இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளியில் இன்று காலை 08.30 மணிக்கு குடியரசு நாள் விழா ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்றினார். ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் பாபு நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், மாணவர்கள், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் N.ரஃபீக் அஹ்மத்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:30 pm / 26.01.2014] |