Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:56 AM
திங்கள் | 15 ஜுலை 2024 | துல்ஹஜ் 1810, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2903:5406:4608:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:14
மறைவு18:41மறைவு00:33
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1705:44
உச்சி
12:23
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:56
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 78
#KOTWART0178
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 2, 2014
120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்)
இந்த பக்கம் 3648 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"என் கணவர் என் தோழன். அவர் மிகவும் அன்பானவர், நேர்மையானவர், கண்ணியம் மரியாதை மிக்க ஒரு விசேசமான மனிதர். எங்கள் வாழ்க்கை இன்ப மயமாகவே இருந்தது - அவரது சகோதரரர் திடீரெனெ ஒரு நாள் என்னை மாளிகையை விட்டு வெளியேற்றும் வரை. அவர் சுகவீனராகும் வரை நாங்கள் தொடர்பிலேயே இருந்தோம்."

'எங்கே போகுதோ வானம், அங்கெ போகிறோம் நாமும்' என்று ஓரளவு இன்பமாகவே போய்க்கொண்டிருந்த அவளின் மணவாழ்வில் அன்றொருநாள், 1970 கடைசியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. முடிந்தது தன் வாழ்வு என்று நினைக்குமளவு அது அவளைத் தள்ளியது.

எந்த காரணமும் கூறாது, கணவர் இளவரசர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத்தின் சகோதரர், இளவரசர் துர்கி யினால் இரண்டு மணி நேர அவகாசத்தில் அவள் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டாள். இல்லை துரத்தப்பட்டாள்.

அவளது திருமண அத்தாட்சிப் பத்திரம், நகைகள்,ஆபரணங்கள், புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டன. உடுப்புகள் மற்றும் ஏனைய பொருட்கள் பெய்ரூத்தில் உள்ள சவூதி தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவள் அமெரிக்காவிற்கு அஞ்சா வாசம் செல்லுமாறு பணிக்கப்பட்டாள்.

"மீண்டும் நான் சவூதிக்கு வர முடியாது என்றே நினைத்தேன்". இளவரசர் அவளோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவள் வெளியில் இருப்பதுதான் நல்லது என்று அவரும் கூறினார். ஏன் மாளிகையிலிருந்து வெளி யேற்றப் பட்டீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்ல மறுக்கும் அவர், தகுந்த நேரத்தில் நீதி மன்றத்தில் அதனைக் கூறுவேன் என்கிறார்.

அமெரிக்காவில் நண்பர்கள் இன்றி குடும்பம் இன்றி ஒருமாதிரியான வாழ்கையை வாழ்கையில், தான் மன நோயாளி ஆகிவிடுவோமோ என்று அவள் அஞ்சினாள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன.

இளவரசர் மீண்டும் அவளை அழைத்தார். "அந்த வருடம் அவரை நான் மூன்று முறை சந்தித்தேன். இரு முறைகள் ரியாத்திலும் ஒருமுறை லண்டனிலும். அவர் இன்னும் என்னை விவாகரத்து பண்ணாததால் அவர் மனைவியாகவே நான் செயல் பட்டேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு சலித்தது. நான் பிள்ளை குட்டி என்று குடும்ப வாழ்கையை விரும்பினேன்."

"இறுதியாக அவரை நான் ரியாத்தில் ஜனவரி 1974ல் சந்தித்தேன். இச் சந்திப்பு என் வாழ்கையில் இன்னொரு திருப்பத்தைத் தந்தது. அப்போது அவர் தனது நான்காவது மனைவியை மணந்திருந்தார். சேர்ப்பதும் விலக்குவதும் அவருக்கு வாடிக்கை என்றும் நான் அறிந்திருந்தேன்".

"ஓரளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான், பெய்ரூத்தில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞரைத் திருமணம் செய்யவிரும்புவதாகவும் குழந்தைகள் வேண்டும் என்றும் கூறினேன். அவர் மறுக்கவில்லை. விவாகரத்து என்று எதையும் பேசவில்லை. என்னை கட்டித் தழுவி வாழ்த்தி வழி அனுப்பினார்".

அத்திருமணம் இரண்டு குழந்தைகளைத் தந்ததோடு 5 ஆண்டுகளில் முறிந்தது. இப்போது மீண்டும் அவளும் இளவரசரும் அடிக்கடி பேசினர், தொடர்பு கொண்டனர். இளவரசர் ஐரோப்பாவில் அவளது குழந்தைகளின் படிப்பிற்கு உதவினார்.

1982 ல் இளவரசர் பஹத் மன்னர் பஹத் ஆனார். இக்காலங்களில் அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் குழுவில் ஒருவராக அவளும் சேர்க்கப்பட்டாள்.

"1995 இல் நான் எனது இரு மகள்களுடன் அவரை சந்திப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவர் பக்க வாதத்தால் தாக்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் நான் அவருடன் பேசவே இல்லை. அவர் இறுதி வரை என்னை விவாக ரத்து செய்யாததால் நான் அவர் மனைவி. ஆகவே அவர் தேக ஆரோக்கியம் உள்ளவராக இருந்திருந்தால் அவரது வாக்கைக் காப்பாற்றி எனக்கு சேரவேண்டியதை தந்திருப்பார்" என்கிறார் ஜனன்.

அவர் இப்போது கேட்பது என்ன? £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்.

மன்னர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத், சவூதி அரசின் ஸ்தாபகர் இப்ன் சவூத் அவர்களின் 11 வது மகன், தன் ஆயுள் முழுக்க தனக்கு செலவிற்கு பணம் தருவதாக வாக்களித்திருந்ததாகவும் அவர் நோய்வாய் பட்டபின் அது நிறுத்தப்பட்டதாகவும் அதனைக் கேட்டு லண்டன், அமெரிக்க நீதி மன்றங்களில் போடப்பட்ட வழக்குகள் போதிய முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. மன்னரின் சட்டப்படியான இரண்டாவது மனைவி தானே என்றும் ஆகவே அவரது சொத்தில் 1/16 பங்கு தனக்குத் தரவேண்டும் வேண்டும் என்றும் நீதி மன்றத்தில் அவள் கேட்டாள்.

அவளிடம் திருமண உறுதிப் பத்திரமோ, படங்களோ இல்லை. அவள் தந்த ஆவணங்கள் திருப்தியானவை அல்ல என்று நீதி மன்றம் கூறியது. ஜனன் தனது இரண்டாவது திருமணத்தின் மூலம் மன்னரின் மனைவி என்ற தன் நிலையைக் குழப்பிக் கொண்டாள்.

அதுபற்றிக் கூறும்போது இளவரசர் தன்னை மணந்தது ஷரியா முறையில் என்றும் அடுத்தது சிவில் முறையில் நடந்த திருமணம் அது சட்டப்படி முறிந்தது என்றும், இளவரசர் தனது இறப்பு வரை தன்னை விவாகரத்து செய்யவில்லை ஆகவே தான் அவர் மனைவி என்றும் அவர் மன்னராக இருந்த காலத்தில் அவரது குழுவில் ஒருத்தியாக வெளிநாட்டு பயணங்களில் சென்றதாகவும் மனைவியாக நடந்து கொண்டதாகவும் கூறியது அவள் வழக்கிற்கு வலு சேர்க்கவில்லை.

மாறாக இஸ்லாத்தில் பெண்கள் பலதார மணம் செய்ய அனுமதி இல்லை. இளவரசரிடமிருந்து விவாகரத்து பெறாமல் இவள் அடுத்த திருமணம் செய்தது சட்டப்படி தவறு. அதற்கு அனுமதி கொடுத்த இளவரசர் இவளை மணவிலக்கு செய்யாதது தவறு. அப்படியானால் இவள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாளா என்ற பல கேள்விகள் எழுந்தன. இவை அனைத்தும் நீதி மன்றத்தில் இவள் கோரிக்கைக்கு எதிராக நின்றன. நீதி மன்றத்திற்கு மனச்சாட்சி இல்லை. சாட்சி தான் வேண்டும்.

ஆனாலும் நீதி மன்றத்தில் மன்னருக்கும் அரச குடும்பத்திற்கும் எதிராக அவள் தாக்கல் செய்த விபரங்கள் பாரதூரமானவை. ஆகவே அவைகளை திரும்பப் பெற்று அதனைத் தன்னிடம் தரவேண்டும் என்றும், இனிமேல் அரச குடும்பத்திற்கு அவமானம் தரும் எக்காரியமும் செய்ய மாட்டேன் என்ற உத்திரவாதமும் தரவேண்டும் என்றும் அதற்கு ஈடாக £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளும், செல்சீ பகுதியில் இரண்டு தொடர் மாடி வீடுகளை அவள் இரு மகள் பெயருக்கும் எழுதித் தருவதாகஉம் 2003ம் ஆண்டு இளவரசர் அப்துல் அசீஸ் பின் பஹத், ( மன்னரின் மகன்) லண்டன் டோசெஸ்டெர் ஹோட்டலில் அவளைச் சந்தித்து செய்த ஒப்பந்தப்படி அவள் நடந்ததாகவும், ஆனால் அவர்கள் இன்றுவரை எதுவும் செய்யவில்லை என்று லண்டன் உயர் நீதி மன்றத்தில் அவள் போட்ட வழக்கு ஜூன் 9ம் திகதி அவளுக்கு சாதகமாக முடிந்தது உலகைப் பரபரப்புக்குள்ளாக்கியது.

மன்னருக்கு விதி விலக்கு (state immunity) உண்டு, அதன்படி அவர் மீது பிரிட்டனில் வழக்கு தொடர முடியாது என்ற மன்னர் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. பதவியில் இருப்பவர்க்கு தான் விலக்கு உண்டு. பதவி துறந்தவற்கோ இறந்தவற்கோ அது இல்லை என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு பற்றி ஜனனின் வழக்கறிஞர் மந்தீர் கஉர் விர்தீ (இந்திய பஞ்சாபி பெண்) கூறும்போது " மறைந்த மன்னரின் மகன் இளவரசர் அப்துல் அசீஸ் தான் ஜனனோடு செய்த ஒப்பந்தத்தை ஒப்புக்க்கொள்கிறார். ஆனால் மன்னர் மீது வழக்கு தொடுக்க பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்கு அனுமதி இல்லை என்று மட்டுமே வாதாடினார்".

"பின்பு பதவியில் இருந்து இறந்த மன்னருக்கு எப்படி விதி விலக்கு உண்டோ அதுபோல் அவர் வாரிசுகளுக்கும் உண்டு. ஆகவே இளவரசர் மீதும் வழக்கு போடா முடியாது என்று வாதிட்டார். அவர்களது வாதங்கள் அனைத்துமே இன்று உடைக்கப்பட்டன" என்று கூறினார்.

இந்த விதி விலக்கிற்கு எதிரான தீர்ப்பை மேற்குலகம் பெரிதும் வரவேற்றது. காரணம் அரச குடும்ப இளைஞர்கள் அங்கு பல குற்றச்செயல்களில் தைரியமாக ஈடுபட இது துணையாக நின்றது.

இந்த வழக்கானது - 'ஒப்பந்தப்படி நான் நடந்தேன் ஆனால் அவர்கள் ஒப்பந்தப்படி நடக்கவில்லை. எனக்கு பணம் தரவில்லை, என் குழந்தைகளின் பெயரில் சொத்து மாற்றப்படவில்லை. வாக்குறுதி காப்பாற்றப் படவில்லை. இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றினர்' என்பதேயாகும்.

மறுபுறத்தில்,1974 பிற்பகுதியில் பிறந்த தனது மூத்த மகளுக்கு மன்னர் தந்தையாக இருக்கலாம் என்று அவள் மன்னரின் இரத்த மரபணு DNA கேட்டு நின்றதற்கு அரச குடும்பம் செவி சாய்க்கவில்லை. இப்போது அதுவும் நீதி மன்றத்திற்கு போய் அனுமதிகிடைத்து ஒருவேளை உறுதி செய்யப்பட்டு விட்டால் அவளும் இளவரசியாகி விடுவாள். பெரிய சொத்திற்கும் அதிபதியாகி விடுவாள்.

சவூதி அரேபியாவில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது மன்னர் பஹத்தின் காலத்தில் தான். கட்டிடக் கலை பெரிதாக வளர்ந்தது. அரசும் தனியாரும் பல துறைகளில் முதலீடு செய்து தொழில் வாய்ப்புகளைப் பெருக்கியதால் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டார் வேலை வாய்ப்பு பெற்றனர்.

சில முதலீடுகளுக்கு தான் தரகராக செயலாற்றியதாகவும், வர்த்தகர்களை அறிமுகப் படுத்தியதாகவும் அதற்கெல்லாம் தனக்கு தரகு தரவில்லை, மனைவி என்ற அந்தஸ்தோடு அவை போய்விட்டன என்றும் ஜனன் குறிப்பிடுகிறார். இவர் 1967 முதல் 1995 வரை சுமார் 28 வருடங்கள் மன்னர் பஹத்தோடு தொடர்பில் இருந்திருக்கிறார் என்ற உண்மையை மறுக்க முடியாது.

இதற்கிடையில் ஜனன் மன்னரோடு தனக்கு இருந்த உறவு பற்றியும் அரச குடும்பம் பற்றிய பல தகவல்களை உள்ளடக்கி "The King and I" 'அரசனும் நானும்' என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். பல பதிப்பாளர்கள் அதற்கு விலை பேசும் நேரத்தில் ஹாலிஊட் தயாரிப்பாளர்களும் அதனைப் படமாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இது பற்றி ஜனன் கூறும்போது "12 வருடங்கள் நான் வழக்கோடு போராடினேன். இப்போது தான் சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இளவரசர் அப்துல் அசீஸ் தன் நிலையை இப்போது புரிவார் என்று நினைக்கிறேன். அவர் மேலும் வழக்கை நீடிப்பாராரானால் விபரங்கள் அனைத்தும் புத்தகமாகவும் திரைப்படமாகவும் வருவது தவிர்க்க முடியாததாகிவிடும்."

"அது அரச குடும்பத்தை சங்கடப் படுத்தும் என்பது நான் சொல்லி அவர்கள் அறியவேண்டியதில்லை. நான் பொறுக்கிறேன். மன்னர் அப்துல்லா நல்லவர். அவர் நல்ல முடிவு தருவார் என்று நம்புகிறேன். இல்லாவிடில் நான் பிரிட்டிஷ் மகா ராணியை அணுகி எனக்கு நீதி பெற்றுத் தரும்படிக் கேட்பேன்" என்கிறார்.

இது முதலில் புத்தகமாக ஆங்கிலம், அறபி, ஜப்பானிய மொழிகளில் வெளி வரவும் அதனைத் தொடர்ந்து திரைப்படமாக வரவும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. திரைப்படமாக வந்தால் உலகின் பட்டி தொட்டி எல்லாம் இந்த கதை சென்றடையும். அரச குடும்பத்தின் செல்வாக்கிற்கு இது இழுக்கு தரும். அதனை இளவரசர் தவிர்ப்பாரா - தனது நாணயத்தைக் காப்பாரா, இல்லை, ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்று விட்டுவிடுவாரா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

"என்ன £12 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள்? அது என்ன பெரிய பணமா? அவர்களின் குடும்பத்தின் ஒரு வார துணி சலவை செய்வதற்கான செலவு. அது அவர்களின் பணமும் அல்ல, என் உழைப்பிற்கான ஊதியம்." இப்படிச் சொல்கிறார், தன்னை மறைந்த சவூதி அரேபியாவின் மன்னர் பஹத் பின் அப்துல் அசீஸ் அல் சவூத்தின் இரண்டாவது மனைவி என்று கூறும் லண்டனில் வசிக்கும் ஜனன் ஜோர்ஜ் ஹர்ப்.

ஜனன் கதையல்ல நிஜம்.

(முற்றும்)

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தவிர்த்திருக்கலாம்....
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) on 02 July 2014
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 35734

நானும் எழுத்து மேடையில் ஒரு அங்கம் என்பதால் பிற கட்டுரையாளர்களை விமர்சிக்கக்க் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கால சூழ்நிலை தவிக்க இயலவில்லை! மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் இழிவு படுத்தி உண்மை சம்பவங்களை திரித்து சித்தாந்தங்களை சிதறடித்து சீர்குலைக்கும் முயற்சியில் பன்னெடுங்காலமாக செய்து வருகின்றன.

ஊடகத்தில் வருவது யாவும் உண்மையுமல்ல, உண்மை பல வேலைகளில் ஊடகத்தில் வருவதுமில்லை என்பதற்கு ஓராயிரம் சான்றுகளைத் தர இயலும். மறைந்த சவூதி மன்னரின் சேவைகள் ஏராளம். அரசபரம்பரையில் அநேக மனைவிகள் இருப்பது அவர்களது கலாச்சாரம்! இது விபச்சாரமல்ல.!சரீயத் முறைப்படி சட்டப்பூர்வமான திருமணங்கள் புரிந்து பின்னர் மனவிலக்கு அளித்து அவர்களின் வாழ்நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் படியளந்து வருகின்றனர். இன்னும் பெண்களைப் பெற்றோர்கள் தமே முன் வந்து மன்னர்களுக்கு தம் மகளை தானமாக தருவதும் வழக்கம். இது சரியா? தவறா என்பது எனது வாதமல்ல! சவூதி குறித்த ஆக்கங்களை(சாடல்களை) தொடர்ந்து கட்டுரையாகத் தருவதில் கட்டுரையாளர் குறியாக இருப்பது புலப்படுகிறது.

மொத்தத்தில் மேற்கத்திய ஊடகங்கள் செய்து வரும் உன்னத சேவையை(?) இத் தளத்தின் மூலம் கட்டுரையாளர் சத்தமின்றி முச்சந்தியில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். தவிர்த்திருக்கலாம்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...Need of time
posted by: Muhammad Abubacker (Muscat) on 03 July 2014
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 35756

இவர்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி பார்க்காமல் இருப்பது நலம். சவுதி அரச குடும்பத்தவர்களின் இலட்சணம் யாவரும் அறிந்ததே.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. சவுதி இஸ்லாத்தின் மாதிரி அல்ல
posted by: Muhammadh Abubacker (Muscat) on 03 July 2014
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 35764

காலத்திற்கு ஏற்ற கட்டுரை.

ஹிஜாஜ் என்று புகழ் பெற்ற இடம் சவுதியாக மாறியதன் வரலாற்று பின்னணியை கட்டுரையாளர் கொடுத்தால், இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு தகுதியானவர்களா என்பது மக்களுக்கு புரியும்.

எந்த நாடாக இருந்தாலும் எளியவர்களும், வலியவர்களும்தான் தண்டனைக்கு உள்ளாக்க படுகிறார்கள். ஒரு காலத்தில் தலாக் என்ற வார்த்தையை கேட்க பயப்பட்டவர்கள் கூட இன்று சாதரணமாக சொல்வது சவுதி ஆட்சியாளர்களை பார்த்தோ என்னவோ.

SAUDI IS THE BAD EXAMPLE OF THIS CENTURY. SAUDI AND ITS EMPERORS ARE NOT REPRESENTING ISLAM. IT CAN BE SAY THAT, ITS A LANDSCAPE OCCUPIED BY THE MAJORITY OF MUSLIMS JUST BY NAME


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. கவுரவம் பேணப்பட வேண்டும்
posted by: zubair rahman-AB. (Doha-Qatar) on 03 July 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 35765

அடுத்து எந்த அரேபிய மன்னர் என்று தெரியவில்லை ,

இந்த தளத்தை பெண்களும் பார்க்கிறார்கள் கொஞ்சம் கவுரவமா கட்டுரையை வெளியிடவும் .( தழுவினார் ,தடவினார், உடல் உ ,, அழைத்தார் என்றில்லாமல்)

மேற்க்கத்திய ஊடகம் கக்கிய விஷம் அப்படியே விடாமல் நக்கப்பட்டுள்ளது.

விமர்சன கட்டுரைக்கு கத்தரி இல்லையே!

கருத்து சுதந்திரத்திற்கு கத்தரி வேண்டாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: syed Ibrahim (Makkah) on 04 July 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35777

A BIG BLACK DOT for kayalpatnam.com by publishing this article.

Syed Ibrahim
Makkah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. பழி... பாவம்...!
posted by: arabishuaib (Jeddah) on 06 July 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35813

புண்ணியத்தை அள்ளிக்கட்டும் புனித ரமலானில் புரயோசனமற்ற பலமற்ற பழியான கட்டுரை தொடரை தந்து பாவத்தை வாங்கி கட்டியுள்ளது இவ்வலைதளம்.

ஒருவர் இல்லாதபோது அவரிடமுள்ள குறையை கூறினால் அது புறம். அவரிடமில்லாத குறையை அவர் இல்லாதபோது கூறினால் அது அவதூறு. இவ்விரண்டும் இஸ்லாமில் தடை செய்யப்பட்டவை. இஸ்லாமில் தடை செய்யப்பட இவ்விரண்டையும் இத்தளம் தடையின்றி பரப்பி வருகிறது. கேட்டால் முதல் பகுதியில் "தொடரும்....." என்று போட்டு விட்டார்களாம். ஆகவே படைப்பாளியின் படைப்பை அப்படியே தருகிறார்களாம்.

இத்தளம் அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது. இப்பணியை செவ்வனே செய்ய ஆசிரியக்குழுவில் சிலர் கோலோச்சுவதுபோல் தெரிகிறது.

காயல் வலைதளங்களில் தன்னை விட்டால் ஆளில்லை என்ற களிப்பில் கண்டதை கதையாக்கும் இதுபோன்ற பதிவுகள் வாசகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அல்லாமல் கடும் கண்டனதிற்குமுரியதாகும்.

இறந்தோரின் குறைகளை கூறாமல் அவரின் நிறைகளை கூறுங்கள் என்ற இஸ்லாமிய சிற்றறிவுகூட இல்லாமல் இத்தளம் இயங்குகிறது எனும் தோற்றம் பொய்யானதல்ல.

இத்தளத்தின் மேல் படிந்து விட்ட பாவக்கறையை போக்க இவ்வாக்கத்தை நீக்குவதே புத்தியுள்ளவன் பணி.

தளம் பாவத்தை போக்குமா... அல்லது பாவத்தை சேர்க்குமா...!

>>>...செய்திகளின் நம்பகத்தன்மையில்தான் நீ வாழ்கிறாய். இல்லையேல் நம்பகமின்மையால் நீ வீழ்வாய்...<<<<

இறந்தோரை இகழ வேண்டாம் அதுவும் ரமலானில். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. அனைத்து முஸ்லிம் முவ்மீன்களின் மானத்தையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) on 08 July 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35853

பலபேர்களின் நியாயமான எதிர்ப்புக்கு இடையிலும் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு தங்களின் உள்ள மகிழ்ச்சியை பூர்த்தி செய்த கட்டுரையாளருக்கும், அதை பிரசுரித்து தங்கள் தரத்தின் அடையாளத்தை காட்டிக்கொண்ட இந்த இணயதளத்திற்கும் எத்தனைபேர் எப்படி எழுதினாலும் அது யார் காதிலேயே ஊதிய சங்குக்குச் சமம்தான்!

கலிமா சொல்லிக்கொண்டு களிப்புற இஸ்லாத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எந்த உண்மையான முஸ்லிமும் மர்ஹூமான ஒரு முஸ்லிமின் அந்தரங்க வாழ்கையை அவதூராக்கி ஆதாரமற்றவைகளை கோர்த்து அம்பலத்திற்கு கொண்டுவந்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்க மாட்டான்!.

ஆனால் இக்கட்டுரையோ ஒரு உண்மையான முஸ்லிமின் செயலுக்கு நேர்மாற்றமாக அமைந்து,அதற்க்கு இந்த இணயதளத்தார்களும் எல்லையற்ற மகிழ்விலும்,பூரிப்பிலும் இக்கட்டுரையை பறைசாற்றுகிறார்கள் என்றால் புரிந்து கொள்ளவேண்டும் இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள். முஸ்லிம்களின் பெயர்களைத் தாங்கித்திரியும்..........?

கட்டுரையாளர் தனது இரண்டாவது பாகத்திலாவது அந்த சௌதி மன்னர் மணம் முடித்த திருமண சான்றிதலையோ, அல்லது அந்த வி.....மாதுவுக்கு தன் கைப்பட எழுதிய ஏதாவதொரு கடிதத்தின் புகைப்பட நகலையோ ஆதாரமாக தருவார் என்று எதிர்பார்த்த வர்களுக்கு ஏமாற்றமேதான் மிஞ்சியது! மாறாக இரண்டுபேர் புகைப்படத்தையும் இணைத்து இருவரும் இணைந்து இருப்பது போன்ற கவர்ச்சியான புகைப்படத்தைதான் பார்க்க முடிந்தது! ( இப்புகைபடம்போல் வெவ்வேறு நபர்களை இணைத்து எவரும் செய்யமுடியும். தேவை இருவரின் புகைப்படம் மட்டுமே )

இது எப்படி இருக்கிறதென்றால் கடற்க்கரை ஓரத்தில் ஒரு அழகிய மாளிகை.தோற்றத்தில் ஜொலித்துக்கொண்டு ஜோராக பார்ப்பவர்கள் பரவசமடையும் அளவிற்கு அதன் அமைப்புகள்,அனால் அதன் அருகே சென்று பார்த்து அடித்தளம் எந்த அளவிற்கு வலிமையானது என்று கேட்டால்.அடித்தளமே இல்லை அனால் அதன் அமைப்பைப் பாருங்கள் எவ்வளவு அற்ப்புதமாக வர்ணித்து வர்ணித்து விரசம், கிளுகிளுப்பு, காமஉணர்வு போன்ற கலவைகளால் கட்டப்பட்டிருக்கிறது. அதைப்பார்பீர்களா,அதை விட்டு விட்டு அடித்தளம் கேட்கிறீர்களே என்கின்ற மௌன பாஷை தான் பதிலாக கிடைத்திருக்கிறது. இதற்க்கு அத்தனைக்கும் ஆமாம்சாமி போட்டு அத்துமீறிய ஆனந்தத்தில் அவை அனைத்தையும் தங்கள் இணயதளத்தில் வெளியிட்டு உற்சாகத்தின் உச்சாணியில் ஊஞ்சலாடுகிறது தரமுடைய இணையத்தளம் எங்கள்தளம் தான் என்று கூறிக்கொள்ளும் இந்த இணயதளம்!

அந்த அழகு மாளிகையின் மிக அருகில் சென்று பார்த்தால் அத்தனையும் மணலால் எழுப்பப்பட்டு ஒரு மண் மாளிகை ஒரு கடல் அலை கால் உதைக்குக் கூட தாங்காத கட்டிடம்!

எனக்கு பலநாட்கள் ஒரு சந்தேகம் பல எழுத்தார்கள் தங்கள் எழுத்துக்கோர்வையால் அதை எடுத்துவைக்கும் வசீகரவார்த்தைகளால் பலரை விழ வைக்கக்காரணம் அவர்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த அத்தனைச் சம்பவங்களையும் அழகாக கோர்த்து அதை கட்டுரையாக மெருகூட்டி வெளிசந்தைக்கு விற்கிறார்கள் என்பதே!

அப்படி விற்கப்படும் கட்டுரைகளை அக்கட்டுரை தரதிற்கேற்ப தங்கள் தரத்தையும் தாரகமந்திரச்செயளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இணயதளம் இதய மகிவுடன் வெளியிட்டு இரட்டிப்பு சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கும்பொழுது,

இவ்வையகமே வெகுண்டு கொதித்தெழுந்தாலும் அக்கொதிப்பின் வீரியம் கடலில் கலந்த கடுகளவு கசபபுணர்வுக்குத்தான் சமம் இவர்களுக்கு!

அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் அவனுடைய மார்க்கத்தை மருவிய மாந்தர்களின் மானத்தையும், மரியாதையையும் கவ்ருவத்தையும் ,கண்ணியத்தையும்!

என் மனதில் உள்ளதை கொட்டி விட்டேன்!அதை அப்படியே வாசகர்களுக்கு கொட்டுவதும் வெட்டுவதும் உங்கள் நடுநிலை நெஞ்ச நீதிபதியின் நிலைப்பாட்டைப் பொருத்துதான்! அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!

ஆதங்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: s.s.md meerasahib (TVM) on 08 July 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35855

புனித ரமழானில் புண்ணியம் செய்வீர்கள் (வாபஸ் பெறுவீர்கள்) என்று நினைத்தேன். மாறாக பாவமும், சாபமும் பெற்று இருக்கிறது இந்த கட்டுரை.

அன்பு அட்மின் அவர்களே...... எப்படி கட்டுரையை வெளியிடீர்களோ...... அது போல கமாண்டுகளும் கட்டிங்கு இல்லாமல் வெளியிடனும். உப்பு திண்டவன் தண்ணீர் குடிச்சிதான் ஆகவேண்டும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Journalistic Standards
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 09 July 2014
IP: 103.*.*.* India | Comment Reference Number: 35863

இந்த கட்டுரை "தி ஹிந்து" அல்லது நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கையில் வெளி வருமா? வராது.

இந்த கட்டுரை தமிழகத்தை அல்லது காயல்பட்டினத்தை சேர்ந்த ஒருவரை பற்றி இருந்தால் வெளி வருமா? வராது.

இந்த கட்டுரையால் இவ்வுலக அல்லது மறுவுலக பலன்கள் ஏதாவது உண்டா? இல்லை.

I THINK IT IS TIME FOR EDITORIAL BOARD TO DRAW SOME GUIDELINES ON ARTICLES.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...கண்டனம்
posted by: Mrs.Hameed (chennai) on 10 July 2014
IP: 182.*.*.* India | Comment Reference Number: 35879

மிகத் தரம் தாழ்ந்த ஒரு பதிவு, இந்த இணைய தளம் இப்படியான கட்டுரைகளை பிரசுரிப்பதை தவிர்த்திருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...
posted by: Hyder (Riyadh) on 11 July 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35885

அன்பின் அட்மின்,

புனித மிகு ரமழான் மாதத்தில் யாருக்குமே உபயோகமே இல்லாத , மேற்குலகம் ஆங்கிலத்தில் வாந்திஎடுத்ததை தமிழில் இந்த வலைதளத்தில் எப்படி அனுமதித்தீர்கள்?

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கும் பொழுது இறையடி சேர்ந்துவிட்ட ஒருவரை, அதுவும் ஒரு நாட்டின் மன்னராக இருந்தவரை, அந்த நாட்டைப்பற்றி எழுதப்படும் தவறான செய்திகள் முஸ்லிம்கள் மீதுள்ள அபிப்பிராயகமாகக்கருதப்படும் என்றிருக்கும் நிலையில், தயவு செய்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய வாந்திகளை அனுமதிக்காதீர்கள்.

உங்களுடைய வலைதளத்தினை வாசிப்போரின் எண்ணிக்கையை இத்தகைய கட்டுரைகள் அதிகரிக்ககூஉம் என்று நீங்கள் கருதினால் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

இந்த செய்தியால் யாருக்கு என்ன பயன்?

தயவு செய்து உடனடியாக இந்த கட்டுரையை அப்புறப்ப்டுத்தமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்

ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: Administrator (Chennai) on 12 July 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35889

இக்கட்டுரையின் இரு பாகங்கள் குறித்தும் பதிவாகியுள்ள வாசகர் கருத்துக்கள் அனைத்தும் பெறப்பட்டன. காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகள் உட்பட அனைத்து ஆக்கங்களையும் வெளியிடுவதற்கு முன், ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்த, புதிய வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு இணையதள நிர்வாகம் சார்பாக அறியத் தருகிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved