காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவர்கள் - செயல்திட்ட வகுப்பு (Project class) என்ற அடிப்படையில், காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தைச் சென்று பார்த்தனர்.
அஞ்சல் நிலைய அதிகாரி மாணவர்களை வரவேற்று, பொதுமக்களால் அனுப்பப்படும் கடிதங்களை ஊர் வாரியாகப் பிரித்து அனுப்பும் முறை, விரைவு அஞ்சல் (Speed Post), மணியார்டர் முறையில் பணம் அனுப்பல் / பெறல், பணம் சேமிப்பு (Money Savings), காப்பீட்டுத் திட்டம் (Insurance) உள்ளிட்ட அஞ்சல் நிலையத்தின் அனைத்து சேவைகள் குறித்தும் அவர் செய்முறை விளக்கமளித்தார்.
பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து சென்றிருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் – முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி) |