நடைபெற்று முடிந்த 2012-2013 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த முஸ்லிம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டிப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை, தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சென்னையில் நடத்தியது.
இதில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரான,
(1) ஏ.எஸ்.அஹ்மத் முன்ஷிரா (த.பெ. ஆர்.அல்தாஃப் ஷம்சுத்தீன்),
(2) எம்.எம்.ஆரிஃபா (த.பெ. முஹம்மத் முஹ்யித்தீன்),
(3) எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா (த.பெ. கே.எம்.முஹம்மத் யூஸுஃப்),
(4) எல்.எச்.ஆயிஷா ஸித்தீக்கா (த.பெ. ஏ.எச..லுக்மான் ஹக்கீம்)
ஆகிய நான்கு மாணவிரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ், புத்தகங்கள் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுபெற்ற மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |