அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு !
வட்டி எனும் பெரும் பாவம் - "இறைவனுடன் போர் புரிவதற்கு சமமானதாகும்" என்று இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது !
நமது வங்கி சேமிப்பு கணக்கில் வரும் வட்டி பணத்தை என்ன செய்வது?
நாம் அந்த வட்டி பணத்தை ஏழை முஸ்லீம்களுக்கு கொடுக்கலாமா?
அல்லது, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமா?
வட்டி பணத்தை, எடுப்பதே ஹராமா?
அல்லது, அந்த வட்டி பணத்தை வங்கி கணக்கில் விட்டு வைப்பது சரி ஆகுமா?
இஸ்லாமிய பத்வாக்கள் என்ன கூறுகின்றன?
அனைத்துக்கும் மேலாக , யார் இதனை இஸ்லாமிய பத்வாக்கள் அடிப்படையில் செயல் படுத்துவார்கள்?
இறை அச்சம் உள்ள மூமின்கள் அனைவருக்கும் , இது போன்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ...
இதற்கு விடை தான் என்ன?
அல்ஹம்த்துலில்லாஹ் ! அனைத்து கேள்விகளுக்கும் விடை உருவாகி உள்ளது!
"SERVE ALL FOUNDATION", சென்னை
உலகம் முழுவதிலும் இருந்து, பிரபலமான 9 ஃபத்வாக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
1. அல்-அசர் இஸ்லாமிய பல்கலைகழகம் - கைரோ , எகிப்து
2. இஸ்லாமிய பிக்ஹ் அகாடமி - மக்காஹ்
3. தாருள் உலூம் - தேவ் பந்த்
4. தாருல் இப்ஹ்தா - டர்பன், சவுத் ஆப்ரிக்கா
5. முபாரக் மதனீ - இலங்கை
6. ஷேக். அஹமது குட்டி, கனடா
7. ஐரோப்பிய ஷரியா கவுன்சில்
8. ஷேக். ஆசிம் L . அல் ஹகீம் - சவுதி அரேபியா
9. இஸ்லாமிய ஷரியா கவுன்சில் - நைரோபி, கென்யா
அனைத்து ஃபத்வாகளும் "இவ்வாறு வருகின்ற வட்டி பணத்தை, தனது வங்கி கணக்கில் இருந்து அகற்றுவது , முக்கியமான கடமையாகும்" என்று ஒருமித்த
கருத்தையே, உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றன!
இந்த ஃபத்வாகளின் அடிப்படையில் , "SERVE ALL FOUNDATION ", 36 அறங்காவலரைகளைக் கொண்ட அறக்கட்டளை 30.04.2013, "இந்தியன் அறக்கட்டளை சட்டம்
1881 , பதிவு எண் : 72 / 2013 பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளை “ஷரியா அடிப்படையில்” செயல்படும். இதற்காக மூன்று உலமாக்கள் கொண்ட ஷரியா
ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
1. அப்துஸ் சலாம் மதனீ :
தலைவர் : இஸ்லாமிய கல்வி, பிரஸ்டன் கல்லூரி, சென்னை
2. ஃபயாஸ் ஆலம் உமரீ:
தலைமை இமாம், அஞ்சுமன் , சென்னை
3. ஷம்சுதீன் காசிமி:
தலைமை இமாம், மக்காஹ் மஸ்ஜித் , சென்னை
ஃபத்வா
ஷேக். அஹமது குட்டி : இஸ்லாம் ஆன்-லைன் : 03/Mar/2005
கேள்வி: அன்பார்ந்த அறிஞர்களே , அஸ்ஸலாமு அலைக்கும். நான் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு , வட்டி தரப்படுகின்றது . இது ஹராமா? ஆம்
என்றால் , நான் இந்த வட்டிப் பணத்தை என்ன செய்ய வேண்டும்? ஜசாகுமுல்லாஹ் க்ஹைரன் !
பதில்: வ அலைக்கும் அஸ்- சலாமு வ ரஹமதுல்லாஹி வ பரகாத்துஹு. அளவற்ற அருளாளனும் , நிகரற்ற கிருபை உடையவனுமாகிய , எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் பெயரால் ! எல்லாப் புகழும் , நன்றியும் , அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்ததாகும் ! அவனுடைய தூதர் மீது சாந்தியும் அருளும் உண்டாகட்டும் !
வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும் .
பல மார்க்க அறிஞர்கள் வழங்கிய பத்வா: "வங்கி தரும் வட்டி பணத்தை , நம் வங்கி கணக்கில் இருந்து எடுத்து , அதனை அல்லாஹ்விடம் எந்த கூலியையும் எதிர்
பார்க்காமல் , தர்ம காரியங்களுக்கு செலவிடலாம் ."
ஒருவர் தன்னுடைய தேவைகளுக்கு அதனை பயன் படுத்தக் கூடாது .
இன்ஷா அல்லாஹ் , "ஒருவர் இவ்வாறு தனது வங்கி கணக்கில் இருந்து வட்டி பணத்தை அகற்றுவதின் மூலம், தன்னுடைய பணத்தை தூய்மை படுத்தியதற்கான
நன்மையை பெறுவார்."
ஷரியா நிலைப்பாடு : "வங்கி , நம் கணக்கில் இருக்கும் பணத்தோடு , வட்டி தொகையையும் சேர்த்து விடுகின்றது ;
மொத்த பணமும் வங்கியிடமே இருக்கின்றது .
ஆகையால் , வட்டி தரும் வங்கியிடமே , அந்த வட்டி பணத்தை விட்டு வைப்பது முறையல்ல .
வங்கியின் வியாபார அடிப்படை முறை ' வட்டியை ' சார்ந்ததாகும் ;
இவ்வாறு இருப்பின் , நாம் நமது வட்டி பணத்தை வங்கியிலேயே விட்டு வைப்பது, வட்டி எனும் பெரும் தீமை பெருகுவதற்கு வழி வகுக்கக் கூடும் ;
தீய செயல்கள் செய்பவர்களுக்கு , மேலும் பண அதிகாரத்தை கொடுக்கும்."
ஆகையால், ஒருவர் தன்னுடைய பணத்தை வங்கியில் தூய்மையாக வைத்திருப்பதற்கு , வட்டி பணத்தை ' முஸ்லிம் தொண்டு நிறுவனங்களுக்கு' கொடுப்பது
சிறந்ததாகும் .
இதற்கு மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வாய்ப்பு – உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திருக்கும் வட்டி பணத்தை , மருத்துவமனைகள் , அநாதை விடுதிகள் ,
அகதிகள் , மற்றும் பொது நல காரியங்கள் கொடுப்பது சிறந்ததாகும் .
இவ்வாறு நீங்கள் செய்யும் போது, இன்ஷா அல்லாஹ் 'தீமையை விலக்கும் கடைமையும் நிறைவேற்றுவீர்கள்; உங்கள் மீது எந்த பாவமோ அல்லது குற்றமோ
சுமத்தப்படாமல் பாதுகாத்துக் கொள்வீர்கள்.'
எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் !
செர்வ் ஆல் பவுண்டேஷன் நோக்கம்
அ) ஒவ்வொரு முஸ்லிமின் வங்கி கணக்கில் , தனித் தனியாக வரும் வட்டி பணத்தை ஒன்றாக சேகரிப்பது ;
ஆ) இவ்வாறு மொத்தமாக சேகரிக்கப்பட்ட பணத்தை , அல்லாஹ்விடம் எந்த பலனையும் எதிர் பார்க்காமல் கீழ் கண்ட நற்காரியங்களுக்கு , முறையான விதத்தில்
பயன்படுத்துவது .
பயனாளிகள்
அ) மருத்துவ உதவி : கேன்சர் , கிட்னி நோய்கள் , இருதய நோய்கள், ஊனமுற்றவர்கள், அவசர ஆபரேஷன் ...
ஆ) கடனாளிகளை மீட்பது : வட்டியினால் பாதிக்கப்பற்றிருக்கும் கடனாளிகளை மீட்பது.
இ) சுகாதார உதவி : கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் செய்வது (தனி பாத்ரூம் கட்டுவது etc)
ஈ) நீதி உதவி : சிறையில் இருக்கும் குற்றமட்ட அப்பாவி மக்களுக்கு , நீதிமன்ற செலவுகளுக்காக உதவி செய்வது ; கலவரங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி
புரிவது .
உ) பேராபத்து நிவாரண உதவி : நில நடுக்கம் , வெள்ளம் , தீ விபத்து , சுனாமி போன்ற பேராபத்து நேரங்களில் நிவாரண உதவி செய்வது.
ஊ) கல்வி உதவி : கல்வி ஊக்கத் தொகை வழங்குவது .
இது போன்ற அறக்கட்டளை ஏன் தேவை?
பிரபல செய்தி தாள்களில் வெளிவந்த தகவல்கள் :
"இந்தியன் ரிசர்வ் வங்கியின் " அறிக்கைப்படி, கடந்த 30 ஆண்டுகளில், தனித் தனி முஸ்லிம் வங்கி கணக்குகளில் வட்டி பணம் எடுக்கப்படாமல் ,
அது இன்று மொத்தமாக சேர்ந்து, பல லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பல லட்சம் கோடி பணம் யாருக்கும் பயனின்றி முடங்கி கிடக்கின்றது.
மேலும், இத்தொகை ஆண்டுத்தோறும் , 10 - 15 % உயர்ந்து கொண்டே போகின்றது.
இந்தியாவில் உள்ள பல முஸ்லிம் உலமாக்கள் , அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுனர்கள் , 'முடங்கி கிடக்கும் பல லட்சம் கோடி பணம் ஏழை மக்களின்
நல்வாழ்விற்கு பயன்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றனர். வெகு சில நபர்கள் , தங்கள் வங்கி கணக்கில் வரும் வட்டி பணத்தை , தங்களுக்கு
தெரிந்த ஏழைகளுக்கு கொடுக்கின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது இதனை செய்கின்றனர் .
'முடங்கி கிடக்கும் பல லட்சம் கோடி பணம் , ஏழை மக்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்பட பட வேண்டும் ' என்றால் , அதற்கு கூட்டு முயற்சியும் ,
முழு நேர ஒருங்கிணைந்த உழைப்பும் தேவை !
இந்த நோக்கத்தை செயலாக்கவே, " செர்வ் ஆல் பவுண்டேஷன்" என்ற முதல் படியில், அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது !
நெடுங்கால நோக்கம்
அ) சென்னையில் முதல் கட்டமாக செயல்படும்.
ஆ) நமக்கு அறிந்தவர்களிடம் , இந்த அறக்கட்டளையைப் பற்றி தெரிவிக்கப்படும்; இந்த நபர்கள் அவர்களிடம் சேர்ந்துள்ள வட்டி பணத்தை அறக்கட்டளைக்கு
அனுப்பலாம் ; மேலும் அவர்கள் பயனாளிகளையும் சிபாரிசு செய்யலாம்.
இ) முதல் இரண்டு ஆண்டுக்குள் இந்த அறக்கட்டளையைப் பலப்படுத்த, அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக செய்ய வேண்டும்.
ஈ) நம்முடைய முயற்சிகளை , செயல் வடிவில் நடைமுறை படுத்திய பின்னர், NGO அங்கீகாரம் பெற முயற்சிகள் எடுக்கப்படும்.
உ) அதே சமயத்தில், இந்த அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் , சிறு நகரங்களிலும் , கிராமப்புரங்களிலும் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
பிறகு இந்தியா முழுவதும் இதனை பரவச்செய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.
அறங்காவலர்கள்
1. CHAIRMAN : JANAB. S. AHAMED MEERAN
THE PROFESSIONAL COURIERS,
FOUNDER : UNITY PUBLIC SCHOOL
2. VICE CHAIRMAN : JANAB. A. MOHAMED ASHRAF
HABEEB TANNING COMPANY,
HONY. SECRETARY : MEASI
3. SECRETARY : JANAB. S. IMTIAZ AHAMED
L.K.S. GOLD PARADISE, CATHEDRAL ROAD
4. JOINT SECRETARY : JANAB. IMRAN HUSAIN
RETIRED BUSINESSMAN
5. TREASURER : JANAB. AHAMED MOHAMED
AMSON FURNITURE
6. JOINT TREASURER : JANAB. T.C. MOHAMED RIAZ
TIMBER BUSINESS ( N K M GROUP )
7. BOARD MEMBER : JANAB. A.S. ABDUL BASITH
SALMA LEATHERS
8. BOARD MEMBER : JANAB. S. IBNU SOUD
TAYSEER CONSULTANT (P) LTD ,
OMIET
9. BOARD MEMBER : JANAB. AVAIS MUSVEE
CONCORD TEXTILES
10. BOARD MEMBER : JANAB. MOHAMMED A. AFZAL
PARVEEN TRAVELS INDIA (P) LTD
11. BOARD MEMBER : JANAB. A.K. MOHAMMED HANIFA
APOLLO WATERS
12. TRUSTEE : DR.A.M.SALAHUDDIN
VICE PRESIDENT - ANJUMAN
13. TRUSTEE : JANAB. C. ABDUL MALICK
AUDITOR , MALICK NIYAZ & CO
14. TRUSTEE : JANAB. M. ABDUL JABBAR
SECRETARY, KEELAKARAI WELFARE ASSN.
15. TRUSTEE : JANAB. M.S. TAJUDEEN
SEAPORT LOGISTICS (P) LTD
16. TRUSTEE : JANAB. H. ABDUR RAQEEB
General Secretary : National Committee on Islamic Banking
Convenor : Indian Centre for Islamic Finance
17. TRUSTEE : JANAB. S.M. ABDUR RAHEEM PATEL
SECRETARY, .ALL INDIA MILLI COUNCIL,TN
18. TRUSTEE : JANAB. M.P. ASHRAF
INDIAN TIMBER IND (P) LTD
19. TRUSTEE : JANAB. JAMAL MOHAMED EBRAHIM (RIZWAN)
PARTNER: GOWNER BEEDI
20. TRUSTEE : JANAB. UMMER PARTNER
ORCHID SHOES
21. TRUSTEE : JANAB. M.H. JAWAHIRULLAH
MLA , RAMANATHAPURAM
22. TRUSTEE : JANAB. KAR. SYED
DIAMOND PUBLICITIES (P) LTD
23. TRUSTEE : JANAB. N.BASHEER AHAMED
UCMAS INDIA (P) LTD
24. TRUSTEE : JANAB. M.K.E. UMMER ABDUL CADER
BUSINESS
25. TRUSTEE : JANAB. S.S. AHAMED RIFFAI
AUDITOR : RIFFAI & CO
26. TRUSTEE : JANAB. B.N. KHAISER
V.M. BUS SERVICES
Al – Hira School
27. TRUSTEE : JANAB. M.H. JIFFRI KASIM
ASIATIC TRADING COMPANY,
Al- Fajr School
28. TRUSTEE : JANAB. ABDUL HAMEED KHAN
WATER WORKS , ALLIED CERAMIC
29. TRUSTEE : JANAB. MOHAMED IMTIAZ
NKM TIMBERS
30. TRUSTEE : JANAB. OMAR JAMEER
ENKAYEM TIMBERS
31. TRUSTEE : JANAB. K. ANEES AHAMED
PARTNER : KAMIL LEATHERS
32. TRUSTEE : JANAB. M. SYED ABU THAHIR
DIRECTOR: FISHERMAN FARE
33. TRUSTEE : JANAB. K.NAVAS KANI
MANAGING DIRECTOR, ST COURIER
34. TRUSTEE : JANAB. V.P. NAIMUR RAHMAN
NADEEM LEATHERWARE EXPORTS
35. TRUSTEE : JANAB. A.MOHAMED ELYAS SAIT
WHITE HOUSE
36. TRUSTEE : JANAB. MANDI MOHAMED ASLAM
AIRGO LOGISTICS.
இந்த அறக்கட்டளைக்கு நீங்கள் எவ்வாறு உறுதுணையாக செயல்படலாம்?
அ) இந்த கூட்டு முயற்சி முறையை , உங்களுக்கு தெரிந்த முஸ்லிம் வட்டாரத்தில் , விளக்கி சொல்லலாம் .
ஆ) மேலும் உங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் .
இ) உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்துள்ள வட்டி பணத்தை , இந்த அறக்கட்டளைக்கு அனுப்பலாம்
ஈ) உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரையும் , அவர்கள் வங்கி கணக்கில் சேர்ந்துள்ள வட்டி பணத்தை , இந்த அறக்கட்டளைக்கு அனுப்ப செய்யலாம்
.
உ) தகுதியான பயனாளிகளை பரிந்துரைக்கலாம் .
வங்கி கணக்கு விபரம் :
BANK : AXIS BANK
ACCOUNT NO : 913020023402404
NAME : SERVE ALL FOUNDATION
IFSC CODE : UTIB0000006
மேலும், விபரங்களுக்கு , விளக்கங்களுக்கு என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ், என்னால் முடிந்தவற்றை இதற்காக மேற்கொள்வேன்!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தி , நம்முடைய இந்த கூட்டு முயற்சியை வெற்றியாக்கி , ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக்கி
வைப்பானாக!
ஆமீன்!
On Behalf Of SERVE ALL FOUNDATION
S. Imtiaz Ahamed,
Hony. Secretary
phone : 98410 72722
e-mail : lks.imtiaz@gmail.com |