மதநல்லிணக்க விதை தூவி
மனித நேய வேர்ப் பிடிப்பில்
மலர்ந்து நிற்கும் அழகுச் செடி
மணக்கின்ற எங்கள் ஊர்...
சாதி மத பேதமின்றி
செத்தும் கொடை கொடுத்த
வள்ளல் சீதக்காதி
வழித்தோன்றல் நாங்களடா!
கயமை இங்கு இல்லை...அதனால்
காவல் நிலையம் இல்லை
மடமை இங்கு இல்லை... அதனால்
மதுக்கடை இங்கு இல்லை
சிறுமை இங்கு இல்லை... அதனால்
சினிமாத் தியேட்டர் இல்லை
மென்மை எங்கள் நெஞ்சில்..அதனால்
மதவெறி கொஞ்சமும் இல்லை..
வேற்றுமை இங்கு வெகுதூரம்
ஒற்றுமை எங்களின் அடையாளம்
பற்றுதலோடு வாழ்கின்றோம்
பறித்திடமுனைந்தால் அது தகுமோ?
கடல் மலை காடு கடந்து எமின்
உடல் விடும் வியர்வை உதிரத்தை
கடமை உணர்வுடன் தேசத்தின்
உடமை ஆக்கிடும் பணி செய்தோம்...
அன்னியச் செலவாணி பெருக்குதற்காய்
அந்நிய பூமியில் கிடக்கின்றோம்...
கண்ணாம் எங்கள் சொந்தங்களை
கணினியில் தொடர்பு கொள்கின்றோம்
புண்ணியவான்களே புரிந்திருந்தும்
எண்ணெயைத் தீயில் ஊற்றுவ தேன் ?
இரத்த தாகமா இராம கோபாலா
இரையாய் எம்மை ஆக்கிட ஆவலா?
பகைமை நிறைந்த உந்தன் கருத்துரை
பார்ப்பன தினமலர் ஏட்டில் பிரசுரம்...
இருந்தும் தலைவர் காதர் முஹைதீன்
பொறுமை நிறைந்த பதிலை பார்நீ!
இந்து கிருத்துவ முஸ்லிம்கள்
இணைந்தே வாழும் பூமியிது....
அறுத்திட நினைத்தால் பலிக்காது
அன்பால் கட்டிய கயிறு இது...
1. இராமகோபாலனுக்கு நன்றி...! posted by:M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 03 August 2013 IP: 59.*.*.* India | Comment Reference Number: 29174
காவிகறைபடிந்த இராமகோபாலா நீர் திருவாய் மலர்ந்தளிய மன்னிக்கணும் உளறிய வார்த்தைகளால்தான் எமது கவிமகனின் இந்த அற்புத கவிதைவரிகள் எமக்கு கிட்டியது. உமக்கு பதிலடி கொடுத்த எங்கள் பேராசிரியரைத் தொடர்ந்து இக்கவிதை உமக்கு ....ப்படி. இந்த வயசான காலத்துலெ நீர் திருந்தாட்டி எப்ப திருந்த போகின்றீரோ...?
3. Re:... posted by:Hafil S.H.Zainul Abideen (Ras Tanura) on 03 August 2013 IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29179
என்ன ஒரு அருமையான கவிதை. இதை ஒரு நோட்டீஸ் வடிவில் அச்சிட்டு நமதூர் பகுதியில் விநியோகிப்பதன் மூலம் நமது மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கும் இந்த அருமையான கருத்துக்களை அறிய செய்வதுடன் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் எண்ணங்களையும், நமது பாரம்பரிய சகோதர துவத்தையும் அவர்களின் மூலமாகவே வெளிக் கொண்டு வர நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பது எனது தாழ்மையான கருத்து.
4. Re:SUPER. posted by:s.e.m. abdul cader (bahain) on 03 August 2013 IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29182
HAI WA, SUPER , KEEP IT UP, SMOOTH AS WELL AS STRONG STRIKE AGAINST THIS OLD CULPRITS ON HIS ROTTON VIEW POINTS AGAINST KAYALS AND MUSLIMS.INSHALLAH, ALMIGHTY ALLAH MAY LEAD HIM INTO LIGHT OF ISLAM BEFORE HIS END, OTHERWISE, HE WILL BE IN FLAMING HELL ALWAYS.
5. கவி மகனாரே மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.... posted by:நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 03 August 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 29185
கயமை இங்கு இல்லை...அதனால்
காவல் நிலையம் இல்லை
மடமை இங்கு இல்லை... அதனால்
மதுக்கடை இங்கு இல்லை
சிறுமை இங்கு இல்லை... அதனால்
சினிமாத் தியேட்டர் இல்லை
மென்மை எங்கள் நெஞ்சில்..அதனால்
மதவெறி கொஞ்சமும் இல்லை..
கவி மகனாரே மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....
இராம கோபால பெரியவருக்கு இந்த கவிமகனின் கவிதை வரிகளின் உண்மைகள் தெரியுமா...! புரியுமா...!
6. ரத வெறியும் ரத்த வெறியும் posted by:mackie noohuthambi (kayalpatnam) on 03 August 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 29186
ரத வெறியும் ரத்த வெறியும் கூட்டணி அமைத்தால் இப்படிதான் புலம்பி ஓட்டு கேட்க வேண்டும். ஒருவர் ரதம் ஏறி பள்ளிவாசலை உடைக்க சபதம் எடுத்தார் இன்னொருவர் ரத்த கொதிப்பேறி காயல்பட்டினம் பற்றி பேசுகிறார். கவிமகன் காதருக்கு பாடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தார்..
புல்லாங்குழல் தந்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
என்று இந்து மத கவிஞர்கள் பாடுவார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதை நாங்கள் குறை சொல்வதில். அது அவர்கள் பக்தி.
இங்கே காயல்பட்டினத்தில் இஸ்லாத்தை எங்களுக்கு ஒரு மதமாக அல்ல, வாழ்க்கை நெறியாக அல்லாஹ்வை எப்போதும் புகழ்ந்து பாடுவோம். அந்த வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டி முஸ்லிம்களை மட்டுமல்ல, ராம கோபாலன் போன்ற மாற்று மதத்தினரையும் மனித நேயத்துடன் வாழ சொன்ன வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகத்தை சுந்தர தமிழினில் பாட்டெடுத்து பாடி தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறோம், அப்படிப்பட்ட காயல்பட்டினத்தையா தீவிரவாதத்துக்கு மின்னஞ்சில் அனுப்பப்படுகிறது என்று சொன்னார்.
அவராக சொல்லவில்லை அவர் கூட்டணி சேர்ந்துள்ள காட்டேரிகள், ரத்த வெறியில் பாபர் மசூதியை உடைத்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்களே அவர்கள் உசுப்பி விட்டு பார்க்கிறார்கள், இந்த தமிழ் மண்ணில் பிறந்த ஒருவனை வைத்து இந்த மத நல்லிணக்க மாநிலத்தின் இஸ்லாமிய தலை நகரை அசைத்துப் பார்க்கிறார்கள்.
பிரதமர் நாற்காலிக்கு கனவு கண்டு ஓடு காலியாக போனவர்கள். அந்த கனவுடன் இன்னொருவர் வலம்வருகிறாரே குஜராத் நரபலி நாயகன் இவர்களின் xerox நகலாக வலம் வர வைத்திருக்கிறார்கள் இந்த ராமகோபாலன்.அவர்களை. பாவம்.
வேண்டாம் விஷ பரீட்சை. உங்கள் வயது முதிர்ந்து விட்டது. நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் வசைபாடும் காயல்பட்டினதுக்கே வந்து இங்குள்ள இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களின் முன் "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுன் ரசூலுல்லாஹ்" என்ற ஓரிறை கொள்கை மந்திரத்தை சொல்லி உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள். சுவர்க்கத்தில் உங்களை நுழைய வைக்கும் சாவி அது.
வாருங்கள் ராமனின் சீடரே, உங்கள் ராமரே ஓரிறை கொள்கை முழக்கத்தை முழங்கி உயிர் நீத்தார் என்ற உண்மை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது!
7. .பெரியவரின் அணியாமான கருத்து posted by:NIZAR (KAYALPATNAM) on 04 August 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 29191
கவிமகனின் கவிதையில் மதநல்லிணக்க மலர் வாசமும்,
காயலின் உண்மைகளும் எதார்தமாக நிரம்பி உள்ளன.
அதில் மத நல்லினக்கதை பறைசாற்றும் இறுதி நான்கு வரிகள் எல்லோரின் இதயத்தையும் தொட்டு நிற்பவை எனலாம்.
இந்த பெரியவரின் இந்த தகவலை புதிதாக அவதானிக்க கூடியவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் தருவதாக இருக்கும். அனால் இதை போன்ற ஆதராமற்ற,பிரச்சனைகலை உருவாக்கும் கருத்துக்களை பேட்டியில் சொல்வது இந்த பெரியவரின் வழமையான ஒன்றாகும். அதற்கு சரியான நேரத்தில் பதில் அளித்த பேராசிரியர் கூட இது இவருக்கு வழமையான ஒன்று என்று சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை போன்றோரின் கருத்துகளுக்கு முக்கியம் அளிக்காமல் இருப்பதுதான் சாமார்த்தியமான ஒன்றாகும். ஏனனில் இவரின் பேச்சை மாற்று மத சகோதரர்கள் சிறிது கூட பொருட்டாக எடுப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
மனித உள்ளங்களை மதத்தின் பெயரால் கொம்பு சீவி பதவியை
பெற துடிக்கும் அரசியல்வாதிகள் எண்ணம் கனவாகவே கலைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
...
9. Re:...சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் ! posted by:K.S.A.JAMALUDEEN,ILAYANGUDI (PEOPLES REPUBLIC OF CHINA) on 11 August 2013 IP: 27.*.*.* China | Comment Reference Number: 29397
இன்றைக்கு நாட்டில் மனிதநேயம் தேய்ந்து வரக்காரணம் ராமகோபாலன் போன்ற எப்போதும் திருந்தாத ஜென்மங்கள் முஸ்லிம்கள் பற்றி எதையாவது, எப்பொழுதும் சொல்லிக்கொண்டு பொதுமக்களை குழப்பி நமது மீது சந்தேகங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதே. புலவர் ஜனாப் எஸ். எம். அப்துல்காதர் அவர்கள் கவிதை மூலம் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் ! சபாஷ் !! [நான் முன்பு துபையில் பணிபுரிந்த காலத்தில், உங்களை கண்ட ஞாபகம் ]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross