இணையதள இனிய வாசகர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்மைப் பற்றி புரிந்து கொள்வது?
நாம் யார்? நமது செயல்பாடுகள் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளச் சொல்கிறார்கள் அறிஞர்கள். தன்னை அறிந்தவன் தலைவன் ஆகலாம் என்றார் ஒரு கவிஞர். ஒவ்வொருவரும் தனக்குள்ள
வருமானத்தில் செலவு செய்து கொள்ள பழக வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான வழக்கமாக்கிக் கொண்டால்தான் கடன் இல்லாத வாழ்வு கிட்டும். கடன் அன்பை முறிக்கும் என்பதுபோல் பழகிய
நண்பர்களிடமும் அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கக் கூடாது என்ற சபதம் மனதில் வைரம்போல் பதிக்க வேண்டும். நாம் பணி செய்யும் முதலாளியிடம் கடன் பெறலாம். தொழிலில் கடன் ஏற்படுவது
சகஜம். அதை போற்றி பாதுகாத்து கடனைத் திருப்பிக் கொடுக்கும் மனப்பக்குவம் பெற வேண்டும். இஸ்லாமிய அமைப்பில் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் மரணமடைவது பெரிய குற்றமாக
கருதப்படுகிறது. திரும்பக் கொடுக்க மனமின்றி கடன் வாங்குவது திருடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
ஆசைக்கு அடிமையானால் கடன்பட்டு ஆக வேண்டும். நண்பனுக்கு கடன் கொடு. திருப்பிக்
கேள். நண்பனை இழந்து விடுவாய். – ரஷ்ய பழமொழி.
கடன் ஏற்பட முக்கிய காரணம் நிறைய சொல்ல முடியும். இக்கட்டுரைக்காக ஒரு சிலவற்றை எடுத்து வைக்கிறேன். வருவாய்க்கு தகுந்தபடி செலவு செய்ய பழகுதல் பற்றி முதல் கட்டம் மேலே
கூறிவிட்டேன். வெளிநாட்டுக்கும் நம் நாட்டுக்கும் சம்பாதிக்கும்முறையில் சில வேறுபாடுகள் காணப்படுகிறது. நம் நாட்டில் குடும்பத் தலைவர் ஒருவர்சம்பாதித்து பல சாப்பிடுவார்கள். சம்பாதித்து
தரும் வயதில் இளைஞர்கள் தந்தையின் கஷ்டத்தை உணர்வதில்லை. எந்த வேலைக்கும்போவதில்லை. தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் மார்தட்டுவார்கள்.
கிடைத்தவேலையை தக்கவைக்க தெரியாது. வேலை கிடைத்த ஸ்தாபனத்தில் உள்ள முதலாளி, மானேஜர் - சகதொழிலாளிகள் சரியில்லை என்று குற்றம்சாட்டி ஸ்தாபனத்தை விட்டு வெளியோறி
வீட்டுக்குச் சுமையாக ஊர் சுற்றுபவர்கள் நம்மைப் பற்றியும் - நம் குடும்பத்தைச் சுற்றிலும் உள்ள குடும்ப செலவு பிரச்சனைகள் பற்றி மூத்தபிள்ளைகளில் பலர் படித்திருந்தும் உணர்வதில்லை.
அவர்களை குறை கூறுவது என் நோக்கம் அல்ல. நாட்டின் நடப்பை பல்வேறு நூல்களில் படித்துவிட்டு கேட்ட தகவல்களையே எழுதுகிறேன். வெளிநாடு என்றால் (இலங்கை, பங்களாதேஷ் தவிர) மற்ற
நாடுகளில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கிறார்கள். சந்தோஷமாக செலவு செய்து வாழுகிறார்கள். சம்பாதித்த பணம் இதனால் மீதப்படுகிறது. பலவற்றில் முதலீடும் செய்ய முடிகிறது.
இதனால் குடும்ப வாழ்வு குதூகலம் அடைய முடிகிறது. திட்டம் இட்டபடி கணக்கிட்ட வருவாய்க்கு செலவு செய்ய முடிகிறது. எல்லோரும் அவரவர் தகுதிக்கு வயதுக்கு தகுந்தார்போல் 24 மணிநேரம்
எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை தேவைக்கு மட்டும் வாங்குகிறார்கள். இதனால் கடன் வாழ்வு இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை கோடையில் உல்லாச பயணம்
வெளிநாட்டவர்கள் நம் நாட்டுக்குள் வருவோரை பேட்டி கண்டுபாருங்கள். நம்நாடும், நம் ஊரும் அது தலைகீழ் பாடமாக இருக்கும்) கோடைவிடுமுறையில் உல்லாச பயண செலவுக்கு எத்தனை
குடும்பம் பணத்தை சேர்த்து நாடுநாடாக போகிறது எண்ணிப் பாருங்கள்.
நம்ம ஊர்காரர்களுக்கு கொடைக்கானல், குற்றாலம் அல்லது ஊட்டி, ஏற்காடு மிஞ்சிப் போனால் சிலர் ஆக்ரா தாஜ்மஹால் போய் கண்டு வருகிறார்கள். கோடை விடுமுறையில் சிங்கப்பூர், மாலத்தீவு, லண்டன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு எத்தனை குடும்பம் இதுவரை போய் வந்திருக்கிறது.?
ஊரில் ஒருவர் இருவர் எண்ணி விரல் மடக்கலாம். நம்மைப் பற்றியும் நம்மை சுற்றியும் இனியாவது அறிந்து இன்ஷாஅல்லாஹ் திட்டமிட்டு இஸ்லாமிய கலாச்சார பூமி நாடுகளுக்காவது சேர்ந்து
உல்லாச பயணம் போகலாம். முதலில் நாடுங்கள். முயற்சி எடுங்கள். பணத்தை செலவு போக சேமியுங்கள். கூட்டாய் குதூகலமாய் உள்நாடு> வெளிநாட்டுப் பயணம் குடும்பத்தோடு நண்பர்களோடு
புறப்படலாம். சிக்கனமாக செலவு செய்வது குடும்பத்துக்கு நல்லது. சேமிப்பு நாட்டுக்கும் டூர் போக நல்லவைகளாக அமையும். ஹிஜ்ரத் என்பதே பயணம்தானே! இதனால் பல நாடுகளை புரிந்து கொள்ள
முடியும்.
புரியாத பேச்சுக்;களை நிறுத்துவார்களா?
நம் ஊரில் ஒருவரை ஒருவர் சந்தித்தால் சீதேவி வாங்க என்று அழைப்பது காயல்பதி முஸ்லிம்கள்தான். இப்படி சீதேவி என்ற வார்த்தையை மிகுதியாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் காயல்பட்டினம்
முஸ்லிம்கள் சீதேவி என்றால் கண்ணியமானவன் என்று நம்புகிறார்கள். இதுபுரியாத ஒரு வார்த்தை தமிழகராதியை புரட்டிப் பாருங்கள். சீதேவி என்றால் உயர்ந்தவன் கண்ணியமானவன் என்றுதான்
அர்த்தம் போடப்பட்டிருக்க வேண்டும். இல்லையே. ஆனால் சீதேவி என்றால் லக்குமி என்று இந்துக்களின் கடவுள் பெயரைப் பார்க்கிறோம். லக்குமி என்ற சொல்லை வேறு இடத்தில் தமிழகராதி
சாதாரணமாக ஒன்றும் தெரியாத முஸ்லிம் மக்கள் சீதேவி என்று சொன்னால் அது தெரியாமல் வந்து ஒட்டிக் கொண்டது என்று விட்டு விடலாம். ஆலிம்களும்,முஅத்தின்களும் வியாபாரிகளில் பலரும்
சீதேவி வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள். சீதேவி என்ற சொல்லை 'சீ'யை பிரித்துப் பார்த்தாலும் 'தேவி'யை தனியாக ஆக்கினாலும் தமிழகராதி ஒரே பதில் இலக்குமி என்று இருப்பதால் இனி
முஸ்லிம்கள் கண்ணியம் நாடினால் ஸாலிஹீன் என்று அழைக்கலாமே. 'ஸாலிஹீன்' என்ற சொல் அரபிச் சொல்லாகும். இனியாவது புரிந்து பேசிப் பழகுங்கள்.
இதற்காக நான் 2005 முதல் (சென்னையில் இருந்த காலம் தொட்டே) சென்னையில் வாழும் சில முஸ்லிம்களுக்கு புரிய வைத்து வந்துள்ளேன். தங்க நகையில் மகாபாரத மாலை, கோபி கட்டிங்
செயின் இதுவெல்லாம் யார் கலாச்சார சொல்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? பெரிய தங்கமாலைக்கு மஹாபாரத மாலையாம். ஏன் முஸ்லிம்கள் அந்த மாலைக்கு மொகல் மாலை அல்லது
மொகலாயர் மாலை என்று பெயரிட்டு அதை நமது முஸ்லிம் பெண்களில் கழுத்தில் போடலாமே. ஒவ்வொரு ஆசாரிகளும் பல முஸ்லிம் வியாபாரியின் கையில் தொழில் செய்கிறார்கள். ஆனால்
அவர்கள் இந்த பெயரை வைக்கவில்லை. யாரோ வடநாட்டு வியாபாரிகள் வைத்த பெயராக தெரிகிறது. கோபி என்றால் யார் கிருஷ்ணன் ஒரு கடவுள். அந்த பெயரில் கோபி கட்டிங் செயின் என்பதற்குப்
பதிலாக தாஜ் கட்டிங் (முஸ்லிம் கட்டிடக்கலை நினைவுபடுத்தி) இப்படி மாற்றி அமைக்கும்படி சென்னை நகைக் கடை பெரிய வியாபாரிகளை சந்தித்து சொன்னேன். அத்துடன் சீதேவி என்று
அழைக்கும் முறைக்குப் பதிலாக ஸாலிஹீன் என்று அழைக்கும்படி அன்றுமுதல் இன்றுவரை சொல்லி வருகிறேன்.
(புத்தியின்றி சொன்னது ஒரு காலம். அறிந்து சொன்ன பின் ஏன் சிலர் பிடிவாதமாக மாற்றத் தயங்குகிறார்கள்?) எதை எங்கு சொன்னாலும் குறிப்பாக முஸ்லிம்களின் புனித இடம் ஐங்காலத் தொழுகை
பள்ளிவாசல் இதற்குள் எந்த வார்த்தை பேசினாலும் அதன் ஒலி அலை பள்ளிவாசலை சுற்றி நிற்கும். அதற்காகத்தான் நம்முன்னோர்கள் பள்ளிவாசலில் அல்லாஹுவையும் அவன் தூதரையும், மார்க்கச்
சட்டங்களையும் பேசும்படி கூறி வந்தார்கள் என்பதை உணர முடிகிறது. சீதேவி –லட்சுமி (லக்குமி) கடவுள் பெயர் பள்ளிவாசல்களில் ஒலி அலையாக வியாபித்து இருக்க விரும்புகிறீர்களா சிந்தியுங்கள்.
முற்காலத்தில் காயல்நகரில் குருசுமணி (சிலுவை) அடையாளம் போட்ட நகையை ஜன்னல் கம்பிக்கு இடையே சிலுவை அடையாளத்தை மரவேலை கிறித்துவ ஆசாரிகள் செய்ததும் பிற்காலத்தில்
குருசுமணி என்பதை கர்சமணி நகை என்று பெயரிட்டு ஏமாற்றிய வார்த்தை ஜாலங்களை நம் அறிவால் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா பத்திரிகையில் ஒரு
கட்டுரை 15 வருடங்களுக்கு முன் முழுமையான யூத, கிறித்துவ தந்திரங்களை சுற்றி காட்டி எழுதி உள்ளேன். தவறு என்று தெரிந்த பின்னும் சொல்லாமல் எழுதி காட்டாமலும் இருப்பது எழுத்தாளருக்கு
நல்லதா? புரியவைப்பது எங்கள் கடமை புரிந்து செயல்படுத்துவது உங்கள் கடமை. பிற சமூகத்தை இழிவுபடுத்தக் கூடாது. அதற்காக நாம் தவறு என்று தெரிந்தால் நளினமாக எடுத்து சொல்லலாமே!
அதிலிருந்து ஏன் விலகி நம் சமூகத்திற்கு நாம் செய்யும் உன்னத சேவையாகும் என நான் நினைக்கிறேன்.
வட்டியில்லாத கடனா? திருப்பி தந்தவர் யார்?
சில ஏழை பெண்கள் வட்டியில்லாமல் கடன் பெற்றுத் தர முடியுமா? என்கிறார்கள். அவர்களில் சில பெண்களிடம் தங்க நகை கேட்டா அது பேங்க்கில் வைத்து வட்டியில் வைத்து ஏறியிருக்கிறது
என்கிறார். யாருடைய நகைகளையோ கொண்டு வந்து தருகிறார்களாம். நகை யாருடையது என்று கேட்டால் தோழியிடம் வாங்கினேன், மச்சியிடம் வாங்கினேன் என்று சம்பந்தமில்லாமல்
கூறுகிறார்கள்.
நமதூரில் இரண்டு பைத்துல்மால்கள் உள்ளது. அவர்களிடம் போய் நகை கொடுத்து விபரம் சொல்லி கடன் கேட்கலாமே என்றால் ஏற்கனவே அங்கு நகை கொடுத்து உரியகாலத்தில்
திருப்பாமல் இருக்கிற விபரம் தெரியவருகிறது.
உலக காயல் நலமன்றங்கள் ஜகாத் பணத்தை இப்படி கஷ்டப்படும் வறுமை பெண்களுக்கு கொடுத்து உதவலாமே என்று யோசனை கூற நினைத்தால்
அவர்கள் உதவி செய்திருப்பது வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக ஒரு பிரம்மைதான். ஆனால் அவர்களுக்கு எத்தனை வகையான குடும்பசுமை. அதையும் நாம் எண்ணிப் பார்க்க கடமை பட்டுள்ளோம்.
எனக்குத் தெரிந்த பலர் குடும்பத்திலுள்ளவர்களை நன்கு கவனித்து வீடு கட்டி நகை கொடுத்து திருமண செலவு செய்திருக்கிறார். தொழிலுக்கும் பணம் தந்துள்ளார். சில மாப்பிள்ளைமார்களிடம்
கடுமையான உழைக்கும் திறன் குறைவு. வாப்பா,. மாமா தருவார் என்ற எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை.
உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைக்க வாழ்ந்திடாதே என்ற கவிதை வரியை
பலமுறை படித்துப் பார்க்கட்டும். வெளிநாட்டில் வேர்வை சிந்தி கடும் உழைப்பில் ஓய்வின்றி பணம் சம்பாதிப்பதை நமதூரில் பலர் மறந்து விடுகிறார்கள். 'கடன் வாங்கி கடன் கொடுத்தவன் கெட்டான்.
மரம் ஏறி கைவிட்டவன் செத்தான்' என்ற பழமொழியை எண்ணிப் பாருங்கள். நன்றாகப் புரியும். கடன் தொல்லை முற்றிலும் நீங்க, வீண் செலவை குறைக்க வேண்டும். ஆண்பெண் இரு பாலர்களும்
அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்போல் உழைக்க வேண்டும். தொலைக்காட்சியி;ல கண்ட பொருட்களை அனைத்தும் தேவையில்லாமல் வாங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். சுவருக்கு டைல்ஸ் ஒட்டி
மார்பிலள் ஒட்டி கண்ணாடி போன்று பாலீஸ் செய்து அதில் தண்ணீர் பட்டு வழுக்கி விழுந்து முட்டை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய் அதன் மூலம் கடனுக்கு மேல் கடன் ஏற்படுத்திக்
கொள்வது யார் உனக்கு கற்றுத் தந்த பாடம்?
கணவனின் அல்லது தந்தையின் வருவாய்க்கு தகுந்த செலவை செய்தால் ஏன் கடன் வரப்போகிறது? தெரியாத நபரிடம் கடன்வாங்கி அதை யாரிடமும்
சொல்லாமல் மாப்பிள்ளையிடம் மறைக்கும் நமதூர் பெண்கள் பற்றி சம்பாதிக்கும் மாப்பிள்ளைக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. தங்க வளையல்களை தோழியின் கடனுக்காக கொடுத்து ஏமாந்த
பெண்களை என்ன சொல்வது? எங்கிருந்தோ தோழி வந்தா பாசத்துடன் பசப்பினாள். காப்பு வாங்கினா. தங்க காப்போடு தலை மறைந்து விட்டது. பலருக்கும் ஊரில் தெரிந்த விசயம்தான். சிக்கன வாழ்வு
கடனை கொண்டு வராது என்பதை எண்ணிப் பார்த்து வருவாய்க்குத் தகுந்தார்போல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மகளிர் இனம் கோடைகால விடுமுறைக்காக பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது.
காரணம் ஏப்ரல் முதல் ஜூன் வரை கொளுத்தும் உஷ்ணம் பள்ளி மாணவர்களை பாதிக்க விடாது அரசு அக்கறை காட்டி விடுமுறை தருகிறது. கோடை விடுமுறையை நல்லவிதமாக பயன்படுத்த
படித்த பெற்றோர் சிலர் புரிந்து செயல்படுகிறார்கள்.
கோடைவிடுமுறையில் நடக்கும் விசேசப் பயிற்சி பள்ளிகள் விபரம் வருமாறு:
பள்ளிபோல் காலை மாலை வகுப்புகள் நடைபெறாது. அப்படி நடத்துவதும் கூடாது. அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது. ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.
வாரம் ஒருநாள் ஞாயிறு விடுமுறை (கால், அரை, முழு ஆண்டு விடுமுறை. விடுமுறையே மணாவர்கள் ஓய்வு எடுக்க செய்வதுதானே அரசுக்கு நோக்கம்)
கம்யூட்டர் பயிற்சியை பயன்படுத்துங்கள்:
நமதூரின் கம்ப்யூட்டர் கல்வியில் ராஜாவாகத் திகழும் மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடாமியில் கோடை விடுமுறை காலத்தில் பள்ளி மாணவர்கள்> தமிழ்> அரபி டைப் எழுத்து படித்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தை தமிழுக்கு மாற்றும் கலையை கற்றறிந்தால் இணையதளத்தில் மின்அஞ்சல் மூலம் எழுத்துக்களை வேகமாக தவறின்றி அடித்து பழகலாம். கணக்கியல் TALLY யும் மாணவமாணவியர்
படித்து அறியலாம்.
உருவமற்ற ஓவியப் பயிற்சி கற்கலாம்:நமதூரில் கடந்து ஒன்பு வருடங்களாக நேரடி ஓவியப் பயிற்சி ALS School of Arts பாலர் பள்ளி நமதூரில் கடந்த ஒன்பது வருடங்களாக சொல்லித் தரப்படுகிறது.
Basic Arts, Outline Arts, Mixing colours படிப்புகளை அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லித் தருகிறார். 2014 ஆம் ஆண்டு துவங்க உள்ளார்கள்.(கிழக்குப் பகுதியில் ஒன்பது வருடத்தில் 350 மாணவ, மாணவியர்கள் ஓவியம் கற்றார்கள்.) அவர்களில் 250 பேர்கள் வடபகுதி சிறுவர் சிறுமியர்கள். ஆட்டோவில் வந்து கற்றதால் 2014 வடபகுதி அல்து L.F.வீதி (பழைய ஷிபா ஹாஸ்பிட்டல் நடந்த கட்டிடத்தில்) நடத்தப் போவதாக தெரிகிறது.
பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டால் செய்முறை பயிற்சியில் ஓவியம்
கண்டிப்பாக தெரிந்தால் நல்லது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பில் நுழையும் போது டாக்டர் படிப்பு> என்ஜினீயர் படிப்பு> பி ஆர்க் (கட்டிடக் கலை வரைபடம்) வகுப்புக்கு கைகொடுக்கும்
பெண்களுக்கு எம்பிராய்டரி> பேஷன்டிசைன் டிரஸ் உருவாக்க ஓவியம் மிகுந்த பலனைத் தெரிகிறது. நமதூர் கம்யூனிட்டி காலேஜில் நுழைய ஓவியப் படிப்பு உற்ற தோழியாகும் என்பதை என்பதை
டி.எஃப்.டி. மாணவியர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்.
கல்லூரி மாணவியர்களுக்கு ஓவியப் பயிற்சி தர இயலாது. காரணம் காயல்நகர கலாச்சாரத்தில் குமரிப் பெண்களுக்கு கற்றுதர முடியாது. (ஆலிம்கள் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்) அதனால் பள்ளியில் படிக்கும் மாணவியர்கள் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஓவியம் கற்று மேலும் ஓவிய நூல்களை துணை கொண்டு
ஓவியம் தெளிவாக சிறந்த முயற்சியுடன் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். பேஷன் டிசைன் கற்றுக் கொண்ட அக்பர்ஷா நகரில் வாழும் ரைஷா டி.எப்.டி. என்ற பெண் ஒரு மகளிர் கல்லூரியிலும்
பேஷன் டிசைன் கற்று தருகிறார்கள். அவர்களிடம் அருகாமையிலுள்ள மாணவியர்கள் கோடைகாலத்தில் எம்பிராய்டரி பூவேலைகளை நல்ல முறையில் கற்க கேட்கலாம். (எனது அபிப்பிராயமே). பயிற்சி தர அருமையானவர்கள் கண்ணியமான பெண் ரைஷா டி.எப்.டி.
உடல்ரீதியான கலை:
உடல் சம்பந்தமான தற்காப்பு கலை கராத்தே கோடை விடுமுறையில் கற்றுத் தர இர்பான் சார்> மாஸ்டர் பிலால் போன்றோரிடம் மாணவர்கள் சென்று கற்கலாம். பஞ்சாயத்து வீதியில் பெண்களுக்கு
யோகா பெண் மாஸ்டர்களால் சொல்லித் தரப்படுவதாக தகவல் வருகிறது. காயல்நகரில் சில பள்ளிகளில் முக்கிய பொறுப்பு வைப்பவர்கள் கூட யோக முறையை செய்து வருகிறார்கள். யோகா
மூலமாக மூசச்சுப் பயிற்சி செய்தால் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் அவர்கள். தொழுகை முறை ஓர் உடற்பயிற்சி முறை. நிலை> ருகூவு> சுஜூது சரிவர செய்தால் என்கிறார்.
ஹிந்தி மொழி அரபி மொழி:
உள்நாட்டில் அரசு வேலைக்கு ஹிந்தி மொழி தேவைப்படுகிறது. அரபுலகம் சென்று உடனே பேச அரபி மொழி உடனடி கைகொடுக்கும். ஸ்போக்கிங் இங்கிலீஷ் கற்று L.T. இப்றாஹீம் (பிரைட்
ஸ்போக்கிங் பயிற்சி வகுப்பு நடத்துவார்கள்) இதுதவிர நீச்சல் பயிற்சி> தற்காப்புக் கலையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி> சிலம்பாட்டம்> வாள் சண்டை> வில்வித்தை, நடைபயிற்சி> ஓட்டப்பந்தயங்கள்>
குண்டு வீசுதல் போன்ற விளையாட்டையும் கற்றுக் கொண்டால் நாட்டுக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தர முடியும். கோடை விடுமுறை அதற்கான பாசறை பயிற்சிக் கூடமாகும். நேரத்தை நன்றாக
செலவு செய்ய அரசு நூலகம் வாருங்கள். நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். விடுமுறை காலத்தில் இதை ஓர் பயிற்சி ஆக்குங்கள். நல்வேறு ஊர்கள்> நாடுகள் பெற்றோர் நண்பர்களுடன் கூட்டமாகப்
போய் குறிப்பு எழுதி வந்து இணையதளத்தில் வெளியிடுங்கள்.
மார்க்க சம்பந்தமான நூல்களை மத்ரஸா சென்று பெற்று படித்து குறிப்பு எழுதி வையுங்கள். குர்ஆனை ஸனது முறைப்படி ஓடி பயிற்சி பெற நல்லதொரு நேரம்தான் கோடை விடுமுறை நாளாகும்.
வீணாக ஊர் சுற்றாமல் நல்ல திட்டத்துடன் பயணங்களை தொடருங்கள். உங்கள் பயணங்களின் குறிப்புகளை இணையதளத்தில் வெளிச்சம்போட்டு ருசிகரத் தகவல்களாகத் தாருங்களேன்.
|