Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:05:37 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 89
#KOTWART0189
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 30, 2014
எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
இந்த பக்கம் 2652 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாட்டில் நலிவடைந்த, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மக்களை ஏமாற்றி தங்களைக் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிக்கொண்டு, மழைக் காலத்தில் முளைக்கும் காளான்கள் போல போலி பகவான்கள் உருவாகுவதற்கு அரசுகளின் விஞ்ஞான முறையான அணுகுமுறை குறைவாக இருப்பதே காரணம் என்று சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஒரு நாட்டின் உயர் பதவி வகித்த ஜனாதிபயான அப்துல் கலாம், உச்சநீதி மன்ற நீதிபதி பகவதி போன்றோர் புட்டபர்த்தி சாமியார் ஆசிரமம் சென்று சாமியார் அரியணையில் அமர்ந்திருக்கும் போது முக்கிய பிரமுகர்கள் அவர்முன் தரையில் பயபக்தியுடன் அமர்ந்து இருப்பது போன்ற படங்களும், மத்திய- மாநில மந்திரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களிடம் சென்று ஆசி பெறுவதும் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காட்டுகின்றன. அந்த பகவான்கள் ஆசிரமங்களில் சில சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது அப்படிப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் மக்களிடையே தவறான பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. சாதாரண பாமரனும் முக்கிய பிரமுகர்களே அப்படிப்பட்ட பகவான்களை தரிசனம் செய்யும்போது அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி அவனும் அந்த சாமியார்களுக்கு அடிமையாகி விடுகிறான். அந்த பகவான்களும் சாமானியர்களிடம் இருப்பதை எல்லாம் கறந்து படாடோபமாக வாழ்வதோடு சில சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.

1) முன்னாள் பிரதம மந்திரிகள் நரசிம்மராவ் மற்றும் அவரது மந்திரி சகாக்கள் மற்றும் முன்னாள் பிரதமர் சந்திர சேகர் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமாக சந்திரசாமி என்ற சாமியார் இருந்ததை பலர் அறிந்து இருப்பீர்கள். 1994ஆம் ஆண்டு சந்திராசாமி பிறந்த தின விழாவிற்கு நரசிம்மராவ் மற்றும் பெரும்பாலான மத்திய மந்திரிகள் அவருடைய ஆசிரமத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு அவர் அரசு பவர் புரோக்கராகி ஆயுத பேர ஊழலில் ‘அதான் கஸ்ரோகிக்கு’ உதவி செய்ததாகவும், லண்டன் தொழில் அதிபர் ‘பதக்’ இந்தியாவில் தொழில் சம்பந்தமாக சந்திராசாமியை அணுகி ரூ 6/ கோடி கையூட்டு கொடுத்ததாகவும் அப்போது புகார் கொடுத்து, சந்திராசாமி ஜெயிலுக்குச் சென்றதும், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதும் உங்கள் பலருக்குத் தெரிந்து இருக்கும்.

2) மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் என்ற இடத்தில் ஆசிரம் நடத்தி கற்பழிப்பு, வன்கொடுமை மூலம் 170 பேர் காணாமல் போனது குறித்தக் குற்றச் சாட்டுக்கு ஆளான ‘கிரிப்பால் மகாராஜ்’ என்ற பகவான் அந்த வழக்குகள் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை என்றுக் கேள்விப்பட்டதும் தலைமறைவானவர் இன்று வரை என்ன ஆனார் என்று தெரியவில்லை.

3) இலங்கை அகதி 'பிரேம்குமார்' என்ற பிரேமானந்தா திருச்சி-புதுக்கோட்டை எல்லை அருகில் உள்ள விராலிமலை ஓரம் ஆசிரமம் அமைத்து, ஆதரவு தேடி வந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், அதனைப் பார்த்த ஒரு இளைஞரை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்போது ஜெயிலில் இறந்தது அனைவரும் அறிந்ததே! அதோடு மட்டுமல்லாது தமிழக பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் அவரிடம் ஆசி வாங்கியது பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டின.

4) 1980-1984 ஆண்டுகளில் பஞ்சாபிற்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோஷமிட்டு, சீக்கியர் பொற்கோவில் வளாகத்தினையும் கோட்டையாக அமைத்து, காலிஸ்தான் என்ற படையினை அமைத்துப் இந்திய ராணுவத்தினையே எதிர்த்துப் போரிட்டு மடிந்த, 'பிந்தரன்வாலா' போன்றோரையும் சில சீக்கிய மக்கள் தியாகி என்று போற்றுகின்றனர். சீக்கிய மத குரு 'லோங்கோவால்' கூட ஆரம்பத்தில் பிந்தரன்வாலாவை ஒரு 'ஸ்கௌன்றல்' (போக்கிரி) என்றவர் பிற்காலத்தில் அவரே 'பிந்தரன்வாலே ஒரு 'ஞானி' என்று அழைத்தார் என்றால் பாருங்களேன்.

5) பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் 'தேரா சச்சா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்ற கோசத்தை எழுப்பி மக்களைக் கவர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைக்காக வாளும், துப்பாக்கியும் ஏந்தி மற்ற சீக்கியர்களுடன் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்டையிட்டது நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தும், பத்திரிக்கையில் படித்தும் இருப்பீர்கள். அதன் தலைவர் 'குர்மீத்' பத்திரிக்கையாளர் ராமச்சந்ராவினை கொலை செய்தது சம்பந்தமாக, 'தெகல்கா மற்றும் 'இந்தியா டி.வி.' சேகரித்த ரகசிய தகவல்கள் மூலம் வெளியிட்டது.

6) 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரபரப்பாக பேசப் பட்டவர் 'ராம்பால்' என்ற பகவான். இவர் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரி. ஹரியானா மாநிலம் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி, முறைகேட்டால் பணிநீக்கம் செய்யப்பட்டவர். ஹிசார் என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியில்லாத ஆசிரமம், 30 உயரம் கொண்ட கோட்டை போன்ற சுற்றுச்சுவர் எழுப்பி 'ராம்-ரஹீம்' என்ற கோசத்தின் மூலம் பாமரர்களை ஏமாற்றி ஹரியானா அரசுக்கே ஒரு சவாலாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் அவர் மீது ஒரு கொலை வழக்கு நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருப்பதும், உயர் நீதி மன்றம் அவரை ஆஜராகும்படி 48 தடவை உத்திரவிட்டும் அவர் ஆஜராகாததால் அவரை ஆஜர் படுத்தும் படி காவலர்களுக்கு கட்டளை இட்டும், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அதனை துப்பாக்கி, பெட்ரோல் எறிகுண்டுகள் மூலம் எதிர்கொண்டு, பின்பு ஆறு பேர் இறப்பிற்குப் பின்பு அவரை கைது செய்ய முடிந்தது என்றால் என்ன தைரியம் என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அந்த பகவானிடம் ஆசி பெற்றதனால் அவர்கள் காப்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில் அந்த பகவானின் கமாண்டோக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

7) புது டெல்லி அருகில் ரிசர்வ் பாரஸ்ட் இடத்தில் ஆக்கிரமித்து ஆசிரம் அமைத்து பக்தர்களைக் கவர்ந்த 72 வயது 'ஆசாராம் பாப்பு' என்ற பகவான் தற்போது கற்பழிப்புக் குற்றச் சாட்டிற்கு ஆளாகி சிறையில் இருக்கிறார். அப்படி ஆக்கிரமித்த இடத்தினை இடிக்கும்படி, 'தேசிய பசுமை ஆணையம்' கட்டளையிட்டும் இன்றும் கூட இடிக்கவில்லை.

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றது என்றால் நலிவடைந்த பிற்பட்ட மக்கள் ஏழ்மையில் வாடும்போது ஏதாவது ஒரு வழி மூலம் ஏழ்மைக்கு விடிவெள்ளி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அப்படிப்பட்ட பகவாங்களிடம் ஆசி பெற வரும்போது நாமும் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி உள்ளது என்றால் மிகையாகாது.

21.11.2014 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசும்போது, 'இந்திய நாட்டில் உள்ள விநாயகர் என்ற கணேச பெருமான் தலை தும்பிக்கையுடன் கொண்ட யானை முகம் மனித உருவத்தில் உள்ளதால், அந்தக் காலத்தே மனித உடலில் யானை முகத்தினைப் பொருத்தும் பிளாஸ்டிக் சர்ஜரி விஞ்ஞானிகள் இருந்ததினால்தான் அதுபோன்ற சாதனை நிகழ்த்த முடிந்திருக்கின்றது' என்று சொன்னதைச் சுட்டிக்காட்டி, மத நம்பிக்கை வேறு, விஞ்ஞானம் வேறு, அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையை விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசியது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று ஹிந்துப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது எதனை காட்டுகின்றது என்றால், பதவியில் இருப்பவர்களும், படித்தவர்களும் பாமர மக்களுக்குப் அறிவுப் பூர்வமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்கள் மோசடி பகவான்களிடம் தஞ்சம் அடைவதைத் தடுக்க முடியாதல்லவா?

மோசடி பகவான்கள் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா மதத்திலும், ஏன் சில சீர்திருத்த மார்க்கங்களிலும் இருக்கின்றார்கள். அவர்கள்தான் பில்லி, சூனியம், காற்று, கருப்பு, அதனை விரட்ட தாயத்து, பல நிறங்களில் கயிறுகள் விற்றும், பேய் விரட்டும் தந்திரங்கள் கையாண்டும், களிப்பு எடுக்க வேண்டும், ஆவி விரட்ட வேண்டியும் என்ற புருடா விட்டும், நரபலி கொடுக்கச் சொல்லியும் இளகிய மனங்களை மேலும் பலவீனப்படுத்தி, நாலு காசு சம்பாதித்து தங்களை சீமான்களாக மேம்படுத்தி, நம்பிய மக்களை மூடர்களாக்கும் பகவான்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்கள் முகத்திரையைக் கிழிப்பது ஒவ்வொரு படித்த, பகுத்தறிவாளர் கடமையல்லவா?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆதவனுக்கு திரையிட நினைக்கும் அறிவாளிகள்.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 30 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38318

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள்நிறைக .

கெட்சப்பும், வினீகரும் காடியென்பதையறியாது அதையேமுக்கிய உணவாகஉண்ணும் காலமாகிவிட்டது இன்றையஉலகம், அது சிறுனீரகத்திற்கும் உடலுக்கும் விரைவிலேயே கேடுவிளைவிக்குமென்று மருத்துவ உலகம் எவ்வளவு அறிவுறுத்தல்தந்தும் அந்தவேதிப்பொருள் உணவுகளுக்கு பேதைநாவை அடிமையாக்கிவைத்திருப்போர்ஏராளம்.

அதுபோன்று ஆசிரியர்அவர்கள் சொல்லுவதுபோல் நம் நாட்டின்நோபல்பரிசுவென்ற அறிவியலறிஞர் முன்னாள்ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தனது வாழ்க்கைச்சரிதம்அக்னிச்சிறகில் ஜோதிடம்ஒருகலையே அதையே உண்மையென்று நம்பமுடியாதென்று சொல்லியிருக்கிறார். அதேமனிதர் ஆசிரியரவர்கள் சொல்லியதுபோல் இன்னொருமனிதரின் ஆரூட அறிவுரைக்காக அமர்ந்திருந்தாரென்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒருகையில் விஞ்ஞாணத்தையும் மறுகையில் அஞ்ஞாணத்தையும் பிடித்துக்கொண்டு, அதாவது ஒரே வண்டியில்நல்லகுதிரையுடன் சண்டிக்கிதிரையைப்பொருத்தி எந்தஇலக்கை அடைந்திடமுடியும்?

இறைவன்தனது திருமறையில் அதிகமாகசொல்லியிருக்கும் வசனங்களில் சிந்திப்பவர்களுக்கு வெற்றியுண்டுஎன்ற வசனத்தையும் அதிகமாகவேதந்திருக்கிறான். அதைசிந்திப்பதற்கில்லையா? க்ஹைர்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?
posted by: mackie noohuthambi (Kayalpatnam) on 30 November 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38321

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...] இது மலைக்கள்ளன் என்ற திரைப் படத்தில் வரும் பாடல். நான் பள்ளிப் பருவத்தில் அசைபோட்டபாடல்.

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்பதற்காக. பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷம் ஆகி விடக் கூடாது என்பதற்காக ...இது கலைஞரின் கைவண்ணத்தில் உருவான பராசக்தி வசனம். அந்த புத்தகத்தையே பாராயணம் செய்தேன்

.கொள்ளையடிப்போர் வள்ளலைபோலே கோயிலை இடிப்போர் சாமியைபோலே வாழ்கின்றார். ஊழல் செய்தவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே வாழ்கின்றார்...நீங்கள் அதனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்...இந்த பாடல் இன்றும் எனது அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் நடந்தது என்ன நடப்பது என்ன யார் யார் எல்லாம் இந்த சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்களோ - மூட நம்பிக்கைகளை ஒழிக்க புறப்பட்டார்களோ அவர்களே சாமியார்களாக கடவுள்களாக சித்தரிக்கப் பட்டு வணக்கத்துக்குரியவர்களாக உரு மாற்றம் பெற்று சிலைகளாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படுகிறார்கள். அமைச்சர்களாக வலம் வருபவர்கள் கோயிலிலே பரிவட்டம் கட்டப்பட்டு அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு தேங்காய் உடைத்துக் கொண்டு அங்க பிரதட்சணம் செய்துகொண்டு அலைகிறார்கள்.

சாய் பாபா அவர்கள் தனது கையை நீட்டி மந்திரத்தால் மோதிரங்கள் வரவழைத்து திமுக மந்திரிகளுக்கு கொடுத்தார். முதல்வர் கலைஞருக்கு கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், கலைஞர் அவர்கள் தன் விரலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்த அல்லது அவர் உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்துள்ளார். அவர் அதைதான் பெரிதாக மதிப்பார். அதனால் நான் அவருக்கு மோதிரம் வரவழைத்து கொடுக்கவில்லை என்று சொன்னார். ஜோதிடம் குறி சொல்வது எல்லாம் சுத்த பொய் - ஆல மரத்தடியில் கிளியை வைத்து ஜோசியம் சொல்பவன் அவனது ஜாதகத்தையே கணிக்க முடியவில்லை.மற்றவர்கள் ஜாதகத்தை எப்படி கணிக்க முடியும்.

பூசாரி உன் ஜாதகத்தை கணித்துக் கொள். யார் அம்பாளா பேசுகிறது... அம்பாள் எந்த காலத்தில் பேசுவாள் அறிவு கெட்டவனே. இதை சொன்னவர் அன்றைய உதயசூரியனின் நாயகன். ஆனால் அவரது தொலைக்காட்சிகள் நாளிதழ்கள் இன்று 12 ராசிகளுக்கும் அந்த ராசிக் கார்களுக்கும் இன்று என்ன நடக்கும் என்று தெளிவாக சொல்கிறது. இதற்கு சமீபத்தில் இளைஞர்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் புதியதலைமுறை தொலைக் காட்சியும் தப்ப வில்லை.

திராவிட இயக்கம் இந்த நாட்டில் தலை எடுத்து தந்தை பெரியார் இந்த மூட நம்பிக்கைகளை களை எடுத்து ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அவர் வழி நடக்க ஆரம்பித்த தம்பிமார்கள் - பெரியார் பாஷையில் சொல்வதானால் - கண்ணீர்த்துளிகள் - அவரது சிந்தைகளை சிந்தனைகளை துவம்சம் செய்தார்கள். இன்றும்கூட அவர் பெயரால் இயங்கும் கழகங்கள் - பெரியார் திராவிட கழகம் - திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர பெரியாரின் சிந்தனைகளை குழிதோண்டி புதைத்து, சாடைமாடையாக அந்த கொள்கையை சொல்லிக் கொண்டிருந்த அண்ணாவையும் கடற்கரையில் ஆழ புதைத்துவிட்டு, "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்று எழுதி வைத்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள்.

1436 வருடங்களுக்கு முன் ஜோதிடம் குறிபார்த்தல் மது அருந்துதல் நாள் நட்சத்திரம் பார்த்தல் என்ற மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணி அடித்த நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லிம்களாகிய நாம் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இப்படியே விரிந்து கொண்டு செல்லும் வானம் போல் அலைகளை சுமந்து வரும் ஆழ கடல்போல் நமது ஒவ்வொரு செயலும் இருக்கின்றன.

பிரதமர் மோடி என்ன அவதாரமா, அவர் சொல்வது என்ன வேத வாக்கா - இந்த நாட்டை 14 வருடங்கள் ஒரு ஜோடி செருப்பு ஆண்டிருக்கிறது என்று சொல்லும் ராமாயணம் - தன் மனைவியையே சந்தேகப்பட்டு தீயில் இறங்கி வலம் வர சொன்ன கடவுள் என்று அவர்களால் வணங்கப்படும் ஸ்ரீ ராமனின் கோயில்தான் பாராளுமன்றம் என்று சொல்பவர்தானே. 400 வருடங்கள் பழமையான இறை இல்லத்தை ஒரே நாளில் தகர்த்து எரிந்து விட்டு அங்கே ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் RSS இன் மறுபதிப்புதானே அவர்.

இந்த கட்டுரையின் நாயகன் சகோதரர் முஹம்மது அலி அவர்களிடம் தேங்கி கிடக்கும் உள்ளக் குமுறல்கள் இன்னும் எத்தனையோ இருக்கும் அவற்றை எழுதுங்கள்.

இந்த சமுதாயம் உங்களையும் கேள்வி கேட்கும்.... காவல் துறையில் நீங்கள் பணியாற்றிய காலங்களிலே நடந்த எத்தனை மூட கொள்கைகளுக்கு நீங்கள் சமாதி கட்டினீர்கள் எந்த மூட பழக்கங்களை ஒழிக்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தினீர்கள்...

நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்....

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினால் உயர் அதிகாரி முஹம்மது அலி அவர்களும் இந்த சாமான்யன் மக்கி நூஹுதம்பியும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்களாகவே இருப்போம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக. இந்த தீய பழக்க வழக்கங்களிருந்து முற்றாக நீங்கி இருக்க நமக்கு தௌபீக் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Mohamed Ali (Chennai) on 01 December 2014
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38325

அன்பு சகோதரர்கள் சேக் அப்துல் காதர் மற்றும் மக்கி நூஹு முகமது அவர்களுடைய கருத்துக்களுக்கு என் நன்றி.

மக்கி நூஹு அவர்கள் நீண்ட ஒரு உபயோகமான கருத்தினை தெரிவித்ததினைத் தொடர்ந்து என் பதிலை மூன்று எடுத்துக் காட்டுதல் மூலம் சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1) ஈசா நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் விபச்சாரியாக உள்ளால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல தயாராக இருப்பதாக சொன்னார்கள் சிலர். அப்போது ஈசா(ஸல்) அவர்களும், 'அது சரி, உங்களில் அவளிடம் சுகம் அனுபவிக்காதவர்கள் யாராவது இருந்தால் கல்லினை எறியுங்கள்' என்றார்களாம். ஆனால் ஒருவரும் கல் எறிய முன் வரவில்லை'.

2) இரும்புப் பெண்மணி என்ற புகழ் கொண்ட மறைந்த இந்திரா காந்தி பதவியில் இருக்கும்போது, 'முந்திரா ஊழல்' குற்றச் சாட்டிற்கு ஆளானார். அப்போது ஒரு நிருபர் இந்திரா காந்தியிடம், 'நீங்கள் முந்திரா' ஊழல் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றார். அதற்கு இந்திரா காந்தி , 'ஊழல் என்பது இன்டர்நேஷனல் பினோமேனா' அதாவது, சர்வதேச அரசியல் நடவடிக்கையில் ஒன்று' என்றார்.

3) தமிழ் பேசும் மக்களிடையே கடந்த எழுபது வருடங்களாக அதிகம் போற்றக் கூடிய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரிடம் ஒரு தடவை ஒரு நிருபர் அவருக்கும் ஒரு நடிகைக்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது அண்ணா அவர்கள், 'அவள் படிதாண்டா பத்தினியுமல்ல, நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்றார்.

ஆகவே நானும் ஒரு உத்தமனோ அல்லது புனிதனோ அல்ல. மாறாக ஈமான் என்ற கொள்கையினை கட்டியாகப் பிடித்து கொண்டிருக்கின்றேன் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அரசியல் பந்தாட்டத்தில் சிக்கித் தவித்த காலம் உண்டு ஒரு அதிகாரி என்று இருக்கும்போது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...நன்றி...
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 03 December 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38331

சகோதரர் பெரியவர் முஹம்மது அலி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இணையதளங்களில் சில கட்டுரைகள் வெளிவரும்போது அதை எழுதியவர் அதற்கு எதிர்மறையான அல்லது நேர்மறையான கருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வருகிறதா என்ற எதிர்பார்ப்புக்களுடன் இருப்பார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்போல் அவை விமர்சனமாக வெளிவரும்போது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறையபேருக்கு இருப்பதில்லை. இப்படி நம்மை குறை கூறி எழுதியிருக்கிறானே என்று விசனப் படுவார்கள். விமர்சனம் விசனமாக மாறி விடுகிறது.

ஆனால் ஒரு பெரிய அதிகாரியாக இருந்து வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் படித்து பார்த்து பக்குவப்பட்டுள்ள உங்கள் பதில் என்னை நிலை குலைய செய்தது. தவறு செய்து விட்டேனோ ஏதும் உங்கள் உள்ளம் புண்படும்படி ஏதும் தவறாக எழுதிவிட்டேனோ என்று மீண்டும் நான் எழுதிய விமர்சனத்தை மீள படித்துப் பார்த்தேன்.

"மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசாதீர்கள் சிலர் புரிந்து கொள்வார்கள் சிலர் பிரிந்து செல்வார்கள்".என்று எங்கோ படித்தது ஞாபகம். ஆனால் உங்களுடன் மனதில் பட்டதை எல்லாம் தைரியமாக பேசலாம் போல் தெரிகிறது. தெளிந்த நீரோடை போல உங்கள் பதில்கள் தக்க சான்றுகளுடன் வருகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

உங்கள் கட்டுரைகள் மேலும் வெளி வரவேண்டும். நான் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். மனசுக்கு வயசில்லை என்பார்கள்.

"நோய் இல்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்" என்று ஒரு பாடல் என் நினைவுக்கு வருகிறது. காதல் என்பது பாலின காதல் மட்டுமல்ல. இறைவன் மீது அடியானுக்கு காதல். நபிகள் நாயகம் அவர்கள் மீது புர்தா ஷரீபின் நாயகர் பூஸிரி இமாம் அவர்களுக்கு காதல். உங்கள் கட்டுரைகள் மீது எனக்கு காதல்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved