| |
ஆக்கம் எண் (ID #) 42 | | | திங்கள், மே 2, 2016 | | சந்தர்ப்பம்! முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர் |
| இந்த பக்கம் 2687 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
இனி இழப்பதற்கு
எதுவுமில்லை - என்றான
ஒரு பிளவுப் பட்ட சமுதாயத்தின்
ஒரு சாதாரணனின் தவிப்பு...
கொஞ்சம் தியாகங்களும்
நிறைய ஒற்றுமையும்
கொண்டு
அதிகார இருக்கைகள்
செய்ய
அன்பான அழைப்பு...
முஸ்தாக் அஹ்மத்
எனக்கும் உனக்கும்
ஒரே அல்லாஹ்
எனக்கும் உனக்கும்
ஒரே கிப்லா
எனக்கும் உனக்கும்
ஒரே தூதர்
எனக்கும் உனக்கும்
ஒரே மார்க்கம்
பின்
எப்படி நாம் பிரிந்தோம்…….?
பின்
எவ்வளவு நாம் இழந்தோம்…….?
உன் அன்பு கொண்டு வேயப்பட்ட
என் வீட்டுக் கூரையின் கீழ்
உனக்கான கவளங்களை
ஏந்திய படி - இன்றைக்கும்
காத்திருக்கும் நம் உம்மா...
என் சந்தோசங்களின்
புன்னகை நீ ...
என் கவலைகளின்
கண்ணீர் நீ...
உன்னைப் பார்க்கையில்
சந்தோசமும்
என் கவலைகளில்
உன்னைப் பார்க்கவும் முடியுமான
உன்னதத் தன்மையை
உணர்த்திக் கொண்டே இருக்கும்
நம் சிநேகம்...
நம் எல்லாச் சந்தோஷ சாயங்காலங்களையும்
பதிவு செய்த - நம்
கடற்கரை மணற்பரப்பு
நமக்காக இன்னும் காத்திருக்கிறது...
இழப்பை ஈடு செய்ய,
உன் நட்பை நான் தொடர
சில உறுதிகள் நான் சொல்வேன்...
உன் அச்சம் அதுவாயின்
அனைத்தையும் நான் தீர்ப்பேன்
அல்லாஹ்விற்கும் அடியவனுக்கும்
படைத்தவனுக்கும் படைப்பினத்திற்குமான
வித்தியாசம் - எனக்கு
வணங்கவும் வாழ்த்தவும்
சொல்லித் தந்திருக்கின்றது…
நீ சுவாசித்த மார்க்கக் காற்று
இணை வைப்பதில்லை என்ற
இறுமாப்பை எனக்குள் விதைத்துச் சென்றது...
ஆயினும்,
இன்னும் தீராத சில அதிருப்திகளையும்
இன்னும் நாமே எதிர்பார்க்கும்
சொல்லப்படாத சில தீர்வுகளையும்
மனங்களைப் பார்க்கும்
மாண்புயர் நீதியரசனிடம்
விட்டுவிட்டு வா தோழனே
வா
நம் இருப்பிற்கான காரணங்களை
தேடித் தீர்ப்போம் ...
வரதட்சணை வாங்குவோர்
உறவறுப்போம்...
வாழ்வாதாரம் பெருக்கும்
கல்வி முறை வேண்டி
கலந்துரையாடுவோம் ...
ஒரு தலைமுறை
உழைத்துத் தேய்ந்தது...
ஒரு தலைமுறை
திரைகடலோடித் தனித்தது...
வரும் தலைமுறையாவது
அரசு நாற்காலியையும்
அரசியல் நாற்காலியையும்
அலங்கரிக்கட்டும்...
இனி
இந்திய இஸ்லாமியர்களின்
எதிர்காலத்தை -அவர்களே
நிர்ணயிக்கட்டும்.
இது வரம் -- ஆயின்
கடுந்தவங்கள் சில கடைப் பிடிக்க வேண்டும் ...
நம் இரத்தத்தில் ஊரிய
அரசியல் பற்றை அகற்றவேண்டும்...
அல்லாஹ் அளித்த அற்புதம்
முஸ்லிம்களுக்கான முதல் வரம்
தேர்தல் தமிழ் நாடு -2016
அறிந்தோ அறியாமலோ
இஸ்லாமியர்களின் சக்தியை
இந்தியா அறிய
அரசியல் தலைமைகள்
அளித்த அறிய வாய்ப்பு ...
பன்முகத்திறமையும்
தூய்மை கரங்களும்
அடையாளமெனக் கொண்டு
அணிவகுத்து நிற்கும்
இளைஞர்கள் பின்னணியில்
முன்நிலையில் நிற்போம் ...
வென்றுவிட முடியுமான ...
தொகுதியில்
தோற்றுவிடக் கூடிய சகோதரர்களை
ஒதுங்கி -அவர்களையும்
வெற்றிக் கொள்ளச் செய்வோம்.
வா தோழனே
தமிழகச் சட்டசபையில் - சில
இருக்கைகள் நாம் செய்வோம்
வருங்காலத்தில் -அவர்கள்
சட்டங்கள் செய்யட்டும்.
முஸ்தாக் அஹ்மத்
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|