Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:39:48 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 37
#KOTWART0137
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 12, 2013
மருத்துவர்கள் குறித்த எழுத்துமேடை கட்டுரைக்கு மருத்துவர்கள் வழங்கும் விளக்கம்!
இந்த பக்கம் 4124 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிப்ரவரி 28, 2013 அன்று - மருத்துவர்களே உங்களை நீங்கள் முதலில் குணபடுத்தி கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ஷமீமுல் இஸ்லாம் எழுதிய எழுத்து மேடை கட்டுரை காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளிவந்தது. அக்கட்டுரை குறித்து சென்னையில் சேவை புரியும் காயல்பட்டின - பூர்விக மருத்துவர்கள், டாக்டர் அஹமது நெய்னா, டாக்டர் முஹம்மது நவாஸ், டாக்டர் செய்யிது இஸ்மாயில், டாக்டர் முஹம்மது கிஸார் ஆகியோர் இணைந்து, அக்கட்டுரைக்கான விளக்கத்தினை வழங்கியுள்ளார்கள்.



கடந்த பிப்ரவரி மாதம் kayalpatnam.com இணையதளத்தில், தம்பி ஷமீமுல் இஸ்லாம் எழுதிய "மருத்துவர்களே உங்களை நீங்கள் முதலில் குணபடுத்தி கொள்ளுங்கள்" என்ற கட்டுரை வெளிவந்தது. அதில் ஆசிரியர், தனது ஆதங்கத்தை வெளிகாட்டி இருந்தார் . அதில் சில கருத்துகள் சரியான தகவல்களாக இல்லாததாலும், மேலும் சரியாக புரிந்து கொள்ளாமையால் சில கருத்துக்கள் மாறி இருப்பதையும் காண முடிந்தது. இது பற்றி சற்று விரிவாக கருத்து கூறுகிறோம் . இது அந்த கட்டுரைக்கு counter கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வில்லை; மாறாக சில சரியில்லாத கருத்துகளுக்கு விளக்கமளிக்க விரும்புகிறோம்.

அக்கட்டுரையில், முதலில், தம்பி ஷமீமுல் இஸ்லாம், சில மருந்துகளின் வெவ்வேறு பிராண்ட்கள் சிலவற்றின் அதிக விலையையும், குறைந்த விலையையும் குறிப்பிட்டு, பின்னர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

ஷமீமுல் இஸ்லாம் கருத்து:

"ஜலதோஷத்திற்கான Tablet Cetirizine 10 மாத்திரைகளின் விலை 1.20 ரூபாய். ஆனால் அதன் பிராண்ட் மாத்திரையான Cetzine 10 மாத்திரைகள் அதே எண்ணிக்கைக்கு 35 ரூபாய்.

வயிற்றுப்போக்கிற்கான Tablet Domperidone 10 மாத்திரைகளின் விலை 1.25 ரூபாய். அதன் பிராண்ட் மாத்திரையான Domstal அதே எண்ணிக்கைக்கு 33 ரூபாய்.

சக்கரை வியாதிக்கான Tablet Glimepiride 10 மாத்திரைகளின் விலை 2 ரூபாய். அதன் பிராண்ட் மாத்திரையான Amaryl அதே எண்ணிக்கைக்கு 125 ரூபாய்.

மலேரியா காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியின் விலை குறைந்தது (3 ஊசிகள்) 25 ரூபாய். அதன் பிராண்ட் வகையில் 3 ஊசிகளுக்கான விலை 300 முதல் 400 ரூபாய்.

இதய நோய் உள்ளவர்களுக்கு அடைப்புகளை நீக்க செலுத்தப்படும் ஊசியான Injection Streptokinase ஒரு ஊசியின் விலை 1000 ரூபாய். ஆனால் அதன் பிராண்ட் ஊசி ஒன்றின் விலை 5000 ரூபாய்.

என்னென்ன வியாதிகளுக்கு என்னென்ன மாத்திரைகளை எழுதிக் கொடுப்பீர்கள் என மருத்துவத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மேற்கண்ட விலை குறைந்த மாத்திரைகளை பதிலாக வழங்கும் மருத்துவ மாணவர்கள், பிறகு மருத்துவராக ஆனதும், எழுதித் தரும் பிராண்ட் மாத்திரைகள்தான் கூடுதல் விலையில் உள்ள அடுத்த வகை மாத்திரைகள். இக்குறிப்புகளை இந்தி நடிகர் சல்மான் கான் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்."


விளக்கம்:

மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வரை, ஏன் ஹவுஸ் சர்ஜன் பண்ணும் வரை, எந்த மருத்துவ மாணவர்க்கும், அந்த மருந்தின் pharmacological பெயர் தெரியுமே ஒழிய, BRAND தெரியாது. தெரிந்தாலும் கண்டிப்பாக BRAND உபயோகிக்கக்கூடாது என்பதே சட்டம்.

உலகில் எந்த மருத்துவ கல்லூரியிலோ அல்லது மருத்துவ பல்கலைகழகங்களிலோ ஆசிரியர் குறிப்பிட்டது (வேற நடிகரின் கருத்தை சுட்டிக்காட்டி) போல தேர்வு நடைமுறை கிடையாது என்பதை தெரிவிக்கிறோம். மருத்துவ படிப்பில், 2 ஆம் MBBS போது ஒரு வருடம் pharmocology என்னும் மருந்தியல் பாடம் உண்டு. அதன் தேர்வு முறையில் என்னென்ன நோய்க்கு என்னென்ன மாத்திரை கொடுப்பீர்கள் என்ற முறையே இல்லை.

மருத்துவ படிப்பின் போது BRAND பயன்படுத்தினால், படித்து முடிக்கும் முன்பே இவன் டாக்டர் தொழில் செய்கிறான் என்ற முடிவுடன், அவன் அனேகமாக fail ஆக்கபடுவான். ஆக சல்மான்கான் தவறாக சுட்டிக்காட்டியதை, ஆசிரியரும் அப்படியே எழுதி உள்ளார்.ஆக இது செல்லுபடியாகாத குற்றசாட்டு.

மேலும் இதில் இன்னொரு தகவல் சொல்ல விரும்புகிறேன். ஒரு மாத்திரைக்கு வேறு வேறு விலையை நிர்ணைத்துள்ளது அரசின் சுகாதார அமைச்சகம் மற்றும் மருந்து கட்டுபாட்டு இயக்குனகரத்தின் ஆளுமையின் கீழ் உள்ளதே தவிர, எந்த மருத்துவரின் கையிலும் இல்லை.

அரசாங்கம் தான் மாத்திரை விலையை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு இரண்டு முறை DPCA என்னும் Drug Price Control Act கொண்டு வந்து, சில அத்தியாவசிய மருந்துகளுக்கு, அதிக பட்ச விலையை நிர்ணயித்து சட்டம் கொண்டு வந்த பின்னும், இது போதிய பலன் இல்லாமல் போக காரணம் இந்த சட்டத்தில் உள்ள ஓட்டை, சந்து பொந்துகளை பயன்படுத்தி, மருந்து கம்பனிகள் தங்கள் BRAND விலையை குறைக்காமல் பார்த்து கொண்டன.

இதில் இன்னொரு விஷயம், பொதுவாக நோயாளிகளின் மனப்பான்மை, வேறு படுகிறது. சில நோயாளிகளுக்கு, ஒரே மருந்தில் உள்ள குறைந்த விலை BRAND எழுதினால், "டாக்டர் விலை குறைந்த மருந்து சரியாக வேலை செய்யாதே" என்ற மனநிலை கொண்ட சில நோயாளிகள். வேறு சிலரோ, அதிக விலை BRAND எழுதினால்: "டாக்டர் ஏன் விலை குறைய மருந்து எழுதகூடாது " என்ற மனோநிலை. எனவே மருத்துவர்கள், மருந்தை எழுதும்போது, நோயாளிகளின் மனநிலை, அவர்களின் பணநிலை, ஆகியவற்றை வைத்தே - விலை கூட மருந்து, இல்லை விலை குறைய மருந்து என்று முடிவு செய்கிறார்கள்.

நீங்கள் சொல்லியவாறு, அநேக மருத்துவர்கள் விலை கூட மருந்தை மட்டும் எழுதினால், எப்படி, விலை குறைய மருந்துகளை, 10 வருடம் முன்பு சந்தைபடுத்திய Mankind Pharma என்னும் நிறுவனம், மருந்து கம்பனிகள் லிஸ்டில், பல ஆண்டு சந்தையில் இருந்த பன்னாட்டு மருந்து கம்பனிகளை தாண்டி, Total Turnover இல் 3 வது இடத்தை பிடிக்க முடிந்தது?

ஏன் அதிக விலை வைத்து, லாபம் சம்பாதித்த பல கம்பனிகள், தனது BRAND விலையை மாற்றி விலையை குறைத்தது. இதுவெல்லாம் நடந்தது டாக்டர்களின் நல்ல எண்ணத்தில் தான்.


ஷமீமுல் இஸ்லாம் கருத்து:

'காசு பணம் என ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட அரசு இன்சூரன்ஸ் போட்டிருக்கிறீர்களா எனக் கேட்கும் பண வெறி கொண்ட மருத்துவர்(க்கொலையாளி)கள் மலிந்து விட்டனர்'

விளக்கம்:

காசுபணம் இல்லாதமக்களிடம், சிகிச்சை செய்ய மறுக்காமல், உங்களிடம் சிகிச்சைக்கு பணம் இல்லாவிட்டாலும், அதற்க்கு பணம் செலவழிக்க மாற்று வழி இருக்கிறது என்று கூறி அரசு இன்சூரன்ஷை அறிமுகபடுத்துவது, ஒரே மனிதாபிமான செயலா அல்லது பணவெறி கொண்ட செயலா?

இதன் மூலம் டாக்டர்களுக்கு வருமானம் வந்தாலும், அரசு இன்ஷூரன்ஷ் மூலம், நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ கட்டணம், மற்ற வழக்கமான கட்டணத்தை விட மிக மிக குறைவு. அதுவும், அந்த பணம் இன்ஷூரனஷ் கம்பனிகளிடம் இருந்து வர குறைந்தது 3 மாதம் ஆகும். இப்படி அரசு இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று கேட்பது ஒரு மனிதாபிமான செயலே. ஏனெனில், மருத்துவர்கள் குறைந்த கட்டணத்தில், அதுவும் காலம் சென்று வரும் பணத்திற்காக, இந்த செயலை செய்கிறார்கள். இது பணவெறி அல்ல, பணத்திற்கு மேல், மனிதாபிமானம் முக்கியம் என்ற காரணத்தினால் செய்யப்படும் செயல்.

சில சமயம் நோயாளிகள் Discharge ஆகி வீட்டிற்க்கு சென்ற பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனம், இந்த நோயாளிக்கு இந்த ஸ்கீமில் தகுதி இல்லை என்று பணம் தர மறுப்பதும் அல்லது இன்னும் குறைய தொகை தான் இதற்கு தரமுடியும் என்று அதையும் விட குறைத்து, பல டாக்டர்கள் கையை கடித்ததும் உண்டு. அதற்காக டாக்டர்கள், பழைய நோயாளிகளுடன், அந்த பணத்தை மீண்டும் கேட்பது இல்லை.

அரசு இன்ஷூரன்ஸ் அறிமுகபடுத்திய ஆரம்பகாலங்களில் டாக்டர்கள் தான் ஏழை மக்களிடம் சேர்த்தார்கள். பணம் இல்லாமல், மிக பெரிய corporate மருத்துவமனை அல்லது பன்னோக்கு மருத்துவமனையில், ஏழை எளியவர்களுக்கு byepass surgery முதல் மிக பெரிய ஆபேரஷன் ஏழை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது நீங்கள் குறிப்பிட்ட அந்த பணத்தாசை (???) பிடித்த கொலையாளி டாக்டர்கள். இதனால் மக்களுக்கு நன்மை வந்ததா அல்லது கேடு வந்ததா? இதனால் நிச்சயம் டாக்டர்கள் தங்கள் வருவாயில் சிலதை பல காலங்களுக்கு இழந்தே இருந்தனர். இப்போது அந்த மருத்துவர்களை ஏழைகளுக்கு உதவிய தியாகி எனலாமா?


ஷமீமுல் இஸ்லாம் கருத்து:

"நவீன மருத்துவம் பற்றி இவர்கள் கூறுவதைக் கவனியுங்களேன்:

சர் வில்லியம் ஆஸ்லர் சொல்கிறார்: மருந்துகளை உண்ணாதீர்கள் என அறிவுருத்துவதே மருத்துவர்கள் முதலில் செய்ய வேண்டிய தலையாய பணியாகும்.

நெபோலியன் போனொபார்ட் சொல்கிறார் மருந்து என்பது (குணமளிக்கும் என்ற அடிப்படையில்) ஒரு தொகுப்பாக நிச்சயமற்ற மருந்துகளை எழுதித் தருவதால், அதன் முடிவென்பது மனிதகுலத்திற்கு நன்மை பயப்பதை விட மிகவும் அபாயாகரமாகவே அமைந்து விடுகிறது.

‘ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியன்’ என ஒரு பழமொழி கூறும். பழமொழி பழமையானது. ஆனால் அதன் கருத்து இன்றும் புதுமொழியாகவே உள்ளது.

18-ம் நூற்றாண்டின் அறிஞரான வோல்டேர் சொல்கிறார்: மருத்துவம் என்பது இயற்கையாகவே குணமாகிவிடுகின்ற நோய்களுக்கு நோயாளிகளிடம் வேடிக்கையாக காட்டப்படும் ஒரு நுட்பமான கலையாகும்.

நவீன மருத்துவம் பற்றிய ஒரு தகவல், அது நோயை குணப்படுத்துகிறது என்பதை விட நோய் எதிர்ப்பு மண்டலத்தை உசுப்பேற்றுவதையே நவீன மருத்துவம் செய்கிறது எனக் கூறுகிறது.

நோய்பற்றிய ஒரு ஆய்வு இவ்வாறு கூறுகிறது: ஒரு செல் மற்றசெல்களுடன் ஒத்திசைந்து இயங்குவது ஆரோக்கியமாகும். இத்தொடர்பு உடையும் போது உருவாவதே நோயாகும். இயற்கை என்பது மனித உடலுக்குள் ஒரு வலுவான பழுதுபார்த்து இயங்கச் செய்யும் பொறிமுறையை கொண்டுள்ளது. புற்றுநோயும் கூட இயற்கையானதே என்கிறது இன்னொரு ஆய்வு."


விளக்கம்:

இவர்களெல்லாம் பெரிய scholar என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மருத்துவம் ரீதியாக இவர்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம், வெறும் theoritical ஒழிய, நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமில்லை. மேலும் இவர்கள் எல்லாம், நவீன மருத்துவம் அதிகம் வளர்ச்சி பெறுமுன்பே இறந்து விட்டனர். இவர்கள் கூற்று உண்மையென்றால், இத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கவே மாட்டார்கள். இத்தனை மருத்துவ கல்லூரிகள் வந்தே இருக்காது.

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் மருந்து கொடுக்காமல், மருந்து உண்ணாதே என்று அந்த அறிஞர் சொன்னதை, அந்த டாக்டர் சொன்னால் அந்த நோயாளி டாக்டரை பற்றி என்ன நினைப்பார்?

பல மனித குலத்தின் பேரழிவை விட்டும் காப்பாற்றியது இந்த மருந்துகள் என்றால் அது மிகை இல்லை. Penicillin கண்டுபிடித்த பிறகு தான் நோய் தொற்றில் இருந்து கூட மரணிப்பதை தடுக்க முடிந்தது. இதற்கு முன்னர் வரை சாதாரண infection கூட மனித உயிரை வாங்கியது. இதை வைத்து பார்க்கும் போது மருந்துகள் நிச்சயமற்ற தொகுப்பு என்றும், அது அபாயத்தை அதிகம் உண்டு பண்ணும் என்றும் எப்படி கூற முடியும்.

மருந்துகள் - வந்துவிட்ட நோயை - குணப்படுத்த கொடுக்கபடுகிறது. நோய் வருமுன் தடுக்க, தடுப்பூசி மற்றும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் சொல்ல படுகிறது. நோய் வந்து விட்ட பிறகும், தன் நோயை குணப்படுத்த டாக்டரை நாடி வரும் நோயாளியிடம், "நான் நோயை குணப்படுத்த மாட்டேன், நோய் எதிர்ப்பு சக்தியை தான் அதிகரிக்க செய்வேன்" என்றால், அந்த டாக்டரை மக்கள் என்ன சொல்வார்கள். ஆனால் நமது மக்கள் என்னவோ நோயை குணபடுத்த மட்டும் தான் டாக்டர்களிடம் செல்கிறார்கள் தவிர, நோய் வரும் முன் தடுப்புக்கு செல்வதில்லை (குழந்தைகளுக்கு தடுப்பூசி தவிர).

புற்று நோயும் கூட இயற்கையானது என்ற ஆய்வு அறவே மறுக்கபடவேண்டியதாகும். 1854 முதலில் புற்று நோய் பற்றி வரையறுத்த பிரிட்டிஷ் Oncologist சர் ருபர்ட் வில்லியம்ஸ் எடுத்த எடுப்பிலே புற்று நோய் என்பது 'அசாதாரண செல்களின் கூட்டம்......" (Abnormnal mass of cell) என்னும் போது புற்று நோய் எப்படி இயற்கையாகும். இயற்க்கை என்றால், புற்று நோய்க்கு யாரும் சிகிச்சை பெற வேண்டியதுன் இல்லையே.

இந்த அறிஞர்களின் கருத்துகள், ஆயிரம் பேரை கொன்றவன அரை வைத்தியன் என்ற கருத்துகளெல்லாம், வெறும் ஏட்டு சுரக்காய்...கறிக்கு உதவாது. ஒரு மருத்துவ கல்லூரி மாணவன், தான் ஹவுஸ் சர்ஜன் பண்ணும்போதே பல உயிரை காத்து விட்டு தான் வெளி வருகிறான்.


ஷமீமுல் இஸ்லாம் கருத்து:

'இவ்வளவு கூற்றுக்கள் நம் முன் இருந்தும் ஊசி போட்டால் தான் நோய் குணமாகும் என்றும் மாத்திரை சாப்பிடாவிட்டால் உடல் தேறாது என்றும் நமது நம்பிக்கையில் அழுத்தமாக இருப்பதால் தான் English Medicine என்ற ஒரே ஒரு முறைக்குள் இவ்வுலகம் அகப்பட்டு சிக்கிச் சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது." அப்படியே ஒரு வேளை தீராத நோய்களுக்கு வைத்தியம் செய்யவேண்டி ஏற்பட்டாலும் பக்க விளைவுகள் இல்லாத மாற்றுவகை மருத்துவங்கள் பல உள்ளன.


விளக்கம்:

ஆசிரியர், ஊசி போட்டால் தான் நோய் குணமாகும் என்ற நோயாளிகளின் அதீத நம்பிக்கையால் மட்டுமே, ஆங்கில மருத்துவத்தில், நோயாளிகள் சிக்கி தவிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. பொதுவாக டாக்டர்களில், அதிகமாக GP என்னும் பொது மருத்துவர்கள் மட்டும் தான், ஊசி போடுகிறார்கள். அதுவும், நோயாளியின் நம்பிக்கையை நிறைவேற்றவே இந்த ஊசி போடுகிறார்கள். ஆங்கில மருத்துவத்தில், தரமான மாத்திரை மருந்துகள், ஊசிக்கு இணையாக உள்ளது. ஆனால் நோயாளிகளின் பிடிவாதம் காரணமாக தான் டாக்டர்கள் இதை கடை பிடிக்கின்றனர். Consultant மற்றும் Specialist மருத்துவர்கள் யாரும் பொதுவாக, அனேகமாக, ஊசி போடுவதே கிடையாது - அவசியம் இருந்தால் ஒழிய.

ஆங்கில மருத்துவ முறையில் சிக்கி சின்னாபட்டு கொண்டு இருக்கிறது என்ற குற்றசாட்டை ஏற்க முடியாது. மற்ற முறை மருத்துவங்களை ஒப்பிடும்போது, ஆங்கில மருத்துவம் தான் அதிக வெளிப்படை (transparent) தன்மை கொண்டது. மாற்று முறை மருத்துவத்தை பற்றி நாங்கள் பேச வேண்டியது இல்லை என்றாலும், ஆசிரியரின் இந்த கருத்துக்கு மறுக்க சில கருத்துகளை சொல்ல வருகிறோம்.

மாற்றுமுறை மருத்துவத்தில் அதிக மருத்துவர்கள், பொதுவாக மருந்துக்கு prescription எழுதி தருவதே இல்லை. அவர்களிடம் உள்ள மருந்துகளை அல்லது கசாயம் அல்லது காயம் போன்றவற்றை, எந்த பெயரும் இல்லாமல், மருந்தில் உள்ள composition கூட அச்சிடபடாமல், expiry date இல்லாமல், batch நம்பர் இல்லாமல், அதில் விலை ஏதும் இல்லாமல் தான் கொடுக்கிறார்கள். அவர்கள் வைத்தது தான் விலை.

விலை நோயாளிகளுக்கு மாறலாம். மருந்து தொலைந்து விட்டாலோ அல்லது கொட்டி waste ஆகி விட்டாலோ, வெளியில் சென்று அந்த மருந்து வாங்கமுடியாது. ஏனெனில் அது என்ன மருந்து என்றே தெரியாது. பின்னர் அந்த டாக்டரை பார்த்தால் தான் மாற்று மருந்து கிடைக்கும். அப்படியும் மருந்தின் விலை பல ஆயிரங்களிலே இருக்கும். வெளியில் 100 ரூபாய் உள்ள மருந்து label கிழிக்கப்பட்டு பல ஆயிரத்திற்கு விற்று வாங்கும் மருத்துவத்தில் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிறார்களா அல்லது மிகவும் வெளிப்படையான, மருந்தின் பெயர், composition, expiry date, விலை உட்பட எல்லா detail இருந்து தரும் மருத்துவர்களிடம் மக்கள் சிக்கி தவிக்கிறார்களா?

ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளில் உள்ள மூலக்கூறு தெரிந்தால், உலகில் எந்த மூலையிலும் அதை பெற்று கொள்ள முடியும். மாற்று முறை மருந்தை, அந்த மருத்துமனையின் அடுத்த கதவில் கூட பெற முடியாது. ஆங்கில மருத்துவம் என்பது EVIDENCE based மருத்துவம். அதன் எல்லா மருந்துகளும், கண்டிப்பாக கண்டுபிடிக்கப்பட்டவுடன், அவை Clinical trial செய்யப்பட்டு, அதன் பாதுகாப்புதன்மை உறுதிசெய்யப்பட்ட பின்பே சந்தை படுத்தபடும்.

சந்தை படுத்திய பின், post marketing surveillance test க்கு உட்படுத்தப்பட்ட பின்பே, நிரந்தரமாக சந்தையில் இருக்கும். அதுவும் ஒரு நாட்டில் இவ்வளவு கடின test க்கு பின் சந்தைபடுத்த பட்ட மருந்து, இன்னொரு நாட்டில் சந்தைபடுத்தும்போதும், அந்த நாட்டு சூழ்நிலைக்கு உகந்ததா என்றும் clinical trial செய்யப்படும்.

இவ்வளவு கடின test பின் தான் ஆங்கில மருந்துகள் சந்தைபடுத்த படுகின்றன, இந்த மருதை எப்படி குறை கூற முடியும்? எந்த ஆதாரமும் இல்லாமல்?

ஆங்கில மருத்துவம் பக்க விளைவு உள்ளது தான். ஆனால் அதை முறைப்படி எடுத்தால், பக்க விளைவு இல்லாமல் பார்க்க முடியும். மிக சீரியஸ் நோய்களான ஹார்ட் அட்டாக், போன்ற நோய்களுக்கு, ஆங்கில மருத்துவம் அல்லாமல், மாற்று முறை மருத்துவத்தை யாரும் நாடி நாம் கேள்விப்பட்டதில்லை.

கேன்சர் போன்ற நாட்பட்ட நோய்களுக்கும், ஆரம்பத்தில் ஆங்கில மருந்துகளை நாடி விட்டு, ஆங்கில மருத்துவர் இனி நோயாளிகளுக்கு ஒன்று செய்ய முடியாது என்று வெளிப்படையாக சொன்ன பிறகே, மாற்று முறை மருத்துவர்த்திக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு வெளிப்படையாக ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வதில்லை. மாறாக கண்டிப்பாக குணபடுத்தி விடலாம் என்ற பொய்யான வாக்குறுதிகளே இருக்கும். அதற்க்கு பிறகும் எந்த நோயாளிகளும் குணமாகியதாக சரித்திரம் இல்லை.

ஒரே உதாரணம் தருகிறேன். நமதூரில் சிலர் மஞ்சள்காமாலை B நோய்க்கு, மாற்று முறை மருத்துவர்களால், முற்றிலும் குணபடுத்திவிடமுடியும், என்ற உத்திரவாதத்துடன், சிகிச்சை பெற்று, அவர்களில் சிலர், இன்று chronic liver disease என்னும் நாட்பட்ட ஈரல் நோய், cirrhosis liver என்னும் கடுமையான ஈரல் பாதிப்பு , கல்லீரல் புற்று நோய் இன்று இன்று வரை அவதி படுவதை கண்கூடாக பார்த்துவருகிறோம்.

இதுபோல், எந்த நோய்க்காகவது, ஆங்கில மருத்துவர்கள், பொய்யான உத்திரவாதம் கொடுத்தது உண்டா? நோய் குணபடுத்த முடியாது என்றால், வெளிப்படையாக, இதற்க்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறும் ஆங்கில மருத்துவர்களை தான் பார்க்கிறோம்.


ஷமீமுல் இஸ்லாம் கருத்து:

"அடுத்து மிகுந்த தொழில்பக்தியோடு எங்களுக்கு ஒரு பாடம் எடுக்கப்பட்டது. ஸ்கேனில் எல்லாம் நன்றாக உள்ளது, ஆனால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இக்குறிப்பிட்ட வயதினருக்கு 250 பேரில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகலாம் என்றும், 77 பேரில் ஒருவருக்கு அந்த நோய் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இதைச் செய்தால் இத்தனை ஆயிரம் செலவாகும் என்றும் அதைச் செய்தால் அத்தனை ஆயிரம் செலவாகும் எனவும் பாடம் எடுத்து வயிற்றில் கிலியை உண்டாக்கினார். அப்போது அவர் ஒரு அரக்க குணம் கொண்டவர் போன்றே எங்களுக்குத் தென்பட்டார்"


விளக்கம்:

இது கட்டுரை ஆசிரியரின் தவறான புரிந்து கொண்டமையை காட்டுகிறது. இப்போது மருத்துவ உலகில் அதுவும் foetal medicine - ல் ஒரு புரட்சி ஏற்பட்டு, சில பரம்பரை நோய்களான Downs போன்றவை, கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சிசுக்கு வரும் வாய்ப்பு உண்டா என்பதை அறியும் உன்னதமான, புரட்சிகரமான சோதனை தான், அந்த ஸ்கேன் டாக்டர் கூறியது. இது உங்களுக்கு கிலியை ஏற்படுத்த கூறப்படவில்லை.

ஒரு வேலை, வயிற்றில் வளரும் சிசு சில குணபடுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது முதலிலே அறிந்தால், (மார்க்க சட்டத்தின் வரம்பில்)கருவை கலைப்பதோ அல்லது முடிந்தால் சிசுவுக்கான சிகிச்சை கர்பத்திலே கொடுப்பது அல்லது மனதளவில் அந்த பெண்ணை தயார்படுத்த உதவும் பரிசோதனை தான் இது.

அந்த மருத்துவர் அரக்க குணம் கொண்டவர் அல்ல, மருத்துவ புரட்சியின் எல்லா முன்னேற்றத்தையும் உங்களுக்கு தர விரும்பிய கருணையாளர். ஆனால் அதற்க்கு நீங்கள் கொடுக்க இருந்த விலைமிக குறைவு தான். இந்த பரிசோதனை தான் கர்ப்ப களத்தில் தற்சமயம் புரிய மாற்றத்தை உருவாகி உள்ளது.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...We salute the Doctors
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 12 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26830

We salute both Mr. Shameemul Islam and Dr Kizaar. Both deserve our greetings. Though mr shameemul islam is using a magnifiying glass to rule out the English medicine, Dr kizaar is using his microscopic device to rule out Mr shaeemul islaam's findings. However, dr. kisaar has defended well his service in medicine field.

As a layman, I feel what shameem said was correct, as the day to day happenings lead to that conclusion. When Dr kisaar entered the field to do away the wrong thoughts, i find it equally right what he says.

This is a very nice and healthy arguement, and we have to read twice or thrice, both statements of shameemul islaam and dr kizaar.

May Allah help us be healthy in all walks of our lives, and as dr kizar says, "PREVENTION IS BETTER THAN CURE". LAA SHIFAA A ILLAA SHIFAAUK. WA ITHAA MARILTHU, VAHUVA YASHFEEN..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 17 April 2013
IP: 103.*.*.* India | Comment Reference Number: 26910

Br. Shameemul Islam wrote that article with utmost social concerns. Nevertheless, i fully agree with the doctors here.

ANY DECISION, WHETHER IT IS IN A BOARD MEETING, PTA DISCUSSIONS, DIALOGUE BETWEEN A PATIENT AND A DOCTOR, MUST BE TAKEN BASED ON HARD DATA / EVIDENCES.

PERCEPTIONS WILL VARY AMONG INDIVIDUALS. IF WE MAKE DECISIONS BASED ON PERCEPTIONS, WE WILL BE IN TROUBLE.

OUR LOVE OR HATRED FOR ONE TYPE OF MEDICINE (SIDDHA, CLINICAL/ENGLISH, ACUPUNCTURE, ETC) SHOULDN'T CAUSE US TO LOSE SIGHT OF FACTS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. நோய் நாடி.....
posted by: Mauroof (Dubai) on 29 April 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27110

சகோ. ஷமீமுல் இஸ்லாமின் "மருத்துவர்களே, உங்களை முதலில் குணப்படுத்துங்கள்" என்ற கட்டுரையில் சொல்லப்பட்ட சில கருத்துக்களுக்கு/குறிப்புகளுக்கு ஆரோக்கியமாகவும், கண்ணியமாகவும் விளக்கங்கள் கொடுத்துள்ள மருத்துவ மாமணிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள்-948)

என்ற மேற்குறிப்பிட்ட திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்திற்கு மாற்றாகவே இன்று அதிகமான மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை பாமரனும் அறிவான். அதே சமயம் இங்கே விளக்கம் கொடுத்திருக்கும் மருத்துவ மாமணிகளின் கூற்றுப்படி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் அரிதாக இருக்கவே செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

மனிதம் பேணும் மகத்தான மருத்துவர்கள் வாழ்ந்த காலம் மறைந்து வருடங்கள் பல ஆகிவிட்டபோதும், இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மருத்துவ மாமணிகள் இருப்பது ஆறுதல் தரக்கூடியதாகவே இருக்கிறது. ஆனால் அவர்களை நாம் அதிகம் அறிய முடிவதில்லை. இறைவனே அப்பேற்பட்ட நற்குணம் படைத்த சீதேவி மருத்துவர்களை நமக்கு அடையாளம் காண உதவ வேண்டும். மேலும் அவர்களைப் போன்ற நல்ல மருத்துவர்கள் உருவாகவும் வேண்டும்.

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (அல் குர்ஆன் - 99:7)

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல் குர்ஆன் - 99:8)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved