நகர்மன்றம்: சட்ட வழிமுறைகள்
அனைத்து நகராட்சி சட்ட வழிமுறைகளை காண இங்கு அழுத்தவும் >>
ஒரு தொழிற்சாலைக்கான உரிமம் விண்ணப்பம் குறித்த நகராட்சி சட்ட விதிகள்
ஒரு நகராட்சியின் எல்லைக்குள் அமைக்க திட்டமிடப்படும் ஒரு தொழிற்சாலைக்கான உரிமம் விண்ணப்பம் - எழுத்து வடிவில் நகர்மன்றத்தில் சமர்பிக்கப்படவேண்டும். நிபந்தனை ஏதுமின்றியோ அல்லது நிபந்தனைகளுக்குட்பட்டோ உரிமத்தை நகர்மன்றம் வழங்கலாம்.
அல்லது நகர்மன்றமானது தொழிற்சாலை முதலியவைகளைக் கட்டுதல், அமைத்தல் அல்லது நிறுவதல், அண்டையிலுள்ள பகுதியில் மக்கள் நெருக்கம் காரணமாக அல்லது அதனால் தொல்லை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் ஆட்சேபனைக்குரியது என்று அனுமதியை மறுக்கலாம்.
இது குறித்த விரிவான விதிகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் பிரிவு 250 இல் உள்ளது. பார்க்கவும் கீழே:
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
பிரிவு 250 - நீராவி அல்லது பிற விசைகளைப் பயன்படுத்தி தொழிற்சாலை, பணிக்களரி அல்லது பணிபுரியும் இடங்களைக் கட்டுதல், அமைத்தல் அல்லது நிறுவுவதற்கு விண்ணப்பம் செய்துகொள்ளுதல்.
(1) ஒவ்வொரு நபரும் :
(a) நீராவி, நீர் விசை அல்லது பிற இயந்திர விசை அல்லது மின்சார விசையைப் பயன்படுத்தக் கருதியுள்ள தொழிற்சாலை, பணிக்களரி அல்லது பணிபுரியும் இடங்களைக் கட்டுவதற்கு அல்லது அமைப்பதற்கு விரும்புதல் அல்லது
(b) விதிகளினால் விலக்களிக்கப்பட்ட இயந்திர விசை அல்லது உற்பத்தித் தொழிற்சாலை அல்லாத மேலே கூறிய நீராவி, நீர் மின்சாரம் அல்லது பிற விசைகளைக் கொண்டு இயக்கப்படும் ஒரு இயந்திரம் அல்லது உற்பத்தித் தொழிற்சாலை ஓர் இடத்தில நிறுவ விரும்புதல்
அத்தகைய கட்டுதல் அமைத்தல் அல்லது நிறுவுதல் பணியைச் செய்ய விரும்பும் ஒவ்வொரு நபரும், அப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், செய்யக் கருதியுள்ள பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி மன்றத்திற்கு எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
(2) விண்ணப்பத்தில் ஒரு தொழிற்சாலை, பணிக்களரி, பணிப்புரியுமிடம் அல்லது வளாகங்களில் ஒரு காலத்தில் பணியில் அடுத்தடுத்து அமர்த்தப்படும் பணியாட்களின் பேரளவு எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். கீழ்க்கண்டவற்றையும் கொண்டிருக்கு வேண்டும்.
(a) அரசால் இது குறித்த விதிகளின் மூலம் வரையறுக்கப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை, பணிக்களரி, பணிபுரியுமிடம் அல்லது வளாகங்களுக்கான திட்டம்
(b) இது குறித்து செய்துள்ள துணை விதிகளின் கீழ் நகராட்சி மன்றம் விசை, இயந்திரம், தொழிற்சாலை அல்லது வளாகங்கள் குறித்து கேட்கக்கூடிய விவரங்கள்
(3) மன்றம் அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின்:
(a) விண்ணப்பித்துக் கொண்ட அனுமதியை நிபந்தனை ஏதுமின்றியோ அல்லது தாம் விதிக்கத் தகுதியென கருதக்கூடிய நிபந்தனைகளுக்குட்பட்டோ வழங்கலாம். அல்லது
(b) அத்தகைய தொழிற்சாலை முதலியவைகளைக் கட்டுதல், அமைத்தல் அல்லது நிறுவதல், அண்டையிலுள்ள பகுதியில் மக்கள் நெருக்கம் காரணமாக அல்லது அதனால் தொல்லை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் ஆட்சேபனைக்குரியது என்று தாம் கருதினால் அனுமதியை மறுக்கலாம்.
(4) (3) வது உட்பிரிவின்கீழ் அனுமதியை வழங்குவதற்கு முன்பு மன்றம்:
(a) அத்தொழிற்சாலையில் பணிக்களரியில் வேலையிடத்தில் அல்லது வளாகங்களில் எச்சமயத்திலாயினும் 9 க்கு மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே சமயத்தில் வேலைக்கமர்த்த கருதப்பட்டால், அந்த தொழிற்சாலை, பணிக்களரி, வேலையிடம் அல்லது வளாகங்களின் வரைபட விவரம் தொடர்பாக கீழ்கண்டவற்றையொட்டி நகரில் அதிகார வரம்புடையவரும், 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் (மத்தியச் சட்டம் 63 / 1948) நியமிக்கப்பட்ட வருமான தொழிற்சாலைகள் ஆய்வாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும் அல்லது அத்தகைய ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் இருந்தால், இது குறித்து பொது அல்லது சிறப்பு ஆணை மூலமாக அரசால் நியமிக்கப்படும் ஆய்வாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும்:
(i) காற்றோட்ட வசதிக்கும், ஒளி வசதிக்கும் போதிய அளவுக்கு வகை செய்யப்பட்டிருத்தல்
(ii) அறைகள், கதவுகள் ஆகியவற்றின் உயரம், உருவளவை ஆகியவை போதுமான அளவு இருக்க வகை செய்யப்பட்டிருத்தல்
(iii) தீ விபத்து ஏற்படுகையில் வெளிச்செல்ல பயன்படுத்தப்பட வேண்டிய வழிகளின் தகுதி
(iv) அரசு இது குறித்து செய்யும் விதிகளினால் வரையறுக்கக் கூடிய பிற பொருள்கள்
(b) விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள காரியத்திற்காக தொழிற்சாலை, பணிக்களரி, வேலையிடம் அல்லது வளாகங்கள் கட்டிடம் அல்லது குடிசை அல்லது அமைப்பு மனையின் தகுதி குறித்து கலந்தாலோசித்து, சுகாதார அதிகாரியின் கருத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
(5) ஒரு தொழிற்சாலை, பணிக்களரி, வேலையிடம் அல்லது வளாகங்களில் ஒரு சமயத்தில் 9 க்கு மேற்பட்ட பணியாளர்கள், அது குறித்து 3 வது உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனுமதி அவ்வாறு வேலைக்கமர்துவதை அனுமதிக்கும் அனுமதியை செயல் அதிகாரியிடமிருந்து பெற்றாலன்றி மற்றபடி வேலையமர்தப்படக்கூடாது. அந்த புதிய அனுமதியை வழங்குவதற்கு முன்பு, செயல் அதிகாரி (4) - வது உட்பிரிவின் (a) கூறில் குறிப்பிட்டுள்ள தொழிற்சாலைகள் ஆய்வாளரது ஒப்புதலை அந்த தொழிற்சாலை, பணிக்களரி, வேலையிடம் அல்லது வளாகங்களின் வரைபடம் தொடர்பாக, அந்தப் பகுதியில் குறிப்பிட்டுள்ள பொருள்களையொட்டி ஒப்புதல் பெற வேண்டும்.
(6) இப்பிரிவின் கீழ் அனுமதி வழங்கப்படுவது:
(a) பழைய இயந்தரங்களுக்குப் பதிலாகப் புதியனவற்றை நிறுவுதல், கட்டணங்களை விதித்தல், அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகள் ஆகியவை தொடர்பாக வரையறுக்கப்படக்கூடிய வரையறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும்.
(b) நேர்விர்கேற்ப, 197, 199 பிரிவுகளின் விதிமுறைகளை அல்லது 208, 209 விதிமுறைகளை அனுசரித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை நீக்கிவிடுவதாகக் கருதக்கூடாது
(7)
இச்சட்டத்தில் குறிப்பாக பிறவாறாக வகை செய்யப்பட்டிருந்தாலன்றி, உட்பிரிவு (1) .இன் கீழான அனுமதி விண்ணப்பம் செயலாட்சி அதிகாரியினால் பெறப்பட்டதிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் ஆணை பெறவில்லை எனில், சாதாரணமாக விதிக்கப்படும் வரையறைகள், துணைவிதிகள், விதிமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும.
(8) தற்போது நடைமுறையிலுள்ள தொழிற்சாலைகள் தொடர்பான ஏதேனும் சட்டத்தின் கீழ் தொழிற்சாலை, பணிப்பட்டறை (அ) பணியிடம் ஏற்பளிப்பு பெற்றிருப்பின், உட்பிரிவு (4) கூறு (a) வில் மற்றும் உட்பிரிவு (5) இல் கண்டுள்ளது எதுவும் பொருந்தாது.
|
Advertisement |
|
|
|
|