நமது கட்டுப்பாட்டுக்கு அடங்காத பிரச்சினைகளை சமாளிக்க பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும். எண்ணம், பேச்சு, செயல், இந்த மூன்றிற்கும் சம்பந்தம் இருப்பது அவசியமாகும். நம்மை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணுவதே ஒரு முக்கியமான அறிவுரையாகும். பிரச்சனைகளில் அல்லது சோதனைகளில் சோர்வடையாமல் இன்பம் அல்லது வேதனை, கஷ்டங்களில் ஏற்படும் விரக்தி அடையாமல், தோல்வியில் மனம் உடைந்து போகாமல் சாதனைகள் புரிய முயற்ச்சிக்க வேண்டும்.(Try try again you will Succeed!) என்று எழுதுகிறார் ' சாதிக்கலாம் வாங்க' நூலாசிரியர் தில்லி இரா வைத்திய நாதன் அவர்கள். (நமதூர் அரசு கிளை நூலக வரிசை எண் 21763)
சாதனை புரிபவர்களுக்கு நம்முடைய செயல்களை பிறர்க்கு நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறர்க்கு உணர்த்தவேண்டும். அது மட்டும் அல்ல சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயல்கள் ஆகின்றனவா என்பதை அறிந்தபின் செயலாற்றவேண்டும். சாதனை புரிய இதுவும் ஒரு வழியாகும். நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.படிக்கும் நூல்கள் மூலம், சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாதனை புரிய வழி இருக்கிறதா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமை. நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் வேகமாக அல்லது விரைவாக செயலில் இறங்க வேண்டும். சாதனை புரியும் வழியை கண்டு பிடிக்க பல்வேறு தொழிலதிபர்களின் வாழ்க்கையை படித்து தெரிந்து கொள்ளலாம் . உதாரணமாக : கல்வித்தந்தை எல். கே. லெப்பை தம்பி கல்வியின் பால் காட்டிய அக்கறை, அவர்களும் படித்து, நமதூர் மக்கள் அனைவர்களையும் படிக்க எடுத்த முயற்ச்சியால் தான் இன்றும் நாம் அவர்களை நினைத்து பார்க்கிறோம்.
இது போல உயர் கல் வியாபாரி(gems) ஆனா. கானா அவர்களின் தளராத சிந்தனையால் தான் இலங்கை கொழும்பு நகரில் தனித்து நின்றும், நேர்மையான வர்த்தகத்தின் மூலமும் தர்மசிந்தனையுடன் சாதனை புரிந்து காட்டிய நாட்களை நமது வாரிசுகள் பார்வையில் வைக்க விரும்புகிறேன்.1954 ல் நமதூர் குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி ஜில்லா போர்டு கலெக்டரிடம் ரூ.51000 அன்று கொடுத்ததினால் தான் இன்று 5 நாளைக்கு ஒரு முறையாவது தண்ணீர் கிடைக்கிறது. இந்த சாதனைக்கு அன்று அவர்கள் பணத்தை கொடுக்க தயக்கம் காட்டி இருந்தால், குடிதண்ணீர் நிலை எப்படி ஆகி இருக்குமோ தெரியாது.(இந்த தகவலை முத்துச்சுடரில், "காயல் நகரில் முதல்முதலில்" என்ற தொடரில் 1978 முதல் 1998 வரை வெளியான 250 குறிப்புகளில் ஒன்றாகும், இன்னும் ஊருக்கு உழைத்த உத்தமர்கள் குறித்து அதில் நிறையவே உள்ளது).
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு, என்ற வேதாந்த குரலுடன் வெள்ளைக்காரன் இங்க்லீசை படிக்க மாட்டோம் என்று சுதந்திர தாக வேட்கைகாலத்திலேயே படிக்காமல் இருந்த முஸ்லீம்கள் அவசியம் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார் முஹம்மத் அலி, சௌக்கத் அலி. அறிஞர் ஜின்னா இந்தியா பிரிவதற்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்ப்போம் ஆனால் அவன் மொழியை அல்ல என்று முழக்கமிட்டு அது தமிழகம் பரவி நின்ற பொது காங்கிரஸ் வாதியாக இருந்த எல்லா மத மக்களும் ஆங்கிலத்தை படிக்க ஆர்வம் காட்டினார்களாம். அப்பொழுது தான் கிழக்கு பகுதி சிந்தனை வாதி சேனா ஈனா கிதுரு முஹம்மது என்ற பெரியார் தன குழந்தைகளுக்கு ஆங்கில கல்வி கற்றுத்தருவேன். அதன் மூலம் நமதூரில் டாக்டர் இல்லாத குறையை நீக்கிக் காட்டுவேன் என்ற சபத சொல்லும், இறைபக்தியும், பிராத்தனையும் இணைந்து முதல் கண் மருத்துவர் செய்து முஹம்மது அவர்களை தந்த பெரியார் குடும்பத்தில் இன்று பதினோரு டாக்டர்கள் என்று நினைக்கும் பொது உள்ளம் பூரிக்கிறது.
சாதனையாளர்கள் வரிசையில் ஊருக்கே பெருமை தேடித்தந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த தௌலத் ஹாஜி அவர்களின் மகன் மருத்துவர் டாக்டர் கிஸார் D.C.H இப்படி கிதுரப்பா அவர்களின் மகன், பேரன், இப்படியாகத்தான் பட்டியல் கணக்கிட்டு தந்தேன். பொதிகை சாரல் மார்ச் 2012 - இதழ் பக்கம் 7-ல் மனித நேசமும் என்றும் நிரந்தரமில்லை என்று காயங்களை கட்டளையாக்கி இதயதூணில் வீண் ஆசைகளுக்கு வேலியிட்டு சாதிக்கும் எண்ணம் என்றும் உதித்தால் உன் வாழ்வில் வெற்றி உதயமாகும். உயிர் நண்பனும் திசை மாறலாம், இன்று விரும்பியவர்கள் நாளை வெறுக்கலாம். ஏனெனில் எதுவுமே நிரந்தரம் இல்லை துடிப்புகள் எதிர்நீச்சலை போடா அழைக்கலாம். முன்னேறினால் வெற்றிகள் நமக்கு நிரந்தரமாகும். நினைக்கும் சாதனை கைகூடலாம், கைகூட கடின உழைப்பு, கூட்டு முயற்சி, இறைபக்தி தேவை. சாதனை படைத்தவர்களின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் கடுமையான உழைப்பு, தளராத முயற்சி, கலந்தாலோசிப்பது, முடிவடுக்கும் முன் யோசிக்க வேண்டும்,யோசித்ததை உடனே எழுதவோ, பேசிடவோ கூடாது என்கிறார்கள் சாதனை படைத்தவர்கள் குறிப்பாக வி.ஜி பன்னீர் தாஸ் சகோதரர்கள், கொடைவள்ளல் சி. அப்துல் ஹக்கீம், இலங்கை பேருவலா, நளீமியா கல்லூரியை முஸ்லீம் சமுதாயத்திற்கு தந்த கொடைவள்ளல் நலீன் ஹாஜி, நல்லி குப்புசாமி செட்டியார் போன்றோர்களின் நூல்களை நான் படித்துவிட்டு, என் சொந்த நூலகமான அன்னை கதீஜா அறிவு நூலகத்தில் பாதுகாத்து வருகிறேன். இவை காலத்தால் அழியாத சாதனையாளர்களின் அறிவூற்று.
நூலகத்தின் வாடையே இல்லாத சிலர் பாதுகாத்த பழைய நூல்களை கரையான் அறித்ததாத கூறி பழைய பேப்பர் கடைக்கு போடுவதாக கேள்விப்படுகிறேன்( நமது வீட்டு தாய் பத்திரம் கரையான் அறித்துவிட்டதாக பழைய பேப்பர் கடைக்கு போட்டு விடுவோமா?) இல்லையே அதை எப்படி பாதுகாப்பது, பத்திரப்படுத்துவது, இக்கால முறைப்படி ஜெராக்ஸ் எடுத்து பத்திர படுத்திகொள்வோம். ஆனால் நமதூரில் பழைய பேப்பர் கடைக்கு சென்று பாருங்கள். ஊரில் பலபகுதில் உள்ள நூலகங்களில் உள்ள பழுப்பேறிய நூல்களை நாம் பாதுகாத்து வைத்தாலும் ஒருவர் பதவி மாறிவிட்டாலோ, அவர் இல்லாவிட்டாலோ பழைய பாதுகாப்பான நூல்களை பேப்பர் கடைக்கு போடுகின்ற அவல நிலை வேதனையாக உள்ளது.
காயல் நகர சரித்திர நூல்கள், பஞ்சாயத்து நூற்றாண்டு மலர், இன்னும் பல கொள்கை நூல்கள் பழைய பேப்பர் கடையில் போட்டுவிடுகிறார்கள். காயல் நகர் குறித்து ஆய்வு செய்யும் காலம் நமதூர் செய்திகள் யாவும் மீண்டும் மறுசுழற்ச்சி முறைக்கு போய் நமது வரலாற்று நூல்கள் காணாமல் போய்விடுகிறது. ஒருதுறையில் படித்து பட்டம் பெற்ற பின் தனிக்கருத்து ஆய்வுக்கு சென்று P.hd பட்டம் பெற நினைத்தால், அல்லது எழுத்துலகில் சாதனை பெற விரும்பினால் அந்த நூல்களை எங்கு போய் படிப்பது. எல்லாம் பழைய பேப்பர் கடையில் சங்கமாம் ஆகும் காலம் மாறவேண்டும் என்பதே என் அவா! எழுத்தாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், பதிப்பகதார்களுக்கும் தான் நூல்களின் அருமை புரியும். சாதிக்கவோ, சாதனை புரியவோ சிறந்த நூல்கள் தான் நமது நண்பனாக இருப்பான். (இன்ஷா அல்லாஹ் வளரும்) |