குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
(NATIONAL POPULATION REGISTRY) முகாம் , காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை
நடைபெற்றது. சுமார் 70 சதவீதம் காயலர், இம்முகாம்களில் பங்கேற்றதாக - அதன் முடிவில் - அறிவிக்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் ஆகும். மத்திய அரசின் மத்திய திட்டக்குழுவின் (PLANNING
COMMISSION) ஆதார் எண் வழங்கும் திட்டமும் NPR முகாம்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் போன்றவைகளை பயன்படுத்துவதால், NPR
முகாம்களில் பங்கேற்போருக்கு ஆதார் எண்ணும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முகாம்கள் முடிந்து ஐந்து மாதங்கள் நிறைவுற்ற நிலையில், இம்முகாம்களில் பங்கேற்றோர் இல்லங்களுக்கு தற்போது ஆதார் எண் விபரங்கள்,
தபாலில் அனுப்பப்பட்டு வருகிறது. இது வரை ஆதார் எண்ணை தபாலில் பெறாதவர்கள் தங்களின் ஆதார் எண் உருவாக்கப்பட்டு விட்டதா என
இணையதளத்தில் காணலாம் (http://resident.uidai.net.in/check-aadhaar-status).
மேலே வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியை சொடுக்கினால் கீழ்க்காணும் பக்கம் வரும்.
அதில் காணப்படும் ENROLMENT ID என்ற இடத்தில், முகாமின் போது வழங்கப்பட்ட ரசீதில் உள்ள பதிவு எண் / ENROLMENT NO. விபரங்களை
சமர்ப்பிக்கவும். DATE/TIME பகுதியில், அதே ரசீதில் உள்ள தேதி/நேரம் விபரங்களை (தேதி, மணி, நிமிடங்கள், வினாடிகள்) பதிவு செய்யவும்.
பாதுகாப்பு எண்களை (CAPTCHA) சமர்ப்பித்து, CHECK STATUS என்ற பட்டனை அழுத்தினால், தங்கள் ஆதார் எண் நிலை தெரியும்.
முகாமில் பங்கேற்றப்போது விண்ணப்பத்தில் தங்கள் அலைபேசி எண்ணை வழங்கியிருந்தால், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமும் தங்கள்
ஆதார் எண்ணை பெறலாம்.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த முகாமில், 2010 ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் போது, பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஏதாவது ஒரு காரணத்திற்கு, 2010 ஆம் ஆண்டு பதிவில் இடம்பெறாதோர், NPR / AADHAAR சேவைகளை பெற - அடிப்படை தகவல்கள் சேகரிக்கும் முகாம்கள் விரைவில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து NPR / AADHAAR முகாம்கள் நடைபெறும். |