காயல்பட்டினம் நகராட்சியில் ஆளில்லாத பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமித்திட நகராட்சி நிர்வாக ஆணையரின் அனுமதி பெறுவதென, இம்மாதம் 25ஆம் தேதி காலை 11.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டப் பொருள்:
காயல்பட்டினம் நகராட்சியில் ஆறு மாதத்திற்கும் மேலாக காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை, காயல்பட்டினம் நகராட்சியானது - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள, நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்களின் அனுமதி பெறுவதற்குரிய முன் மொழிவினை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதிக்கு:-
இளநிலை உதவியாளர் (Junior Assistant): 2
வருவாய் உதவியாளர் (Revenue Assistant): 2
பணி ஆய்வாளர் (Working Inspector): 1
நகர்ப்புற திட்ட ஆய்வாளர் (Town Planning Inspector): 1
சுகாதாரப் பணியாளர்கள் (Sanitary Workers): 3
ஜீப் ஓட்டுநர் (Jeep Driver): 1
இவ்வாறு கூட்டப் பொருள் அமைந்திருந்தது. கூட்டப்பொருள் குறித்து உறுப்பினர்கள் சில சந்தேகங்களைக் கேட்க, நகர்மன்றத் தலைவர் அவற்றுக்கு விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
தீர்மானம்:
மேற்கண்ட பொருளில் கண்ட 10 காலிப் பணியிடங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெற்று, இந்நகராட்சி நியமனக் குழு மூலம் தேர்வு செய்து - பூர்த்தி செய்துகொள்ள நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்களின் அனுமதி பெற மன்றம் அனுமதி வழங்கலாம்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் அசைபடப் பதிவை முழுமையாகக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |