Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:40 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12927
#KOTW12927
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 31, 2014
அமாவாசை அன்று தேயும் பிறை காணப்பட்ட காட்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3389 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகின் பல பகுதிகளில், அமாவாசை (New Moon / Conjunction) நிகழும் நேரத்தைப் பொருத்து, சில மாதங்களில், அமாவாசையன்று, அதிகாலையில் தேயும் பிறையை (Waning Crescent) காணலாம். அது போல சில மாதங்களில், அமாவாசையன்று, மாலையில் வளரும் பிறையையும் (Waxing Crescent) காணலாம். இந்த அடிப்படை விஞ்ஞான கூற்றுப்பற்றி வானியல் வல்லுனர்கள் மத்தியில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாவிட்டாலும், அமாவாசை அன்று தேயும் பிறையையோ, வளரும் பிறையையோ காண இயலாது என்று சிலரால் நம்பப்படுகிறது.

இதன் பின்னணியில் - அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம் - ஜனவரி 29 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் - ஜனவரி 30 அமாவாசை அன்று உலகின் சில பகுதிகளில், தேயும் பிறையை, கிழக்கு திசையில், சூரியன் உதயம் ஆவதற்கு முன்னர் காணலாம் என்றும் - தெரிவித்திருந்தது.

ஜனவரி 30 அன்று ஈரான் நாட்டில் உள்ள இஸ்பஹான் நகரில், அலிரெசா மெஹ்ரனி என்பவர் - உள்ளூர் நேரப்படி அதிகாலை 6:15 மணியளவில், வெறுங்கண்கள் கொண்டும், இருகண்நோக்கி (Binocular) கொண்டும் - தேயும் பிறையினை கண்ட செய்தி, Islamic Crescents' Observation Project அமைப்பின் இணையதளத்தில், புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.





Islamic Crescents' Observation Project (ICOP) அமைப்பு வெளியிட்ட அறிக்கை...

http://icoproject.org/icop/rat35.html

ICOP member Mr. Alireza Mehrani from Esfahan City in Esfahan State mentioned that the sky was clear, the atmospheric condition was clear, the crescent was seen by naked eye, the crescent was seen by binocular, the crescent was not sought by telescope, the crescent was not sought by CCD Imaging

Mr. Alireza Mehrani said: "New Moon
= = = = = =
Location: Esfahan, Iran
Latitude: 32° 35' 41.44" N
Longitude: 51° 38' 55.64" E
Elevation: 1849 meters from sea level
Time zone: +3.5

Observer & photographer: Alireza Mehrani

Date: Thursday January 30, 2014 (Bahman 10, 1392-Iranian Calendar)
Temperature: 1C°
Wind: Calm
Humidity: 80%
Barometer: 846.6 mb
Visibility: 10 km

Topocentric and local time values from "Moon Calculator" (Refrac off)

Crescent first observation through 15x80 binoculars:

Time: 06:15 LT (02:45 UT)
Moon Alt: 0° 36' 07"
Sun Alt: - (9° 45' 38")
Moon Phase: 1.16%

Crescent first observation through naked eyes:
Time: 06:26 LT (02:56 UT)
Moon Alt: 2° 42' 06"
Sun Alt: - (7° 31' 40")
Moon Phase: 1.14%

Crescent last observation through naked eyes & 15x80 binoculars:
Time: 06:30 LT (03:00 UT)
Moon Alt: 3° 27' 39"
Sun Alt: - (6° 43' 11")
Elongation: 11° 15' 37"
Rel Azi: 4° 49' 12"
Moon Width: 0.32'
Moon Phase: 1.13%
Moon Age: 18h 38m before conjunction
"


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32956

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்

இந்த இணையதளத்தின் அட்மின் என்ற பெயரில் ICOP சாகாக்களின் சுயகருத்துக்களையும், பொய்ச் செய்திகளையும் இத்தளத்தில் ஒருவர் தொடர்ந்து வெளியிடுகிறார். பிறை விஷயத்தில் தனிப்பட்ட மனிதர்களை அறிவு ஜீவியாகக் காட்டி கொண்டு மக்களை ஏமாற்ற நினைப்பதில் சிலருக்கு என்ன சந்தோஷமோ?

அமாவாசை அன்று தேய்பிறை பொதுவாக புறக்கண்களால் பார்க்க முடியாமல் அது மறைக்கப்படும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள் உள்ளன. அதைத்தான் ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. அப்பிரச்சாரங்களை எதிர்கொள்ள திராணியற்ற ICOP என்ற குழு தொலைநோக்கி மூலம் எடுக்கப்படும் போட்டோ பிறைகளையும், பொய்யான போட்டோக்களையும் வெளியிட்டு அப்பிறைகள் புறக்கண்களால் பார்க்கப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிடுவது வாடிக்கை.

இவர்களுடைய பாணியில் பிறை பார்க்கப்பட்டதாக ஏதாவது ஒரு ஊரில் ஒருவர் கூறினால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பல வியாக்கியானங்கள் செய்து கடைசியில் டவுன் காஜியின் அறிவிப்பையோ, சவூதியின் அறிவிப்பையோ அடிப்படையாக கொண்டே மாதத்தை ஆரம்பிப்பவர்கள் ஷியாக்கள் வாழும் ஈரானில் இருந்து ஒருவர் பிறை தெரியாத நாளில் பிறை பார்த்ததாக கூறியதை அப்படியே நம்பி அதை விசாரிக்காமல் அதே பிறையை பார்த்த இன்னொரு சாட்சி யார் என்பதை எல்லாம் தெளிவுபடுத்தாமல் பொத்தாம் பொதுவாக ஹிஜ்ரி கமிட்டியை எதிர்ப்பதற்காக செய்திகளை வெளியிடுவதும் மேற்படி சகாக்களின் தனித்தன்மையாகும்.

21.38 UT யில் அமாவாசை நடைபெறும் நாளில் சுமார் 8:30 UT யிலுள்ள ஈரானில் தேய்பிறையை புறக்கண்களால் பார்த்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி அடிப்படையிலேயே பொய்ச்செய்திதான் என்பதை ஆய்வாளர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். அதை உண்மை என ஏற்று நம்பி காயல்பட்டினம் இணையதளமும் அச்செய்தியை அப்படியே வெளியிடுவது என்ன சாதனையோ?

அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! என்ற தலைப்பில் இதே காயல்பட்டினம் இணையதளம் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து சில சகோதரர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர் பார்க்க : http://www.kayalpatnam.com/shownews.asp?id=12910

காயல்பட்டினம்.காம் முன்பு கூறியபடி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் பிறை பார்க்கப்பட்டதா? இல்லையே!.

கமெண்ட்ஸ் தொடர்ச்சி அடுத்த கமெண்ட்ஸ் பாக்ஸில் பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32957

கமெண்ட்ஸ் தொடர்ச்சி - 2

ஈரானில் பிறை தெரிந்திருந்தால், (அட்மின்!) பட்டியலிட்ட இந்த ஊர்களில் எல்லாம் பிறை தெரிந்த பின்புதான் ஈரானில் தெரிந்திருக்க வேண்டும். அட்மின்! அவருடைய பட்டியலில் உள்ள ஊர்களில் பிறை தெரியாமல் ஷியாக்களின் கொள்கையை பரப்பும் ஈரானில் மட்டும் பிறை தெரிந்துள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

காயல்பதியில் கூட காயல்பட்டினம்.காம் அட்மின் அவரால் தன்னுடைய நிலையை நிரூபிக்க முடியாமல் ஆனதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஈரானிய செய்தியை அடிப்படையாக வைத்து செயல்படும் இந்த இணையத்தளம் பற்றி நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் அவர் பதிந்த செய்திகளில் இருந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலைத் தராமல் வழக்கம்போல போட்டோ பிறை பித்தலாட்ட செய்திகளை ICOP யினரைப் போல வெளியிட்டு தங்கள் இருப்பை காட்டிக் கொண்டால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு எதிரான கருத்தை பதிவு செய்யும் இவர்களின் முயற்சிக்கு வல்ல அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுகிறோம்.

இந்த இணையதளத்தை நான் சாடுவதாக தயவுசெய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புரிந்து கொள்வதற்காக ஒன்றை தெளிவு படுத்துகிறேன்.

ஒவ்வொரு ஹிஜ்ரி மாதங்களின் துவக்கம் பற்றிய செய்தி இதே இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறைக் கணக்கீடு போன்ற நிலைப்பாடுகள் படி மாதம் எப்போது ஆரம்பம் என்ற கருத்தில் இங்கு செய்தி வெளியிடப்படுகிறது. அதில்கூட கணக்கீடு என்று வரும்போது கணக்கீட்டை சரிகாண்பவர்களிடம் முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் இருப்பதைப்போல 'ஹிஜ்ரி கமிட்டி கேரளா' என்று இந்த இணையதளத்தில் பிரித்து எழுதப்படுவதை நீங்களே காணலாம். பிறை கணக்கீடை சரிகாண்பவர்கள் அனைவரும் ஒரே நாளில் மாதங்களை துவங்கினாலும் ஹிஜ்ரி கமிட்டியை பிரித்துதான் எழுதுவார்கள்.

அதே நேரத்தில் தமிழகப்பிறை மற்றும் சர்வதேசப் பிறை நிலைப்பாட்டினர்கள் ஏதே ஒரே அணியில் இருப்பதைப் போல அவர்கள் யார் யார் என்று பிரித்து எழுத மாட்டார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்த கமெண்டில் பார்க்கவும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32958

கமெண்ட்ஸ் தொடர்ச்சி 3

சந்திரனின் அறிவியல் படி சந்திரனின் தோன்றும் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக மாறும் ஒரு சில வினாடிகள் மட்டுமே சந்திரனில் ஒளி ஏற்படாது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு ஒளி ஏற்பட்டாலும் அதை பூமியில் இருந்து புறக்கண்ணால் பார்ப்பது என்பது சாத்தியமற்றது. புறக்கண்பார்வையாளர்கள் இதுவரை எத்தனை மணிநேரப்பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் சான்றுகளையும் இதுவரை உலகிற்கு சமர்ப்பிக்க முடியாமல் தத்தளிப்பதையும் உலகமே அறியும்.

மேலும், நமது ஹிஜ்ரி நாட்காட்டி கணக்கீட்டிற்கு அடிப்படையாக அல்லாஹ் அமைத்துதந்த கிப்லா பகுதியில் சந்திர மாதத்தின் கடைசி நாளில் புறக்கண்ணால் பிறையை பார்ப்பது சாத்தியமே இல்லை என்பதைதான் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.

அதைத்தான் நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு சந்திரனின் காட்சி மறைக்கப்படும் பொழுது நீங்கள் மாதத்தை கணக்கிட்டுக் எண்ணிக்கொள்ளுங்கள் என கூறினார்கள். சந்திர மாதத்தின் கடைசி நாளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே கோட்டிலோ, ஒரே நேர்கோட்டிலோ வரும் பொழுதுதான் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் இருக்கும் செயல் நடைபெறும் என்பதை காயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டு விட்டுதான், ஒளி வராது என்று ஹிஜ்ரி கமிட்டி கூறும் நாளான மாதத்தின் கடைசி நாளிலும் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்பதை பதிவு செய்து வருகின்றார்கள்.

எனவே, கடைசி நாளில் சந்திரனில் ஒளிவருமா? வராதா? பிறை தெரியுமா? தெரியாதா? எத்தனை மணி நேரப்பிறையை கண்ணால் பார்க்க முடியும்? என்பது போன்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், எது கடைசி நாள் என்பதை உலக மக்கள் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்பதை காயல்பட்டினம்.காம் ஒப்புக்கொண்டுள்ளதற்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் எவ்வளவுதான் ஊதினாலும் அல்லாஹ்வின் சத்திய ஜோதியை அணைத்திட இயலுமா? சத்தியமே வெல்லும், அசத்தியம் அழிந்தே தீரும்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Salih (Chennai) [02 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32961

சகோதரர் சிராஜ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜனவரி 30 அன்று ஈரானில் அலிரெசா மெஹரானி என்பவரால் - அமாவாசை தினமான அன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 6:15 மணிக்கு (UTC 02:45) தேயும் பிறை வெறுங்கண்ணாலும், இருகண்நோக்கியாலும் காணப்பட்டது. அலிரெசா ஒரு வானியல் வல்லுநர். ஈரான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான, இஸபஹான் நகரில் உள்ள அதிப் வானவியல் சங்கத்தின் தலைவர். ICOProject, Moonsighting உட்பட பல தளங்களுக்கு பிறை தகவலை வழங்கிவருபவர்.

பல ஆயிரம் மைல் தூரத்தில் உள்ள ஈரான் நாட்டில் வாழும் அவர், ஜோர்டான் நாட்டில் இருந்து பராமரிக்கப்படும் உலகளவில் பிரசித்தி பெற்ற IcoProject.org என்ற இணையதளத்தில், இந்தியாவில் இருந்து பராமரிக்கப்படும் காயல்பட்டணம்.காம் என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு தோதுவாக, பார்க்காத பிறையை ஏன் பார்த்ததாக செய்தி வெளியிடுகிறார் (அதுவும் புகைப்படத்துடன்!) என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை :-(

தங்களின் இந்த கருத்து பதிவு பழைய சம்பவம் ஒன்றினை நினைவுக்கு கொண்டுவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அமாவாசை அன்று தேயும் பிறையை காண வாய்ப்பு இருந்தது. அவ்வேளையில் அந்நகரில் உள்ள கஸ்ஸாலி மையத்தின் தலைவர் அப்ரோஸ் அலியை தொடர்புக்கொண்டு அன்றைய தினம் தேயும் பிறை தென்பட்டால் தகவல் தரும்படி கேட்டிருந்தேன். தானும், வேறு சிலரும் அன்று தேயும் பிறையை கண்டதாக அவர் பதில் அனுப்பியிருந்தார். அந்த தகவலை ஹிஜ்ரா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அலி மானிக்பன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அத்தகவலை ஏற்றுக்கொள்ளாத அவர், புகைப்படம் வேண்டும் என்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் - தஹீடி நாட்டில், அமாவாசை அன்று, வளரும் பிறை காட்சியளித்தது. பிறை சம்பந்தப்பட்ட பல இணையதளங்களில் புகைப்படத்துடன் அது வெளிவந்தது. அதனையும் ஹிஜ்ரா குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து விமர்சித்த ஹிஜ்ரா குழு இணையதளம் ஒன்று, ஒரு கிருஸ்துவர் பார்த்தப்பிறையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கேட்டிருந்தது.

தற்போது ஷியா கொள்கையை சார்ந்த அலிரெசா மெஹரானி வழங்கிய தகவலை எப்படி ஏற்றுக்கொள்வது என்று வினவப்பட்டுள்ளது :-)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Siraj Eruvadi (Eruvadi) [02 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32971

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்........
சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு

உலகப் பிரசித்திப் பெற்ற இணையதளம் என்று நீங்கள் வர்ணித்துள்ள அந்த ICOP யினரின் இணையதளம் பிறை சம்பந்தமாக தொடர்ந்து பொய்ச் செய்திகளையே வெளியிட்டு வருகிறது. பிறையை யாரப்பா பார்த்தார்? என்று நாம் கேட்டால், யாரென்ரே அறியப்படாத ஒரு கிருஸ்தவர் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார் என்று போட்டோவை பதிவார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு ஷியா நாட்டிலுள்ளவர் கிடைத்துள்ளார். அல்லது வழக்கம்போல அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமாவாசை அன்று பிறை தெரியும் என்பார்கள். இது அவர்களின் வாடிக்கை.

அதனால்தான் நாங்கள் கண்ணால் பார்த்தவர்களின் முகவரியையும், அது தொடர்பான தகவலையும் கேட்கிறோம். அமாவாசை அன்று புறக்கண்ணால் தேயும் பிறை பார்க்கப்பட்டதை யாரும் போட்டோ எடுத்துள்ளீர்களா என்று நாம் கேட்டு வருவதால்தான் (நீங்கள் கூறியுள்ள உலகப் பிரசித்தி பெற்ற அந்த இணையதளம்) டெலஸ்கோப் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள் போலும்.

பிறையில் ஷியாப் பிறை, கிருஸ்தவப் பிறை என்றெல்லாம் இருப்பதாக நாம் கூறவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிற மதத்தவர்களின் பிறைத் தகவலை எப்படி ஏற்பது? என்று கேட்கிறோம். மேலும் அத்தகவல்கள்கூட பொய்த் தகவலாகவே உள்ளன. உலகப் பிரசித்திப் பெற்ற, உங்கள் அபிமானத்திற்குரிய அந்த இணையதளம் எந்த அடிப்படையில் பிற மதத்தவர்களின் பிறை சாட்சியை வெளியிடுகிறது? என்று கேட்கிறோம்.

நாங்கள் கேட்பது தவறென்றால் ஒரு கிருஸ்தவனோ, ஒரு யஹூதியோ அல்லது முஸ்லிமல்லாதவர்களோ பிறை பார்த்ததாக போட்டோ வெளியிட்டால் அதை ஏற்று முஸ்லிம்கள் செயல்படலாம் என்று காயல்பட்டினம் இணையதளம் முதலில் அறிவிக்கத் தயாரா?

ஜோர்டான் நாட்டிலிருந்த ஜோடிக்கப்படும் தகவலை ஏற்று வெளியிடும் உங்களுக்கு, உங்கள் நாட்டிலேயே உங்களுக்கு அருகாமையிலேயே வசிக்கும் எங்களைத் தொடர்பு கொண்டு விளக்கம்பெற தயக்கம் ஏன்? நீங்கள் அறியவேண்டியவை அனேகம் உள்ளன (UT Time Conversion உட்பட).

ஹிஜ்ரி கமிட்டியினர் ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இல்லை. நீங்கள் பிறை தெரியும் என்று முன்னறிவிப்பு செய்த நாடுகளில் பிறை தெரியவில்லை என்பதை மீண்டும் நினைவூட்டி முடிக்கிறேன்.

இப்படிக்கு
சிராஜ்
ஏர்வாடி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salih (Chennai) [02 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32975

சகோதரர் சிராஜ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

பிறை பார்க்கப்பட்டு, புகைப்படமும் வெளிவரும்போது தங்களின் கேள்வி - அறிவியல் பூர்வமாக - ஒரு பிறை காண சூரியன் - சந்திரன் மறைவுக்கு இவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும், சந்திரன் - சூரியன் பிரிவு (ELONGATION) இவ்வளவு டிகிரி இருக்க வேண்டும், ஆனால் அவை இல்லாமலேயே பார்க்கப்பட்டுள்ளதே போன்று என இருந்தால் - அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஆனால் - தங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக ஒரு தகவல் வரும்போது அதனை ஏற்றுக்கொள்ளாமல், (போட்டோ எடுத்தவர் ஷியா, தொலைநோக்கி படம் கண்ணால் பார்க்கப்பட்டதாக கூறுப்படுகிறது, ஜோர்டானில் ஜோடிப்பு என) அறிவுப்பூர்வமில்லாத குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறுவது, விசயத்துக்கு சம்பந்தம் இல்லாதவற்றை பேசுவது, அர்த்தமற்ற அவதூறுகளை கூறுவது - தமிழகத்தில் பல இயக்கங்கள் கடைபிடிக்கும் நடைமுறை. ஆகவே - தங்கள் கருத்து பதிவில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஹிஜ்ரி குழுவின் பல இணையதளங்களை, புத்தகங்களை, நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக கண்டு வருபவன் என்ற அடிப்படையிலும், அவ்வமைப்பை சார்ந்த பலருடன் பல தருணங்களில் நேரடியாகவும், ஈமெயில் மூலமும் கருத்துகள் பரிமாறியுள்ளேன் என்ற அடிப்படையிலும், இந்த இணையதளத்தில் தங்களின் கருத்து பதிவுகள் எந்த ஆச்சரியமும் ஏற்படுத்த வில்லை.

தங்கள் அமைப்பின் பிறை குறித்த பல விளக்கங்கள் - அறிவியலை விட்டு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை நீங்கள் அறியாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.

அமாவாசை அன்று பிறையை காண முடியாது என்ற தங்களின் கூற்று அதில் ஒரு உதாரணம் தான். இன்னும் பல உள்ளன.

மாத துவக்கத்தின் சில நாட்களில் பிறை ஓட்டத்தை அடிப்படையாக கொண்டு, அம்மாதத்தின் நாட்களை எண்ணிவிடலாம் என்ற தங்கள் கூற்று ...

உலகின் சில நாடுகளில், எந்த திசையில் மக்கள் கிப்லாவினை நோக்கி தொழுகிறார்கள் என்பதில் தங்கள் கூற்று ...

செய்திக்கு தொடர்பில்லை என்பதாலும், அதற்கான தளம் இதுவல்ல என்பதாலும் நீண்ட விளக்கங்களை கொடுப்பதில் இருந்து தவிர்த்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [02 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32981

சிராஜ் அவர்களுக்கு,

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஹிஜ்ரா கமிட்டியினரின் கருத்துக்களை படிக்கும் பொழுது "ஒரு வேளை நமது சமுதாயம் இவர்களின் கருத்துக்களை வானவியல் சம்பந்தமான அறிவு அதிகமானபின் ஏற்றுக்கொள்ளும்" என நினைத்தேன்.

Comment Reference Number: 32547 சொல்லியது போல் அறிவியல் விஷயங்கள் (Printing Press, Radio, Microphones in Masjid, TV, etc.) சற்று லேட்டாக மக்களுக்கு பிடிபடும் என நினைத்தேன்.

ஆனால் இப்போது ஹிஜ்ரா கமிட்டியினருக்குதான் ASTRONOMY பற்றி சரியாக தெரியவில்லை போல் உள்ளது. உங்களது வாதங்களை படிக்கும் பொழுது, நீங்கள் எத்தனையாவது நூற்றாண்டின் ASTRONOMY பற்றி பேசுகிறீர்கள் என புரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved