இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு நாள் விழா ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமையில் நடைபெற்றது.
மாணவர் ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் கிராஅத் ஓதினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத் வரவேற்றுப் பேசினார்.
ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி என்ற துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்றி, வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ - தேச ஒற்றுமையை வலியுறுத்திப் உரையாற்றினார்.
பள்ளி மாணவர் என்.முஹம்மத் ஷம்சுத்தீன் - மாவட்டத்தின் பெருமையை உணர்த்தும் பாடல் பாடினார்.
மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதற்பரிசு வென்ற 10ஆம் வகுப்பு மாணவர் முஹம்மத் ஷம்சுத்தீனுக்கு இவ்விழாவில் பரிசளிக்கப்பட்டது.
ஆசிரியர் செய்யித் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆசிரியர் எம்.கே.ஷரீஃப் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் N.ரஃபீக் அஹ்மத்
கடந்தாண்டு சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 21:47 / 26.01.2014] |