Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:14:42 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 76
#KOTWART0176
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 14, 2014
120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (பாகம் 1)
இந்த பக்கம் 5331 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"என்ன 120 கோடி? அது என்ன பெரிய பணமா? அவர்களின் குடும்பத்தின் ஒரு வார துணி சலவை செய்வதற்கான செலவு அது. அது அவர்களின் பணமும் அல்ல, என் உழைப்பிற்கான ஊதியம்." இப்படிச் சொல்கிறார், தன்னை மறைந்த சவுதி அரேபியாவின் மன்னரின் மனைவி என்று கூறும் லண்டனில் வசிக்கும் ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்.

அது செப்டம்பர் 1967. பிரபல உள்ளூர் அறபி வர்த்தகர் ஒருவரின் பார்ட்டிக்கு சென்ற போது அவரைக் கண்டாள். வெள்ளை ஆடை. வயது 45. தடித்து உயரமானவர். குறுந்தாடி. அரசியல் அதிகாரம் கூர்மையான கண்களில் தெரிந்தது. ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்கச் சொல்லும் கம்பீரமான தோற்றம். ஒரு கணம் ஜனன் தடுமாறிப்போனாள்.

யார் இந்த ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்?

அவள் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவர். ஹைபா வில் 1949 ல் பிறந்தாள். தந்தை சிறிய உணவகம் ஒன்றை நடத்தினார். ஜனனுக்கு 12 வயதாக இருக்கும்போது குடும்பம் ரமல்லாஹ் விற்கு குடி பெயர்ந்தது. மேற்கு கரையை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்த நேரம் அது.

ஜனன் 19 வது வயதில் புதிய வாழ்க்கை தேடி சவுதி அரேபியாவின் ஜித்தாஹ் நகர் சென்று தனது உறவுப் பெண்களோடு தங்கினாள். அங்குள்ள வெனிசுலா தூதரகத்தில் அறபி - ஆங்கில மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அமெரிக்காவிற்கு செல்வதே அவள் குறிக்கோளாக இருந்தது.

அவள் உள்ளே நுழையும் போதே வைத்த கண் வாங்காது அவளையே பார்த்த அவர், யார் இந்த சோபியா லோறேன் (அக்காலத்தில் பிரபலமாக இருந்த ஹாலிவூட்டின் இத்தாலிய நடிகை) என்று சிந்தித்தார். நேரில் வந்து பேசினார்.

"நான் உள்ளே நுழையும் போதே அந்த உயரமான மனிதரைப் பார்த்தேன். அவர் மிகவும் பிரபல்யமான இளவரசர். உலகின் பலமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னையே அவர் பார்த்தார். நேரடியாக வந்தார். மிகவும் மரியாதையாகப் பேசினார். எனது கருத்துகளுக்கு மரியாதை கொடுத்தார்".

ஒன்பது குழைந்தைகளின் தந்தையின் உள்ளத்தில் ஒரு கனவுக் கன்னி குடியேறிவிட்டாள். எப்படியாவது அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவர் முடிவு செய்து விட்டார்.

அடுத்த நாள் அவள் வேலை முடிந்து வீடு திரும்புகையில் கறுப்பு நிற படகுக் கார் ஒன்று அங்கு நின்றிருந்தது. அவளைக் கண்ட ஓட்டுனர் ஒரு நகைப் பெட்டியையும் ஒரு கடித உறையையும் கொடுத்தார். அதில் டாலர் 20,000 ம், காதணிகளுடன் ஒரு வைர நெக்லசும் இருந்தது. ஒரு கணம் அசந்து போன ஜனன் அவைகளை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டாள்.

" நான் சற்று கடுமையானவள். அவைகளைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் அவைகளுக்கு ஈடாக என்னால் எதுவும் கொடுக்க முடியாது. ஆகவே திருப்பி அனுப்பி விட்டேன்" என்றாள் ஜனன். விட்டாரா அவர்?

அடுத்த நாள் பகல் சாப்பாடு வேண்டும் என்றார். "என் வீட்டில் ஓர் இளவரசருக்கு கொடுக்கும்படியான உணவு இல்லை என்றேன் நான். ஒரு மணி நேரத்தில் ஏழு கார்களில் ஏழு பணியாளர்கள், விதம் விதமான அறபி உணவுவகைகள், கோழி புறா பழ வகைகள் என கொண்டு வந்து விருந்து படைத்தனர்".

அடுத்த நாள் அவர் மீண்டும் வந்தார். இப்போது நாங்கள் Roulette ஆடினோம். என் நண்பர்களும் நண்பிகளும் ஆட்டத்தில் இணைந்தனர். அவருக்கு ஆட்டத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. இப்போது எனக்கு ஒன்று புரிந்தது. குடும்பம், செல்வம் எல்லாம் இருந்தும் அவரிடம் தனிமை இருந்தது என்று.

இளவரசர் முதன் முதலில் தன் காதலை வெளிப்படுத்தியது - I Love You சொன்னது லண்டனில்தான். அதற்கு முன்பாக அவர் தனது பண மலை மூலமாக தன் அன்பு மழையில் ஜனனை தொப்பு தொப்பாக நனைத்தார். ஆனாலும் வெற்றி பெறவில்லை அவர் நோக்கம்.

ஜனனையும் அவள் குடும்பத்தின் பத்து உறுப்பினர்களையும் இரண்டு வார விடுமுறைக்காக லண்டன் டோசெஸ்டெர் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். Harrods கடையில் பெறுமதியான ஆடைகளும் குளிர் கோட்டும் அவளுக்கு வாங்கி கொடுத்தார். அன்றிரவு ஒரு பெரிய பிரமுகரின் விருந்துக்கும் அவர்களை அழைத்துச் சென்றார்.

ஹோட்டலுக்கு வந்ததும், அன்றைய இரவை அவளோடு கழிக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவள் மறுத்து விட்டாள். "உடலுறவை அவர் விரும்பினார். திருமணம் செய்யாமல் நான் அதற்கு ஒப்பமாட்டேன் என்றேன். அத்துடன் அவ்விசயம் முடிந்து விட்டது என்று நான் நினைத்து இருந்தேன்".

ஆறு வாரங்கள் கழிந்திருக்கும் திடீரென்று ஒரு நாள் ஜனனின் தந்தையை இளவரசர் ஜித்தா அழைத்து வந்தார். தனது காதலியாக - ஆசைநாயகியாக இருக்க அவள் மறுத்ததால் அவளை மனைவியாக்கிக் கொள்ள அவர் முடிவு செய்தார்.

"என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார். அது இரகசியமாக நடக்க வேண்டும் என்றதோடு இரண்டு கட்டளைகள் என்றார். ஒன்று, நான் மதம் மாறவேண்டும். இரண்டு, குழந்தை பெறக் கூடாது. நான் சம்மதித்தேன். காலப்போக்கில் குழந்தை விசயத்தில் அவர் மனதை மாற்ற முடியும் என நம்பினேன்."

சுருக்கமாகச் சொல்வதானால் இளவரசர் ஜனனின் அழகை ரசித்தார். அவள் உடலை ருசிக்க விரும்பினார். மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பார்களே. அந்த ரகம் தான். மன்னர்களுக்கு மங்கையர் விளையாட்டுப் பொருள் தானே.

அடுத்த சில நாட்களில் அல்- சரபியா மாளிகைக்கு ஜனன் குடிபுகுந்தாள். அது மூன்று மாடிகளைக் கொண்ட முழுவதும் வெல்வெட் கார்பெட் போடப்பட்ட வெள்ளை மாளிகை. வழக்கமாக விருந்தாளிகள் தங்கும் மாளிகை. நகரின் மத்தியில் இருந்தது. ஒரு திரையரங்கு, நீச்சல் குளம், எட்டு பெரிய அறைகள், எட்டு சலவைக் கற்கள் பதித்த குளியல் அறைகள், ஐந்து வரவேற்ப்பு அறைகளைக் கொண்டது.

1968 மார்ச்சில் ஒரு நாள் அவசரம் அவசரமாக நிக்காஹ் - திருமண நிகழ்ச்சி மாளிகைக்குள்ளேயே இரகசியமாக நடைபெற்றது. ஷேய்க் ஒருவர் மூன்று சாட்சிகள் முன்னால் அதனை நடத்தினார். அதில் ஒருவர் ஓர் இளவரசர்.

அதன்பின் கல்யாண விருந்தில் ஆறு நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். அரச குடும்பத்தினருக்கு அங்கு நடந்தது என்ன என்று தெரிந்திருந்தாலும் வெளியார் யாருக்கும் தெரியாதவாறு பார்த்துக்கொண்டனர்.

அங்கு அவள் தந்தை, சகோதரி என இந்த ஆறு பேரின் கட்டளைக்காக ஒரு பணியாளர் பட்டாளமே இருந்தது. அவளுக்கெனத் தனியாக சோமாலியா - எத்தியோபியா பெண் பணியாளர்கள் இருந்தனர். ஓட்டுனருடன் Aston Martin கார் அவளுக்கு தரப்பட்டிருந்தது. பல வகை Piaget கைக் கடிகாரங்களும் பிரான்சின் Oscar de la Renta ஆடை வகைகளையும் இளவரசர் அவளுக்காகத் தெரிவு செய்திருந்தார்.

அவள் ஆடம்பரத்தின் உச்சிக்கு போய்விட்டாள். கனவுலகில் வாழ்ந்தாள். மொத்தத்தில், அவள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் மலைக்கும் மடுவிற்கும் உண்டான வித்தியாசம் இருந்தது எனலாம். ஆனால் நாள் செல்ல செல்ல தன் வாழ்க்கை தங்க கூட்டில் இருக்கும் கிளியின் வாழ்க்கைக்கு ஒப்பானது என அவள் உணரத் தொடங்கினாள்.

அவர் அப்போது உள்துறை அமைச்சர். அரியணையின் வாரிசு பட்டியலில் அவர் பெயர் இருந்தது. மூத்த சகோதரர்கள் இருவர் இருந்தாலும், இன்றில்லாவிட்டால் ஒருநாள் சவுதியின் மன்னராகும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இருக்கவே செய்தது. காரணம் மற்ற சகோதரர்களைவிட பொறுப்பான பதவிகளை அவர் வகித்தார்.

மேலும் மன்னரே புனித மஸ்ஜித் இரண்டுக்கும் பொறுப்பாளராக இருப்பார். அத்தகையவர் ஒரு முஸ்லிம் அல்லாத பெண்ணை மணம் செய்தார் என்றால் மக்கள் ஏற்பார்களா எனப் பயந்த இளவரசர் ஜனனை வெளியார் அறியாத நிலையிலேயே வைத்திருக்க விரும்பியதில் வியப்பில்லை.

லண்டன் நைட்பிரிட்ஜ் பகுதியில் வீடு ஒன்று எடுத்தனர். இருவரும் லண்டனில் ஆனந்தமாகப் பொழுது போக்கினர். அவளுக்கு அங்கு நிறைய சுதந்திரம் இருந்தது. அனுபவி ராஜா அனுபவி என்று அதே காலத்தில் நாகேஷ் பாடி ஆடியது இளவரசருக்கு ரொம்பவும் பொருந்தும். அவர் நன்கு அனுபவித்தார்.

இதற்கிடையில் குழந்தை பெறும் விடயத்தில் அவள் நினைத்ததுபோல் அவர் மனதை அவளால் மாற்றமுடியவில்லை. அவள் கேட்டது கேட்காதது எல்லாம் கொடுத்த இளவரசர், பிடிவாதமாக குழைந்தை மட்டும் தரமாட்டேன் என்றார்.

"ஒரு அரை பாலஸ்தீன குழைந்தையை நான் விரும்ப வில்லை. அல்- சரபியா மாளிகையில் ஒரு குட்டி யாசிர் அரபாத் ஒடித் திரிவதை நான் விரும்பவில்லை" என்று சிரித்துக்கொண்டு ஆனால் கண்டிப்பாக அவர் சொன்னது ஜனனின் மனதைக் காயப் படுத்தியது. அவள் விரும்பியது குடும்பம். அவர் விரும்பியது இன்பம்.

ஆனால் எந்த கருத்தடை முறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவள் கருவுற்ற போதெல்லாம் கலைக்கச் சொன்னார்.

"நான் 1968 இறுதியிலும் 1969 மத்தியிலும், இறுதியிலும் கருத்தரித்தேன். கலைத்துவிடச் சொன்னார். முதன் முறை மருத்துவ மனையிலும் அடுத்த இரண்டு முறைகளும் ஒரு கிளினிக்கிலும் கலைத்தேன். கிளினிக்கில் மயக்க மருந்து சரியாக வேலை செய்யாததால் என்னால் வலி பொறுக்க முடியவில்லை. செத்து பிழைத்த மாதிரி இருந்தது."

"இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்கு நன்றாகப் புரிந்தது. எனது திருமணம் எவ்வளவு பலவீனமானது என நான் உணர்ந்தேன். அவர் விரும்பினால் சுலபமாக தலாக் என்ற வார்த்தையில் என்னை விலக்கிவிடலாம். பின்பு என் கதி அதோ கதிதான். ஆகவே நான் அவர் சொற்படியே நடந்தேன்".

இவ்வாறு இனிப்பும் உவர்ப்பும் கலந்து சென்று கொண்டிருந்த அவள் மண வாழ்வை திடீர் சூறாவளி ஒன்று 1970 கடைசியில் தாக்கியது.

(தொடரும்.)

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: zakariya (chennai) on 15 June 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35293

kayalpatnam .com எங்கே செல்கிறது? யார் என்ன சொன்னாலும் நாங்கள் கட்டுரையை வெளியிடத்தான் செய்வோம் என்றால் Adults only போட்டாவது வெளியிடுங்கள் என்னுடைய கமெண்ட்ஸ் யை reject பன்னுவற்கு முன்னால் இந்த கட்டுரையை reject செய்யுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. அதுவும் உடனே வரட்டும்!
posted by: ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) on 16 June 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35340

கதை நல்லா தானே போகுது.

இதுவெல்லாம் உண்மை தானா?

கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பில்லைன்னு நம்புவோம்.

இதன் தொடர்ச்சியும் உடனே அனுப்புங்கள் ஆசிரியரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. எதிர்பார்க்கின்றேன்.
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 16 June 2014
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 35398

அன்புக்குரிய கட்டுரை ஆசிரியர் துரை அவர்களே! கழுத்து நெரித்த கேஸ் முதல் இலங்கை புலிகள், சவூதி இளவரசர் கொடுத்த ஜக்காத், இப்போது மன்னரின் இரகசிய மனைவி என தங்களின் பல்வேறு ஆக்கங்களை நான் தொடர்ந்து படித்து வருகின்றேன்.

இதுகளை விட இப்போது முக்கியம், தாங்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் பொதுபல சேனாவின் அட்டகாசத்தால் சீர் குலைக்கப்பட்டு வரும் இஸ்லாமியர்களின் மனக்குமுறல்கள், பாதிப்புகள் அதன் பிரதான காரணி ஆகியவை பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கின்றோம்.

எதிர்பார்ப்புடன்,
ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 17 June 2014
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35413

சகலகலா வல்லவரின் இன்னொரு சுவராசியமான கட்டுரை. அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைக்கும் கட்டுரை.

காரணம், ஒருவரின் அந்தரங்கம், மற்றவர்களின் விசயங்களை அறிந்து கொள்ளுவதில் மனிதன் அதிக ஆர்வம் காட்டுகிறான். நானும் கூட தான்..

இந்த ஆர்வம் தான் facebook , ட்வீட்.. போன்ற வலை தளங்கள் சக்கைபோடு போடுவதற்கு காரணம்.

சரி, இந்த வலை தளத்திற்கு சௌதியில் தடை வராமல் கட்டுரை அமைந்தால் நலம்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: netcom buhari (chennai) on 17 June 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35420

இது இப்போதைக்கு தேவையா?

இதில் இருந்து ஆசிரியர் சொல் ல வருவது என்ன?

இந்த வலைத்தளம் சிறுவர்கள் ,பெண்கள் மட்டும் பெரியவர்கள் படிக்கும் ஒரு தளம் , ஆகவே மக்களுக்கு பொருந்தும் நல்ல கட்டுரைகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர் பார்க்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. நீண்ட நாள் கனவு பலித்தாலும்..... பலிக்கலாம்.!!!
posted by: s.s.md meerasahib (TVM) on 17 June 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35425

மாமா அவர்களின் ஆக்கம்களை பார்க்கும் போது. என் நீண்ட நாள் கனவு. "ஒரு கட்டுரை இந்த இணைய தளத்திற்கு போஸ்ட் பண்ணனும் என்ற கனவு பலித்தாலும் பலிக்கலாம் போல் உள்ளது". கதைகள், அந்தரங்கம்கள் எல்லாம் கட்டுரையாகும் போது....... நமக்கு தெரிந்த கதைகளை எல்லாம் சேர்த்து ஒரு கட்டுரை வரைந்தால் என்ன? என்ற ஒரு மனதில் உதிப்பு வந்து விட்டது.

குறிப்பு:- அன்பு அட்மின் அவர்களே..... என்னுடைய பல கமாண்டுகளுக்கு கத்திரி போட்டு இருக்குறீர்கள். என் கட்டுரைக்கும் கத்திரி போட மாட்டேன். என்று உறுதி தந்தாள் என் கட்டுரை ரெடி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: ismail (sri lanka) on 17 June 2014
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35426

Anbin adminuku,

Intha katturainal yaruku yenna payan? Innum solla ponal oru muslimin antha ரங்கம் Pesapadugirathu .

Thayavu seithu ithu mathiri katturaigalai pirasurika vendam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. தேவையா?
posted by: Shaik Dawood (Hong Kong) on 18 June 2014
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 35428

கட்டுரையாளர் ஷாஜஹான் காக்கா...

ஒரு முஸ்லிமின் குறையை இவ்வுலகத்தில் மறைத்தால் நம் குறைகளை இறைவன் மறுமையில் (மிகப் பெரிய கூட்டத்திற்கு மத்தியில்) மறைப்பான்... அதேபோல் ஒரு முஸ்லிமின் குறையை இங்கு பகிரங்கப்படுத்தினால்.... (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்) நம் குறையை (அந்த மிகப் பெரிய கூட்டத்திற்கு மத்தியில்) பகிரங்கப்படுத்தி விடுவான் இல்லையா?

இந்த கட்டுரை மூலம் தாங்கள் சொல்ல வருவது என்ன...???

நான் தங்களை விட வயதிலும் அனுபவத்திலும் மிக மிக சிறியவன்... நான் சொல்வது தவறாக இருப்பின் இறைவனுக்காக என்னை மன்னிக்கும்படியும் துஆ செய்யும்படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

நான் சொல்வது சரியாக இருந்தால்... அந்த தொடரை (அல்லது அது மாதிரியான எந்த தொடராக இருந்தாலும்) இத்துடன் முடித்துக் கொள்ளும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நம் பிழைகளை பொருத்தும் நம் நற்கருமங்களை ஏற்றும் நல்ல அழகிய முடிவை தந்தும் நல்லருள் புரிவானாக... ஆமீன்

தாவூது (பின்) ஷாஃபி
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...saudi
posted by: hylee (colombo) on 18 June 2014
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35429

"A"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...
posted by: Cnash (Makkah ) on 18 June 2014
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 35452

மரியாதைக்குரிய கட்டுரையா(?)ளர் அவர்களே ..

உங்களிடம் நேரிடையாக கேட்கும் முதல் கேள்வி .. இந்த நாலாந்தர கிசு கிசு கட்டுரை மூலம் நீங்கள் இந்த மூதாயத்திற்கும் , மக்களுக்கும் சொல்ல வரும் செய்தி என்ன என்று தயவு செய்து சொல்லுகிறீர்களா?

“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 49:6)

நீங்கள் மேல் சொன்ன அத்தனை குற்றசாட்டுக்கும் இந்த அந்தரங்க ரகசியங்களுக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் உங்கள் மனசாட்சி படி தர முடியுமா? அப்படியே ஒரு போன்ற செயல்களின் மறைந்த மன்னர் ஈடுபட்டு இருந்தால் ... அவர் அல்லாஹ் இடத்தில் சென்று விட்டார் ..அல்லாஹ்விற்கு பதில் சொல்லி கொள்வார்? நீங்கள் யார் இதை வெளிபடுத்த?

தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)

இன்றைய கூகுளின் எவன் பெயர் போட்டு சும்மா தேடினால் கூட அவளோடு உல்லாசம் இவளோடு அந்தரங்கம் என்று ஆயிரம் கட்டுரைகள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் - இன்றைய முதல்வர் வரை உள்ளது .. அவைகளை எல்லாம் ஒவ்வொரு பாகமாக கட்டுயாளர் வெளியிட தயாராக இருக்கிறாரா? இல்லை இந்த இணைய தளம் நடத்தும் பொறுப்பாளர்கள் இது போன்ற காம/கிசுகிசு கட்டுரைகளுக்கு தளம் அமைத்து கொடுக்க போகிறார்களா?

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

நம் ஊரில் நிகழும் மார்க்க நிகழ்சிகளுக்கு கூட கருத்து தெரிவித்து பிரச்னை வரகூடாது என்று முன்னெச்சரிக்கையாக கருத்துகளுக்கு தடை போடும் இந்த இணையதளம் இறந்த ஒரு முஸ்லீம்கள் எல்லாம் மதிக்கும் மன்னரை , இரண்டு புனித தளங்களின் பொறுப்பாளராக 25 வருடம் இருந்தவரை , கோடிக்கணக்கான குரான் பிரதிகளையும் , மொழியாக்கங்களையும் தன சொந்த செலவிலும் தான் ஆட்சி செய்த அரசின் சார்பாகவும் உலகம் முழுவதும் இலவச விநியோகம் செய்து இறை வேதத்தை பரப்ப காரணமாய் இருந்த ஒருவரை , பல நூறு இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் பல்கலை கழகங்கள் அமைத்து இன்றும் இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் பரவ இவருடைய ஆட்சியையும் ஒரு காரணம் என்று அனைவரும் நம்பும் ஒருவரை எண்ணில் அடங்கா நிரந்தர சதாகா என்னும் மறுமை நன்மைகளை செய்து விட்டு சென்ற ஒருவரை , நாட்டு மக்களுக்கும் , முஸ்லீம்களுக்கும் ஒரு அமைதியான ஆட்சியை நீதியான ஆட்சியை ஏற்படுத்தி விட்டு சென்ற ஒருவரை இப்படி நாலாந்திர விமர்சன கட்டுரை எழுதி என்ன பலனை கண்டீரோ தெரிய வில்லை .

அவர் கால கட்டத்தில் தான் இந்த இரு புனித பள்ளிகளுக்கும் கோடிகணக்கான முஸ்லிம்கள் இன்றும் வசதியாக வந்து செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஒரு இறந்த மனிதரை அவரை பற்றி சொல்லுவதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருந்த போதும் , ஏதோ ஒரு மேற்கத்திய கூலி ஊடகங்கள் தரும் கிசு கிசு செய்தியை கட்டுரையாக எழுதிய உங்களையும் அதை வெளியிட்டு மகிழும் இந்த இணைய தளத்தையும் என்ன சொல்லி பாராட்ட?

ஏதோ ஒரு 75,60 வருடங்களுக்கு முன்னே நடந்ததாக சொல்லும் கற்பனை கலைவைகளை விபாசார மீடியாக்கள் முஸ்லிம்களையும் முஸ்லீம் ஆட்சியாளர்களையும் ஒரு கீழ்தரமானவர்களாக , பெண்வெறி பிடித்தவர்களாக சித்தரிக்க வேண்டும் என்றும் என்று பல நுற்றாண்டுகளாக நடக்கும் கேவலங்களை ஆராய்ந்து தமிழாக்கம் செய்து தந்திருக்கும் கட்டுரையாளரே? இந்த நேரத்தை இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் நடக்கும் மீடியா சதியை பற்றியும் அதை முறியடிக்கும் விதம் பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்களே?

அந்த 50 வருடங்களுக்கு முன் எந்த மீடியா போய் அரசருக்கும் அந்த பெண்ணுக்கும் நடந்த அந்தரங்க உரையாடல்களை எல்லாம் அப்படியே பதிவு செய்து உங்களுக்கு சொன்னார்களோ இறைவனுக்கே வெளிச்சம் .. அது பற்றி நான் துருவி ஆராய விரும்ப வில்லை ..ஆதாரம் கேட்டால் ஆயிரம் SEARCH ENGINE கொடுக்கும் ... இதை போல கட்டுரை தொடர்களை இணையதளம் நீங்கள் வெளியிட்டால் .. நானும் நாளை முதல் கிசு கிசு கட்டுரை தொடர் ஆசிரியர் ஆகிறேன் .. ஜவர்ஹால் நேரு முதல் திருச்சி கே.என். நேரு வரையிலும் உள்ள கற்பனை அந்தரங்களை எழுதி குவித்து இந்த இணைய தளத்திற்கு (எ) சான்றிதழ் வாங்கி தர முயற்சி செய்வோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...ARABIAN NIGHTS.....
posted by: mackie noohuthambi (chennai) on 19 June 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35516

ஆயிரத்து ஒரு இரவுகள் என்று ஒரு கதை. அதை ARABIAN NIGHTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கதை சொல்லும் அழகி அந்த கதையை முடிக்காமல் அடுத்த நாள் இரவு...அடுத்த இரவு... என்று தொடர்ந்து கொண்டிருந்ததால் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அந்த அராபிய மன்னனுக்கு இருக்கும்.

ஷா ஜஹான் துரை அவர்கள் இரண்டாம் பாகத்தையும் எழுதுவார்கள்.. கதையை கேட்டு பார்த்து முடித்தபிறகு நமது அபிப்பிராயத்தை இங்கு பதிவு செய்வோம் என்று காத்திருந்தேன். ஆனால் அரபு மன்னரின் அந்தரங்க கதை என்பதால் அதை தொடர இந்த "அரசருக்கு" ஷா ஜஹானுக்கு தெரியவில்லையோ - மனம் இல்லையோ அல்லது அதற்கு மேல் சொல்ல ஆதாரங்கள் இல்லையோ அப்படியே பாதியில் நின்று விட்டது. அதற்கிடையில் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன...

நானும் இந்த செய்தியை ஒரு நாளிதழில் படித்தேன். ஆனாலும் மன்னர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள் - அவர்கள் இந்தியர்கள் ஆனாலும் அரபியர்கள் ஆனாலும் ஆங்கிலேயர்கள் ஆனாலும் எல்லோருமே மனிதர்கள் என்ற வகையில் சபலங்களுக்கு உள்பட்டவர்களே. மனிதன் படைக்கப்பட்டபோதே அந்த WEAKNESS உடன்தான் மனிதன் படைக்கப் பட்டிருக்கிறான். அந்தப்புரத்து செய்திகளை அம்பலத்துக்கு கொண்டுவந்தால் ஷாஜஹான் துரை என்ற அரசரும் சாமானியன் என்ற நூஹுத்தம்பியும் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்களாகவே இருப்பார்கள். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.

எனக்குள்ள ஆதங்கமெல்லாம் "ஷா ஜஹான் துரை இந்த கட்டுரை எழுதியதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு சொல்ல வந்த செய்தி என்ன" என்பதுதான்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு MISS MAYO என்ற ஆங்கிலேய பெண் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். பல பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் காந்தியின் அந்தரங்கங்கள் அசட்டுத்தனங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எழுதி அவரை தூசித்து எழுதி இருந்தாள். காந்தி எல்லாவற்றையும் படித்துபார்த்து விட்டு அவளுக்கு ஒரே வரியில் பதில் எழுதினார்."உங்கள் கடிதம் கிடைத்தது. அதில் எனக்கு பிரயோஜனமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவைகளை திருப்பி அனுப்பியுள்ளேன். அந்த பிரயோசனமான பொருள் என்ன தெரியுமா? MISS MAYO அந்த கடிதங்களை இணைத்து ஒரு "safety pin " குத்தி இருந்தார்கள்.அதை மட்டும் காந்தி எடுத்துக் கொண்டார். இப்போது நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் எது பிரயோசனமானது என்று வாசகர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். இந்த இணையதள ஆசிரியரும் வீணாக சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார். நான் இதை ஒரு நாவல் என்று நினைத்து ரசித்து படித்து முடித்திருக்கிறேன். எல்லோரும் அப்படி ஒரு ரசனையுடன் படித்து நிறுத்திக் கொண்டால் நல்லது. விமர்சனங்கள் கட்டுரை ஆசிரியரை பணபடுத்துமா அல்லது புண்படுத்துமா. அது அவரவர் மன நிலையை பொருத்தது.

ஒரு பெரிய மலை பிரசவித்தது..ஆனால் வெளியே வந்தது ஒரு சுண்டெலி...பெரிய ஏமாற்றம் தரும் கட்டுரை.ஷா ஜஹான் துரைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: Abdulkader ThaikaSahib MSS (Riyadh (KSA)) on 19 June 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 35519

கட்டுரையாளரின் மற்றுமொரு தரம் தாழ்ந்த பதிவு....

ஆதாரம் கேட்ட இலங்கை மஞ்சள் பத்திரிகையில் இருந்து லிங்க் வரும்....

சமீபகாலமாக இந்தைனைய தளம் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிட்டு தரம் தாழ்ந்து வருகின்றது....

இந்த கட்டுரை யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை...

மறைந்தவரை பற்றி புறம்பேசி திரிய வேண்டாம்... இதுபோன்று கண்டதையும் எழுதுவதை விட இலங்கை சிங்கள தீவிரவாதிகளின் அட்டோலியம் பற்றி அங்கிருந்து நேரடியாக பார்க்கும் தாங்கள் கட்டுரையாக வடிக்கவும்....

அட்மின் அவர்களே கருத்துக்கு மட்டும் கத்திரி போட்டால் போதாது... இதுபோன்ற "அந்தரங்க" கட்டுரைகளும் தன கத்தரிக்க படவேண்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:...இப்படியுமா எழுதுவது
posted by: செய்யிது அப்துல் பாரி (ரியாத் ) on 22 June 2014
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35566

கடந்த சில தினங்களாக தாங்கள் முன்னால் மறைந்த சவுதி மன்னர் அவர்களை பற்றி பாகம் 1 பாகம்2 என்று எழுதி வருவதை படிக்கிறோம். இப்படி தாங்கள் மறைந்த ஒருவரை பறௌறி எழுதுவது சரிதானா என்பதை உணரனும். (இன்னமல் அஃமால் பில்ஹவாத்தீம்)

இதன் பொருள் தனது கடைசி நாளில் ஒருவன் தன் தவருகளை உணர்ந்து நல் அமல்கள் செய்யும் போது அல்லாஹ் அவர் செய்த பிழைகளை மண்ணித்து விடுகிறான்.அப்படி எல்லாம் வல்ல இறைவனே மண்ணிக்கும் போதூ நீங்கள் யார் அதுவும் மறைந்தவர்களின் வாழ்க்கையை விமர்ச்சித்து எழுத. அதுவும் பாகம் பாகமாக எழுதுவதில் தங்களுக்கு என்ன சந்தோசமோ.இன்னும் சொல்லபோனால் அவர்களின் நல்ல செயல்கள் பல ஆயிரம் கோடி செலவுகள் செய்து மக்கா மதீனா புனித ஸ்தலங்களை விரிவு படுத்தி பலநல்ல சசெயல்களை நிறைவேற்றியது இது எல்லாம் தங்களின் கவனத்திற்கு வவில்லையா.

இன்னும் நல்ல காரியங்கள் அந்த மனிதர் செய்துள்ள போது அவர் முதன் முறையாக அந்த பெண்ணை பார்த்தார் மயங்கிட்டார் ஜலவ்யூ சொன்னார் கார்கள் படை சூழ தங்கமும் உணவு வகைகளும் அந்த பெண்மணியின் இல்லத்திற்கு பரந்தன என்று தாம் நேரில் பார்த்தது போல் எழுதுகிறீர்களே இது அழகா. இதற்கு ஆதாரம் கேட்டால் தாங்கள் தரமுடியுமா.

இன்னும் சொல்ல போனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் ஆட்ச்சி புரிந்த காலத்தில் வெளிநாட்டு மகௌகள் அனைவர்களுக்கும் எல்லா பாது காப்பும் அளித்தாரே அதை பற்றி தாங்கள் எழுதலாம். அந்த மண்ணர் ஆட்சிக்கு பிறகு இப்பம் வெளிநாட்டவருகௌகு எத்தனை கஷ்ங்களை தாங்கி கொண்டு வெளீநாட்டு சவூதிவாழ் மக்கள் இருக்கிறார்கள்.என்பதை தாங்கள் நிணைத்து பார்க்கனும்.

பல நாடுகளிலும் ஆயிரகௌகனக்கான மக்கள் இந்த காயல்வெப்பை ஒவ்வொரு நொடியும் பார்த்து கொன்டு இருக்கிறார்கள்.தாங்கள் தொடர்கதையாக இப்படி எழுதுவது சரியா என்று யோசனை செய்து பார்க்கவும்.

என் எழுத்தை சம்பந்த பட்டவர்கள் தவராக நிணைக்காமலும் கோவபடாமலும் அமைதியுடன் நிணைத்து பார்த்தால் நாம் எழுத்து என்ற பெயரில் தறு செய்வது புரியும்.

இவன்
அப்துல்பாரி
நலம் விரும்பி.
Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. தவறு என்பது தவறி செய்வது. தவறு செய்தவன் வருந்தியாகணும்.
posted by: s.s.md meerasahib (TVM) on 22 June 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35568

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு மாமா அவர்களே...... இந்த கட்டுரை மூலம் நமக்கு புரோஜனம் மட்டுமல்லாமல். எல்லோருக்கும் ஒரு இழுக்கை ஏற்ப்படுத்துவதால் இந்த கட்டுரையை அட்மினுக்கு ஒரு மெயில் மூலம் வாபஸ் பெறுவதுடன் எல்லாவருடைய கமாண்டுகளும் வாபஸ் பெறப்படும். மாமா இதை செய்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன்........ "தவறு என்பது தவறி செய்வது........ தப்பு என்பது தெரிந்து செய்வது........ தவறு செய்தவன் வருந்தியாகணும் (வாபஸ் பெறணும்) தப்பு செய்தவன் திருந்தியாகணும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) on 24 June 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35578

சௌதி மன்னர் என்று சொல்லிக்கொண்டிருந்த தன்னை இனி அப்படி அழைக்கவேண்டாம் புனித மக்கா,மதினா ஆகிய இரண்டு புண்ணிய இடங்களின் பாதுகாப்பு சேவகன் என்று அழைத்தால் போதும் என்று அடக்கத்துடன் கூறிய அரசன் எத்தனையோஏழை இஸ்லாமிய நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வாரிவழங்கிய வழங்க்கிகொண்டிருக்கின்ற ஓர் நாட்டின் ஆட்சிபுரிந்த மன்னரை,இஸ்லாத்திற்காக கோடிக் கணக்கான டாலர்களை செலவிட்ட ஒரு மன்னரை,அவரின் அந்தரங்க வாழ்கையை அருகில் உட்கர்ந்து பார்த்ததுபோல்,ஆபாசம் நிறைந்த வார்த்கைகளால் வர்ணித்து வாசிக்கும் வேற்று மததவர்கள் முதல் முஸ்லிம்கள் வரை முகம் சுழிக்கும் அளவற்கு கட்டுரை என்ற பெயரில் ஆதாரமற்றவைகளை அள்ளித்தெளித்திருக்கும் அவரின் எழுத்தின்தரத்தை அத்தரதிற்க்கேற்றவாறு ஒரு வரியில் சொல்ல வந்தால் அதை "விமர்சனம்" என்று கூறி வெட்டி விட்டீர்கள்!

இன்னும் சொல்லவந்தால்,மோடி அரசு சிறுபான்மையருக்கான சிறப்பு சலுகையை மறுபரிசீலனை செய்வதுபோன்ற சிலேடை செயல்களை புரிந்துகொண்ட சௌதி அரசு தங்கள் அரசாங்க அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன தெரியுமா? இந்திய முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்று பெருந்தன்மையோடு பிரகடனம் செய்த ஒரு புண்ணிய நாட்டை ஆண்ட ஒரு அரசனை ஒரு இந்திய முஸ்லிம் கட்டுரை என்ற பெயரில் அவரின் பெயருக்கு களங்கம ஏற்படுத்துவதுபோல் எழுதியுள்ளதை சற்று கடினமுடன் கண்டித்தால் அதை "விமர்சனம்" என்று வெட்டி விடுகிறீர்கள்! நீங்கள் நடுநிலமையோடோ அல்லது எந்த தனிமனித வாழ்கை பயணத்தில் தலைகுணிவு ஏற்படாதவாறு,மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லுகின்ற ஒரு கட்டுரையை பிரசுரித்து இருந்தாலோ எந்த எதிர்மறை விமர்சன்களும் வராது, இப்படிப்பட்ட தரக்குறைவான கட்டுரையை பிரசுரிக்கும் நீங்கள் அதற்குறிய விமர்சனத்தையும் பிரசுரித்தால்தான் உங்களின் நடுநிலைமையை நாலுபேர்கள் மெச்சும்படியாக இருக்கும்!

மறைந்துவிட்ட ஒருவரின் மாண்புகளை மிகைப் படுத்த வேண்டுமே தவிர அவரின் அந்தரங்க வாழ்கையை ஆபாசமாக விமர்சித்து வெட்டவெளில் உலகுக்கு தெரியும்படி தூற்றுங்கள் என்று நம் மார்க்கம் சொல்லித்தரவில்லை.. மறைந்து விட்டவர் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட பாவங்களை அவர் செய்த புண்ணிய காரியங்களுக்கு பகரமாக மன்னித்து ஆகிரத்தில் நற்பதவி வழங்கிடு யா அல்லாஹ் என்றுதான் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் முன்னோனாம் மேலோனிடம் வேண்டிக்கொள்வான்!

பெரும்பாலானவர்களின் வேண்டுகோளிக்கிணங்க இந்த கட்டுரையை எங்கள் இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டோம் என்ற அறிவிப்பு வரும் என்று என் போன்றவர்களெல்லாம் அதாவது உங்கள் இணையதளத்தின் மீது மரியாதையையும், மதிப்பையும் நடுநிலையாடு இயங்கும் என்ற எண்ணத்தையும் வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்,ஆனால் அந்த எண்ணத்திற்க்கெல்லாம் நேர்மாற்றமாக என் விமர்சனத்தை வெட்டி விட்டீர்கள்! பரவாயில்லை.இமயமலைபோல் வளர்ந்துவிட்ட உங்கள் இணையதளத்தில் நான் ஒரு கடுகளவு கனமுடைய கல்தான் அதனால் தான் தங்கள் கண்ணில் பிரதானமாக படவில்லை போலும்!

உங்களுக்கு கட்டுரையாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உங்கள் இணையதளத்தின் வாசகர்கள், அவர்கள் உங்கள் இதயஇரத்த நாளங்களைப்போலுள்ளவர்கள். அவர்களை மதிப்பதும்,முன்னிலைப்படுத்துவதும் உங்கள் பெருந்தன்மையும் ,நடுநிலைமையும் கலந்த எண்ணத்தின் எதிரொலியே.(அந்த எண்ணம் உங்களிடம் எதிரொலிக்கு மேயானால் என்னுடைய இந்த கருத்துக்கு கத்திரி போடாமல் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்)

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
=முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
16. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக...!!!
posted by: arabishuaib (Jeddah) on 25 June 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35586

ஜெசிந்தா... கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக...!

என ஜெசிந்தாவில் ஆரம்பித்த கட்டுரை ஆசிரியரின் இடரல் ரிசானா..., ஆயிஷா..., ஜனன்... என தொடர்கிறது. அவர் கேட்டதை, பார்த்ததை, படித்ததை உண்மையோடு உரசி அசலை தராமல் தரிசை தருகிறார்.

அவரினுள் இருக்கும் எழுத்தாற்றல் தரமற்ற, பயனில்லாத ஆக்கங்களைத் தரும் திசையிலிருந்து திருப்பப்பட வேண்டும், இஸ்லாமிய விழுமியத்திற்குள் புகுத்தப்படவேண்டும்.

மறைந்த மன்னரின் மறைவான செய்திகள் கழிக்கப்பட வேண்டுமேயன்றி கிளப்பப்படக்கூடாது. மரணித்த ஒருவரின் அறங்கள் அலசப்பட வேண்டுமேயன்றி, அவரின் குறைகள் குரைக்கப்படக்கூடாது.

###...மக்கட்கு பயண்தரக்கூடிய, நற்பண்பூட்டக்கூடிய ஆக்கங்களை கொடு. அது கட்டுரையாகட்டும் / காவியமாகட்டும். படித்தோம், பயனுற்றோம் எனும் நினைப்பை வாசகன் மனதில் விதை...### - இது கட்டுரை ஆசிரியருக்கு -

###...செய்திகள், ஆக்கங்களை தருவது மட்டும் ஒரு ஊடகத்தின் பொறுப்பல்ல. அதன் மீதும் பாயும் சந்தேகங்கள், தவறுகளை களைவதும் உன் பொறுப்பே...,

...கிடைக்கப்பெறும் ஆக்கம் / கருத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்து தவறிருப்பின் திருத்திக்கொள். தரமிருப்பின் தளமேற்று. தரமிழப்பின் வாசகனுக்கு தெரிவித்துவிடு...### - இது ஊடக ஆசிரியருக்கு -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
17. Re:...இன்னுமா நீங்கள் மொவ்னமா இருப்பது
posted by: செய்யிது அப்துல் பாரி (ரியாத் ) on 25 June 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 35588

மதிப்பிற்குரிய ஷாஜாஹான் காக்கா அவர்களே தாங்கள் சவூதி மன்னரை பற்றி எழுதிய எழுதி வருகிற. காதல் கதைகலை ஒற்றுமொத்தமாக காயல்வெப் ரசிகர்கள் வெருக்கிறார்கள் என்பதை புறியலையா.

அந்நெத கதைக்கு முழுக்கு போட்டுட்டு எல்லா வாசகர்களுக்கும் ஒரு மணம் திருந்திய ஒரு வாசகத்தை காயல்வெப்பின் மூலம் மக்களுக்கு அறிய தந்து விட்டு ஒதுங்கிடலாமே. ஏன் இன்னும் மொவ்னம்.. தங்கள் மொவ்னம் கலையட்டும். உங்களின் தகவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நல்லதை எழுதுங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம்..தவரா எழுதுவதை கன்டிகௌகிறோம்.

நல்லதையே செய்து வரும் காயல்வெப் அட்மின் காரார்களுக்கு இதை சென்சார் பள்ளாமல் போடும்படி தாழ்மையோயௌயுடன் கேட்டுகொள்கிறேன்.

இவண்
ஊர் நலம் விரும்பி.
அப்துல்பாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved