செய்தி எண் (ID #) 12890 | | |
திங்கள், ஐனவரி 27, 2014 |
ஹாங்காங் பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்; டாக்டர் தம்பியின் தாய்மாமா காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி!) |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4356 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (39) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் தம்பியின் தாய்மாமாவுமான - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி என்ற ‘ஹாங்காங் அப்பா’ இன்று (ஜனவரி 27) 00.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.
அன்னார்,
மர்ஹூம் விளக்கு செய்யித் முஹம்மத் அலீ அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஹாஜி வாவு முஹம்மத் ஹஸன் அவர்களின் மருமகனாரும்,
திருநெல்வேலி தம்பி மெடிக்கல்ஸ் – மர்ஹூம் ஹாஜி வி.எஸ்.தாவூத், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி, வி.எஸ்.முஹ்யித்தீன், ஹாஜி வி.எஸ்.ஹஸன் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி வி.எம்.எச்.செய்யித் முஹம்மத், மர்ஹூம் வி.எம்.எச்.தாவூத், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் வி.எம்.எச்.காதர், மர்ஹூம் ஹாஜி வி.எம்.எச்.செய்யித் இப்றாஹீம், வி.எம்.எச்.இக்பால் ஆகியோரின் மச்சானும்,
காயல்பட்டினம் முன்னாள் பஞ்சாயத்து போர்டு சேர்மன் மர்ஹூம் ஹாஜி எம்.கே.டி.அபூபக்கர் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
ஹாங்காங் காயிதேமில்லத் பேரவையின் மூத்த உறுப்பினராகவும், இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் - ஹாங்காங் (ஐ.எம்.ஏ.) அமைப்பின் முன்னாள் துணைத்தலைவராகவும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா, இன்று (ஜனவரி 27) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்புக்கு: ஹாஜி வி.டி.சதக்கு தம்பி (கைபேசி எண்: +91 97914 92973)
தகவல்:
ஹாஜி S.A.முஹ்யித்தீன் (கைபேசி எண்: +91 95005 23467)
காதர் சாமுனா - சீனா (கைபேசி எண்: +91 77080 15123)
மற்றும்
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் (கைபேசி எண்: +91 80154 56160)
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:50 / 27.01.2014] |