மக்கள் மனதை கொள்ளை கொண்ட
மாவட்ட ஆட்சியர்
மணற்கொள்ளை மாஃபியாக்களால்
பணிமாற்றம்...
ஸ்டெர்லைட் முதல் டிசி டபிள்யு வரை
நச்சுப் பாம்புகளுக்கு கொண்டாட்டம்...
நிலவெளி மாற்றங்களால்
கடலின் கரைகள் மாறக் கூடும்...
அலைகளின் ஆரவாரம்?
மணலை அள்ளுவதால்
மக்களுக்கு நஷ்டமா?
இலஞ்சம் கொடுத்தால்
என்ன தவறு?
வேலை நடக்க வேண்டாமா?
கருத்து கந்தசாமிகள் கேள்வி?
குழந்தைக்காக கற்பை விற்கும்
கலிகாலப் பத்தினிகள்...
4. Re:... posted by:S.M.I.Zakariya (chennai) on 14 August 2013 IP: 115.*.*.* India | Comment Reference Number: 29467
மந்திரிகளுக்கு கார் கதவை திறந்து விடும் கலெக்டர் மத்தியில் இவரைப்போன்ற சிலர் விதிவிலக்கு dcw விவகாரமாகட்டும் sterlitte விவகாரமாகட்டும் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் நடந்தார்
நமது ஊரைச்சார்ந்த பிரமுகர்கள் அல்லது kepa அமைப்பில் இருந்தாவது யாராவது அவரை சென்று சந்தித்து நமது நன்றிகளை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது சமுதாய மக்கள் மீது அவருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்
5. Re:...கவிஞரின் ஆதங்கம் புரிகிறது posted by:mackie noohuthambi (kayalpatnam) on 14 August 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 29470
இவன் யாரென்று புரிகிறதா, இவன் தீ என்று தெரிகிறதா என்று விசுவரூபம் எடுத்து கவிமகன் பாடினாலும் அந்த பாடல் ரசிக்க கூடியதாக இருந்தாலும் சில் பொருட் சுவை குன்றி இருப்பதை வேதனையுடன் அவதானிக்கிறேன். கதிரவன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை நாம்தான் சுழல்கிறோம் என்ற கவிஞரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
vas shamsu thajree li musthaqarrin lahaa thaalika thaqdheerul azeezul aleem என்பதும் LAS SHAMSU YANBAGHEE LAHAA ANN DHUDHRIKAL QAMARA VALALAILU SAABIQUNNAHAAR என்பதும் இறை மறை வசனங்கள்.. கவிதைகள் படிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அது நமது இரத்த நாளங்களில் ஓடும் திருமறை வசனங்களுக்கு மாறுபட்டு இருந்து விடக் கூடாது என்பதாலேயே, எனது அநேகமான கருத்து விமர்சனங்களில் நான் குர் ஆன் ஹதீத் வசனங்களை தவிர்த்து கொள்கிறேன்.
IAS படிக்க முன்வாருங்கள் என்று நமதூர் மாணவர்களை சில பெரியவர்கள் அழைக்கும்போதெல்லாம் நான் முகம் சுளித்துக் கொள்வேன்.காரணம் இப்படி அதிரடி மாற்றங்கள் தான். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக நம்மவர்கள் இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அரசியல் சாக்கடையில் இந்த நல்லவர்களை தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்கள் இந்த பணக்கார மாபியா கும்பல்கள்.அதற்கு நமது பிள்ளைகள் பலிகிடாவவது மட்டுமல்ல அவர்கள் காணாமல் போவார்கள். சிலவேளை உயிருடன் திரும்பி வரவும் மாட்டார்கள்.
சிந்தனைக்கு விட்டு விட்டேன், இனியும் ஒரு IAS பதவி நமக்கு தேவையா? அதற்கான மதிப்பு மரியாதை எல்லாம் காலாவதியான தந்தி சேவையை போல் ஆகிவிட்டது. கவிஞரின் பிற வரிகள் ரசிக்க தக்கவை. சுட்டிக் காட்ட நினைத்தேன், தவறிருந்தால் மன்னித்து அருளுங்கள், கவி மகனே....
"என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது . வாழ்த்துக்கள்.
6. நன்றியும்,வேண்டுகோளும்! posted by:kavimagan m.s.abdul kader (doha..qatar.) on 15 August 2013 IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29489
அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின
நல்வாழ்த்துக்கள்....கவிதையை விமர்சித்த அனைவருக்கும் நன்றி!
மதிப்பிற்குரிய மக்கி நூஹுத் தம்பி காக்கா அவர்களுக்கு!
எனது மார்க்க ஞானம் மிகக் குறைவு....சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...
அதே நேரம், இங்குள்ள தமிழ் உலமாக்கள் சிலரிடம் இந்தக்
கவிதை வரிகளையும், தாங்கள் குறிப்பிட்டிருந்த இறைமறை
வசனங்களையும் காட்டி, கருத்து கேட்ட போது, எனது கவிதை
வரிகள், திருமறை வசனங்களுக்கு முரண்படவில்லை என்பது
அவர்களின் கருத்தாக இருந்தது....
இதுகுறித்து தங்களது மேலான அபிப்ராயத்தை எதிர்பார்க்கிறேன்... உங்களுடன் விவாதம் செய்வதற்காக அல்ல.... தெரிந்து தெளிவு பெறுவதற்காக....
இந்த வசனங்களுக்கான விளக்கத்தை, நமது அறிஞர்கள் தெளிவு
படுத்துவதையும் இணையத்தில் கண்டேன்.... இருந்தும் எனது
சிற்றறிவிற்கு எந்த முரண்பாடும் பிடிபடவில்லை.....
ஆகையால் தயை கூர்ந்து, எனது மின்னஞ்சல் முகவரியில், விளக்கமாக எடுத்துரைத்து, என்னை வழிநடத்த அன்புடன் வேண்டுகிறேன்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross