்றது. சொந்தமாக வடிவமைத்து நிறுவப்பட்ட 12 அணுமின் நிலையங்கள் உட்பட 20 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை பெரும்பாலும் 220 மெகா வாட் திறன் கொண்டவையே. தாராப்பூரின் 3 மற்றும் 4-ஆவது அணு மின் உலைகள் 540 மெகா வாட் ஆகும். கல்பாக்கத்தில் 500 மெகா வாட் திறன் கொண்ட அதிவேக ஈணுலை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 20 அணுமின் நிலையங்களிலிருந்து 4780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த மின் உற்பத்தியில் 2.85 சதவீதமே!

சர்வதேச அணுசக்தி முகமையின் விவரப்படி உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 529 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவை 3 இலட்சத்து 78 ஆயிரத்து 910 மெகா வாட் மின் சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் உலைகளை அமைப்பதற்கு 1988ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஆனால் அந்நாடு பல நாடுகளாக சிதறுண்டு போனதால் அது தடைப்பட்டது.

பின்னர் 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஒப்பந்தம் 2001-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

13 ஆயிரத்து 615 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையத்திலிருந்து அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங் கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங் கியதும் தமிழ்நாட்டிற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும், தமிழகத்திற்கு தினமும் தேவைப் படும் மின்சாரம் 11500 மெகாவாட். இதில் மத்திய தொகுப்பு, தனியார் மின்சாரம், மரபு சாரா மின்சாரம் என 10,237 மெகா வாட் கிடைக்கிறது. இதில் மத்திய தொகுப்பிலிருந்து கிடைப்பது மட்டும் 2861 மெகா வாட். தினமும் மின் வெட்டு மூலம் 1500 மெகா வாட் சரி செய்யப்படுகிறது.

53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் தமிழக மின் வாரியத்திற்கு கூடங் குளத்திலிருந்து குறைந்த விலையிலான ரூ.2.51 யூனிட் கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் போது தினமும் 10 கோடி ரூபாய் மிச்சமாகும். இப்போது யூனிட் ரூ.5.31 செலவாவதாக தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத் திற்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களாக இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் உதயகுமார் என்பவர் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அருகிலுள்ள இடிந்த கரை லூர்து மாதா ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து நடைபெற்ற இப்போராட்டம் அணு விஞ்ஞானி களின் குடியிருப்பு அமைந்துள்ள செட்டிகுளம் பகுதிக்கு மாறியது.

அணுமின் நிலைய பணிக்குச் சென்ற அலுவலர்கள், விஞ்ஞானிகள் வழிமறிக்கப் பட்டதாகவும், வாகனங்கள் தடுக்கப்பட்டதாகவும், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக இது வரை 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மத்திய அரசு அமைத்துள்ள குழு தமிழக அரசு அமைத்துள்ள குழுவுடன் பேச்சு நடத்தியது.

இதனிடையே முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலை யத்தை பார்வையிட்டார். ``இந்த அணுமின் நிலையம் மூன்றாம் தலை முறைக்கான அதி நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிர்விப்பானில் தடை ஏற்பட்டாலோ நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப்படும் தானியங்கி வசதி உள்ளது.

அணு உலையின் எரி பொருள் உருகி கீnழு விழுந்தால் அதன் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு அதன் கதிரியக்கத்தைச் செயலிழக்கச் செய்துவிடும். கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரம் உள்ளது. பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பான இடத்தில் உள்ளது. புயல், சூராவளி, சுனாமி வந்தாலும் பாதிக்காது`` எனக் குறிப்பிட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் பாலாஜி, நிலைய இயக்குநர் சுந்தர் தலைமைப் பொறியாளர் ஜின்னா என சம்பந்தப் பட்டவர்கள் விளக்கங்களை தந்து கொண்டேயிருக்கின்றனர். அணுமின் நிலையத்தில் தொடர்ந்து பணிகள் நடைபெறாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார் தேசிய அணுசக்தி ஆணைய தலைவர் குமார் பானர்ஜி. என்றாலும் போராட்டம் நிற்கவில்லை.

மதகுருமார்களே போராட்டத்தைத் தூண்டி விடுவதாகவும், பல பகுதிகளிலிருந்து போராட்டத் திற்கு மக்கள் அழைத்து வரப்படுவதாகவும் அவர்களுக்கு உணவு,பணம் கொடுக்கப்படுவதா கவும் அணு உலைக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்ட குழுவினருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் பற்றிய விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்ய உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடை பெற்று வந்தன. அப்போதெல்லாம்,`அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர்` என, போராட்டங்கள் வெடிக்க வில்லை ஏன்?

அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 1 2 3 அணு ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங் கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும் என்ற தூண்டுதலே இப்போராட்டம் என கூறப் படுகிறது.

என்ன இருந்தாலும் தமிழக முதல்வர் மனது வைத்தால் இப்போராட்டம் நொடியில் முடிந்து விடும். தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்? என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: SHAMS Kayal (Kayalpattinam) on 06 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20965

கூடங்குளம் அனல் மின் நிலைய திட்டங்களை ஏன் எதிர்கிறார்கள் (புள்ளி விவரங்கள்).

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான தீர்மானங்கள்: மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கூடன்குளம் அணுஉலை திட்டத்தை கைவிடுவதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அச்சத்தை போக்கும் முதல் நடவடிக்கையாக கூடன்குளம் உலை திட்ட வளாகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள “யுரேனியத்தை” உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

கூடன்குளம் அணுஉலை திட்டத்தை கைவிட கேட்டு ஜாதி, மத வேறுபாடின்றி நாடு முழுவதும் மக்கள் போராடிவரும் நிலையில் சாதிய, மதவாத குழுக்களை துண்டிவிட்டு மக்களை பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தையும், மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்காக முதல்வர் கோரியுள்ள நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து பொய் பிரசாரம் செய்து வரும் அணுசக்தி துறையை தமிழக, இந்திய அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

கதிர்வீச்சால் உடல் நலக்குறைவு...!

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.

உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன...?

அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.

செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.

சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது அது எப்படி என்ற புள்ளிவிவரம்..! வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி ரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி ரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி ரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது..? மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

மாற்று திட்டம் என்ன?

தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

 நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

கூடங்குளம் அணு உலை குறித்து ஆராய (சந்தேக) கமிஷன்..? முன்னாள் சேர்மன் கூடங்குளம் அணு உலை குறித்து ஆராய அணுசக்தி கமிஷனின் முன்னாள் சேர்மன் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் உள்பட நான்குபேரை நிபுணர்குழு உறுப்பினர்களாக அரசு நியமித்துள்ளது.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கிய சிற்பிகளில் ஒருவர்தாம் எம்.ஆ.ஸ்ரீனிவாசன். அணு நிலையத்தை ஸ்தாபிக்க கூடங்குளத்தை தேர்வு செய்ததிலும் ஸ்ரீனிவாசனுக்கு பங்குண்டு. ஸ்ரீனிவாசனின் தலைமையிலான நிபுணர்குழு அணுமின் நிலையத்திற்கு ஆதரவான அறிக்கையை தான் அளிக்கும் என்பதில் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சந்தேகமில்லை.

மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பும் அரசு...!.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 8 மணிநேரம் மின்சார தடை நீடிக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு இவற்றால் அவதியுறும் மக்கள் மின்சார தடையினால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிக்க இயலவில்லை. தொழிற்சாலை தொழிலாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மின்சார அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், அரசு மெளனம் சாதித்து வருகிறது. இதற்கு காரணம், தமிழகத்திற்கு உடனடி மின்சார தேவைக்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் ஒரே தீர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு தமிழக அரசு நாடகமாடுவதாக கூறுகிறார்கள்.

வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தையும் தமிழக அரசு நிறுத்திவிட்டது. மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பத்தான் தமிழக அரசு திட்டம் ஆகும். தமிழகத்தின் தலை சிறந்த சகுனியாக செயல்படும் பாசிச ‘சோ’ வின் ஆலோசனை தமிழக அரசுக்கு தாராளமாக கிடைப்பதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

1அணு உலைகள் குறித்து வெளியான படைப்புகள் அனைத்தும்.

2 ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, உயிர்மை, 2011 திசம்பர் இதழ்

3. கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்

4. மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்

5. http://www.thoothuonline.com/ இணையத்தளத்தின் சில கட்டுரைகள்.

நன்றி.!

Abu SAFWAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Shameemul Islam SKS (Chennai) on 06 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20966

மிக அருமையான விளக்கம்.

காலத்தால் மிக அவசியமான கட்டுரை.

ஆனால் சில கேள்விகளுக்கு விளக்கம் தரப்படவில்லை. 2.5% க்கும் குறைவான அளவில் கிடைக்கும் அணு மின்சாரத்தில் இவ்வளவு அச்சுறுத்தல் இருந்தும் அதில் போதிய பாதுகாப்பு குறித்து விளக்கம் இல்லை என்றே கூறவேண்டும்.

ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியால் அணுமின் நிலைய பாதிப்பில் சிக்குண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். அங்கே மக்களோ பதை பதைத்து நிற்கின்றனர். அதனைத்தொடர்ந்து இதர அணு மின் நிலையங்கள் உலகெங்கிலும் மூடப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் பல அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருவதற்கும் ஜப்பானில் நடந்த இயற்கை சீற்றமே காரணமாகும்.

ஒரு வல்லரசு தன்மை கொண்டு பொருளாதாரத்தில் கோலோச்சி நிற்கும் ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் நம் நாட்டில் குறிப்பாக அணுமின் நிலைய பகுதிகளில் இயற்கை சீற்றம் நடந்தால் என்ன பாதுகாப்பு. நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் துறையால் ஒரு SPACE SCIENTIST. NUCLEAR SCIENTIST அல்ல. ஆனால் இந்நாள் முன்னாள் அணு விஞ்ஞானிகள் பலர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்கள், ஏன்.

அமெரிக்கா எப்போதும் பிற நாட்டு வளர்ச்சியில் மூக்கை நுழைத்து வெறியாட்டம் ஆடுவது மறுப்பதற்கில்லை. ஆனால் பாதுகாப்பில் இன்னும் தெளிவில்லாமல் நிற்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அழித்து அப்பகுதி மக்களின் நம்பிக்கையை உறுதி செய்த பின் தேவை எனில் இம் மின்சார உற்பத்தியில் இறங்குவதே அறிவான செயலாக இருக்கும். கட்டுரையை இலகுவான வார்த்தைகளால் ஆக்கி எளிதில் விளங்க வைத்த பாசமுள்ள மகபூப் காக்காவிற்கு நன்றிகள். தொடர்ந்து மக்கள் நலன் கொண்ட பல கட்டுரையை தாருங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Lebbai (Riyadh) on 06 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20967

அஸ்ஸலாமு அழைக்கும்,

கருத்துக்களை தொகுத்து தந்த சகோதரர் காயல் ஷம்ஸ் மற்றும் ஷமீம் காக்கா அவர்களுக்கு நன்றி.

மாற்றுவழியில் மின்சாரம் என்று எழுதிய நெல்லை கவிநேசன் என்பவர் ஆதித்தனார் கல்லூரியில் எங்கள் பேராசிரியர். பல நல்ல ஆலோசனைகளை தந்தும், ஒழுக்கங்களை கற்று தந்தும் வழிநடத்துபவர்.

ப்ரிப்யட் என்ற ஊர். இன்னும் சோக கதை தொடர்கிறது. பல ஆயிர வருடம் வாழ இன்று தகுதி இழந்துள்ளது. எதனால்?

படித்து பட்டம் பெற்று தனக்கும் ஊருக்கும் உதவியா இருக்க பிஞ்சு குழந்தைகளை அனுப்பிய அந்த nursery நிலையை பாரீர். அந்த ப்ரிப்யட் நகரை 25 வருடம் கழித்தும் அதன் தன்மை பாரீர் (படங்களை பாருங்கள் )... கல்மனதும் கரையுமம்மா...

http://www.environmentalgraffiti.com/featured/chernobyl-then-now/14634?image=12


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 06 March 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20968

மிக அருமையான கட்டுரை. பல விடயங்களுக்கு பதில் உள்ளது. ஆளும் அரசு இதில் தனக்கு பெருமையில்லை, தனது கை கொடுப்பில் துவக்க படவில்லை என்பதை தான் கருத்தில் கொள்கிறதே தவிர மக்களின் நன்மையை அல்ல. அப்படி மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்றால் சென்ற அரசாங்கத்தால் நடைமுறை படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்கள், மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளது, நடைமுறையில் இருந்தது செயலிழந்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படுத்தப்பட்டால் தமிழகத்தின் தற்போதைய தேவையில் 40 % திணை ஈடு செய்யும்.

மின்தேவையில் தன்னிறைவு பெற்ற குஜராத் மற்றும் மகராஷ்டிரா மட்டுமே மக்கள் வாழ்வில் மற்றும் தொழில் ரீதியில் முன்னணியில் உள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: hasbullah (dubai) on 06 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20969

சகோதரர் சம்சுதீன் குறிப்பிட்டுள்ள படி கூடங்குளம் அணு நிலையம் அவசியமா என்பதை அறிந்து விளக்கம் அளித்தால் இந்த குழப்பத்தின் நிலை மக்களுக்கு விளங்கும்.....ஆதரிப்பதா அல்ல எதிர்ப்பதா என்று......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. அணு உலையின் மறு பக்கம்...!!! அமெரிக்காவின் ஆதிக்கம்...!!!
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், (????????????.) on 06 March 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20970

காயல் மகபூப் காக்கா சொல்வது தான் உண்மை! நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் வண்ணம் அந்நிய ஆதிக்க சக்திகளின் தூண்டுதலே அணு உலை எதிப்புக்கு முக்கிய காரணம்.இதற்கு அமேரிக்கா என்ன வேஷம் வேண்டுமானாலும் போடும்.

ஒரு நாடு தன்னிறைவு அடைவதற்கு மின்சாரம் எனும் மாபெரும் சக்தி அவசியமா ஒன்றே! தேவை அத்கரித்து பற்றாக்குறை வரும் போது தான் அதைப் பெற பல வழிகளை அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றது. ஆபத்து,ஆபத்து, ஆபத்தேதான்! அது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வரை!

அதே நேரத்தில் பாதுகாப்பான பல அணுமின் உலைகள் உலகம் முழுவதும் இருக்கின்றனவே,இன்றைய விஞ்ஞான உலகத்தின் அபார வளர்ச்சியால் அணு உலை வெடிக்கும் நிலை வந்தால் அது அப்படியே பூமிக்குள் பல்லாயிரம் அடி ஆழத்திற்குள் புதைக்கபட்டுவிடும்,அல்லது குளிரூட்டப்பட்டு அதை செயலிழக்கச் செய்துவிடலாம்.இன்னும் எண்ணற்ற பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாளும் நவீன பாதுகாப்புத் திறன் கொண்ட அணு உலையை நம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அதற்கு ஒப்புதல்,அறிக்ககள் என யாவையும் உறுதி செய்யப்பட்ட பின் தான் அரசு இதை செயல் படுத்த முன் வந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் அணு உலையை மூடுகின்றனர் என்று சொல்பவர்கள் அந்த நாடுகளில் இன்றளவும் செயல் பட்டு வருகின்ற அணு உலைகளின் எண்ணிக்கையைப் பற்றி சிந்தித்ததுண்டா? அவர்கள் வல்லரசாகவும்,தன்னிறைவு அடைந்த நாடாகவும் உலகின் உச்சியைத் தொட்டுவிட்ட நிலையில் நம் நாடு மட்டும் தவழும் பருவதிலிருந்து எழுவதற்கு கூட சம்மதிக்க மறுக்கப் படுகின்றோமே?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிப்பாளர்களுக்கு அயல் நாட்டிலிருந்து பணம் எதற்காக வருகின்றது? எங்கிருந்து வருகின்றது? என்பதைப் புரிந்து கொண்டால் சரி!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Lebbai (Riyadh) on 06 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20971

இன்று அரசியல் வாதிகளும், அணுமின் ஆதரவாளர்களும் வைக்கும் வாதமும், தரும் உத்திரவாதம் போல் தான் அன்று செர்னோபில் அணு உலை நிர்வாகம் சார்பாகவும் பிரச்சாரம், போஸ்டர் வைக்கப்பட்டது. அதன் வாசகம் இதோ :

The text reads :

“The reactor’s core cooling systems are closed technological circuits. Water is so thoroughly decontaminated that the most sensitive instruments cannot pick up even a trace of radiation.”

The caption for the inset picture reads: “The control block of the plant can shut down the reactor in a matter of seconds.”

கடைசியில் என்ன நடந்தது? அந்த உத்தரவாதம் எல்லாம் காற்றில் பறந்து, radiation வடிவத்தில் எல்லோரையும் தாக்கியதுதான் மிச்சம்.

அனல் மின் நிலையத்தால் மாசு உண்டாகி சுற்றுப்புற சூழ பாதிக்கபட்டால், இப்போது புது புது டெக்னாலஜி அனல் மின் சார்ந்த உற்பத்தியில் இருகிறதே, "clean coal technology". அதை பயன் படுத்தி வேறு வகையில் மின் தயாரிக்கலாமே?

பெரிய அளவில் பணம் செலவழித்து விட்டார்களாம்; மிக பெரிய எதிர்ப்பு (ரோட்டில் வந்து தான் போராடனும் என்றில்லை) அன்று முதல் இருப்பது தெரிந்தும், அரசு ஏன் இதுக்கு முக்கியத்துவம் கொடுத்துகொண்டே இருந்தது. தவறு செய்தது அரசா அல்லது மக்களா?

அமெரிக்கா இதுக்கு பின்புறம் இருக்கட்டும் இல்லாமல் போகட்டும்; இது நம் வாழுரிமை பிரச்சனை இல்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Mohammed Ismail Buhari N.T. (Chennai) on 06 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20972

சகோதரர் ஷமீமின் கருத்துப்படி காலத்தின் அவசியம் உணர்ந்து உயரிய கருத்துகளை மகபூபு அவர்கள் கட்டுரையில் தந்துள்ளார். அருமையான தகவல் தொகுப்பாகும். கூடங்குளம் அணுமின் ஆலையை பற்றி இதற்குமேல் விளக்கம் தேவை இல்லை.

மனிதசக்திக்கு அப்பாற்பட்டு ஏதும் நடந்தால் அதற்க்குபெயர்தான் விதி என்பதாகும். நாம் விதியை நம்புகிறவர்கள். விவாதத்திற்காக அரசின் தவறு என்று வைத்துக்கொண்டாலும் ஆரம்ப காலகட்டத்தில் இன்றைய எதிர்ப்பாளர்கள் எங்கே போயிருந்தார்கள்? போதிமரத்து ஞானம் திடீரென உருவாக காரணம் என்ன? (எல்லாம் மின்னல் ஹபீப்தான் காரணம் எனபது ரகசியம் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது) அரசாங்கம் திடீரென எடுத்த முடிவல்ல. நீண்ட காலமாக சிந்தித்து தீட்டிய திட்டங்களின் முடிவே அணுமின் திட்டம் என்பதை உணரவேண்டும்.

சர்வதேச சட்டாம்பிள்ளை அமெரிக்கா சாட்டிலைட் மூலம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் கண்காணிக்கும் வேளையிலும் அணுசோதனை நடத்தி பொக்ரானில் வெற்றிகண்ட அப்துல் கலாமைவிடவா இந்த எதிர்ப்பாளர்கள் அணுவிசயத்தில் அவ்வளவு பெரிய ஆட்கள்? இறைவன் தந்த இந்த செல்வத்தை பயன்படுத்தி ஓரளவாவது நிம்மதி பெறுவோம். மின்தடையால் தினந்தோறும் பல்லாயிரங்கோடி நஷ்டமாகுவதை தவிர்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Lebbai (Riyadh) on 07 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20973

அஸ்ஸலாமு அழைக்கும்,

பாதுகாப்பில் இன்னும் தெளிவில்லாமல் நிற்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்து அப்பகுதி மக்களின் நம்பிக்கையை உறுதி செய்த பின் தேவை எனில் இம் மின்சார உற்பத்தியில் இறங்குவதே அறிவான செயலாக இருக்கும் என்றும் ஷமீம் காக்கா கருத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

ஷமீம் காக்காவின் இரண்டாவது வினா- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் துறையால் ஒரு SPACE SCIENTIST. NUCLEAR SCIENTIST அல்ல. ஆனால் இந்நாள் முன்னாள் அணு விஞ்ஞானிகள் பலர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்கள், ஏன்?

விதியை நம்பி தான் இருக்கிறோம், அதனால் DCW இப்படியே விட்டுவிடலாமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Mohamed Ismail Buhari N.T. (Chennai) on 07 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20974

சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம்நாட்டில் பஞ்சமில்லை. கொலை கொள்ளை பெருகினால் அரசை குறை சொல்லுவோம். அந்த கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அதே அரசு அழித்தொழித்தால் அவர்தம் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ.விசாரணை தேவை என்போம். இதுதான் நம்நாடு.

கூடங்குளம் விசயத்தில் சாதாரண மக்கள் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகத்தான் இருந்தனர். அவர்களை விஷமிகள் உசுப்பிவிட்டு குளிர்காய்கின்றனர். அவ்வளவுதான்.

திரு.அப்துல் கலாம் அணு விஞ்ஞானி இல்லையென்றால் அன்றைய மத்திய அரசு பொக்ரான் அணு ஆயுத சோதனை குழுவில் அவரை சேர்த்திருக்குமா? அவர்தான் அதனை தலைமை தாங்கி வெற்றிகரமாய் முடித்திருப்பாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: SEYED ALI (ABUDHABI) on 08 March 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20975

கட்டுரை மிகவும் பயனுள்ளது மட்டுமல்ல பல படிப்பினைகளையும் உள்ளடக்கியது. காயல் மகபூப் அவர்களுக்கு மிகவும் நன்றி.ஆபத்து அணு உலைகளில் மட்டுமல்ல.வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் ஆபத்து நிறைந்ததுதான். கஷ்ட்டத்திர்க்கு பிறகுதான் சுகம். கூடங்குளம் ஆபத்து என்றால் முல்லைப்பெரியாரும் ஆபத்துதான் என்ற கேரளத்தின் வறட்டு பிடிவாதத்திற்கு வலு சேர்த்த மாதிரி ஆகிவிடும். கூடன்குள எதிர்ப்பில் கேரளத்தின் கையும் மறைத்திருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Farook (Jeddah) on 09 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20976

முல்லை பெரியாருக்கும் இதும் பெரிய வித்தியாசம். கேரளா காரன் ஒரு அணை மூடி பல அணை கேக்கிறான். இதில் எத்ரிபாளர் இந்த அணு நிலையம் மூடி பல அணு நிலையம் கேக்கவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: M. Sajith (DUBAI) on 11 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20977

இந்தியாவின் தற்போதைய தேவையான 120GW (120,000MW) - 2017-ல் 335GW ஆக கூடும் என்பது McKinsey இந்திய அரசுக்காக நடத்திய ஆய்வரிக்கையின் தகவல்.

இதனை தொடர்ந்து வந்த பரிந்துரைகள் பல..

1. உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியை (உற்பத்தியை அல்ல)- (Rate of increase in power generation) 10 மடங்காக உயர்த்த வேண்டும்

2. ஆண்டுக்கு 50GW உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

3. PLF -ஐ 10 ஆண்டுகளில் சராசரியாக 77% ஆக்கவேண்டும் (Includes all type of generation)

4. ஆண்டுக்கு 300,000 Skilled and Semi-Skilled வேலையாட்கள் தேவையை தயார் செய்ய வேண்டும்

5. AT&C losses ( Aggregate Technical & Commercial losses) 15% ஆக குறைக்கவேண்டும், இதில் Distribution loses and theft அடங்கும்.

6. ஆண்டுக்கு 100,000 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய போதுமான வசதிகளை (infrastructure) செய்யவேண்டும் (for existing Thermal power plants and new ‘Clean Coal Technology’ plants)

7. Renewable Energy (including Solar, Wind, Biomass etc..) உற்பத்தியை 30GW ஆக 2020-ல் எட்டவேண்டும் – (இதுவே சாத்தியமா என்பது கேள்விக்குறி)

ஆக இது போல ஏகப்பட்ட வேண்டும்கள் எல்லாம் நடந்தால் இந்தியாவின் தேவை பூர்த்தியாக சாத்தியம்.

கூடங்குளம் மட்டும் சாதித்துவிடும் என்பது ஒரு போதும் சரியான வாதமாக இருக்க இயலாது. யாரும் அப்படி சொன்னதாகவும் தெரியவில்லை..

இன்றய அறிவியல் சாத்தியத்தில், அனுமின் இல்லாமல் இதை பூர்த்தி செய்ய வேறு வழி இல்லை என்பதுதான் சரியான நிலைபாடாக இருக்க முடியும். (both in terms of Technical Feasibility and consumer cost viability)

மின் உற்பத்தி நிலையங்களை நுகர்வோருக்கு அருகில் தான் அமைத்தாக வேண்டும். நன்பர் ஒருவர் யோசித்தது போல கச்சத்தீவிலோ அந்தமானிலோ சாத்தியம் இல்லை, Distribution and Transmission Loss - சத்தியமில்லாமல் ஆக்கிவிடும்)

இந்த எதார்த்தை மறுப்பதனால், மீண்டும் நம் தலைமுறைகளை சிறுவிளக்குகளையும், மெழுகுவர்த்திகளிலும் பாடம் படிக்கவும், கைவிசிரியிலும், ஹரிக்கன் விளக்குகளில் வழியைத்தேடவும் பழகிக்கொள்ள தேவையான பயிற்சிகள்களை இப்போதே துவங்குவது நல்லது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Lebbai (Riyadh) on 12 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20978

மின் உற்பத்தி நிலையங்களை நுகர்வோருக்கு அருகில் தான் அமைத்தாக வேண்டும். கச்சத்தீவிலோ அந்தமானிலோ சாத்தியம் இல்லை என்று நண்பர் சொல்லுவது சரியாக தோணவில்லை.

Transmission Loss இருந்தபோதும், எல்லா நிலையிலும் அருகில் தான் அமைத்தாக வேண்டும் என்ற நிலைப்பாடில்லை. தமிழக அரசு குஜராத் மாநிலத்திலிருந்து மின்சாரம் தற்போது கோரிவருகிறது.

இன்றைய நவீன உலகத்தில், Submarine power cable கொண்டு மின்சார பகிர்வு நீர்க்கடி மூலமும், “Wireless Energy Transfer” நுற்பம் கொண்டு மின்சார பகிர்வு காற்றின் மூலமும் செய்யும் அளவு அறிவியல் வளர்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

என்னதான் அறிவியல் வளர்ச்சி உலகம் கண்டாலும், பேரழிவு ஏற்படும் விசயத்தில் அறிவியல் மூலம் நாம் கண்ட அணு-சாரா மாற்று முறை மின்சார உற்பத்தியை சிந்திப்பதில் என்ன தவறு?

ஜெர்மன் நாட்டில் கடந்த 2011 வருடம் வரை 27 அணு மின் நிலையங்கள் அரசால் மூடப்பட்டுள்ளது. ஏனைய 17 நிலையங்கள் படிப்படியாக மூடப்படும் என்று ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது (இதில் 9 மட்டுமே முழு திறனுடன் தற்காலத்துக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது).

இன்று ஜெர்மனியில் நான்கு பில்லியன் Euro செலவில் கட்டப்பட்ட ஒரு அணு மின் நிலையத்தை, ஜெர்மன் அரசு அணு உலைக்கே உலை வைத்து பூங்காவாக மாற்றிவிட்டது. http://www.gizmag.com/nuclear-power-plant-theme-park/20068/

அதுபோல் கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பூங்காவாக மாற்ற தேவையில்லை, அதன் செயல்பாட்டை அணு-சாரா முறைக்கு மாற்றி மின் தேவையை அரசு பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. முயன்றால் முடியாதது இல்லை.

கூடங்குளம் தற்போதைய பிரச்சனைக்கு காரணம் (விதி)யா?, அந்நியச் (சதி)யா? இல்லை வெளிநாட்டு (நிதி)யா? என்று (கதி) கலங்கி நிற்கும் மக்கள், (மதி)யும் இறை(துதி)யும் கொண்டு அணுகினால் நல்ல முடிவு வராதா, என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. Re:ஜெர்மனியும் இந்தியாவும் சரிசமம் அல்ல
posted by: V D SADAK THAMBY (CHENNAI) on 13 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20979

ஜெர்மனியையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேச முடியாது.நாம் ஜெர்மனிபோன்று பணக்கார நாடு அல்ல. நம் போன்ற நடுத்தர நாடுகளுக்கு அணு மின்சாரமே சிக்கனமானது. மனமிருந்தால் மார்கமுண்டு என்று சொல்லுவது இந்த விஷயத்தில் பொருந்தாது. இந்த விஷயத்தில் பணமிருந்தால் மட்டுமே மார்க்கமுண்டு.

Submarine power cable கொண்டு மின்சார கடத்திவரவேண்டுமென்றால் நாம் அந்தமான் தீவில்தான் அணு மின் நிலையம் தொடங்கி இருக்க வேண்டும். அதிலும் கூட செலவு பிரச்சனைகள் (TRANSMISSION COST) உள்ளன .

சகோதரரின் கருத்து அந்தமான் தீவில் அணு மின் நிலையம் துவக்க ஆதரிக்கிறதா?
“Wireless Energy Transfer” நுட்பம் தற்போது சாத்தியமில்லை.இது சாத்தியமானால்,மக்கள் அதிகம் வாழாத பகுதிகளில்கூட அனல் மின் நிலையம் துவக்கி , மின்சாரம் எடுத்துவர வசதி ஏற்படும்.அதிலும் கூட செலவு பிரச்சனைகள் (TRANSMISSION COST) உள்ளன.
எனினும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள கூடங்குளம் மின் நிலையத்திற்கு இதுவெல்லாம் தீர்வாகாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
16. Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by: Lebbai (Riyadh) on 13 March 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20980

அஸ்ஸலாமு அழைக்கும்,

சகோ. சதக் தம்பி அவர்களே,

பிரான்ஸ் நாட்டை ஒப்பிட்டு பேசப்பட்டதால், ஜெர்மனை இங்கே ஒப்பிட்டு பேசுவது பொருத்தம் என்ற நிலையில் தான் சொன்னேன்.

ஜெர்மனில் பல வருடங்களுக்கு முன்பே பல அணு உலைகளை நிறுவி மின் தயாரித்து வந்த நிலையில், தற்காலத்தில் உலகம் கண்டுவரும் பேராபத்துகளை கணக்கில் கொண்டு இந்த உலைகளை குறைத்துவருவது நமக்கு இந்த விசயத்தில் முன் உதாரணம் அல்லவா?

Submarine power cable கொண்டும் மின்சாரம் கடத்த வேண்டாம், “Wireless Energy Transfer” நுட்பம் கொண்டும் கடத்த வேண்டாம், இது ஒரு தகவலுக்காக தான் சொல்லப்பட்டது.

இறுதியாக, அந்தமான் தீவில் அணு மின் நிலையம் துவங்க ஆதரிக்கிறாரா என்று வினா தொடுத்து இருக்கிறீர்கள்.

மின் உற்பத்தி நிலையங்களை (அணு மின் நிலையம் என்ற வார்த்தை இல்லை) நுகர்வோருக்கு அருகில் தான் அமைத்தாக வேண்டும் என்ற கருத்துக்கு தான் நுகர்வோருக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை, தமிழக அரசு குஜராத்தில் இருந்து மின்சாரம் கேக்கவில்லையா என்று சொன்னேனே தவிர, நான் எந்த இடத்திலும் அணு மின் நிலையத்தை ஆதரிக்கவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved