காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் அமைந்துள்ள பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், மஹான் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் கந்தூரி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது. இஷா தொழுகைக்குப் பின், சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
நிகழ்ச்சிகளனைத்திலும் அப்பள்ளியின் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்றனர். நிறைவில் அனைவருக்கும் ‘தபர்ருக்’ எனும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி செயலாளர் ஹாஜி ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீல், பொருளாளர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |