Re:... posted byAsma Sharfudeen (France )[02 February 2017] IP: 212.*.*.* France | Comment Reference Number: 45188
மாஷா அல்லாஹ்..! தமிழ் முஸ்லிம்கள் தமிழோடு பின்னிப் பிணைந்தவர்கள் என்பதை உணர்த்தும் அருமையான கட்டுரை என்னருமை தோழியின் கரங்களால்..!
ஜல்லிக்கட்டினால் ஏற்படும் தீங்குகளும் உயிர்வதைகளும், புதிய சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் சீர்திருத்தப்பட்டு நடத்தப்படாதவரை இஸ்லாமிய அடிப்படையில் அது தவறென்றாலும், அதை தடை செய்யப்பட்டதின் உள்நோக்கத்தை அறிந்த தமிழ் மக்கள், மத வேறுபாடின்றி மொழி உணர்வால் ஒரு தாய் மக்களாக ஒருமித்து குரல் கொடுத்தது, தமிழக வரலாற்றில் ஒரு சாதனையாகவும், மனிதம் அறியா "மாக்கள்" செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு சாவு மணியாகவும் அமைந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
சொல்ல மறந்தது: குட்டிப்பய is so cute..!! :) மாஷா அல்லாஹ்..!
மனமுருகி துஆ செய்கிறோம் posted byகாரைக்கால், அஸ்மா (ஃபிரான்ஸ்)[13 January 2011] IP: 77.*.*.* France | Comment Reference Number: 2254
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
SK மாமா அவர்களின் பாவப் பிழைகளை அல்லாஹுத்தஆலா மன்னித்து, அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு வாக்களிக்கப்பட்ட கப்ரின் அமைதியான தூக்கத்தை அவர்களுக்கு கொடுக்கவும், அவர்களின் நற்பணிகளுக்காக ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை அல்லாஹ்தஆலா அவர்களுக்கு பரிசளிக்கவும் மனமுருகி துஆ செய்கிறோம்.
அவர்களைப் பிரிந்து வாடும் அவர்களுடைய மகனார் என் உடன் பிறவா அருமைத் தம்பி ஸாலிஹ், சகோதரர் ஷமீம், அன்பாக பழகும் அவர்களின் துணைவியார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா அழகிய பொறுமையைக் கொடுத்து, ஆறுதல் அளிப்பானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross