உலகலாவிய இணையதள காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (ரமழான் முபாரக் கூறி கொள்கிறேன்). நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மாதம் நான்கு கட்டுரை எழுத விருப்பம் (D.T.P. அச்சு எடுத்துத் தர போதிய ஆளில்லை) சின்னஞ்சிறு செய்திகளின் சிறப்பு பாகம் ஒன்றுக்கு பின் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ஓசியினால் மனமகிழ்ச்சியா?
ஓசி என்ற ஆங்கில சொல்லுக்கு இலவசம் என்று பொருள். யார் இலவசம் தந்தாலும் அது ஓசி வகையைச் சார்ந்தது. ஓசி என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? தபால் சேவை தொடங்குவதற்கு முன் இங்கிலாந்தில் அரச குடும்பத்திற்கு செய்தி அனுப்பப்பட்ட முறையின் பெயர் ஓசி தபால் சேவையாகும். இதற்கு பிரத்தியேக தபால் தலை ஒட்டப்பட்டிருக்காது.
இந்த சேவை அனேகமாக 1800இல் நடந்திருக்க வேண்டும் என்று அறிகிறோம். இந்த சேவை குறித்து அறிய எண்சைக்கிளேபிடியா பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தில் காணமுடியும் அல்லது விகடன் வெளியிட்ட தமிழில் கலைக்களஞ்சியம் பாகம் ஒன்று முதல் மூன்று வரை தேடிப்பார்க்கலாம். நமதூர் அரசு நூலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் அது எங்கோ மறைந்து தூங்குகிறது தேடி சென்று ஆதாரத்துடன் தரமுயற்சித்தேன் முடியவில்லை.
ஓசி என்ற இலவச பொருட்கள் வழங்குதல் முறை சரிதானா?
இலவசமாக தரப்படும் அனைத்து பொருட்களின் பின்னணியில் மறைந்து இருக்கும் வார்த்தை ஓசிதான். இன்று அரசியல் வட்டாரத்தில் ஓட்டு வங்கியை தக்க வைக்க இலவச என்ற பொருட்களை கொடுத்து மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் திராவிட இயக்க வரிசையில் கலைஞர் ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, எரிவாய்வு அடுப்பு வழங்கி ஆட்சியை பிடித்தார் கலைஞர்.
அடுத்து வந்த அம்மா அரசும் மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் சைக்கிள், கணினி, ஆடு போன்ற பொருட்களையும் 20 கிலோ அரிசி என்று அடுக்கடுக்காய் இலவசங்களை கொடுத்து ஆட்சியை பிடித்தார். அம்மா அரசு பொதுவாக இலவசப் பொருட்கள் தருவதினால் மக்களை உழைக்கவிடாமல், சோம்பேறிகளாக ஆக்குவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
மக்களுக்கு தேவை, வேலைவாய்ப்பு கொடுத்து அதன் மூலம் ஊதியம் பெற வைத்து உழைத்த பணத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்ய வைக்கலாம். எந்த அரசியல்வாதிகளும் இலவசமாக பொருட்களை கொடுப்பதைத் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிக்குத் தக்கவாறு செயல்பட்டு, நாடு வளம் பெற மக்கள் நலம் பெற திட்டம் தீட்டி, அதை மக்கள் அனுபவித்தாலே ஆளும் கட்சிக்கு ஓட்டு வங்கி அரணாக நின்று வெற்றியை தேடித்தரலாம். மொத்தத்தில் இலவச பொருள் வழக்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
எங்கும் எதிலும் எப்போதும் தூசி
உலகிலேயே தூசி இல்லாத அழகு நகரம் லண்டன். அடுத்து சிங்கப்பூர் அந்த நாட்டு மக்கள் நாட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க ஆரம்ப முதலே கல்வியோடு கலந்து கற்றுக் கொண்டதால் அந்த நாடுகள் தூய்மையாக விளங்குகின்றன. இந்தியாவில் தூசி அதிகம் நிறைந்த நகரம் கல்கத்தா (கோல்கத்தா). இந்நகரம் மக்கள் பெருக்கத்தோடு பல தொழிற்சாலை புகையோடு புகைமண்டலமாக வான்வெளி காட்சியாக தோன்றும் நான் 1976இல் கல்கத்தாவின் பழமை கட்டிடங்களை தூய்மையற்ற தூசி வீதிகளை நேரில் கண்டுள்ளேன்.
நகரங்களை துப்புரவாக வைக்கும்போது அந்நகரைக் காண உல்லாசப் பயணிகளும் வருகை தருவார்கள். அந்நகரத்தின் பொருளாதாரமும் வாழ்வதாரமும் உயர்நிலைக்குச் செல்லும். பொருளாதாரமும் வாழ்வாதாரமும் உயர்நிலைக்குச் செல்லும். தூசிதான் நோயின் பிறப்பிடமாக மாறுகிறது. எந்த நகரில் ஊரில் தெருக்களின் இரு பகுதிகளிலும் மணல் மண்டிக் கிடக்கிறதோ அங்கு வாகனம் செல்லும்போது தூசி கிளம்பி சாலையில் நடக்கும் மக்களின் நாசியை அடைந்து மொத்த உடலுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படுத்துகிறது.
தூசி ஓர் அலர்ஜி நோயை உருவாக்குகிறது. தூசி உடலில் படியும்போது உடல் பூராவும் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட மணல் புழுதி மணலாகி தூசி கிளம்பி சுகாதாரக் கேட்டை உண்டுபண்ணுகிறது. இதனால்தான் சுற்றுபுறத்தை தூய்மையாக்க மரம் நடச் சொல்கிறார்கள் மரம் செடிகளின் நுண்ணிய துவாரங்கள் தூசியை விரைவாக இழுத்து கொள்கிறது. இதனால் சுற்றுப்புறம் ஓரளவு பாதுகாக்கப்படும்.
தூசி விசயத்தை பெண்கள் கவனிப்பதில்லை ஏன்?
பெண்கள் தூசி விசயத்தை கவனம் செலுத்துவதில்லை. வீட்டை தினமும் பெருக்கும்போது குனிந்த நிலையில் பெருக்குகிறார்கள் தரை தூசி வேகமாக பெண்களின் மூக்கு துவாரத்தை வெகுவாக அடைகிறது. இதைத் தடுக்க பெண்ள் வீடு பெருக்கும் போது வெட்கப்படாமல் மூககை சுற்றிலும் ஒரு தடித்த துணியை பாதுகாப்புக்காக கட்டி கொள்ளலாம்.
சில வீடுகளில் கைக்குழந்தைகள் தொட்டில் அல்லது கட்டிலில் படுத்திருக்கும்போது அந்த அறையைப் பெருக்க முயற்சி எடுக்க கூடாது. கைக்குழந்தையை வேறு தூசி பாதிக்காத இடத்தில் படுக்க வைத்து விட்டு அந்த அறையை பெருக்கினால் கைக்குழந்தையை தூசி தாக்காது. இன்னும் சில பெண்கள் பழைய காலத்து பெரிய கட்டிலுக்குள் புகுந்து வாரம் ஒருமுறை பெருக்குகிறார்கள். இந்த மாதிரி பெண்களை வாரம் பூராவும் சேர்ந்த தூசி துகள்கள் வேகமாகத் தாக்குகிறது. உடலையும் ஆடைகளையும் தூசி ஆக்கிரமித்துக் கொள்கிறது.
வீட்டைப் பெருக்க பருத்தி ஆடைகளை பிரத்தியேகமாக வைத்துக் கொள்வது நலம். வீடு கூட்டி முடிந்ததும் முகம், கை, கால்களை சோப்பு போட்டு கழுவிக் கொள்வதுடன், கூட்டியபோது அணிந்த புடவையை அல்லது நைட்டியை கழற்றி அதைக் கழுவி விடுவது நல்லது. ஆரோக்கியமே சுகம் தரும். தூசி இல்லாத வீடாக வைத்துக் கொண்டால் வீட்டிலுள்ள அனைவருக்கும் நல்லது. ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
ஏசியில் தூங்குவது சரிதானா? சுகம் தானா?
நமதூரில் பெரும்பாலான வீடுகளிலுள்ள படுக்கை அறை குளிர்சாதனப் பெட்டி என்ற ஏசி வைத்து அதில் பகலிலும் இரவிலும் தூங்குகிறார்கள். இந்த மாதிரி ஏசியில் தூங்குவது கொஞ்ச நேரம் சுகம்தான் பகலில் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்திருந்து வெளியே வரும் போது அனல் காற்று போல உடல் கதகதப்புடன் நெருப்பு காற்றுப் போல ஒரு தாக்கு ஏற்படுகிறது. அரபுலகில் அலுவலகம், வீடு, வாகனம் எல்லா இடத்திலும் ஏசி என்பதால் அதன் தாக்கம் நமக்கு தெரிவதில்லை. அரபுலகில் உள்ள அனல் காற்று பாலைவனத்து போக்கும் நாம் ஏசியை நாட வேண்டியதிருக்கிறது. சொந்த நாட்டில் ஏசி வைப்பதானால் அதற்கான ரெட்டிப்பான பண முதலீடு செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கான பிரத்தியேக மின்கட்டணம் வேறு அதிகப்படுகிறதை உணர்வதில்லை.
ஏசியில் இரவு 8 மணிநேரம் தூங்கிவிட்டு வெளியே வந்து மற்ற அறைகளுக்கு செல்லும்போது உடலில் ஒருவகை உஷ்ணக் காற்று போல தாக்கம் ஏற்படுகிறது. கொஞ்ச நேரம் சுகத்திற்கு ஆரோக்கிய குறைவான ஏசி வாழ்க்கை தேவையா? யோசிப்போம். வசதி வந்துள்ளது அதனால் நாங்கள் ஏசி வைத்துள்ளோம் என்று கூறலாம். அதன் கெடுதிகளை மட்டுமே எடுத்து வைக்கப்பட்டது; உங்களை தடுக்கவில்லை.
வாகனத்தில் ஏசி
சில வாகனத்தில் ஏசி உள்ளது. வாகனப் பயணம் முடிந்ததும் வெளியே வந்தால் உடல் சூடு அதிகமாகிறதை உணர முடிகிறது. ஏசி வைத்த வாகனத்தில் இரவு முழுவதும் படுத்து உறங்கிய சில நபர்களை மரணம் தழுவிச் சென்றதை பத்திரிக்கை வாயிலாக படித்தோம்.
காசைக் கரியாக்க, ஏசியை போட்டு இயற்கை சுகத்தை ஏன் வீணடித்து உடலை பாழ்படுத்த வேண்டும்? சுகம் என்பது இயற்கைக் காற்றிலும், தூய்மையான பகுதியிலுமே உள்ளது என்பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஆரோக்கிய வாழ்வே இனிய வாழ்வு அது நலம் தரும் உள்ளுறுப்புகளுக்கு பலம் தரும். உடல் புத்துணர்ச்சி பெறும். |