Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:54 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 17
#KOTWART0117
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 9, 2012
கழிவுகளைக் களஞ்சியமாக்குவோம்! குப்பையில்லா நகரை உருவாக்கிக் காட்டுவோம்!!
இந்த பக்கம் 5551 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குப்பையைத் தூக்கி எறிய மாட்டேன் - வீதியிலும், கழிவுநீர் ஓடையிலும்... இது என்னால் முடியும்
- மனிதம்

நகர்நலமே நாட்டுநலம்!

நாம் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் ஒருநாள் கழிவுகளாக அகற்றி வருகிறோம். தினந்தோறும் சேகரமாகும் கழிவுகளை குப்பைத் தொட்டியிலோ, வீதிகளிலோ, சாக்கடையிலோ நாம் வீசி வருகின்றோம். சில சமயங்களில் மாதம் ஒருமுறை, வருடம் ஒருமுறை என வீட்டை சுத்தப்படுத்தி வருகிறோம். இதற்காகவே போகி பண்டிகை என்று ஒரு பண்டிகையாகவே கொண்டாடி வருடம் முழுவதும் வீட்டில் சேகரமாகும் சில வகைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, நாம் சுகாதாரத்தைப் பேணி வருகிறோம். இப்படி எதற்குமே பயன்படாத கழிவுகளிலிருந்து களஞ்சியத்தைப் பெற வைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக குப்பைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1. மட்காத குப்பை
2. மட்கும் குப்பை

இந்த இரண்டு வகைக் குப்பைகளையும் நாம் தனித்தனியாகப் பிரித்துப் பயன்படுத்தினால் வருமானத்தைப் பெறலாம்.

மட்காத குப்பைகள்:

பெருகிவரும் விலைவாசி உயர்வு போல் நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் ப்ளாஸ்டிக் சாமான்களுக்கும், சின்னச்சின்ன இரும்புத் துண்டுகளுக்கும், சின்னச்சின்ன அலுமினிய பொருட்களுக்கும், பித்தளை பொருட்களுக்கும் விலை உயர்ந்துதான் காணப்படுகிறது. ஆனால் நாம் அதையெல்லாம் பல்பில் உள்ள சின்ன அலுமினிய தகடுதானே என்றும், சின்ன பாட்டில் மூடிதானே என்றும் கருதி, குப்பையுடன் சேர்த்து கொட்டி விடுகிறோம். இப்படி வீட்டின் எத்தனையோ கழிவுகளை நாம் அன்றாட வாழ்வில் குப்பையாகக் கொட்டி வருகிறோம்.

இப்படி குப்பையாகக் கொட்டி வரும் கழிவுகளை நாம் முறையாக - தனித்தனியாக சேகரித்து, அருகிலுள்ள ஆக்கர் கடைக்கு - காயலான் கடைக்கு (பழைய பொருட்கள் வாங்கும் கடை) மாதம் ஒருமுறை எடுத்துச் சென்றால், நம் வீட்டிற்குத் தேவையான இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி அல்லது பழக்கம் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதையும் நாம் செய்யும் பணிகளில் ஒன்றாகக் கருதி, காரியம் மேற்கொண்டால் கை மேல் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி நாம் வேண்டாத பொருட்களையும் வேண்டிய பொருட்களாக்கிக் கொண்டால், வீதியும் சுத்தமாகும்; மணிபர்சும் மிச்சமாகும்.

மட்கும் குப்பைகள்:

இதேபோல், மட்கும் குப்பையாலும் நாம் மகத்தான வருமானத்தைப் பெற முடியும். நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகள், பழங்களின் கழிவுகள், உண்ணும் உணவில் எஞ்சும் கழிவுகள் - இப்படி நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் கழிவுகளிலிருந்து கரன்சியைப் பெற முடியும். ஆனால் நாம் யாரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது கிடையாது. நாம் அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே பொழுதைக் கழித்து வருகிறோம். அதை விட்டுவிட்டு, இப்படியாக பொழுதைப் பயனாக்கிக் கொண்டால் அதனால் விளையும் பலன்களோ பலப் பல...

இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகள் கூட நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. பொதுவாக சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், வாந்தி, வயிற்றுப்போக்கு - இப்படி பல நோய்களை உணவுகள் உண்டாக்குகின்றன. ஆனால் நாம் உண்ணக்கூடிய உணவை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து ஏற்படும் கழிவுகளை நமக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்படுத்திக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சிதானே...?

இதற்காக நாம் செலவு செய்ய வேண்டியதோ வெறும் 10 முதல் 15 பூந்தொட்டிகள் மட்டுமே! ஒரு பூந்தொட்டியை முதலில் எடுத்துக்கொண்டு, தினந்தோறும் வீட்டில் சேகரமாகும் ப்ளாஸ்டிக்கைத் தவிரவுள்ள குப்பைகளை அதில் இட்டு, கொஞ்சம் மண்ணும் இட வேண்டும். இப்படி பூந்தொட்டி நிறைந்தவுடன், அடுத்த தொட்டியில் சேகரிக்க வேண்டும். நிறைந்த முதல் தொட்டியில் உங்களுக்குப் பிடித்த பூ வகை செடிகளையோ அல்லது காய்கறி வகை செடிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், அவரைக்காய், பாகற்காய் - இப்படி ஏதோ உங்களுக்குப் பிடித்த செடிகளை வளர்த்து, வளமான வருமானத்தைப் பெருக்கலாம். இப்படி செடிகளை வளர்க்க தனியாக இடம் ஏதும் தேவையில்லை. வீட்டின் முன்புறம், குளியலறை பகுதி, ஏன் - மாடி, மொட்டை மாடியில் கூட இதனை வளர்க்கலாம். இப்படி செய்வதன் மூலம் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சிறப்பான உடற்பயிற்சியாகவும் அது அமைந்துவிடும்.

இதேபோல வீட்டின் முன்புறம் - பின்புறம் இடவசதி உள்ளவர்கள், தென்னை, பலா போன்ற மரங்கள் வளர்த்து வருகின்றனர். அவர்கள் அம்மரங்களின் இரு புறங்களிலும் 3 முதல் 7 அடி ஆழக்குழி தோண்டி நம் வீட்டில் உற்பத்தியாகும் கழிவுகளை இட்டு வந்தால், மரத்திற்கு நல்ல இயற்கையான உரம் கிடைக்கும். நல்ல வளர்ச்சியும் கிடைக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இவ்விதம் ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தி வந்தால், வீதியில் குப்பைகள் வர வாய்ப்பே இல்லாமல் போய்விடும். நோய் பரவும் தன்மை குறைந்து, ஆரோக்கியம் பெருகிவிடும்.

நமது நகரமும் குப்பையில்லா நகராட்சியாகத் திகழும். ஏன் - நம் மாவட்டமே குப்பையில்லா கோபுரமாகிவிடும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. ஒருவர் வீட்டில் இதை நடைமுறைப்படுத்திவிட்டால், சிறுதுளி பெருவெள்ளமெனப் பெருகி, பொருளாதார சேமிப்பு ஏற்படும் என்பதை நாம் தெளிவுற விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் புவி வெப்பமயமாதலும் தடுக்கப்படுகிறது. எனவே...

வீட்டுத் தோட்டம் அமைப்போம் – குப்பையை
வீதியில் கொட்டுவதைத் தவிர்ப்போம்...!


அமுத மொழிகள்

1. நம்மால் முடியும் நம்மால் முடியும்
குப்பையில்லா நகரமாக்க நம்மால் முடியும்.

2. வீட்டுத் தோட்டம் அமைப்போம்
வீதிகளை சுத்தமாக வைப்போம்

3. முறையாக பயன்படுத்தினால்
குப்பையிலும் கோடியைக் காணலாம்...!

4. உரக்குழி அமைத்திடுவோம்
உற்பத்தியைப் பெருக்கிடுவோம்.

5. சிறு சிறு ஆக்கர் பொருட்களம்
சிறப்பான வருமானத்தைத் தரும்.

6. ஆகாத ஆக்கர் பொருட்களையும்
அழகு சாதமாக்குவோம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ...
posted by: K.V.A.T.KABEER - TRUSTEE K.V.A.T.Buhari Haji Charitable. (Doha - Qatar/) on 09 June 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21053

மிக அருமையான திட்டத்தை , மிக எளிமையாக சொல்லிருக்கிறார்கள் , பாராட்டுக்கள் . பணத்தின் சேமிப்பை நாம் உணரவேண்டும் , சிறுதுளிதான் பெருவெள்ளம் . காயலான் கடைமுதல் - காய்கறி தோட்டம் வரை - பணம் வரும் வழியை அழகாக விளக்கயுல்லார்கள் , நம் கையால் உண்டாக்கும் காய்கறி - பூக்களை , பார்க்கும் போது, நம் மனதிற்கும் ஒரு சந்தோசம் ஏற்படுதே - அது , நம்மை ஸ்ட்ரெஸ் சிலிருந்தும் பாதுகாக்கிறதே ....

அருமை ....
அன்புடன்
கே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளைக்காக,
K .V .A .T .கபீர் , கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. வாழ்த்துக்கள்.
posted by: s.s.md meerasahib. (riyadh) on 09 June 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21054

கட்டுரை ஆசிரியர் பொன்வேல்ராஜ் அவர்கள் குப்பையை எப்படி பணமாகவும்....... அதே...சமயம் நகரை சுத்தமாகவும் வைக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டி இருந்தார் நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ...
posted by: சாளை பஷீர் (சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்) on 10 June 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 21055

தனது அரசுப்பணியையும் தாண்டி சூழலியல் ஆர்வலராக தன்னை வெளிப்படுத்திய பொன் வேல் ராஜ் அவர்களுக்கு நன்றி!.

குப்பைகள் குறைப்பை எளிதாகவும்,லாபகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதை கட்டுரையாளர் தனது எளிய நடையில் சிறப்பாக தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்த பல வழிமுறைகளில் மாடித்தோட்டமும் ,காய்கறித்தோட்டமும் அடங்கும்.

நாம் நம் இணைய தளம் வாயிலாக மாடித்தோட்ட பயிற்சிக்கு ஏற்பாடு செய்து அது வெற்றிகரமாக நடந்ததை வாசகர்கள் அறிவீர்கள்.

இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் மிகுந்த நேர,பொருள் செலவில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் ஒரு தடவையோடு நிற்கின்றது.

இதை தொடராக நடத்தும்போதுதான் நமதூரில் நாம் எதிர்பார்க்கும் சூழலியல் மாற்றத்தைக்காண வியலும்.

இந்த மாடித்தோட்டம் /காய்கறித்தோட்ட பயிற்சியை தொடர்ச்சியாக நமதூர் வாசிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கு ஊரில் வசிக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவை.

அப்படி சூழலியலில் ஆர்வமுள்ள ஆட்கள் இதற்கு முன் வரும் பட்சத்தில் அவர்களுக்கான ஆலோசனைகளையும் ,திட்டங்களையும் நான் தருகின்றேன்.

ஆர்வமுள்ள நபர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

என் செல் பேசி எண்: 9962841761


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ...
posted by: Vilack SMA (Guangzhou) on 11 June 2012
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21056

கட்டுரை ஆசிரியரின் , " மட்காத குப்பை " , இவரது யோசனையால் வீடு மேலும் மேலும் குப்பையாகத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் சேகரித்து வைத்தால் , இவற்றை விற்று மாதத்தில் இரண்டு நாட்களுக்கான காய்கறி செலவை சமாளிக்கலாம் என்கிறார் . இவற்றை சேகரிப்பதன்மூலம் , வீட்டில் பூச்சிகள் , பூரான்கள் வந்து அதனால் மருத்துவ செலவு வந்தால் மாதம்பூராவும் காய்கறி வாங்கும் பணம் இந்த மருத்துவ செலவில் அடிபட்டுவிடும் .

ஆக , மட்காத குப்பைகளை அவ்வப்போது clear பண்ணுவதே சிறந்தது.

மட்கும் குப்பை : ஆசிரியரின் ஆலோசனைகள் நன்றாக உள்ளது . முயன்று பார்க்கலாம் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ...
posted by: MOHIADEEN (kayalpatnam) on 28 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21057

கழிவுகளை களஞ்சியமாக்குவோம் !குப்பை யில்லா நகரை வுருவாக்குவோம்!என்று சொல்லும் சுகாதார ஆய்வாளர் அவர்களே ஊழல் இல்லா நகராச்சியாக மாட்டுவோம் !எண்டு சபதம் ஏற்ப்போம் !்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved