மீது உயிர் பிழைத்திருந்தவர்கள் அந்த இடத்தில்
பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் போனார்கள்
வாழ்க்கை என்ற கல்வெட்டில் இவை
ஆறாத வடுக்களாக செதுக்கப்பட்டு விட்டன...
ஊரில் ஒரு பகுதியில் மயானம் இருந்தது
எல்லோரும் இறந்ததால் ஊரே மயானமானது
பூஜ் மாவட்டம் ஒரே... ஒரு குலுங்கலில்
பூஜ்-யமான மாவட்டம் ஆனது...
உள்ள சோகங்களிலேயே உச்ச சோகம் யாதெனில்
தன்னினம் துன்பப்படுவதை கனமேனும் உணராதிருப்பதுதான்
உனக்குத் தெரியுமா? காற்றில் கலந்திருப்பது
ஆக்ஸிஜன் மட்டுமல்ல ஒவ்வொருவரின் ஆயுளும்தான்...
எந்த மண் உனக்கு உணவளிக்கிறதோ
அந்த மண்ணின் மைந்தர்களை உணவாக்கிக் கொல்லாதே
தண்ணீர் கடலை செந்நீராய்க் காணுகையில்
ரத்தம் கண்ணீர்க் கடலாய் மாறுகிறதே...
ஏவும் திசையில் அம்பைப் போல - எனதன்பு
ஊழியர்களை உயிரோடு “தீ” மூட்டுகிறாய்
பள்ளிக் குழந்தைகளைப் பக்கம் அழைத்து
பாயசக் கல்வியென “பாய்ஸன்” ஊட்டுகிறாய்...
விண்ணிலும் மண்ணிலும் விஷம் கலக்கிறாய்
விஷயம் தெரிந்ததும் விஷமம் செய்கிறாய்
நீ சில்லறை சேர்த்து கல்லாவை நிறைக்கிறாய்
நோயல் சில்லறையைக் கரைத்த எங்களுக்குக் கல்லறை கட்டுகிறாய்...
இந்த ஆலை கேன்சல் ஆகும் வரை
இங்கு ஆட்கள் கேன்சர் ஆகிறார்கள்
ஆலை இங்கு இருந்து வருவதால்
ஆட்கள் இங்கே இறந்து போகிறார்கள்...
அட... அச்சுப்பிழையென்றால் அதைத் திருத்தலாம் – இது
“நச்சு”ப் புகையல்லவா? இடமாற்றமே இறுதியான தீர்வு...
மருத்துவர் சொல்கிறார் ஆலையை இடமாற்றம் செய் - அல்லது
அனைத்து ஊர்களையும் இடமாற்றம் செய் என
அரசுக்கு எது வசதியோ...?
மரணம் துளிரும் “மாசு” விதையே - உனக்கு
மரண தண்டனை விதிக்க இங்கு சகோதரனாய்
ஒரு லட்சம் கரங்கள் ஒரு லட்சியமாக
ஒருங்கிணைகின்றன... ஓரணியாகின்றன...
மனிதா...!
எளியவர்களை - வல்லவன் அழித்தால்
வல்லவனை “வல்லோன்” அழிப்பான்
கூடிய விரைவில் பதிலளிப்பான்...
மறவாதீர்!
மாற முடியுமா? இடத்தை
மாற்றிக்கொண்டு செல்ல
படைத்தவனிடம் பிரார்த்திப்போம்.
2. Re:... posted by:AHAMED SULAIMAN (Dubai) on 08 March 2014 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33596
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இது ஒரு உணர்வின் பதிவு
கருத்துகள் அனைத்தும் நட்சு ஆலை
ஆளை நச்சிவிடும் என்பதை நட்ச்
..நட்ச்ணு உறைக்குது .
இந்த ஆலை தொடர்ந்தால் மனிதன் தொடரமாட்டான் என்பதை உறுதியான சொல் நடைகள் மூலம் சொல்லி ஆலையை ஒழிப்பது ஒன்றுதான் விடை என்பதை உறுதிபட கூறும் அன்பின் அலாவுதீன் .
யதார்தமாக குமுறுகிறார் வார்த்தைகள் அமைதியாய் கொதிக்கும் எரிமலை குழம்பு .
கொதிக்கும் கலம்தாண்டி குதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் யதார்த்தம் .
ரசாயன ஆலை ஒழிய வேறு இல்லை என்பதை எளிய அது சமையம் வலிய கருத்துகளை கொண்டு வலிமையாக மன வார்ப்பின் மூலம் வடித்து வைத்து விட்டார் .
நம் மக்களில் பெரும்பாலானவர்களிடம் அந்நாளில் இருந்த அல்லாவின் தீன் ( ஈமான் உறுதி ) குறைத்து விட்டதால் நாம் உறுதிகளை இழந்து விட்டோம் போராடும் குணம் நம்மிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுள்ளது அதனை நாம் வரவழைக்கணும் போராடி மடிபவன் புதைக்கபடுவதில்லை விதைக்கபடுவான் அனால் போராடும் காரியம் நன்மையான நோக்காக இருக்க வேண்டும் அது போதும் .
ஆலிம்கள் தான் இஸ்லாதின் பலம் அவர்கள் சமூக சம்பந்தமான காரியங்களில் தங்களை ஈடுபடுத்தினால் இந்த சமுதாயம் பல இடர்களில் இருந்து கரையை அடைந்து விடும் மேலும் நல்ல மதிப்பாகவும் திகழும் என்பதில் எந்த கருது முரணும் இல்லை செய்வார்களா நம் மார்க்க அறிஞர்கள் .
இன்ஷா அல்லாஹ் செய்து காட்டுவார்கள் .......
4. Re:... posted by:Hameed Sirajudeen (Villupuram) on 14 March 2014 IP: 106.*.*.* India | Comment Reference Number: 33706
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூருக்கு தேவையான
மிக நல்லதொரு பதிவு...
குஜராத் 'மோடி' மஸ்தானின் தேர்தல் சூட்டில் நாடே காற்று வாங்கி வரும் இந்த வேளையில், காயலம்பதியினர் சுவாசிக்கும் காற்று மாசு பட்டு வருகிறது என்பதை குஜராத் பூகம்பம் மூலமாக தெளிவு படுத்தும் இந்த கட்டுரை நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இது போன்ற கட்டுரைகள் தான் நமது தேவையை நமக்கே எடுத்து காட்டுகிறது. ஊடகங்களும் இது போன்ற கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டும்.
கல்வியை தருவது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அந்த கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு சாராயத்தை காய்ச்ச போய்விட்ட அரசாங்கத்திற்கு நமது பிரச்சனை கண்ணில் படாது. நாம் தான் அதை தெரிய வைக்க வேண்டும். ஊடகங்கள் தான் அந்த வேலையை கையில் எடுத்து போராட வேண்டும்.
அதனால் தான் ஊடகங்களை ஒரு நாட்டின் நான்காவது தூணாக சித்தரிக்கின்றனர்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளில் சிக்கி தவிக்கும் நாடுகளில் கூட ஊடகங்கள் மனது வைத்ததால் பிரச்சனைகள் தீர்ந்த வரலாறு நிறைய உள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை ஊடகங்களின் சக்தி வீணாகி வருகிறது.
நம்மை பொறுத்த வரை நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு அறியவும், அரசியலாளர்களின் அறிக்கை பலத்தை அறியவும் மட்டுமே ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம் என்பது வெட்கக்கேடு. இது போன்ற கட்டுரைகளை காண்பதைவிட அந்த மாதிரி படங்களுக்கு வரும் 'லைக்' அதிகமாக இருக்கிறது. ம்ம்ம்ம் என்ன செய்ய?
டி சி டபிள்யு - ஒரு முற்றிய நோய் கிருமி. அதனை அழிப்பது மட்டுமே நமது சுற்றுபுறத்திற்கு நல்லது. ஒரு லட்சம் கையெழுத்து மட்டுமல்ல, கரங்களும் இணைய வேண்டிய வேளை வந்து விட்டது.
சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் டி சி டபிள்யு இல்லாமல் போக வல்ல ரஹ்மானிடம் கரமேந்துவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross