காயல்பட்டினம் அல் அமீன் நர்சரி துவக்கப்பள்ளியில் 65வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இது குறித்து அப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் அல் அமீன் நர்சரி துவக்கப்பள்ளியில் 65வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவிகள் கிராஅத் ஓத விழா துவங்கியது. பள்ளி நிர்வாகி, ஜனாப் எம்.ஏ. புஹாரி M.Com., M.Phil., M.Ed, முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை ஜனாபா கே. சாரா சமீனா B.Sc., M.A., அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி அறக்கட்டளை செயலர் ஜனாப் ஹாஜி எஸ்.ஒ. அபுல்ஹசன் கலாமி விழாவிற்கு தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக எல்.கே. மேல்நிலைப்பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் எல்.டி. இப்ராஹிம் கலந்து சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆசிரியை திருமதி ஜேனட் குடியரசு தின பாடல்பாட எல்.கே. மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சண்முகநாதன் இசை அமைத்தார். இறுதியில் பள்ளியின் நிர்வாகி ஜனாப் எம்.ஏ. புஹாரி நன்றி நவிழ, நாட்டு பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகளும், அலுவலர்களும் செய்திருந்தனர்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.ஏ. புஹாரி M.Com., M.Phil., M.Ed. |