ரபியுல் ஆஹிர் (1435) மாத அமாவாசை ஜனவரி 30 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 9:38 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் ஜனவரி 31 அதிகாலை 3:08 மணி.
ஜனவரி 30 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:23 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:54. அமாவாசை நிகழ சுமார் 9 மணி
நேரம் இன்னும் இருக்கும். மேலும் சூரியன் மறைவுக்கு முன்னரே சந்திரன் மறைவு நிகழ்ந்துவிடும்.
அன்று - உலகில் எந்த பகுதியிலும் பிறையை வெறுங்கண்ணாலோ, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டொ காண இயலாது.
ஜனவரி 31 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:24 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:55. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 14 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 26 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால்
காண இயலாது. தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு காணலாம்.
அன்று வட அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும், தென் அமெரிக்காவின் வட பகுதிகள், ஆப்ரிகா கண்டத்தின் வட பகுதிகள், மத்திய கிழக்கு ஆசியா,
ஈரான், பாகிஸ்தான் ஆகியவற்றிலும் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியா, ஜப்பான் ஆகிய பகுதிகளில்
தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கு (Hijra Committee, Kerala) ஜனவரி 31 - ரபியுல் ஆஹிர் 1 ஆகும்.
மற்றொரு விதிமுறை அடிப்படையில் பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America
[FCNA] அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கு பிப்ரவரி 1 - ரபியுல் ஆஹிர் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜனவரி 30 (அமாவாசை) அன்று ரபியுல்
அவ்வல் 29 பூர்த்தி ஆகிறது. அன்று - உலகில் எந்த பகுதியிலும் பிறையை வெறுங்கண்ணாலோ, தொலைநோக்கிகள் உதவிக்கொண்டொ காண
இயலாது. எனவே அவர்கள் ஜனவரி 31 அன்று ரபியுல் அவ்வல் 30 பூர்த்தி செய்து, பிப்ரவரி 1 அன்று ரபியுல் ஆஹிர் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜனவரி 30 (அமாவாசை) அன்று ரபியுல் அவ்வல் 28 பூர்த்தி
ஆகிறது. எனவே அவர்கள் ஜனவரி 31 அன்று ரபியுல் அவ்வல் 29 பூர்த்தி செய்வர். ஜனவரி 31 அன்று காயல்பட்டினத்தில் பிறையை
வெறுங்கண்ணால் காண இயலாது. தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு காணலாம். எனவே அவர்கள் பிப்ரவரி 1 அன்று ரபியுல் அவ்வல் 30
பூர்த்தி செய்து, பிப்ரவரி 2 அன்று ரபியுல் ஆஹிர் மாதம் துவக்குவர்.
ரபியுல் அவ்வல் 1435 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும் |