Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:56:22 AM
புதன் | 3 மார்ச் 2021 | துல்ஹஜ் 580, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1912:3515:5418:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:30Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:22
மறைவு18:29மறைவு09:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2005:4406:09
உச்சி
12:29
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1419:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 96
#KOTWART0196
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 24, 2015
பம்பாயில் 36 வயது மகனுக்கு மாப்பிள்ளை தேடும் தாயார்!
இந்த பக்கம் 4725 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

என்ன, மேலே உள்ள தலைப்பில் ஏதோ எழுத்துப் பிழை இருப்பதாகத்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி இருந்தால் அது இயற்கை செய்தி. அதற்காக ஒரு கட்டுரை பிறக்காது. நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி.

அது வைதீகத்தில் ஊறிய பிராமணக் குடும்பம். அசல் தமிழர்களா அல்லது மலையாளத் தமிழர்களா, இல்லை தமிழ் பேசும் மலையாளிகளா என்று புரியவில்லை.

தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று, அன்று எம்.ஜீ.ஆர். நாயகனாக நடித்த படம் ஒன்று வந்தது. இன்று இங்கு தாய் பத்மா அய்யர் தனது 36 வயது மகனுக்கு தாலி கட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார். மனைவி வேண்டும் என்று கேட்கவில்லை. அது பெண்பாலாகிவிடும். இங்கு இவர் ஒருபால் உறவுக்காரர். ஆகவே ஆண் கழுதைக்கு கணவணாக இன்னொரு ஆண் கழுதை தான் தேவை. பெட்டைக் கழுதை உதவாது.

வாட்ட சாட்டமாக 5 அடி 11 அங்குலம் உயரம் இருக்கும் ஹரிஷ் அய்யர் நிச்சயமாக ஓர் ஆணழகன் தான். பார்பதற்கு ஒரு சினிமா நடிகர் போலவே இருக்கிறார். பாலிவுட்டிற்கோ இல்லை கோலிவுட்டிற்கோ போயிருக்கலாம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்.இவருக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேண்டுமாம்? 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடையில் தான் இவர் தெரிவாம். 'பாலிவுட் காரன் மாதிரி அவன் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று சிரித்துக்கொண்டே இவர் சொன்னார். ஆசையைப் பாருங்கள் ஆசையை.

மாப்பிள்ளை நல்ல தொழிலில் உள்ளவராகவும், மிருகங்களை நேசிப்பவராகவும், சைவ உணவு உண்பவராகவும் இருக்க வேண்டுமாம். பால் தயிர் சாப்பிடக் கூடாது. ஜாதி முக்கியமில்லை இருந்தாலும் பிராமணர் விரும்பத்தக்கதாம். ஐயர் பிள்ளைதான் வேண்டுமென்று பாட்டி சொல்லியதால், பாட்டி சொல்லை தட்டாதே என்பதற்கு ஒப்ப அவ்வார்த்தையை சேர்த்ததாகச் சொல்லுகிறார் ஹரிஷ்.

இவரது தமிழ் பேச்சு அவ்வளவு சரளமாக இல்லை. ஆனால் பத்மாவின் நாவில் பிராமண வாடை அதிகம் இருந்தாலும் பேச்சு பரவாயில்லை எனலாம்.

விளம்பரம் ஆங்கிலப் பத்திரிகையில் மகனுக்கு Groom - மணமகன் தேவை என்றுதான் கொடுத்துள்ளார் தாய் பத்மா. அப்படியானால் முறைப்படி ஹரிஷ் மனைவியாகிறார். 25 வயது வாலிபனுக்கு 36 வயது மனைவி பொருந்துமா என்று சிந்திக்கவோ சிரிக்கவோ வேண்டாம். இவர்கள் தங்களுக்கு எல்லாம் பொருந்துவதாகவே நினைக்கிறார்கள். விளம்பரத்தில் தாயின் கணணி முகவரியும் தொலைபேசி இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருபால் உறவு இரு பெண்களை விட, ஒருபால் உறவு இரு ஆண்கள் சேர்ந்து குடும்பம் நடத்துவது கஷ்டமான காரியம். இவர்களது தாம்பத்தியம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. காலம் கலி காலம் என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.

இது பற்றி தாய் பத்மா கூறும்போது "அவனுக்கு வயது 36 ஆகிறது. திருமணம் வேண்டாம் நாட்டமில்லை என்றே காலத்தை ஓட்டினான். பின்புதான் அவன் எந்த திசையில் போகிறான் என்பதை அறிய முடிந்தது. அது அதிர்ச்சியைத் தந்தாலும் எதிர்காலத்தில் அவனைப் பார்க்க ஓர் துணை வேண்டுமே என்பதற்காக நான் இம்முயற்சியில் இறங்கினேன்" என்றார் அவர்.

தகப்பனார் மற்றும் உங்கள் உறவினர்கள் இதற்கு ஒத்துக்கொண்டார்களா என்று தாயிடம் கேட்டபோது, உறவினர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு அது பற்றிக் கவலை இல்லை. தகப்பனார் ஒத்துக்கொண்டார் என்றோ ஒத்துக்கொள்ளவில்லை என்றோ சொல்ல முடியாது. அவர் எங்கள் பேச்சைக் கேட்பார். வேறு வழியில்லையே, என்றார் அவர்.வீடுவரை உறவு என்று இருக்கும் இந்த உறவுகள் பத்மா நினைப்பது போல் கடைசி வரை இருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவிலேயே முதன் முதலாக இது போன்ற தேவைக்கு வெளியான பத்திரிகை விளம்பரம் இதுதான். மூன்று பிரபல பத்திரிகைகள் இந்த விளம்பரத்தை மறுத்தனவாம் சட்டப் பிரச்சினை வரும் என்று.

மணப்பெண், (வேறு எந்த வார்த்தையால் ஹரிஷை அழைப்பது என்று புரியவில்லை) மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவர் என்பதா இல்லை அவள் என்பதா என்று தலை சுற்றுகிறது. அவரது விளம்பரத்திற்கு ஒரே நாளில் பலர் தொடர்பு கொண்டனர்.

"அம்மாவின் விளம்பரத்திற்கு நிறைய பேர் பதில் தந்துள்ளார்கள். அவர்களில் அம்மா தேர்ந்தெடுத்து தரும் 'மாப்பிள்ளைகளை' நான் சந்தித்து பேசுவேன். பின்பு அம்மாவிடம் என் தெரிவைச் சொல்லுவேன்" என்கிறார் அவர். இவரது சுயம்வரத்திற்கு எத்தனை இளவரசர்கள் வருவார்கள் என்று தெரியவில்லை.

சென்ற மாதம் அமெரிக்காவில் இரண்டு இந்திய இளைஞர்கள் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வேதம் ஓதி திருமணம் செய்தனர். அது போன்று உங்கள் திருமணம் இருக்குமா என்று மணப்பெண்ணிடம் அதாவது ஹரிஷிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இராது என்று சிரித்தபடி பதில் சொன்னார்.

என் திருமணத்தில் வீண் செலவு இருக்காது. ஓர் அநாதை நிலையத்திற்கு ஒரு தொகை கொடுப்பேன் என்கிறார் ஹரிஷ். இங்கு இன்னொரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். மணமகள் ஹரிஷ் ஐயர் குடும்பம் வெளிப்படையாக ஒருபால் உறவு மணமகனைத் தேடுவதுபோல் வேறு எந்த குடும்பமும் ஒருபால் உறவு மணமகளைத் தேடும் வாய்ப்பு இல்லை.

இது பற்றி பிபிசி கூறும்போது, 'இந்தியாவில் இருக்கும் சட்டத்தின் காரணமாகவும், சமூக கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒருபால் உறவினர்கள் தங்களின் பாலியல் தேர்வை பகிரங்கப்படுத்தாமல் ஒளிந்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

பாலியல் தேர்வு குறித்து திறந்த மனதோடு பேசக் கூடிய சூழல் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் இல்லை. ஒருபால் சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தால் பலர் வீட்டை விட்டுத் துரத்தப்படுகின்றனர்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் ஆண் பெண் திருமணத்தில் இணையும் தம்பதியினருக்கு உள்ள உரிமைகள் ஒருபால் திருமணத்தில் ஈடுபடுவோருக்கும் சட்டரீதியாக கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் உரிமைகள் ஏதும் கிடையாது. பிரச்சனைகள் அதிகம்.

திருமணமான ஒருவர் மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணை கணவன் மணம்முடித்தால் அது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்கள்தான் புகார் அளிக்க முடியும் என்று சட்டம் இருக்கிறது என்றும் ஆனால் ஒருபால் உறவினர்களைப் பொறுத்தவரை இவர்கள் இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்க இயலும் என்கிறார் வழக்கறிஞர் கீதா ராமசேஷன்.

ஆனால் இயற்கைக்கு மாறாக உடல் உறவு என்ற சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏராளமான தம்பதியினர் குற்றம் இழைப்பவர்களே என்று சுட்டிக் காட்டுகிறார் ஹரிஷ் ஐயர். இவருடைய முயற்சிக்கு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஆதரவு அளிக்கின்றன. இருந்தும் சட்டம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இவரின் மண வாழ்க்கை அமையும்.'

இறுதியாக, இறைவன் மனிதனுக்கு எந்த உறுப்பையும் வீணாகப் படைக்கவில்லை. அதன் பயன்பாட்டு வழி முறைகளையும் வகுத்துள்ளான். உண்பதற்கு ஒரு வழியையும் கழிப்பதற்கு ஒரு வழியையும் தந்துள்ளான். மனிதன் அதனை மாற்றிச் செய்வதை புரட்சி என்று நினைத்தால் அது மடமை. மிருகம் கூட செய்யாத செயலில் ஈடுபடும் மனிதன், மிருகத்தை விடத் தாழ்ந்தவன் என்பதில் சந்தேகமே இல்லை.

36 வயது மகனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பத்மா ஐயருக்கு ஒருவேளை திருமண வயதில் ஒரு மகள் இருந்தால் அவர் இப்படி விளம்பரம் கொடுப்பாரா?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஓவமும் குரோமோசோம்களும் இணைவதற்கில்லை ஆனால் இறைவனின் கோபம் இறங்குவதற்கு இருக்கிறது.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 24 May 2015
IP: 37.*.*.* | Comment Reference Number: 40716

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

தவறுசெய்யாத மனிதனில்லை "வெட்டிவளர்க்காப்படாத மரமும் நேராக வளர்வதில்லைஎன்று சாணக்கியன் ஒருசொல்உண்டு."

திருந்தி நடக்கவாய்ப்புக்கொடுக்கலாம் "ஒரு டாக்டர் தவறு செய்தால் அது புதைக்கப்படுகிறது ஒரு நீதிபதி தவறுசெய்தால் அது மீண்டும் மீண்டும் புதைக்கப்படும்" ஒருதாய் நீதிபதிக்குச்சமம் தாய் தன்மகனுக்கு தவறான தீர்ப்புவழங்குகிறாள் அல்லது சுயம்வரம் என்றபெயரில் விளம்பரம்தேடுகிறாள் . ஒருதம்புரா தந்தியருந்து அபஸ்வரக்கச்சேரிக்கு வழியவாசிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும்திருமணம் செய்வதுமில்லை அப்படியேசெய்தாலும் 40வயதுக்குமேல் செய்துகொள்கிறார்கள் அல்லதுஇதுபோன்ற கலாச்சார சீரழிவில் தங்களைமாய்த்துக்கொல்கிறார்கள் அதனால் அந்தநாடுகளில் மனித இனம்மிகவேகமாக அழிந்துவந்தது அதையடுத்து இஸ்லாமியநெறிகள் ஊடுருவிப்பரவி இஸ்லாம் வளர்ந்துவருவதால் இதுபோன்றநிகழ்வுகள் தடைந்துவருகின்றன அல்ஹம்துலில்லாஹ்.

நமதுநாட்டில் இப்போழுதுகொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தச்செயல்களுக்கு நீதித்துறையும்,அரசும் இறையாண்மைக்கெதிராக தீர்ப்புவழங்காதிருக்கவேண்டும் .

ரோபோக்காளிணைந்து குட்டி ரோபோக்களை ஈனுமா? இந்தச்செயலால் நவூதுபில்லாஹ்.

ஓவமும் குரோமோசோம்களும் இணைவதற்கில்லை ஆனால் இறைவனின் கோபம் இறங்குவதற்கு இருக்கிறது.

ஆதாரம் நபி கவ்ம் லூத் மண்ணைக்கவ்வியது வரலாற்றில் தடயமிருக்கிறது.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:..இது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது .
posted by: Refaye (ABudhabi) on 24 May 2015
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40717

இது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது ,

மிக சிறப்பான கட்டுரைகளை தரும் மதிற்பிற்குரிய ஷாஜஹான் காக்காவின் பேனா முதல் முதலாக நம் கலாச்சார முறையை பேணாமல் போனது வியப்பே!!

இம்மாதிரி கட்டுரையின் மூலம் இலவச விளம்பரத்தை மேற்கூறிய மணமகன் வீட்டார் மூலம் இவ்விணையம் வைத்திருப்பதாக கருதுகிறேன்.எந்த விதத்திலும் நமக்கோ ,நமதூருக்கோ,பயனற்ற இந்த மடலை காயல்.காம் தன் மடியில் சுமந்து வந்த அருத்தம் என்ன,வாழ்வியல் வேரையே அறுத்தொளிக்கும் இம்மாதிரி அடாவடிகளை அடக்க அகிலம் முழுவதும் ஆர்த்தெழும் ஆர்வலர்கள் ஆயிரம் பேர் இருக்கையில் நாம் இதுபோல் எழுதி தங்கள் நேரத்தையும் ,எங்களின் நேரத்தையும் வீணடிக்கும் இது போன்ற கட்டுரையும் .அதற்க்காக தரப்படும் படம்களையும் தயவாய் தவிர்ப்பது நல்லது இக்கருத்து என் தனிப்பட்ட கருத்து.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: kamalmusthafa (abha.ksa) on 24 May 2015
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40719

இதல்லாம் புதிய கதையாக தோன்றவில்லை முன்பு இது மறைமுகமாக நடந்தது தற்போது இது பகிரங்கமாக நடக்கிறது யார் ஒருவர் இயற்கைக்கு மாறாக செயல் படுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் குற்ற வாளிகள்

என்னை பொறுத்த வரை மிருகங்களுக்கு ஐந்து அறிவு என்பது தவறு ஏழுஅறிவு என்று கூட சொல்லலாம் அது தன்இனத்தை தவிர வேறு எது கூடவும் உறவு வைப்பது இல்லை யாரையும் ஏமாற்றுவது இல்லை யாருக்கும் துரோகம் இளைப்பது இல்லை அடுத்த வேலைக்கு வேண்டும் என்று உனவைகூட சேமிப்பது இல்லை இயற்கைக்கு மாறாக எந்த காரியத்தையும் செய்வது கிடையாது மனிதர்கள் அப்படியல்லமேற்கத்திய நாடுகளில் மிருகங்களை கூட விட்டு வைப்பதில்லை மிருகங்கள் மிருகமாகவே வாழ்கின்றன மனிதர்கள் சில வேலையில் மிருகமாக மாறிவிடுகிறார்கள் யார் ஒருவர் இயற்கைக்கு மாறாக செயல் படுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் இடத்தில் தண்டனைக்குரியவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. குப்பை கலந்த சாக்கடைசெய்தி!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 24 May 2015
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40723

இந்த செய்தியால் வாசகர்களுக்கு என்ன நன்மை.நமக்கு குறிப்பாக இஸ்லாமிய சமுதாயதிற்கு சொல்லப்படும் அறிவுரை என்ன?

வேசித்தொழிலைவிட கீழ்த்தரமாக வெறுக்கத்தக்க,வாந்தி வரக்கூடிய இந்த செய்தி நமக்கு தேவைதானா?

சற்று மாத்தி யோசிப்போமாக,இந்த சம்பவத்தையொட்டிய செய்தி வேறுவிதமாக வந்தால்,அதாவது ஓரின சேர்க்கையின் வெறித்தனத்தால் பால் நோயான "Aids"நோயில் பாதிக்கப்பட்டு இருவரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்தரியில் அனுமதி என்றால் அது அகம் குளிரும் செய்தி, இச்செய்கையால் மனம் ஈர்க்கப்படும் சிறு எண்ணமுடையவர்களும் திருந்த வாய்ப்புண்டு

ஆனால் இந்த கட்டுரையாளரின் செய்தியினால் அந்த எண்ணமே இல்லாதவற்கு கூட உள்மனது ஓரத்தில் ஒர் சிறிய ஆசையை எழச்செய்யுமே, புனித இஸ்லாத்தை சாராதவர்களும் அந்த மார்க்கத்தின் புண்ணிய போதனையையும் ,புனித திருமறையின் உண்மையையும் அறியாத விட்டில்பூச்சி சபலமனம் கொண்ட பாமரர்கள்!

வாழ்வின் உயரிய தத்துவத்தையும் ஒழுக்கத்தின் உன்னத வழிகாட்டியின் போதனைகள் அடங்கிய கட்டுரைகள் வந்தால் அதை வாசிப்பவர்களுக்கு நன்மை பயக்கும். இதுபோன்ற குப்பை கலந்த சாக்கடை சங்கதி செய்தியால் மனம் சங்கடம் அடைவதோடு அதை சொல்பவரின் தரம்தான் தராசில் நிறுக்கப்படும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. கிளுகிளுப்பு கட்டுரையாளர்
posted by: Mauroof (Dubai) on 24 May 2015
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40724

இது போன்ற கிளுகிளுப்பு விஷயங்களை/செய்திகளை கட்டுரையாக வழங்குவதில் எம்.எஸ். ஷாஜஹான் என்பவருக்கு ஓர் அலாதி பிரியம் உண்டு.

அப்படி இவர் அளிக்கும் கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்த இணையத்திற்கும் ஒரு அலாதி பிரியம் உண்டோ என சந்தேகிக்க தோன்றுகிறது.

ஏனெனில் இதற்கு முன்பொருமுறை மறைந்த சவூதி மன்னரின் அந்தரங்கம் பற்றி தொடரும் தொடரும் என்று பல கண்டனக் கருத்துக்களை மீறியும் தொடர்ந்து எழுதினார் இவர். அதை தொடராக வெளியிட இந்த இணையமும் தவறவில்லை. மாறாக, கண்டனக் கருத்துக்களில் சில வெளியிடப்படவே இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. தயவு செய்து இக்கட்டுரையை திரும்பப்பெறவும்...
posted by: Koos Aboobacker (Riyadh) on 25 May 2015
IP: 5.*.*.* | Comment Reference Number: 40733

டியர் அட்மின்ஸ்,

தயவு செய்து இக்கட்டுரையை உடன் திரும்பப்பெறவும்....

வேறு எந்த ஊடகம் மூலமாகவும் வாசகர்கள் இது போன்ற செய்திகளை படிக்க நேரிட்டால் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் நம் காயல் வெப்சைட் வழியாக வேண்டாம்...

இதுபோன்ற கட்டுரைகள் நம் வலைதளத்தின் தரத்திற்கு கேடாகவும் சோதனையாகவும்தான் அமையுமே தவிர, வேறு எந்த வகையிலும் நன்மை பயக்காது...

சில விசயங்களை "கெடக்குது கழுதைன்னு" சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கணும்... கழுதையை புடிச்சி மோந்து பார்க்கக்கூடாது... மோந்து பார்த்தேன், என்னா நாத்தம்ன்னும் சொல்லிக்கிட்டு இருக்கப்படாது...

அன்புடன்,
கூஸ் அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) on 25 May 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40735

ஒழுக்க விழுமங்களைச் சாய்ப்பதற்கும் குடும்ப அமைப்பைக் குலைப்பதற்கும் தீய சக்திகளெல்லாம் படாதபாடு படுகின்றன. ஆனால் இதற்கு எதிரான குரலோ மிகப் பலவீனமாகவே ஒலிக்கின்றது. ‘இதைப்போய் பேசுவானேன்’ எனச் சிலர் ஒதுங்கிக் கொள்கின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. சமூக சீரழிவுகள் !!
posted by: Salai.Mohamed Mohideen (Philadelphia) on 26 May 2015
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 40763

எப்பேர்பட்ட கலாச்சார / இயற்கைக்கு முரணான சீரழிவாக இருந்தாலும் சரி, " அது அவரவர் விருப்பம், உரிமை, சமத்துவம் (Equality). அதற்கு / அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் தவறே இல்லை" என்று பெரும்பாலானோர் எண்ணுமளவுக்கு சமூக சீரழிவு ஊடகங்கள் & ஆர்வலர்கள் (activist) சமுதாயத்தை மாற்றிவிட்டனர். அதன் விளைவுதான் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் இன்று ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி விட்டார்கள்.

தவறான திசையில் பயணிக்கும் தன் பிள்ளையை நேர்வழி படுத்துவதுதான் ஒரு தாய்க்கு அழகு. பத்மா போன்றவர்கள் சமுதாயத்தின் மிகக் கெட்ட உதாரணங்கள்.

ஹரிஷ், பத்மா மற்றும் மேற்க்கத்திய சமூகத்தினரின் உணர்வு & உரிமைகளை விவரித்த அளவுக்கு.... மேற்க்கூறிய எண்ண சிதைவை களைந்து, நாலு சுவற்றிட்க்குள் முடங்கி போய்விட்ட இளைய தலைமுறையினரை இவ்விடயத்தில் விழிப்புணர்வூட்டி & தவறான திசைகளில் பயணிக்கும் பிள்ளைகளை இதிலிருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பதனை இக்கட்டுரையில் விரிவாக அலசாமல் போனது ஒரு ஏமாற்றமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2021. The Kayal First Trust. All Rights Reserved