டெண்டர் # 17
பணி விபரங்களை காண இங்கு அழுத்தவும் >>
பணியின் விபரம்:
நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல
இந்தப்பணிக்கு விடப்படும் எத்தனாவது அழைப்பு இது: 2
விண்ணப்பம் பெற கடைசி நாள்:
08.05.2012 மாலை 4.00 மணி
ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்:
09.05.2012 மாலை 3.00 மணி
மதிப்பீடு தொகை:
ரூபாய் 7,00,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 7000
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 1500 + 4% VAT
ஒப்பந்தகாரர் வகுப்பு:
4ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்:
3 மாதம்
பணி விபரங்களை காண இங்கு அழுத்தவும் >>
நிபந்தனைகள்:
(1) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களுக்கான விலை ரொக்கமாகவோ அல்லது செட்யூல் வரைவோலையாகவோ ஆணையாளா, காயல்பட்டணம் நகராட்சி என்ற பெயரில் காயல்பட்டணத்தில் மாற்றத்தக்க வகையில் செலுத்தப்பட வேண்டும்
(2) நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் கால அளவிற்கு பிறகு பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்படும்
(3) ஒப்பந்தக்காரர்களுக்கு எந்தவித நஷ்ட ஈடும் வழங்காமல் எந்தவொரு ஒப்பந்தப் புள்ளியையோ மற்றும் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையோ எவ்வித காரணங்கள் காட்டாமல் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஆணையாளா, காயல்பட்டணம் நகராட்சிக்கு முழு உரிமை உண்டு
(4) பணிக்கால அட்டவணை கிரையத்தொகை 08.05.2012 மாலை 4.00 மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீதுடன் அட்டவணையை பெற்றுக் கொள்ள வேண்டும்
(5) பணிக்கால டேவணித் தொகையை 09.05.2012 தேதி மாலை 3.00 மணிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
(6) ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனியாக டேவணித் தொகை ரொக்கமாக செலுத்தி, ஒப்பந்தப்புள்ளிகளுடன் டேவணித் தொகை செலுத்திய நகல் ரசீது இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி கவரில் வேலைகளின் பெயர்களை மேலே குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளிவழங்கப்பட வேண்டும்
(7) டேவணித் தொகை செலுத்தாதவர்களுடைய ஒப்பந்தப்புள்ளிபெற்று கொள்ளப்பட மாட்டாது
(8) ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த ஒப்பந்தப்புள்ளிநகராட்சி மன்றத்தில் ஒப்புதல் செய்யப்படும்
(9) நகராட்சி மன்றத்தில் குறைந்த ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் செய்துகொடுத்து வேலைக்கான உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
(10) ஒப்பந்தப்புள்ளிகளை நகராட்சி மன்றம் ஒப்புதல் செய்து கொடுத்த பின்பு மூன்று தினங்களுக்குள் ஒப்பந்தக்காரர் நகராட்சி ஆணையாளா பெயருக்கு ரூ. 20/- மதிப்புள்ள முத்திரை தாளில் வேலை ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். வேலை ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்த பிறகே நகராட்சி அலுவலகத்தில் வேலைக்கான உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
(11) ஒப்பந்தப்புள்ளிகளை நகராட்சி மன்றம் பரிசீலனைச் செய்த பின்னர் ஒப்புதல் செய்யப்படாத ஒப்பந்தப்புள்ளிகளின் ஒப்பந்தக்காரர்களுக்கு டேவணித் தொகை குறைந்தது இரண்டு மாத காலத்திற்கு பின்பு திரும்ப வழங்கப்படும்
(12) ஒப்புதல் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் ஒப்பந்தக்காரர்களின் டேவணித் தொகை, செய்து முடிக்கப்பட்ட பணியின் தணிக்கை முடிவிற்கு பின்பே திரும்ப வழங்கப்படும்
(14) செலுத்தப்படும் டேவணித் தொகைகளுக்கு நகராட்சிகளின் மூலம் எவ்வித கூடுதல் தொகையும் வழங்கப்பட மாட்டாது
(15) நகராட்சி மன்றம் ஒப்புதல் செய்து கொடுக்கும் ஒப்பந்தப்புள்ளியில் ஒப்பந்தக்காரர் பணி முழுவதும் முடித்துக் கொடுத்த பிறகே பணி முடித்தமைக்கான பில் தொகை வழங்கப்படும். பகுதி தொகையாக எதுவும் வழங்கப்பட மாட்டாது
(16) கூடுதல் விபரங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் ஆணையாளா, காயல்பட்டணம் நகராட்சி, தூத்துக்குடி மாவட்டம் தொடர்பு கொள்ள வேண்டும்
(17) வேலை உத்தரவு வழங்கப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்திற்கும் சோதனை சான்றிதழ் (Material Test Report) ஒப்பந்தக்காரரின் சொந்த பொறுப்பில் பெற்று பொறியாளரிடம் காண்பித்து அனுமதி பெற்ற பிறகுதான் பணிதுவக்கப்பட வேண்டும்
(18) வைப்புத் தொகை 1%, வருமான வரி 1%, விற்பனை வரி 2%, வருமான வரிக்கான சர்சார்ஜ் 15% மற்றும் கூடுதல் வைப்புத் தொகை 5% பிடித்தம் செய்யப்படும்