Re:... posted bySiraj Eruvadi (Eruvadi)[02 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32971
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்........
சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு
உலகப் பிரசித்திப் பெற்ற இணையதளம் என்று நீங்கள் வர்ணித்துள்ள அந்த ICOP யினரின் இணையதளம் பிறை சம்பந்தமாக தொடர்ந்து பொய்ச் செய்திகளையே வெளியிட்டு வருகிறது. பிறையை யாரப்பா பார்த்தார்? என்று நாம் கேட்டால், யாரென்ரே அறியப்படாத ஒரு கிருஸ்தவர் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார் என்று போட்டோவை பதிவார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு ஷியா நாட்டிலுள்ளவர் கிடைத்துள்ளார். அல்லது வழக்கம்போல அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமாவாசை அன்று பிறை தெரியும் என்பார்கள். இது அவர்களின் வாடிக்கை.
அதனால்தான் நாங்கள் கண்ணால் பார்த்தவர்களின் முகவரியையும், அது தொடர்பான தகவலையும் கேட்கிறோம். அமாவாசை அன்று புறக்கண்ணால் தேயும் பிறை பார்க்கப்பட்டதை யாரும் போட்டோ எடுத்துள்ளீர்களா என்று நாம் கேட்டு வருவதால்தான் (நீங்கள் கூறியுள்ள உலகப் பிரசித்தி பெற்ற அந்த இணையதளம்) டெலஸ்கோப் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள் போலும்.
பிறையில் ஷியாப் பிறை, கிருஸ்தவப் பிறை என்றெல்லாம் இருப்பதாக நாம் கூறவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிற மதத்தவர்களின் பிறைத் தகவலை எப்படி ஏற்பது? என்று கேட்கிறோம். மேலும் அத்தகவல்கள்கூட பொய்த் தகவலாகவே உள்ளன. உலகப் பிரசித்திப் பெற்ற, உங்கள் அபிமானத்திற்குரிய அந்த இணையதளம் எந்த அடிப்படையில் பிற மதத்தவர்களின் பிறை சாட்சியை வெளியிடுகிறது? என்று கேட்கிறோம்.
நாங்கள் கேட்பது தவறென்றால் ஒரு கிருஸ்தவனோ, ஒரு யஹூதியோ அல்லது முஸ்லிமல்லாதவர்களோ பிறை பார்த்ததாக போட்டோ வெளியிட்டால் அதை ஏற்று முஸ்லிம்கள் செயல்படலாம் என்று காயல்பட்டினம் இணையதளம் முதலில் அறிவிக்கத் தயாரா?
ஜோர்டான் நாட்டிலிருந்த ஜோடிக்கப்படும் தகவலை ஏற்று வெளியிடும் உங்களுக்கு, உங்கள் நாட்டிலேயே உங்களுக்கு அருகாமையிலேயே வசிக்கும் எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம்பெற தயக்கம் ஏன்? நீங்கள் அறியவேண்டியவை அனேகம் உள்ளன (UT Time Conversion உட்பட).
ஹிஜ்ரி கமிட்டியினர் ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இல்லை. நீங்கள் பிறை தெரியும் என்று முன்னறிவிப்பு செய்த நாடுகளில் பிறை தெரியவில்லை என்பதை மீண்டும் நினைவூட்டி முடிக்கிறேன்.
Re:... posted bySiraj Eruvadi (Eruvadi)[01 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32958
கமெண்ட்ஸ் தொடர்ச்சி 3
சந்திரனின் அறிவியல் படி சந்திரனின் தோன்றும் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் ஒரு சில வினாடிகள் மட்டுமே சந்திரனில் ஒளி ஏற்படாது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு ஒளி ஏற்பட்டாலும் அதை பூமியில் இருந்து புறக்கண்ணால் பார்ப்பது என்பது சாத்தியமற்றது. புறக்கண்பார்வையாளர்கள் இதுவரை எத்தனை மணிநேரப்பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் சான்றுகளையும் இதுவரை உலகிற்கு சமர்ப்பிக்க முடியாமல் தத்தளிப்பதையும் உலகமே அறியும்.
மேலும், நமது ஹிஜ்ரி நாட்காட்டி கணக்கீட்டிற்கு அடிப்படையாக அல்லாஹ் அமைத்துதந்த கிப்லா பகுதியில் சந்திர மாதத்தின் கடைசி நாளில் புறக்கண்ணால் பிறையை பார்ப்பது சாத்தியமே இல்லை என்பதைதான் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.
அதைத்தான் நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு சந்திரனின் காட்சி மறைக்கப்படும் பொழுது நீங்கள் மாதத்தை கணக்கிட்டுக் எண்ணிக்கொள்ளுங்கள் என கூறினார்கள். சந்திர மாதத்தின் கடைசி நாளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே கோட்டிலோ, ஒரே நேர்கோட்டிலோ வரும் பொழுதுதான் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் இருக்கும் செயல் நடைபெறும் என்பதை காயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டு விட்டுதான், ஒளி வராது என்று ஹிஜ்ரி கமிட்டி கூறும் நாளான மாதத்தின் கடைசி நாளிலும் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்பதை பதிவு செய்து வருகின்றார்கள்.
எனவே, கடைசி நாளில் சந்திரனில் ஒளிவருமா? வராதா? பிறை தெரியுமா? தெரியாதா? எத்தனை மணி நேரப்பிறையை கண்ணால் பார்க்க முடியும்? என்பது போன்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், எது கடைசி நாள் என்பதை உலக மக்கள் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்பதை காயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டுள்ளதற்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
Re:... posted bySiraj Eruvadi (Eruvadi)[01 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32957
கமெண்ட்ஸ் தொடர்ச்சி - 2
ஈரானில் பிறை தெரிந்திருந்தால், (அட்மின்!) பட்டியலிட்ட இந்த ஊர்களில் எல்லாம் பிறை தெரிந்த பின்புதான் ஈரானில் தெரிந்திருக்க வேண்டும். அட்மின்! அவருடைய பட்டியலில் உள்ள ஊர்களில் பிறை தெரியாமல் ஷியாக்களின் கொள்கையை பரப்பும் ஈரானில் மட்டும் பிறை தெரிந்துள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.
காயல்பதியில் கூட காயல்பட்டினம்.காம் அட்மின் அவரால் தன்னுடைய நிலையை நிரூபிக்க முடியாமல் ஆனதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஈரானிய செய்தியை அடிப்படையாக வைத்து செயல்படும் இந்த இணையத்தளம் பற்றி நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் அவர் பதிந்த செய்திகளில் இருந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலைத் தராமல் வழக்கம்போல போட்டோ பிறை பித்தலாட்ட செய்திகளை ICOP யினரைப் போல வெளியிட்டு தங்கள் இருப்பை காட்டிக் கொண்டால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு எதிரான கருத்தை பதிவு செய்யும் இவர்களின் முயற்சிக்கு வல்ல அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுகிறோம்.
இந்த இணையதளத்தை நான் சாடுவதாக தயவுசெய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புரிந்து கொள்வதற்காக ஒன்றை தெளிவு படுத்துகிறேன்.
ஒவ்வொரு ஹிஜ்ரி மாதங்களின் துவக்கம் பற்றிய செய்தி இதே இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறைக் கணக்கீடு போன்ற நிலைப்பாடுகள் படி மாதம் எப்போது ஆரம்பம் என்ற கருத்தில் இங்கு செய்தி வெளியிடப்படுகிறது. அதில்கூட கணக்கீடு என்று வரும்போது கணக்கீட்டை சரிகாண்பவர்களிடம் முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் இருப்பதைப்போல 'ஹிஜ்ரி கமிட்டி கேரளா' என்று இந்த இணையதளத்தில் பிரித்து எழுதப்படுவதை நீங்களே காணலாம். பிறை கணக்கீடை சரிகாண்பவர்கள் அனைவரும் ஒரே நாளில் மாதங்களை துவங்கினாலும் ஹிஜ்ரி கமிட்டியை பிரித்துதான் எழுதுவார்கள்.
அதே நேரத்தில் தமிழகப்பிறை மற்றும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டினர்கள் ஏதே ஒரே அணியில் இருப்பதைப் போல அவர்கள் யார் யார் என்று பிரித்து எழுத மாட்டார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதன் தொடர்ச்சியை அடுத்த கமெண்டில் பார்க்கவும்.....
Re:... posted bySiraj Eruvadi (Eruvadi)[01 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32956
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்
இந்த இணையதளத்தின் அட்மின் என்ற பெயரில் ICOP சாகாக்களின் சுயகருத்துக்களையும், பொய்ச் செய்திகளையும் இத்தளத்தில் ஒருவர் தொடர்ந்து வெளியிடுகிறார். பிறை விஷயத்தில் தனிப்பட்ட மனிதர்களை அறிவு ஜீவியாகக் காட்டி கொண்டு மக்களை ஏமாற்ற நினைப்பதில் சிலருக்கு என்ன சந்தோஷமோ?
அமாவாசை அன்று தேய்பிறை பொதுவாக புறக்கண்களால் பார்க்க முடியாமல் அது மறைக்கப்படும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள் உள்ளன. அதைத்தான் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. அப்பிரச்சாரங்களை எதிர்கொள்ள திராணியற்ற ICOP என்ற குழு தொலைநோக்கி மூலம் எடுக்கப்படும் போட்டோ பிறைகளையும், பொய்யான போட்டோக்களையும் வெளியிட்டு அப்பிறைகள் புறக்கண்களால் பார்க்கப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிடுவது வாடிக்கை.
இவர்களுடைய பாணியில் பிறை பார்க்கப்பட்டதாக ஏதாவது ஒரு ஊரில் ஒருவர் கூறினால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பல வியாக்கியானங்கள் செய்து கடைசியில் டவுன் காஜியின் அறிவிப்பையோ, சவூதியின் அறிவிப்பையோ அடிப்படையாக கொண்டே மாதத்தை ஆரம்பிப்பவர்கள் ஷியாக்கள் வாழும் ஈரானில் இருந்து ஒருவர் பிறை தெரியாத நாளில் பிறை பார்த்ததாக கூறியதை அப்படியே நம்பி அதை விசாரிக்காமல் அதே பிறையை பார்த்த இன்னொரு சாட்சி யார் என்பதை எல்லாம் தெளிவுபடுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஹிஜ்ரி கமிட்டியை எதிர்ப்பதற்காக செய்திகளை வெளியிடுவதும் மேற்படி சகாக்களின் தனித்தன்மையாகும்.
21.38 UT யில் அமாவாசை நடைபெறும் நாளில் சுமார் 8:30 UT யிலுள்ள ஈரானில் தேய்பிறையை புறக்கண்களால் பார்த்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி அடிப்படையிலேயே பொய்ச்செய்திதான் என்பதை ஆய்வாளர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். அதை உண்மை என ஏற்று நம்பி காயல்பட்டினம் இணையதளமும் அச்செய்தியை அப்படியே வெளியிடுவது என்ன சாதனையோ?
அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! என்ற தலைப்பில் இதே காயல்பட்டினம் இணையதளம் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து சில சகோதரர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர் பார்க்க : http://www.kayalpatnam.com/shownews.asp?id=12910
காயல்பட்டினம்.காம் முன்பு கூறியபடி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் பிறை பார்க்கப்பட்டதா? இல்லையே!.
கமெண்ட்ஸ் தொடர்ச்சி அடுத்த கமெண்ட்ஸ் பாக்ஸில் பார்க்கவும்.
ஹிஜ்ரி 700 களில் கிறிஸ்துவ ஆண்டு உண்மையில் நடைமுறையில் இருந்ததா? posted byMOHAMED SIRAJUDEEN (Eruvadi)[19 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32103
இஸ்லாமிய வரலாற்றுச் சான்றுகளை அறிந்து கொள்வதற்காக முக்கியத்துவம் கொடுத்து ஒரு இணையத்தளம் செயல்படுகின்றது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இச்சேவையை செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்ய பிரார்த்திப்போம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளில் கிருஸ்துவ ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 700 களில் கிருஸ்துவ ஆண்டு உண்மையில் குறிக்கபட்டிக்கின்றதா? என்பதை சம்மந்தப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகளை சென்று பார்வையிட்டு இங்கு பதிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
அவ்வாறு குறிக்கப்பட்டிருந்தால் அதை தற்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அதன் உண்மை தன்மையையும், ஹிஜ்ரி 700களில் கிறிஸ்துவ ஆண்டு பின்பற்றப்பட்டுள்ளதா என்பதின் உண்மை நிலையையும் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே காயல்பதி சகோதரர்கள் இதற்கு முயற்சி செய்வார்களா?
இப்படிக்கு,
முகம்மது சிராஜுதீன்
[Administrator: சில கல்வெட்டுகளில் ஹிஜ்ரி ஆண்டுகளும், சில கல்வெட்டுகளில் கொல்லம் ஆண்டுகளும் - சில கல்வெட்டுகளில் கிழமையும் இணைந்து, இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் வழங்கும் ஆவணங்கள், பிற வாசகர்கள் தெளிவாக அறிந்துகொள்வதற்காக, சமமான கிருஸ்துவ ஆண்டுகளை இணைத்து வழங்குகின்றன. அதுவே இங்கும் வெளியிடப்பட்டுள்ளது. பின்வரும் பாகங்களில் கல்வெட்டு புகைப்படங்கள் வெளிவரும்]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross