தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 65-வது குடியரசு தினவிழா, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு தங்கப் பதக்கமும், காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், வருவாய்த் துறை, கலை பண்பாட்டுத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வேளாண்மைத் துறை, சிறுபான்மையினர் நலத்துறை சார்பிடில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரவிகுமார் வழங்கினார். விழாவில் 6 பள்ளி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தகவல்:
www.tutyonline.net
|