காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி என்ற ‘ஹாங்காங் அப்பா’ இன்று (ஜனவரி 27) 00.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!
இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்!!
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் கண்ணியத்திற்குரிய ஆலோசகரும், எங்கள் இதயங்களில் நிறைந்தவருமாகிய மரியாதைக்குரிய ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி அவர்கள் 27.01.2014 அன்று மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச்செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |