இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு நாள் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழாசிரியை இ.ஹஸீனா தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார்.
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நன்றியுரைக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |